…
…
தினந்தோறும் பல கார்ட்டூன்கள் வெளியானாலும்,
சில சமயங்களில் தான் மிகப்பொருத்தமான
கார்ட்டூன்கள் கிடைக்கின்றன.
இன்றைய ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியான
அர்த்தமுள்ள, பொருத்தமான – கார்ட்டூன் ஒன்று கீழே –
உலக உளறுவாயருக்கு – ஈரான் –
“முகத்தில் விட்ட அறை”-யில் பதிலுக்கு எப்படி
ரீ-ஆக்ட் செய்வது என்று தெரியாமல் உளறியதை
சிறப்பாக சித்தரித்திருக்கிறார் கார்ட்டூனிஸ்ட்.
அவருக்கு நமது பாராட்டுகள்….
அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசு நாடு…
மிகச்சிறப்பான பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ள நாடு.
ராணுவ பலம் மிகுந்த நாடு….
ஜனநாயக வளர்ச்சி பெற்ற நாடு….
எல்லாமே உண்மை தான்.
இருந்தாலும் கூட – ஒட்டுமொத்தமாக உலக மக்கள்
எல்லாருடைய தலைவிதியையும் தீர்மானிக்கும்
பொறுப்பை – அமெரிக்க ஜனாதிபதியிடம்
விட்டு விட முடியாது அல்லவா…..?
…
…
– இப்படிப்பட்ட ஒரு கிறுக்கரை, உளறுவாயரை
உங்கள் நாட்டின் மிக முக்கியமான பொறுப்புக்கு
தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே – இது சரியா …? என்று
அமெரிக்க மக்களை கேட்கத் தோன்றும் அதே நேரத்தில் –
அதைக் கேட்கும் “தகுதி” நமக்கு இருக்கிறதா
என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது….!!!
.
——————————————————————————————————————————————————
தவறான தேர்ந்தெடுப்பு அமெரிக்காவில்
மட்டும் தானா என்ன ?
இங்கென்ன வாழ்கிறதாம் ?
நம் மக்களும் சளைக்கவில்லையே 🙂
65 வருடங்களாக இது போன்ற தவறை நாமும் செய்து கொண்டே இருந்தோம் இல்லையா?
illai..
kadantha 6 varudamaga daan
teriytta parava illai..
kuzhandai daaney…:
ippo terinjukko kanna..!!
ஈரான் குத்து விட்டது போன்ற கார்ட்டூன் புரியவில்லை. ஈரான் விட்ட மிஸ்ஸைல்கள் பெரிய சேதம் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை. மேலும் உக்ரைன் நாட்டு விமானத்தை தவறாக தாக்கியதாக கனடாவும் அமெரிக்காவும் சொல்கின்றன. இப்படி இருக்கும்போது, குத்து விட்டதாக போடுவது எப்படி சரியாகும்?
மிகத் தவறான கார்ட்டூன்.உலக அபிப்பிராயம் நேர்மாறாக உள்ளது.
ஈரான் தனது விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தையே சுட்டு வீழ்த்தி முதலில் மறுத்து இப்போது அவமானபட்டு நிற்கிறது.