…
…

எப்படி கும்பிட்டால் என்ன … ? “அவர்” எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வார்…!!!
…
மக்களை அறியாமையின் பிடியிலிருந்து,
அஞ்ஞானத்தின் பிடியிலிருந்து – விடுவித்து
உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய
மதத்தலைவர்களில் சிலர், அவர்களின்
மத உணர்வுகளைத் தூண்டி விட்டு, மற்ற
மதத்தினர் மீது துவேஷம் கொள்ள வைத்து,
தங்கள் சொந்த சுயலாபத்திற்காக –
அவர்களை நிரந்தரமாக டென்ஷன், கோபம்,
கொந்தளிப்பு -ஆத்திரத்திலேயே ஆழ்த்தி
வைக்கின்றனர்.
அவர்களுடன் சில சுயநலவாத
அரசியல்வாதிகளும் சேர்ந்துகொள்வதை,
அண்மைக்காலங்களில் பார்க்கிறோம்.
தமிழகத்தில் ஜாதிப் பூசல்கள் தொடர்ந்து
இருந்து வந்தாலும் கூட, பெரிய அளவில்
மதக் கலவரங்கள் ஏதும் ஏற்பட்டதில்லை.
ஆனால், அந்த நிம்மதியைக் குலைக்கும்
முயற்சிகள் அண்மைக்காலங்களில் அதிகமாகி
விட்டன. முக்கியமாக சில வாட்-சப் குழுக்கள்
இதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு
செயல்படுகின்றன.
இந்த நிலையில், மத உணர்வுகளைத் தூண்டி
விடாமல், மனித நேயத்தைப் பரப்புவது மிகவும்
அவசியமாகிறது. சில ஆன்மிகப் பெரியவர்கள்/
சமூக ஆர்வலர்கள், பேச்சாளர்கள் –
இது விஷயத்தில் அக்கறை கொண்டு செயல்பட்டு
வருவது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.
திரு.சுகி சிவம் அவர்களின் அருமையான உரை
ஒன்று பார்வைக்கு கிடைத்தது….
அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களால் முடிந்த வரை இதை மற்றவர்களுடனும்
பகிர்ந்து கொள்ளுங்கள்….
…
…
.
————————————————————————————————————————————————–
அலைபேசியில் காணொளி காண இயலவில்லை.
நேற்று ராஜஸ்தானைச் சேர்ந்த ஆனால் தலைமுறை தலைமுறையாக பெங்களூரில் செட்டிலாகிவிட்ட ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 30 வயசு இளைஞர்களிடம் அவங்க மத வழக்கங்கள், புலம் பெயர்ந்து எதை இழந்தார்கள், பெற்றார்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். காணொளிக்கு சம்பந்தமில்லாமல்்இருக்கக் கூடும் ஆனால் அவர் எனக்கு வித்தியாசமான கருத்தைச் சொன்னார்.
மதம், ஜாதி என்பதைவிட, லைஃப் ஸ்டைல் என்ற நோக்கில் நான் ஒவ்வொருவரையும் அணுகுகிறேன். இந்தியாவிலேயே ஒரு சமூகத்திலேயே இருக்கும் பல குழுக்கள் எல்லோரும் ஒரே வாழ்க்கை முறையைக் கைக்கொள்வதில்லை. எங்கள்ல சிலர் இரவு சாப்பிடும் வழக்கம், கிழங்கு சாப்பிடுவது, மத நெறிகளை பின்பற்றுவதில்லை. பிராமணர்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வாழ்க்கை முறை, ஒரு மாநிலத்திலேயே பல பிரிவுகள், பாகுஸ்தான் பங்களாதேஷ் முஸ்லீம்களில் 90% முன்னோர்கள் இந்துக்கள். இப்போ அவங்க வாழ்க்கை முறை Life Style இஸ்லாமியர்களின் ஒரு பிரிவாக இருக்கு. மனுதன் வாழும் லைஃ் ஸ்டைலை வைத்து எதுக்கு மனிதனை எடை போடணும்? நீங்க 4 மணிக்கு எழுந்து 9 மணிக்கு தூங்குவீங்க, நான் 11 மணிக்கு தூங்குவேன். இதைவைத்து நீங்க ஒசத்தி நான் தாழ்த்தின்னு சொல்ல முடியுமா என்றார்.
இந்தச் சிந்தனை அந்த இளைஞன் சொன்னது எனக்கு ஆச்சர்யமா இருந்தது. அடுத்த தலைமுறை கருத்துகள் வித்தியாசமானவை. என் பெண்ணும் இத்தகைய கருத்துகள் சொல்வாள்
புதியவன்,
கிட்டத்தட்ட என்னுடைய பார்வையும்
இதே போன்றது தான்.
பழக்க வழக்கங்களாலும், குடும்ப நடைமுறைகளாலும்
நாம் ஒவ்வொரு முறையைச் சார்ந்திருக்கிறோம்.
இதில், எதுவும் உசத்தியும் இல்லை…
எதுவும் தாழ்த்தியும் இல்லை…
அவரவர் வழக்கங்கள் அவரவர்க்கு…
அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றவர்களை
பாதிக்காத வரையில், இதை – மற்றவர்கள்
குறை கூறுவதோ, ஆட்சேபிப்பதோ –
நியாயமல்ல.
ஜாதி, மத – பிரிவுகளும் இதே
வரையரைக்குள் வருபவை தான்.
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்