ஒரு சந்நியாசியின் ஆட்சியில் – மீண்டும் மீண்டும் இத்தனை கொடூரங்களா….?


ராமர் கோவில் கட்டப்போவதாக பெருமையடித்துக்
கொள்ளும் ஒரு சந்நியாசியின் ஆட்சியில் நடந்திருக்கும்
காட்சி கீழே –

கற்பழிப்புகளையும், கொலைகளையும் தடுப்பதை
விட்டு விட்டு, தனக்கு கோவில் கட்டி
பஜனை செய்யப்படுவதை
எந்தக் கடவுள் விரும்புவார்…?

கடந்த 6 மாதங்களுக்குள் உத்திரப் பிரதேசத்தில்
கேள்விப்படும் ஏழாவது சம்பவம் இது.

சம்பந்தப்பட்ட செய்தி குறித்த
ஒரு தொலைக்காட்சி காணொளி கீழே –

( https://www.ndtv.com/tamil/kanpur-woman-beaten-to-death-by-teen-
daughters-alleged-molesters-2165885?pfrom=home-topscroll )

Kanpur: உத்தரபிரதேசத்தின் கான்பூர் பகுதியில் கடந்த
2018ம் ஆண்டில் 6 பேரால் பாலியல் துன்புறுத்தலுக்கு
ஆளான 13 வயது சிறுமி மருத்துவமனையில்
உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின்
தாய் புகார் அளித்துள்ளார். கோபம் கொண்ட குற்றம்
சாட்டப்பட்ட அந்த கும்பல், புகார் அளித்த பெண்ணின்
வீட்டிற்குள் புகுந்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளது.
இதையடுத்து, 13வயது சிறுமியிடம் பாலியல்
துன்புறுத்தலில் ஈடுபட்ட 6 பேரில் 4 பேரை 2018-ல்
போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அனைவருக்கும் –
உள்ளூர் நீதிமன்றம் தற்போது, ஜாமின் வழங்கியுள்ளது.

இதையடுத்து, சிறையில் இருந்து வெளிவந்த அந்த கும்பல்
புகார் அளித்த அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து புகாரை
வாபஸ் வாங்குமாறு மிரட்டி இருக்கிறது. எனினும், புகாரை
திரும்ப பெற மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக
இருந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கற்பழிக்கப்பட்டு, உயிரிழந்த
அந்தச் சிறுமியின் தாய், மற்றும்
அவர்களது உறவினர்கள் என வீட்டில் இருந்த
அனைவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

படுகாயமடைந்த அந்தச் சிறுமியின் தாய் கடந்த
9-ந்தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த படுகாயங்கள் காரணமாக –
நேற்று அவர் மருத்துவமனையிலேயே
இறந்து விட்டார்.

இது குறித்து 5 நொடிகள் ஒடக்கூடிய வீடியோ ஒன்று
வெளியாகி இருக்கிறது. தெளிவாக தெரியாத அந்த வீடியோவில்
அந்த பெண்ணை சிலர் கடுமையாக தாக்குகின்றனர்.


NDTV –

A 40-year-old woman whose teenage daughter was
allegedly molested by six men in 2018

died at a hospital in Uttar Pradesh’s Kanpur
on Friday evening, a week after the family of
the woman and her daughter were assaulted at their
home in the city, allegedly by the same men
who had managed to get bail in the original molestation case.

https://www.ndtv.com/video/news/news/kanpur-woman-beaten-to-death-by-
teen-daughter-s-alleged-molesters-538106

முதல் காணொளி இப்போது வலைத்தளத்தில்
அகற்றப்பட்டு விட்டதாகத் தெரிய வருகிறது.

இதே சம்பவம் குறித்து, இன்னொரு தொலைக்காட்சியான
இந்தியா-டுடே – யில் வந்துள்ள செய்தியும்
காணொளியும் கீழே –
(இந்த நிமிடம் வரை இது அகற்றப்படவில்லை…)
.
——————————————————–

India Today

In a horrific incident from Uttar Pradesh,
a woman was beaten to death in Kanpur by men
accused of attempting to rape her daughter.
The incident, which took place on January 9,
came to light when a video of the brutal beating
surfaced on the internet.

In the video, five men can be seen beating up two
women – mother and aunt of the victim.
The women were allegedly beaten up
for giving testimony in the case.

The sexual harassment victim’s mother,
succumbed to her injuries.

…..

…..

எந்தவித தர்மத்திற்கும், மனசாட்சிக்கும்,
சட்டத்திற்கும் கட்டுப்படாத இவர்களை எல்லாம்
நம்மால் என்ன செய்ய முடியும்….?
5 ஆண்டுகளுக்கு வரம் வாங்கி வந்திருக்கின்றனரே..

அந்தக் கடவுள் ராமரே மேலேயிருந்து இறங்கி வந்து
தண்டித்தால் தான் உண்டு….

—————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஒரு சந்நியாசியின் ஆட்சியில் – மீண்டும் மீண்டும் இத்தனை கொடூரங்களா….?

 1. புவியரசு சொல்கிறார்:

  மொட்டையின் ஆட்சியில் 2 நாட்களில்
  3 கற்பழிப்பு/கொலைகள் என்பது தான்
  நேற்றைய Latest Record.

  பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும்
  சாத்திரங்கள் என்பது இது தானோ ?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இது ஒரு சாபக்கேடு.

  பொறுக்கிகளையும், போக்கிரிகளையும் –
  நம் மக்கள், சந்நியாசிகளாகவும் – சாமியார்களாகவும்
  பார்ப்பதால் வரும் வினை.

  சந்நியாசிகளுக்கு ஏன் சாம்ராஜ்ய ஆசை … ?
  அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள,
  நினைத்ததை சாதித்துக் கொள்ள,
  குண்டர் படை… அவர்களுக்கு அவசியமாகிறது.

  அதனால் அந்த குண்டர்களை கட்டுப்படுத்த
  அவர்களால் இயலாமல் போகிறது.

  எனவே, நடப்பது சந்நியாசியின் ஆட்சி அல்ல –
  குண்டர்களின் ஆட்சி.
  பொறுக்கிகளின் ஆட்சி.
  போக்கிரிகளின் ஆட்சி.
  தேர்ந்தெடுத்த பாவத்திற்கு உ.பி.மக்கள்
  இதையெல்லாம் –
  அனுபவிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

  இன்றைய உ.பி. – இந்த நாட்டின் மக்களுக்கு
  ஒரு பாடம். எதிர்காலத்திற்கான பாடம்.
  எத்தகைய முடிவுகளை அவர்கள் எடுக்கக்கூடாது
  என்பதற்கான பாடம்.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ஒரு சில கேள்விகள் :
  போலீஸ் என்ன செய்து கொண்டு இருந்தது ?
  வழக்கில் ஜாமீன் பெற்று வந்தவர்கள் கேஸை
  ஒரேயடியாக முடிக்க பார்த்தார்களா ?
  ஏன் யாரும் எதிர்த்து பேசவில்லை ?
  ஊர்க்காரர்கள் தெரிந்து இருந்தும் விலகி போகிறார்களா ?

  இதே கேள்விகள் பொள்ளாச்சி வழக்கிற்கும் பொருந்தும் .
  திரு எச் ராஜா கோர்ட்டை பற்றி சொன்னது ஏனோ ஞாபகம் வருகிறது .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அதிகாரம் ஆட்டம் போடுகிறது.
   சாதாரண பொதுமக்கள், எதிர்த்தால்
   ஏற்படக்கூடிய விளைவுகளை எண்ணி
   வாய் திறக்க அஞ்சுகிறார்கள்.
   காவல் துறை – எப்போதும் போல்,
   ஆளும் அரசியல்வாதிகள் சொல்படி
   இயங்குகிறது.
   மக்கள் தாங்கள் – அல்லது தங்களில் சிலர் –
   செய்த பாவத்தின் விளைவுகளை
   அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.