முரசொலி படிப்பவர்கள் மட்டும் தான் – மனிதர்கள்… தமிழர்கள்…!!!


திமுக-வின் லேடஸ்ட் விளக்கப்படி –
அவர்களது கூட்டணியைச் சேர்ந்தவர்களாக
இருந்தாலும் கூட –

கீழ்க்கண்டவர்கள் அனைவரும்
தமிழர்கள் இல்லை… ஏன் – மனிதர்களே இல்லை ….

– திரு.தொல்.திருமாவளவன் உட்பட விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும்…

– இடது, வலது சாரி கம்யூனிஸ்ட் கட்சியினர்,
அதன் தலைவர்கள்…

– காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
அதன் தலைவர்கள்…

– இஸ்லாமிய கூட்டணி கட்சியினர்….
அதன் தலைவர்கள்…

இப்படி தனித்தனியாகச் பட்டியல் இடுவதை விட,
மொத்தமாகச் சொல்லி விடுவது சுலபம்
என்று நினைக்கிறேன்…

திமுக கூட்டணியில் உள்ள அனைத்து
கட்சிகளையும் சேர்ந்தவர்கள் தமிழர்கள் அல்ல –
ஏன்… மனிதர்களே அல்ல ….!
( ஏன் …? காரணம் பின்னால் வருகிறது…!!!)

அடடா – முக்கியமான நபர்களை விட்டு விட்டேனே –
திமுகவில் தோராயமாக ஒரு கோடி உறுப்பினர்கள்
இருக்கலாம்…அல்லவா…?
அவர்களில் முரசொலி வாங்கும் 20,000 பேரைத் தவிர
மற்ற அனைவரும் கூட மனிதர்களே அல்ல –
தமிழர்களே அல்ல…!!!

என்ன குழப்பமாக இருக்கிறதா ….?
ஆமாம் – முரசொலியை கையில் வைத்திருக்காத
அனவரும் இந்த definition -க்கு உட்பட்டவர்களே…
என்று இன்றைய முரசொலி அறிவித்திருக்கிறதே…!!!
———————

ஒரு காலத்தில் மிகச் சாமர்த்தியமாகவும்,
புத்திசாலித்தனமாகவும், பேசியும், எழுதியும்,
செயல்பட்டும் வந்த கலைஞர் கையில்
இருந்த கழகம் இன்று குரங்கு கை போய் விட்ட
பூமாலையைப் போலாகி விட்டது என்பதை நிரூபிக்கும்
வகையில் –

ரஜினியை கண்டிக்கிறோம் என்கிற நினைப்பில்,
முட்டாள்தனமான ஒரு அறிக்கையை முரசொலி மூலம்
வெளியிட்டிருக்கிறது திமுக.

அது என்ன அறிக்கை….?

——————————————

ரஜினிகாந்தின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது
பேச்சுக்குப் பதில் சொல்லும் வகையில் தலையங்கம்
ஒன்றை முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதில்,

“முரசொலி வைத்திருந்தால் தமிழன்
என்று பொருள்.
முரசொலி வைத்திருந்தால் பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னதக்
கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவன் என்று பொருள்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ எண்ணம்
கொண்டவன் என்று பொருள். ஒடுக்கப்பட்ட
சமூகத்தவன், தன்னை ஒடுக்கியவர் யார் என
உணரத் தொடங்கியவன் என்று பொருள்.

தான் யாருக்கும் அடிமையில்லை; தனக்கு
யாரும் அடிமையில்லை என்பவன் என்று பொருள்”
என வரிசையாக பட்டியலிட்டுள்ளது முரசொலி.

மேலும், “முரசொலி வைத்திருந்தால்,
இந்தித் திணிப்பை எதிர்ப்பவன் என்றும் சமஸ்கிருத
மயமாக்கலை எப்போதும் எதிர்ப்பவன் என்றும்
மொழிக்காக தனக்குத்தானே சிதைவைத்த
தியாகத்தின் தொடர்ச்சி என்று பொருள். சமூகத்தின்
உயர்வுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனப்படும்
சமூக நீதியே அடித்தளம் என நினைப்பவன்
என்று பொருள்” என்றும் பதிலளித்துள்ளது.

இறுதியாக, “முரசொலியை நீங்கள் வைத்திருந்தால்,
மனிதன் என்று பொருள்” என்றுகூறி அந்தத்
தலையங்கம் முடிக்கப்பட்டுள்ளது.

———————–

இது எதற்காக எழுதப்பட்டது….?

“முரசொலியை வைத்திருப்பவர் திமுக காரர்…”
“துக்ளக்’கை வைத்திருப்பவர் அறிவாளி”
– என்று ரஜினி பேசியதை வைத்து –

அப்படியானால், துக்ளக்கை வைத்திருக்காதவன்
எல்லாரும் முட்டாளா…? என்று தாங்களாகவே
ஒரு வியாக்கியானத்தை கொடுத்துக் கொண்டு
ரஜினி மீது பாய்கிறார்கள்.

ஒருத்தர் , ஆயிரம் பேர் உள்ள ஒரு கூட்டத்தில்
பேசுகையில், யாராவது ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு,
அவர் மிகவும் நல்லவர் என்று ஒருவர் கூறினால் –

அப்படியானால், நாங்கள் எல்லாரும் அயோக்கியர்களா
என்று கேட்டு மற்றவர்கள் சண்டைக்கு வந்தால்,
அது எத்தனை மடத்தனமானதோ –
அதே போன்றது தான் இதுவும்.

முரசொலி வைத்திருப்பவர்கள் முட்டாள்கள்
என்று ரஜினி கூறவில்லை…
முரசொலி வைத்திருப்பவர்கள்
திமுக காரர்கள் என்று மட்டும் தான் சொன்னார்…
இது பொய்யோ, தவறோ அல்லவே…?

துக்ளக் படிப்பவர்கள் மட்டும் தான் புத்திசாலிகள்,
மற்ற எல்லாரும் மடையர்கள் என்று ரஜினி சொன்னாரா…?
தாங்களாகவே அப்படி கற்பனை செய்துகொண்டு –

– பதிலுக்கு “முரசொலி”யை
படிக்காதவர்கள் அனைவரையுமே முட்டாள்களாக்கி
இருக்கிறது திமுக தலைமையின் அதிபுத்திசாலித்தனம்.

ரஜினியின் சொற்களில் தவறை கண்டுபிடித்தவர்கள் –
அதே தவற்றை தாமும் செய்வது தான் அதிபுத்திசாலித்தனம் …!!!

.
——————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to முரசொலி படிப்பவர்கள் மட்டும் தான் – மனிதர்கள்… தமிழர்கள்…!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  ரஜினி அரசியலுக்கு வந்து விட்டால்
  தங்கள் கதி என்னாகுமோ என்று
  என்று கதிகலங்கி நிற்கிறார்கள் சிலர்.
  அதன் விளைவு, ஆளாளுக்கு அர்த்தம்
  இருக்கிறதோ இல்லையோ எதிர்ப்பு
  என்கிற பெயரில் உளறிக் கொட்டுகிறார்கள்.
  ரஜினியுடன் கூட்டு வைக்கக்கூடிய
  வாய்ப்பு இருக்கக்கூடிய ( திருமா போன்ற)
  சிலர் மட்டும் கொஞ்சம் அடக்கி
  வாசிக்கிறார்கள்.
  ரஜினியின் பேச்சை பெரிதுபடுத்துவதன்
  மூலம், தங்களைத் தானே கேவலப்படுத்திக்
  கொள்கிறார்கள் இவர்கள்.

 2. புவியரசு சொல்கிறார்:

  கே.எம்.சார். உங்கள் தலைப்பு அட்ராக்டிவ்வாக இல்லை.
  இப்படிப் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்”

  “திருமா தமிழரே இல்லை; மனிதரே இல்லை”
  திமுக மறைமுகமாகத் தாக்குகிறது ”

  எப்படி ? 🙂 🙂

 3. Gopi சொல்கிறார்:
 4. Ramnath சொல்கிறார்:

  ஒரு வீடியோ போதுமா ?

 5. Gopi சொல்கிறார்:

  என் பதில் மரியாதை:

  முரசொலி துவங்கிய வரலாறு அண்ணன் வைகோ வாக்குமூலம் :

 6. Prabhu Ram சொல்கிறார்:

  ஸ்டாலின் சில (பல ? ) சமயங்களில் பேசும்போது
  குழப்படி செய்கிறார். தப்பும் தவறுமாக தகவல் தருகிறார்.
  என்பது ஏற்கெனவே அவரைப்பற்றி சொல்லப்படும்
  ஒரு குற்றச்சாட்டு.
  இப்போதெல்லாம் எழுத்து மூலம் தெரிவிக்கும்
  கருத்துகளிலும் குழப்பம் செய்கிறார்.

  இதைவிட நேரடியாக ரஜினி இப்படிப் பேசியது தவறு
  என்று சொல்லி இருந்தால், தெளிவாகவும், உறுதியாகவும்
  இருந்திருக்கும்.

 7. natchander சொல்கிறார்:

  However i feel that Rajni had ckearly atracked d m k ,,,,,, rajnis entry in gopalapuram house
  Was blocked by d m k men ,, when he went there to see karunas body,,,, and the ,, hatred continues against Rajni,, till now
  Few know that rajni manram s good activities are being blocked or ,,spoiled,,,even now by d m k,,,men even now,,,,
  D mk knows that Rajnis enyry means,,, no chance for stalin to be C M
  Simple,,,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.