நேற்றிரவு நடந்த “துக்ளக்” ஆண்டு விழாவிலிருந்து ….
கடந்த – கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக, தொடர்ந்து
துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு
வந்திருக்கிறேன்….(ஒரு முறை மட்டும் தவறி விட்டது
என்று நினைக்கிறேன்…)

“சோ” சார் இருந்தபோது இருந்த சூழ்நிலை வேறு.
இப்போதைய சூழ்நிலை வேறு…!!! அப்போதைய ஆர்வம்,
excitement இப்போது இல்லை…

முக்கிய காரணம் –
நிகழ்ச்சியில் யாரைப்பற்றி பேசப்போகிறார்கள்,
என்ன பேசப்போகிறார்கள் என்பதில் எதிர்பார்ப்பு,
excitement எதுவும் இல்லை….


நினைத்தது போலவே, ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள்
துக்ளக்’கில் என்ன எழுதி வருகிறாரோ, அதையே
இன்னமும் கொஞ்சம் விரிவாகவும், அழுத்தமாகவும்
பேசினார்…பிரதமருக்கு அவர் எந்த அளவிற்கு
நெருக்கமானவர் என்பதை அவரது பேச்சு
விளக்கியது.

விழாவிற்கு வந்தவர்களின் முக்கிய எதிர்பார்ப்பு
ரஜினிகாந்த் அவர்களின் உரையாக இருந்தது.

ரஜினி பேசினார்… ஆனால் பேசவில்லை.. 🙂 🙂 🙂

ஆம் பலர் எதிர்பார்த்து வந்த அரசியல் பற்றி அவர்
பேசவில்லை… குடியரசு துணைத்தலைவர்
கலந்து கொள்ளும் விழாவில், சுதந்திரமாக
எல்லாவற்றையும் பேசி விட முடியாது. நீங்கள்
எதிர்பார்ப்பதை, வேறு சந்தர்ப்பம் கிடைக்கும்போது
பேசுகிறேன். இங்கே எதைப் பேசலாமோ அதை
மட்டும் பேசுகிறேன் என்றார்.

ரஜினியின் முழு உரையும் அடங்கிய வீடியோவை
கீழே பதிந்திருக்கிறேன்.
( இங்கே பதிந்துள்ள புகைப்படங்கள்
மட்டும் நானே எடுத்தவை… )

ரஜினியின் பத்து நிமிட உரையை நேற்றிரவே
பல தலைப்புகளாக மீடியாவில் வெளியிட்டு
விட்டார்கள். மாதிரிக்கு சில –இரவு 7.15 மணிக்கு குடியரசு துணைத்தலைவர்
திரு.வெங்கய்ய நாயுடு அவர்கள் விழா மலரை
வெளியிட்டு, பேச – வருகை தருவதாக இருந்ததால்,
மற்ற நிகழ்ச்சிகள், அரசியல் உரையாடல்கள்
அனைத்தையும் அவர் வரும் முன்னரே பேசி முடித்து
விட்டார்கள்.

திரு.வெங்கய்ய நாயுடு அவர்கள் துக்ளக் பொன்விழா
ஆண்டு மலரை வெளியிட்டு விட்டு, ரஜினி பேசிய
பிறகு, விவரமாகப் பேசினார்.

வெங்கய்ய நாயுடு அவர்களின் சில நிகழ்ச்சிகளை
ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இங்கே
பேசும்போது, நகைச்சுவை ததும்ப பேசினார்.
தான் சிரிக்காமல், எந்தவித ரீ-ஆக்ஷனையும் காட்டாமல்,
பேச்சில் நக்கல், கிண்டல் – அபாரம்.

( துரதிருஷ்டவசமாக, என்னால் அவரது உரையை
பதிவு செய்ய முடியவில்லை…என் செல்போன்
ஒத்துழைக்கவில்லை…)

( எப்போதுமே – எனக்கென்னவோ, நாயுடுகாருவின்
குரல், நமக்கெல்லாம் மிகவும் பிடித்த குணச்சித்திர
நடிகர் எஸ்.வி.ரங்கராவ் அவர்களின் குரலைப்
போலவே இருக்கிறது என்று தோன்றும் …)

ஒரு நல்ல செயல்பாட்டாளரை, குடியரசு
துணைத்தலைவர் பதவியில் வலுக்கட்டாயமாக
பிடித்து உட்கார்த்தி, அவரது செயல்பாடுகளை
ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கியதன் மூலம்,
பாஜக தலைமை அவருக்கு அநீதி இழைத்து விட்டது
என்று தான் சொல்ல வேண்டும்.

என் மனதில் தோன்றுவது –
அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ -தெரியாமலோ….
ரஜினியின் முதல் அரசியல் அம்பு திமுகவை நோக்கி
வீசப்பட்டு விட்ட களமாகத் தெரிகிறது இந்த
கலைவாணர் அரங்கம்…!!!

ரஜினியின் உரை கீழே –

.
———————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to நேற்றிரவு நடந்த “துக்ளக்” ஆண்டு விழாவிலிருந்து ….

 1. Gopi சொல்கிறார்:

  முரசொலியை கையில் வைத்திருந்தால் அவர்
  திமுக காரர் என்று தானே சொன்னார் ;
  முட்டாள் என்றோ திருடன் என்றொ
  சொல்லவில்லியே. பின் உதயநிதி ஏன்
  எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல
  எம்பி எம்பி குதிக்கிறார்.

 2. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  ரசினி எப்பவும் முட்டாள்தனமா தான் பேசுறது வழக்கம், ரசினியோட பேச்சுக்கு உங்க நிலைப்பாடு என்ன சார்?

  • gopi சொல்கிறார்:

   adu yaaunga ர சி னி !!!!!!!!??????

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ஜிஎஸ்ஆர்,

   உங்களிடமிருந்து எனக்கு ஒரு
   விளக்கம் தேவை…

   நீங்கள் “ரஜினி”யை “ரசினி” ஆக்கியது ஏன் ?

   ” ரசினி எப்பவும் முட்டாள்தனமா தான் பேசுறது வழக்கம்” –
   என்று நீங்கள் சொல்வதற்கு –

   ஒருவேளை நீங்களும் முரசொலியை
   கையில் வைத்திருப்பவர் என்பது தான் காரணமோ …???

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

    சார் எழுத்துக்களை விட்டு விடுங்கள், சொல்ல வரும் கருத்தை மட்டும் பாருங்கள், முரசொலி கையில் நிச்சியமாக வைத்திருக்கவில்லை, ஒரு கட்சி சார்பு நிலை என்பது ஒரு போதும் இல்லை அந்தந்த காலத்திற்கு ஏற்ற வகையில் கட்சிகளுக்கு ஓட்டு போடுவது வழக்கம்…இந்த நடிகரின் பேச்சை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அது பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவல்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ஜிஎஸ்ஆர்,

     1) என்னைப் பொருத்த வரையில்,
     ரஜினியை ஒரு நல்ல நடிகராக அல்ல –

     ஒரு நல்ல “மனிதராக” பார்க்கிறேன்.

     2) ரஜினியின் பேச்சு பற்றி –

     முரசொலியை கையில் வைத்திருப்பவர்
     திமுக காரராக இருப்பார் என்பது
     உண்மை தானே…? பொதுமக்கள்
     யாராவது காசு கொடுத்து முரசொலி
     வாங்குவதையோ, படிப்பதையோ
     நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?

     சோ அவர்கள் இருந்த வரையில்,
     துக்ளக் படித்தவர்களுக்கான
     பத்திரிகையாகத் தான் இருந்திருக்கிறது.
     அது பாமரர்களுக்கான பத்திரிகையாக
     என்றும் இருந்ததில்லை.
     (இப்போது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.
     காரர்களுக்கான பத்திரிகையாகவும்
     மாறி விட்டது என்பது வேறு விஷயம்….)

     – முரசொலி வைத்திருப்பவர் முட்டாள் என்று
     சொல்லவில்லையே ; திமுக காரர் என்று தானே
     சொன்னார்; அது உண்மை தானே…?

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

      உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

      //– முரசொலி வைத்திருப்பவர் முட்டாள் என்று
      சொல்லவில்லையே ; திமுக காரர் என்று தானே
      சொன்னார்; அது உண்மை தானே…?//

      வார்த்தை விளையாட்டு அற்புதம் சார்.. இந்த நடிகர் விஷயத்தில் ஒரு பக்க சார்பு நிலை எடுப்பது போல இருக்கிறது. பெரும்பாலும் உங்கள் பதிவுகள் அரசியல் கண்ணோட்டத்தோடு அதில் நடுநிலையும் இருக்கும் ஆனால் இந்த விஷயத்தை அரசியல் கண்ணோட்டத்தை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறீர்கள்.

 3. natchander சொல்கிறார்:

  Rajni is very much unhappy with d m k,,, right from his unsuccessful attempt to see karuna s body in gopalapuram
  Till now,, his rasigar mandrams are given torture by d m k partymen,,,
  Let us hope Rajni could do something to prevent d m k from coming to piwer5 in 2021

 4. tamilmani சொல்கிறார்:

  Rajini is going to be the factor. infact the main factor for DMK not coming to power this time. with both jayalaitha and karunanithi not in the picture , there is certainly a vacuam . I hope Rajini fills in with like minded persons, sweep the polls in 2021, so a new dispensation in Tamilnadu emerge.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.