திருவாளர் ஜக்கி’யின் மண்டையில் ஓங்கி குட்டியது உயர்நீதிமன்றம்…


….
….

“ஆன்மிகவாதி என்று
சொல்லிக் கொள்வதால்
நீங்கள் சட்டத்தை விட உயர்ந்தவர்
என்று நினைத்து விட
வேண்டாம்….”

– கர்நாடக உயர்நீதிமன்றம் …

அரசியல்வாதிகளையும், பிரபலங்களையும்
வசப்படுத்திக் கொண்டால் போதும்,
எதை வேண்டுமானாலும் செய்யலாம்;
எவ்வளவு வேண்டுமானாலும், எப்படி
வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாமென்று
நினைத்து செயல்படுபவரை நம்மால் என்ன செய்ய
முடியுமென்று கடைசியாக
எழுதிய இடுகையில் நொந்து கொண்டோம்.

ஏன் இந்த பந்தா…? எத்தனை கோடி டார்கெட்..??? Posted on செப்ரெம்பர் 12, 2019 – vimarisanam – kavirimainthan

———–

அந்த நினைப்பிற்கு மாற்றாக,
ஆறுதலான உத்திரவு ஒன்றை – கர்நாடக உயர்நீதி
மன்றம், ஜக்கி மற்றும் ஈஷா அமைப்புக்கு
எதிராக தொடரப்பட்ட ஒரு வழக்கில் சொல்லி
இருக்கிறது.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வக்கீல் அமர்நாத்
என்பவர் “காவிரியின் கூக்குரல்” (cauvery calling project)
என்கிற பெயரில், ஈஷா யோகா அமைப்பினர்
சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றி
பணம் பறிப்பதை தடுக்க வேண்டுமென்று கோரி
ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் உ.நீ.மன்றம் கொடுத்துள்ள இடைக்கால
உத்திரவு குறித்த செய்தியிலிருந்து சில பகுதிகள் கீழே –

A division bench of Chief Justice Abhay Oka and
Justice Hemant Chandangoudar pulled up the foundation
headed by Jaggi Vasudev – for not specifying if the
amounts are being collected voluntarily.

The Karnataka High Court on Tuesday directed
Sadhguru Jaggi Vasudev’s Isha Foundation to file
an additional affidavit disclosing the amount it has has
collected for the ‘Cauvery Calling Project’.

The Foundation has also been asked to explain the
mode and manner in which the amounts have been raised.

The bench said –

“Do not be under the
impression that you are not bound by law because
you are a spiritual Organization. ”

“If someone is creating awareness of rejuvenation
activity it is most welcomed but not by forcibly
collecting funds”, the bench remarked…

As per the petition, the Foundation is planning to plant
253 crores tree saplings across the 639 kilometer
stretch of Cauvery river bank from its birth place
Talacauvery to Thiruvarur. The Foundation is said
to be collecting Rs. 42 per tree planting from the public.
That means it is collecting a whooping sum of
Rs 253 X 42 in total of Rs, 10,626 crores , which
according to the petitioner is a major scam.

The matter will be next heard on February 12.

ஏதோ பெரிதாக நல்லது நடந்து விடும்
இதற்கெல்லாம் ஒரு முடிவு வந்து விடும் என்கிற
அதீத நம்பிக்கை எல்லாம் நமக்கு இல்லை….

இந்த மாதிரி எத்தனையோ பார்த்து விட்டார்கள்….
இதையும் சமாளிக்க அந்த “எல்லாம் வல்லவருக்கு”
தெரியாதா என்ன….?

இருந்தாலும், முதல்முறையாக, நீதிமன்றத்திலிருந்து
ஒரு குட்டு விழுந்திருப்பது நமக்கு கொஞ்சம்
ஆறுதலைத் தருகிறது….

பார்ப்போம் – மேற்கொண்டு என்ன நடக்கிறதென்று….!!!

இந்த வழக்கை இதே வழியில் தொடர்ந்து நடத்த,
சம்பந்தப்பட்டவர்கள் அங்கேயே இருக்க வேண்டுமே….!!!

பின் குறிப்பு –

சொல்ல மறந்து விட்டேனே…
தமிழ்நாடும் சம்பந்தப்பட்டிருக்கும்
இந்த அதி முக்கியமான, வழக்கைப்பற்றிய
செய்தி எனக்குத் தெரிந்து, எந்த தமிழ் நாளேடுகளிலும்,
தொலைக்காட்சிகளிலும் இது வரை வெளிவரவில்லை…..!!!

காரணம் – ?
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்….!!!

.
—————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to திருவாளர் ஜக்கி’யின் மண்டையில் ஓங்கி குட்டியது உயர்நீதிமன்றம்…

 1. Prabhu Ram சொல்கிறார்:

  இந்த போலிச்சாமியார் வக்கணையாகப் பேசியே
  எல்லாரையும் சாய்த்து விடுவார்.
  பெரிய பெரிய ஆசாமிகள் எல்லாமே அவர் வலையில்
  விழும்போது, சாதாரண மனிதர்கள் எல்லாம்
  எம்மாத்திரம் ?
  கல்லில் மோதினால் உங்கள் மண்டை தான் உடையும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.