யாரைப் பாராட்ட….?


குரலும், இசையமைப்பும் பாடலை தனியாகக்
கேட்கும்போதே நம்மை ஈர்த்தாலும் –

ஒரு படத்தைப் பார்க்கும்போது தான் –
எத்தகைய கதைச் சூழ்நிலையில்
அந்தப் பாடல் வருகிறது
என்பதைப் பார்க்கும்போது தான்

அந்தப் பாடலின், அந்த வார்தைகளின்
முழு பரிமாணத்தையும் புரிந்து ரசிக்க முடிகிறது.

இந்த அளவிற்கு பொருத்தமான ஒரு பாடலை,
காட்சியை – அண்மைக்காலங்களில்
எந்த படத்திலும் கண்டதாக எனக்கு நினைவில்லை….

நேற்று தான் இந்தப் படத்தைப் பார்த்தேன்…!!!

வித்தியாசமான குரல் ….

சித் ஸ்ரீராம் –

அதே பாடல் – இன்னமும் அழகாக,
மென்குரலில் மாளவிகா –


திரையில் அந்தக் காட்சி –
தனுஷ்-மெகா ஆகாஷ் –

(தனுஷுக்கு இந்த குரல் பொருந்தவில்லை
என்பது தான் இதில் உள்ள ஒரே குறை…)

காட்சியுடன் அற்புதமாகப் பொருந்தும்,
அந்தப் பாடலின் ஆழமான வரிகள் …..

இயற்றியவர் – தாமரை ….


————-

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்

முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்…

——————

இசையமப்பாளர் –
Darbuka Siva

——————–

அத்தனையையும் தன் சிறப்பான
கற்பனையால் – ஒருங்கிணைத்த
இயக்குநர் – கௌதம் வாசுதேவ் மேனன்

————————————————

இதிலேன் கஞ்சத்தனம்….
அத்தனை பேருக்குமே –
நமது வாழ்த்துகள்; பாராட்டுகள்.

.
—————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to யாரைப் பாராட்ட….?

 1. Gopi சொல்கிறார்:

  இந்தப்படம் முன்பே தயாராகி விட்டாலும்,
  வெளிவருவதற்கு மிகவும் தாமதம் ஆகியது.
  இந்தப் பாடல் 2 வருடங்களுக்கு முன்னரே
  வெளியாகி மிகவும் பாப்புலர் ஆகி விட்டது.
  படம் வெளிவந்த பிறகு இப்போது மீண்டும்
  கொண்டாடப்படுகிறது

 2. R.Gopalakrishnan. சொல்கிறார்:

  Sir, I keenly observe that you are choosing the topics very cautiously now a days though
  it is little dissapointment to me. Anyway self&wife wish U and every one of your family advance
  happy Pongal.

 3. புவியரசு சொல்கிறார்:

  R.Gopalakrishnan.

  கே.எம்.சார் யோசித்து சரியாகத்தான்
  செயல்படுகிறார் என்பது என் கருத்து.
  இந்தியாவில் இப்போது மிகச் சுலபமாக
  கிடைப்பது “தேசத்துரோகி” பட்டம் தான்.
  இப்போதெல்லாம் அரசின் கொள்கைகளையும்,
  செயல்பாடுகளையும் சாதாரணமாக விமரிசித்தால்
  கூட உடனடியாக “தேசத்துரோகி” பட்டம் கிடைத்து
  விடுகிறதே.
  நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா அல்லது
  வெளிநாடு எதாவதிலா ?
  இங்கே இருப்பவர்களுக்கு இந்த நிலை புரியுமே.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கோபாலகிருஷ்ணன்,

  நீங்கள் சொல்வது –
  புவியரசு சொல்வது –
  இரண்டிலுமே உண்மை இருக்கிறது …!

  எனக்கு இப்போதெல்லாம் கொடுக்கப்படும்
  பட்டங்களைப் பார்த்தாலே அலர்ஜியாக
  இருக்கிறது.

  ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மகன் நான்
  என்று எனக்குள் உள்ள பெருமிதமும்
  சந்தோஷமும் எனக்கு போதுமானது.

  யாரும் புதிய பட்டங்களை என் மீது
  சுமத்த முடியாமல் செயல்படுவது எப்படி
  என்பது எனக்கு ஓரளவு புரிகிறது.

  என்னைப் பொருத்த வரை –
  எப்போதுமே என் மனசாட்சி தான் எனக்கு எஜமான்.
  என் மனசாட்சி சொல்கிற வழியில்
  தொடர்ந்து செயல்படுவேன்.

  காலத்திற்கேற்றாப் போல் செயல்படுவோம்.
  அதற்காக – “பொது நலன்- நாட்டின் நலன்”
  தான் முக்கியம் என்கிற –
  நமது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய
  அவசியம் நமக்கில்லை.
  காலங்கள் மாறும்…காத்திருப்போம்.
  மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை
  நினைவில் கொண்டு செயல்படுவோம்.

  // it is little dissapointment to me. //

  சீக்கிரமே – உங்கள் ஏமாற்றம் நீங்கி, எதிர்பார்ப்புகள்
  கைகூடும் சூழ்நிலை ஏற்படும் என்று நம்புவோம்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.