JNU – கலவரம் செய்த தடி’யர்கள் கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்….


டெல்லி ஜவஹர்லால் நேரு யுனிவர்சிடியில்
முகமூடித் தடியர்கள் நடத்திய தாக்குதல் குறித்து
பல்வேறு செய்திகளும் வதந்திகளும் உலா
வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் – நிஜத்தை வெளிக்கொண்டு வரும்
நோக்கில் ஒரு string operation நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தியா டுடே தொலைக்காட்சியைச் சேர்ந்த
நிருபர்கள் hidden camera -வின் உதவியோடு,
சில மாணவர்களிடம் உண்மையில் நடந்தது என்ன
என்பதைப் பற்றி பேசி இருக்கிறார்கள்…. அந்த பேச்சு
முழுவதும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல்
வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ABVP-யைச் சேர்ந்த மாணவர்கள் பெருமையோடு
தான் தாக்குதலில் ஈடுபட்டதைப்பற்றி விவரிக்கிறார்கள் …

அவற்றை வெளியிட்டு, இந்தியா டுடே
தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ராகுல் கன்வால்
ஒரு விசேட நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

பல உண்மைகளை வெளியே கொண்டு வரும்
அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நமது வாசக
நண்பர்களின் பார்வைக்காக – கீழே –

.
—————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to JNU – கலவரம் செய்த தடி’யர்கள் கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்….

 1. புதியவன் சொல்கிறார்:

  பயணங்களால் இணையம் பக்கமே வரமுடியலை. இதுக்கு மட்டும் பதிலெழுத நினைக்கிறேன்.

  இந்த தெனாவெட்டு குண்டர்களை கடும் காவலில் வைத்து அவங்க குற்றமற்றவர்கள் என அவங்களே நிரூபிக்கும்வரை உள்ள தள்ளணும்.

  குண்டர்கள் கலவரம் செய்வது கண்டிக்கப்படணும் கடுமையா தண்டிக்கப்படணும்

 2. புதியவன் சொல்கிறார்:

  இதுக்கு பாஜக வும் ஆர்எஸ்எஸ்ஸும் பொறுப்பு ஏத்துக்கணும் உடனேயே கட்சி இயக்க ரீதியா எதிர்வினை ஆற்றவில்லைனா… சும்மா ஒரு மாதம் கழித்து பரப்புரைல போகிறபோக்கில் சொல்லக்கூடாது.

  குண்டர்களை வளர்ப்பவர்களும் குண்டர்கள்தாம்

 3. Mani balan சொல்கிறார்:

  Puthiyavan sir,
  Be careful. So many days you supported bjp. Now if you change your tone, you will be marked as ‘Suspicious Citizen’ in national NRC.

  • புதியவன் சொல்கிறார்:

   என்னைவிட பெட்டர் சிடிசன் பாஜகவில் இல்லை.

   அதிருக்கட்டும். என் ஆதரவும் எதிர்ப்பும் issue based. உடனே ஜெ என் யூ அணி மற்றும் தேசவிரோதச் செயல்களில் ஈடுபடும் அனைவரும், வைகோ திமுக கும்பல் உட்பட, ஆட்சிக்காலத்தில் பையன், மனைவி மூலமாகச் சுருட்டிவிட்டு இப்போது வேதம் ஓதும் சாத்தான்கள், தேச விரோத காங்கிரஸ் நமக்கு எதிரிகள்தாம்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மணிபாலன்,

    இப்போது திருப்தியா …? 🙂 🙂

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Mani balan சொல்கிறார்:

     சொல்வதற்கு ஒன்றும் இல்லை ஐயா! வருங்காலத்தில் இவர்களை பற்றி பெரிய ஆச்சரியமும் ஆராய்ச்சியும் இருக்கும்- எப்படி இப்படி ஒரு கூட்டம் உருவானது என்று!

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ஜே என் யூ நடந்ததை பற்றி ஒரு மாணவருடன்
  பேசியது வந்திருக்கிறது இதை வாக்குமூலம் எனக்
  கொள்ளமுடியாது .

  பல்வேறு செய்திகள் வருகின்றன .
  கலவரத்தை துணை வேந்தர்தான் தூண்டி விட்டார்
  என பல்கலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
  போலீஸ் கலவரம் நடந்த போது அதற்கு துணையாக
  நின்றது எனவும் மாணவர்கள் கூறுகின்றனர் .

  டெல்லி போலீஸ் இடது சாரி மாணவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது .

  208 கல்வியாளர்கள் திரு மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள் .
  இ டது சாரி இயக்கங்கள் கல்வி சூழலை பாதிக்கும்
  விதத்தில் உள்ளதால் அவைகளை முழுமையாக
  தடை செய்ய வேண்டும் .

  பா ஜ க தலைவர் ஒருவர் ஒருபடி மேலே போய்
  ‘நாயை சுடுவது போல் சுடுவோம் ‘ என்று சொல்கிறார்

  குடிமை சட்ட திருத்த சட்டத்திற்கு இவ்வளவு பெரிய
  எதிர்ப்பை ஆளும் கட்சி எதிர்பார்க்கவில்லை

  இப்போது மாணவர்களை சீண்டும் வேலையை செய்ய
  தொடக்கியுள்ளார்கள் இது தெரிந்தே செய்கிறார்களா ?

  வேலையில்லா திண்டாட்டம் பெரிய அளவில் உள்ளது .
  இது ஒன்றாலே மாணவர்கள் கொதிப்பு அடைவார்கள் .
  அரசியல் இதில் நடக்கும் –
  அது பா ஜ க விற்கு சாதகமாய் இருக்காது .
  அரேபியன் ஸ்ப்ரிங் மாதிரி கூட வரலாம் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.