ரஜினி பேச்சு – பயங்கர காமெடி ….!!!


” ரஜினி தன் துக்ளக் – பேச்சுக்கு மன்னிப்புக்
கேட்க வேண்டும் – இல்லையென்றால் நடப்பதே வேற”
என்று திராவிடர் கழகத்தின் பல பிரிவுகளும்
மீண்டும் மீண்டும் மிரட்டிக்கொண்டு இருந்தபோது –

இன்று தன் வீட்டு வாசலில் செய்தியாளர்களைச்
சந்தித்த ரஜினியின் பேச்சை பார்த்தபோது
சிரிப்பை அடக்கவே முடியவில்லை….

சிவாஜி, எம்.ஆர்.ராதா நடித்த முழுநீள காமெடி படம்.
“பலே பாண்டியா…” அதில் எம்.ஆர்.ராதாவின் மகளாக
நடித்த தேவிகாவை சிவாஜி காதலிப்பதாக கதை..

படத்தில், சிவாஜிக்கும், எம்.ஆர். ராதாவிற்கும் மோதல்
வரும் ஒரு காட்சி… எம்.ஆர்.ராதாவோ தனக்கு
மாமனார் ஆகப்போகிறவர்… அவரை அவமரியாதையாக
பேச முடியாது…அதே சமயம், அவரை பொறுத்துக்
கொள்ளவும் முடியாது….

சிவாஜி – எம்.ஆர். ராதாவைப் பார்த்து
சீரியசாகச் சொல்வார்….

“மதிப்புக்குரிய மாமா அவர்களே –
மரியாதையாகச் சொல்கிறேன்…
உங்களை உதைத்துப் பந்தாடி விடுவேன்…”

அடக்க முடியாத சிரிப்பு பொங்கும் தியேட்டரில்…
அதே போல் இங்கே ஒரு காட்சி…

———————-

ஸாரி.

நான் மன்னிப்பு –
கேட்க முடியாது..

வருத்தம் –

தெரிவிக்க முடியாது –

என்று –
தாழ்மையுடன்
கூறிக் கொள்கிறேன் …!!!! 🙂 🙂

இத்தனை ஆண்டுகளாக கடவுளையும்,
கடவுள் நம்பிக்கை உடையவர்களையும் –
அருவருக்கத்தக்க விதங்களில்
மிகக்கேவலமான முறைகளில்
விமரிசித்து வந்த ஒரு கூட்டம் –
அய்யய்யோ அபாண்டம்… நாங்கள் எங்கே,
எப்போது அப்படிச் செய்தோம்
ரஜினி அநியாயத்திற்கு எங்கள் மீது
பொய்க் குற்றம் சாட்டுகிறார் … அவர் அதற்காக
மன்னிப்புக் கேட்க வேண்டும் –
என்று சொல்வது இன்னும் சிரிப்பை வரவழைக்கிறது….

இவர்கள் செய்வது என்ன…?
இவர்கள் செய்ததைச் சொல்வதில் என்ன தவறு….?

————————

———-

——————-

———————–

———————–

———————-

நாங்கள் சுயமரியாதைச் சிங்கங்கள்….
அப்படித்தான் செய்வோம் என்று கூறுவார்கள் என்று
எதிர்பார்த்தால் –

“அய்யைய்யோ … நாங்கள் செய்யாததை எல்லாம்
செய்ததாகப் பொய் சொல்கிறார் ரஜினி …”

என்று இவர்கள் புலம்புவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

.
———————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ரஜினி பேச்சு – பயங்கர காமெடி ….!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  இதில் எந்தவித சட்டமீறலும் இல்லை.
  ரஜினி யார் மீதும் அவதூறு சொல்லவே இல்லை.
  மாறாக துக்ளக் சோ’வின் தைரியத்தையும்,
  தனித்தன்மையையும் புகழ்ந்திருக்கிறார் அவ்வளவே,.

  யார் எந்த கோர்ட்டுக்கு போனாலும் இது நிற்காது.

 2. arul சொல்கிறார்:

  As usual DMK and DK groups deviating his statements. But truth always truth

 3. Raja சொல்கிறார்:

  Biggest joke in the statement is “this is something to forget”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.