…
…
…
…
…
மனதிற்கு ஆறுதலும், அமைதியும் அளிக்கவல்லது
கர்நாடக சங்கீதம்….
ஆழ்ந்து ரசிப்பதற்கான ஞானம் எனக்கில்லை…
பொதுவாக நம்மில் பலருக்கு இல்லை.
ஆனால், இந்த நிகழ்ச்சியை ரசிக்க பெரிதாக ஞானம்
தேவை இல்லை என்பது என் கருத்து.
ஜாதியும், மதமும் குறுக்கிடாத ஒரு இடம்….
திருவையாற்றில், காவிரி ஆற்றங்கரை மணலில்,
தியாகராஜர் சந்நிதியில் –
திரு.கே.ஜே.யேசுதாஸ், மற்றும்
அவர் மகன் விஜய் யேசுதாஸ் ஆகியோரின்
ஈடுபாட்டுடன் கூடிய ஒரு இசை ஆராதனை நிகழ்ச்சி.
இதில் விசித்திரம் என்னவென்றால் –
தியாகராஜரின் தாய் மொழி தெலுங்கு….
அவர் வசித்த இடம் தமிழ்நாட்டில்,
தஞ்சை மாவட்டத்தில் – திருவையாற்றில்…
அவர் பாடல்களை இயற்றியது தெலுங்கில்.
இங்கே அவர் பாடல்களைப் பாடுவது
ஒரு மலையாளியான யேசுதாஸ் அவர்கள்…
கிறிஸ்தவரான அவர் நெற்றியில் –
பளிச்சென்று விபூதிக் கீற்று….
ஜாதியாவது, மதமாவது – பேதம் பேசும்
வெறியர்களை அடித்து விரட்டுவோம்
என்று விரதம் எடுத்துக் கொள்ளுங்கள் …. !!!
திருவையாறு, தியாகராஜர் சந்நிதியில்
திரு.கே.ஜே.யேசுதாஸ், விஜய் யேசுதாஸ்
ஆகியோரின் இசை நிகழ்ச்சி அடங்கிய
காணொளி கீழே –
…
….
.
———————————————————————————————————————————————————-
கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்,
நல்ல ஆரோக்கியத்தையும் கொடுத்து
இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து
நீங்கள் எழுத ப்ரார்த்திக்கிறேன்.
Emmadiyow. What a rendering delivery at the age of 80. udambellam silirthu pochu on sheera sagara song. swami has taken avataram of yesudas inner soul to take us to heaven
Intha oru program pothum, intha manidharukku Bharata Ratna dharalama kodukkalam.