…
…
…
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்
திருமதி சோனியா காந்தி அழைத்திருந்த
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக கலந்து
கொள்ளவில்லை. டெல்லியிலேயே இருந்தும்
டி.ஆர்.பாலு, ஸ்டாலின் உத்திரவின்படி –
கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார்.
இதற்கு காரணமாக டி.ஆர்.பாலு கூறியதாக
வெளியாகியிருக்கும் செய்தி –
இது தொடர்பாக திமுக எம்பி டிஆர்பாலு
கூறுகையில்,
கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென
கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில்
எப்படி பங்கேற்க முடியும்? கூட்டணியில் பிரச்னை
இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில்
தெரிவித்திருக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை
தெரிவித்தார்.
டி.ஆர்.பாலு கூறியிருப்பதையே அடிப்படையாக
வைத்துக்கொண்டு பார்த்தால் கூட – கே.எஸ்.
அழகிரியை கண்டித்து, ஸ்டாலின், சோனியா காந்தி
அவர்களிடம் புகார் தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரசை
கண்டித்து வைக்கச் சொல்லியிருக்க வேண்டுமே
அல்லாமல், அகில இந்திய அளவில் கூட்டப்பட்ட
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை இப்படி புறக்கணித்திருக்கக்
கூடாது.
எனவே, திமுகவின் முடிவின் பின்னால், வேறு ஏதோ
காரணம் இருக்கிறது என்பது புரிகிறது. அது என்னவாக
இருக்க முடியும் ?
திமுக உள்வட்டாரங்களில் பேசப்படுவதாக
ஒரு செய்தியைப் பார்த்தேன். அது ஓரளவு
நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது.
தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை
திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக அண்மையில்
டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் பிரதமர் மோடியிடம்
வழங்கியபோது,
‘நீங்கள் பாஜகவை எதிர்ப்பது குறித்து எங்களுக்கு
பெரிதாக ஆட்சேபணை எதுவும் இல்லை; ஆனால்
நீங்கள் இன்னமும் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது
உங்களுக்குத் தான் ஆபத்தானது என்பதை நீங்கள் உணர
வேண்டும். அது எந்த விதத்தில் என்பதை நீங்களே
விரைவில் உணர்வீர்கள் ‘ என்கிற விதத்தில்
அட்வைஸ் கிடைத்தது என்று சொல்கிறார்கள்.
அதன் பின்னணியில் உள்ள அர்த்தங்களை புரிந்துகொண்ட
ஸ்டாலின், காங்கிரசுடனான உறவை துண்டித்துக்கொள்ள
ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்திருக்கிறார்.
விரைவிலேயே அந்த சந்தர்ப்பம், தமிழ்நாடு காங்கிரஸ்
தலைவர் கே.எஸ்.அழகிரியின் அறிக்கை மூலம்
உருவாகியது; திமுக உடனடியாக அதை பயன்படுத்திக்
கொண்டு விட்டது என்று தோன்றுகிறது.
மத்திய அரசுக்கு பயந்துகொண்டு காங்கிரஸை
உதறினாலும், பாஜகவும்-திமுகவும் கூட்டணி சேர்ந்தால்,
இரண்டு கட்சிகளுக்குமே அதனால் பாதகங்கள் தான்
அதிகம் என்பதால், அவை இரண்டும் கூட்டு சேர்வதற்கான
வாய்ப்பு நிச்சயமாக இல்லை.
– தமிழகத்தில், இந்த பிளவின் விளைவு
என்னவாக இருக்கும்…?
காங்கிரசுக்கு, ஏற்கெனவே எதாவது இருந்தால் தானே
இழப்பது குறித்த கேள்வி வரும் ? தமிழக சட்டமன்ற
தேர்தல் வெற்றி/தோல்விகளைப்பற்றி, கவலைப்பட
அதற்கு பெரிதாக ஒன்றுமில்லை…
அடுத்த பாராளுமன்ற தேர்தலின்போது தான் காங்கிரசுக்கு
ஒரு வலுவான கூட்டணி தேவைப்படும்… அதற்கு இன்னும்
நாலரை ஆண்டுகள் இருக்கின்றன.
ஆனால், திமுகவுக்கு …?
திமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்கிற தங்களது
நோக்கத்தை பாஜக தலைமை நிறைவேற்றிக் கொண்டது
என்று தான் சொல்ல வேண்டும்.
பாஜக தலைமைக்கு பயந்துகொண்டு காங்கிரசை
கைவிட்டால், திமுக நிச்சயம் ஓரளவு பலவீனப்படவே
செய்யும்.
காங்கிரசுக்கு எப்படியும் 7-8 % வாக்குகள் தமிழகத்தில்
உண்டு. இதை திமுக இழக்கும். மேலும், காங்கிரஸ்
வெளியேறினால், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள்
ஆகியவையும் வெளியேறி, இன்னும் சில கட்சிகளுடன் சேர்ந்து
3-வது கூட்டணி ஒன்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு…
அத்தகைய ஒரு சூழ்நிலையில் –
அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும் என்பதால்,
இது திமுகவைத் தான் பாதிக்கும். எனவே, திரு.ஸ்டாலின்
எடுத்துள்ள முடிவு, புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை.
கலைஞர் இருந்திருந்தால்,
இதை எப்படி கையாண்டிருப்பார் என்கிற
எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை …!!!
.
———————————————————————————————————————————–
Congress could have decided to try Rajni Kanrh and Kamal hasan,,in theur alliance,,
Besides Congress knowss that d mk,,, may not cone in the lead in 2021,,,,, if they are separated the loss is only to d m k,,
Sure,,,
வாத்தியார் பிள்ளை மக்கு கதை தான்.
கலைஞரின் சாமர்த்தியத்தில்,
அறிவில், பேச்சுத்திறமையில்,
ராஜதந்திரத்தில் 10 % கூடத் தேறாது
ஸ்டாலினிடம்.
பரம்பரை சொத்துக்களை சில பிள்ளைகள்
அழித்தொழிப்பது போல ஸ்டாலின் தன் காலத்தில்
திமுகவை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவார்.
உதயநிதி, திரைத்துறையை கெட்டியாக
பிடித்துக்கொள்வதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது.
எனக்கென்னவோ பிரசாந்த் கிஷோர் சொல்லியிருப்பது
போல் செய்கிறார்களோ என தோன்றுகிறது .
பா ஜ க , காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுடனும்
கூட்டணி வைத்து தேர்தலை சந்திருக்கிறார்கள் .
என்ன கணக்கு என்பது அவர்களுக்கே வெளிச்சம்
PUVIARASU JI
ONLY BECAUSE OF THE ACTOR,,, SANTHANAM,,
UDHAYANIDHI,, GOT THE ATTENTION OF FILM GOERS,,,,, AND SANTHANAM GOT FULL RECOGNITION,,,,, THAN UDHAYANIDHI,,,
PROBABLY D M Ks HUGE MONEY,,,, MIGHT HELP UDHAYANIDHI,,, TO ACT IN MORE FILMS HEREAFTER WARDS,,,,,!!!!