“ஈஸ்வர அல்லா தேரே நாம்…”


மசூதியில் இந்து முறைப்படி நடந்த திருமணம் :

பிடிஐ
Published : 19 Jan 2020 17:37 pm
https://www.hindutamil.in/news/india/535573-kerala-mosque-hosts-hindu-
wedding.html

கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில்,
இந்து முறைப்படி, முஸ்லிம் மக்களின் முயற்சியால்
மசூதியில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர்
பிந்து. இவரின் கணவர் அசோகன் இறந்துவிட்டார்.
இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார்.

தனது கணவர் அசோகன் இறந்தபின் மிகவும்
வறுமையிலும், சிரமத்திலும் பிந்து வாழ்க்கையை
நடத்தி வந்த பிந்து தனது மகளுக்கு திருமண ஏற்பாடு
செய்தார். செருவாலி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச்
சேர்ந்த சரத் என்பவருக்கு தனது மகளை மணம்
முடிக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், திருமணச் செலவுக்கு போதுமான பணம்
பிந்துவிடம் இல்லாததால், செருவாலி முஸ்லிம்
ஜமாத்திடம் சென்று தனது நிலைமையைக் கூறி
உதவக் கோரினார்.

பிந்துவின் குடும்பச் சூழலை உணர்ந்த ஜமாத்தின்
செயலாளர் நிஜுமுதீன் அலுமூட்டில் ஜமாத்தில்
பிந்துவுக்கு உதவுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மதம் கடந்த உதவி கோரி வந்திருக்கும் பிந்துவின்
குடும்பத்தினருக்கு உதவ முஸ்லிம் ஜமாத் மக்கள்
முன்வந்தனர். திருமண மண்டபம் ஏதும் தேடாமல்
மசூதியில் இந்து முறைப்படி, புரோகிதர் வைத்து
திருமணம் நடத்த ஜமாத் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இதை பிந்துவிடம் ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், திருமணத்துக்கு 2500 பேருக்கு தேவையான
உணவு வகைகளையும் ஜமாத் சார்பி்ல் தயாரிக்கப்பட்டது.
மணப்பெண் அஞ்சுவுக்கு ஜமாத் சார்பில் 10 சவரண்
தங்க நகையும், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களும்
வழங்க முடிவு செய்யப்பட்டது.

முஸ்லிம் மக்கள் முயற்சியில் இன்று காலை
செருவாலி மசூதியில் சரத், அஞ்சுவின் திருமணம்
இந்து முறைப்படி அர்ச்சகர் மந்திரங்கள் ஓத
திருமணம் நடந்தது. திருமணத்துக்கு ஏராளமான
முஸ்லிம்களும், இந்துக்களும் வந்திருந்து மணமக்களை
வாழ்த்தி, உணவு சாப்பிட்டுச் சென்றனர்.

———————————

பி.கு.
பெருவாலி முஸ்லிம் ஜமாத் பெருமக்களை
மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன்.
இத்தகைய பரந்த உணர்வுகள் கொண்ட உள்ளங்கள்
தான் பாரதத்தின் இன்றைய தேவை….

“ஈஸ்வர அல்லா தேரே நாம்…
சப்கோ சன்மதி தே பகவான்….”

….

….

….

.
————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “ஈஸ்வர அல்லா தேரே நாம்…”

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  பேரிடர் காலத்தில் உதவுவது…
  பேரிடர் என்றால்,
  நம்மை அடிமைபடுத்திய ஆங்கிலேயர்களை விரட்ட முன் நின்றவர்கள்
  மழை வெள்ளம் போன்ற சேதங்களின் போதும்
  இரத்த தானம் தேவைபடும் போதும்
  மலை/மண் சரிந்து உடல்களை உடற்கூறு செய்ய மசூதி வளாகம் தேவைபடும் போது
  விடியற்காலையில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது எரிந்த கட்டிடத்தில் இருந்தவர்களை எழுப்பி காப்பாற்றக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டால் இறைவனை துதிப்பதைவிட மனிதர்களை காப்பதே முதல் கடமை என்று வாழும்போது
  நீங்கள் பகிர்ந்த்தை போன்று மனிதத்துக்கு எப்போதெல்லாம் ஒரு தேவை ஏற்படும் போது தானாகவே முன்வந்து முடிந்த உதவிகள் செய்பவர்கள்தான் இந்த பாய்மார்கள் (சகோதரமார்கள்)
  இதை நான் அஜீஸ்-ஆக இங்கே பகிரவில்லை, நான் அதியமான்-ஆகவோ அல்லது பிரியந்த்-ஆகவோ அல்லது சுரேஷ்-ஆகவோ அல்லது ஃபிலிப்-ஆகவோ இருந்தாலும் இக்கருத்தை பட்டவர்த்தனமாக கூறுவேன்.

 2. Gopi சொல்கிறார்:

  சைதை அஜீஸ்

  நீங்கள் சொல்வது உண்மை.
  மதத்தை முன்வைக்காமல்,
  மனிதத்தை முன் நிறுத்துவதே
  மனிதன் கடவுளுக்கு செலுத்தும் நன்றிக்கடன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.