சில சுவாரஸ்யமான விவாதங்களும், அதன் பின்னே – இறுதி தீர்ப்பும் ….!!!


டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில், மேன்மை மிகு
நீதிபதி காமினி லாவோ ( Kamini Lau ) அவர்கள்
முன்னிலையில் நடந்த சில விவாதங்களும்,
அதன் இறுதி முடிவும் கீழே –

இது நீதிமன்ற தீர்ப்பைப்பற்றிய விமரிசனம் அல்ல.

நாளேடுகளில் வந்த செய்தியின் தொகுப்பு மட்டுமே
என்பதை இங்கே மிகுந்த பயபக்தியுடனும்,
தாழ்மையுடனும், மிகவும் மரியாதையுடனும்
தண்டனிட்டு தெரிவித்துக் கொள்கிறேன்…!!!

இது முதல் நாள் நடந்த விவாதங்கள் பற்றிய
செய்தி –

————-

ஜும்மா மசூதி போராட்ட வழக்கில் சந்திரசேகர் ஆசாத்
ஜாமின் மனு மீதான விசாரணையின்போது
நீதிபதி காமினி லாவோ டெல்லி காவல்துறையைக்
கடுமையாகக் கண்டித்தார்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், பல்வேறு
வடிவங்களில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள்
நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பர் 21-ம் தேதி
பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்,
டெல்லியில் உள்ள ஜும்மா மஸ்ஜித்துக்கு வருகை
புரிந்தார். அப்போது நடைபெற்ற பிரார்த்தனையில்
சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் பேசினார் ஆசாத். ஜும்மா மசூதி
வெளியில் வருகையில் ஆசாத் கையில் இந்திய
அரசியலமைப்புடன் வெளியில் வந்த காட்சி
இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து
அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில்
வைக்கப்பட்டிருந்தார்.

அவர் ஜாமீன் மனுவை டெல்லி திஸ் ஹசாரி
நீதிமன்றம் இன்று விசாரித்தது. நீதிபதி காமினி லாவோ,
ஆசாத்தின் ஜாமின் மனுவை விசாரித்தார்.

ஜாமின் மனுவை எதிர்த்த அரசுத் தரப்பு
வழக்கறிஞரைக் கடுமையாகக் கண்டித்தார் நீதிபதி.
மேலும் அவர், `போராட்டத்தில், தர்ணாவில்
ஈடுபடுவதில் என்ன தவறு இருக்கிறது. இது
அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமை’ என்றார்.

`சமூக ஊடகங்கள் மூலம் ஆசாத் வன்முறையைத்
தூண்டினார்’ என அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

அதை முற்றிலுமாக மறுத்த நீதிபதி, `இந்தப் பதிவுகளில்
வன்முறையைத் தூண்டும் விதத்தில் எதுவும் இல்லை.
ஒருவர் போராடக் கூடாது என யார் சொன்னது.
நீங்கள் அரசியலமைப்பைப் படித்திருக்கிறீர்களா?”

`ஜும்மா மசூதி ஏதோ பாகிஸ்தானில் உள்ளதைப்போல
நடந்து கொள்கிறீர்கள். நாடாளுமன்றத்தின் முன்பே
போராடிய பலரும் எதிர்காலத்தில் தலைவர்களாக,
அமைச்சர்களாக உருவாகியிருக்கிறார்கள்.
மதத் தலங்கள் முன்பாக போராடக் கூடாது என
எந்தச் சட்டம் சொல்கிறது. ஆசாத் வன்முறையைத்
தூண்டினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது”
என டெல்லி காவல்துறைக்கு சரமாரியான
கேள்விகளை எழுப்பினார் நீதிபதி.

இறுதியில், “காலனி ஆட்சிக்காலத்தில் வீதிகளில்
போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது
நீதிமன்றத்திலும் நீங்கள் சட்டப்போராட்டம் நடத்தலாம்.

நாடாளுமன்றத்தில் சொல்லப்பட வேண்டியவை
சொல்லப்படாததால் தான் மக்கள் வீதிக்கு
வருகிறார்கள்.

ஒருவரின் எதிர்ப்பை வெளிப்படுத்த
முழு உரிமை உள்ளது” எனத் தெரிவித்து வழக்கின்
விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

சிறையில் இருந்த சந்திரசேகர் ஆசாத்துக்கு
முறையான மருத்துவ வசதிகள் வழங்கப்படாததைக்
கண்டித்து, அவற்றை வழங்க உத்தரவிட்டார் நீதிபதி.

———————————————————————–

மேலே இருப்பதெல்லாம் முதல் நாள் நீதிமன்றத்தில் நடந்து,
செய்திகளாக வெளியே வந்தது….

கீழே இருப்பது – அதற்கு அடுத்த நாள் அதே நீதிமன்றத்தில்
நடந்த விவாதங்களும், அதையொட்டி – தீர்ப்பும்…!!!

The court was hearing a bail application filed by Azad,
who was arrested on 21 December for protesting
against the new citizenship law at Delhi’s Jama Masjid.

As public prosecutor Pankaj Bhatia and Azad’s counsel
Mehmood Pracha presented their arguments ahead of
the judgment, six tweets by Azad, which were considered
to be incriminating by the Delhi Police, were read out
in court.

The tweets had been posted by the Bhim Army chief
on 20 December.

While Judge Lau didn’t object to most of the tweets,
she did comment on two.

The first tweet Lau reacted to was one in which
Azad had written – “Modi brings the police when
he is scared”.

————–

“He should not disrespect the PM like this.
We all have to respect our officers, it is our country,”
the judge said.

In a second tweet, Azad had written,
“Ambedkarites do not commit violence,
and our protest is peaceful.
Those who are inciting violence are from RSS.”

————-

To this, Lau said, “Why name RSS and other
organisations? Talk about yourself.
Talking about others can incite people.”

————————————

இறுதியாக இந்த வழக்கில் வெளியான முடிவு –

——————————–

New Delhi: A Delhi court Wednesday granted bail to
Bhim Army chief Chandrasekhar Azad, asking him to
stay in his permanent residence in Saharanpur,
Uttar Pradesh’ for the next one month.

The matter was heard by Additional Sessions Judge
Kamini Lau, who granted Azad bail on a bond of
Rs 25,000 under the condition that he stay away from
Delhi for the next four weeks and mark his attendance
with the Saharanpur SHO every Saturday.

Links – https://www.vikatan.com/government-and-politics/judiciary/tiz-hazari-court-judge-slams-delhi-police-for-azad-detention

https://theprint.in/india/governance/judiciary/chandrashekhar-azad-gets-bail-
delhi-court-tells-him-to-stay-in-saharanpur-home-for-4-weeks/349648/?ref=is

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சில சுவாரஸ்யமான விவாதங்களும், அதன் பின்னே – இறுதி தீர்ப்பும் ….!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  நானும், மிகுந்த மரியாதையுடனும், பயபக்தியுடனும்
  தெரிவித்துக் கொள்கிறேன்:

  There is many a slip between the cup and the lip.

 2. Gopi சொல்கிறார்:

  முதல் நாள் பேச்சுக்கும்,
  அடுத்த நாள் பேச்சு/தீர்ப்புக்கும் இடையே
  உள்ளதைத் தானே சொல்கிறீர்கள் ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.