…
…
…
…
…
ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரமான
தீபிகா படுகோன் – நேற்று டெல்லி ஜவஹர்லால்
யுனிவர்சிடி மாணவர் சங்கத்தின் தலைவி
அயிஷா கோஷ்-ஐ யும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
பிற மாணவர்களையும் நேரில் சந்தித்து,
அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு
வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறியுள்ளார்.
நம் உணர்வுகளை வெளிப்படுத்த, நாம்
யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்று
வெளிப்படையாக வேறு கூறி இருக்கிறார்.
தீபிகாவின் துணிச்சல் உண்மையிலேயே வியக்க
வைக்கிறது. அவருக்கு அரசியல் ஆசைகள்,
அபிலாஷைகள் எதுவும் கிடையாது. அவருடைய
ஒரே ஈடுபாடு திரையுலகம் தான். எந்தவித
அரசியல் பின்புலமும் இல்லாத ஒருவர்
இப்படி பேசுவதால் இது அவருக்கு பாதகம் தான்.
பஞ்ச்-டயலாக்’க்குகளை திரையில் அள்ளி வீசும்,
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் ஹீரோக்கள்
எல்லாம், அரசை எதிர்ப்பதால் ஏற்படக்கூடிய
பின்விளைவுகளை எதிர்கொள்ள துணிச்சலின்றி,
வாய்பொத்தி மௌனமாக இருக்கும்போது,
ஒரு சின்னப்பெண் – இப்படி துணிந்து
செயல்படுவது வித்தியாசமான விஷயமே.
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும்
ஒருவர் – சர்வ சக்தி வாய்ந்த பாஜக அரசை
எதிர்த்து கருத்து கூறினால், அதன் விளைவுகள்
எப்படி இருக்கும்… அவர் தனிப்பட்ட முறையில்
எத்தகைய தொல்லைகளை, துன்புறுத்தல்களை
எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை
நாம் நன்றாகவே உணர்வோம்.
அத்தகைய விளைவுகளுக்கெல்லாம் அஞ்சாமல்,
தன் மனசாட்சி சொல்வதை துணிந்து செய்திருக்கும்,
தீபிகாவிற்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
.
———————————————————————————————————————–
அடுத்து படையெடுப்புகள் துவங்குமே.
வருமான வரி இலாகா,
ஈ.டீ., ரெய்டு etc. etc.
அவர் படம் திரையிடப்படும் தியேட்டர்களின்
முன்னால், வானர சேனைகள் கூடுமே;
கல்லெறியுமே.
நாளைக்கு தலைவர் படம் ரிலீசு, முதல் நாள் முதல் ஷோ புக் பண்ணிருக்கோம், டீம் எல்லாம் போறோம், வான்னு கூப்பிட்டான்.
தீபிகா படுகோனுக்கு இருக்கிற முதுகெலும்பு கூட இல்லாதவனை எதுக்கப்பா போயி பாக்கணும்னேன்.
அவன் சிறந்த நடிகன்பா அத மட்டும் பாக்கணும்னான்.
ரொம்ப கரெக்ட்டு அவன் சிறந்த நடிகன்னுனு தெரிஞ்சுட்டதாலதான் வரலேன்னேன். பேசாம போயிட்டான்.
Mani balan,
மற்றவர்களை எல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள் ?
நீங்கள் அவர்களின் கூஜாவா அல்லது ஜால்ராவா ?
Gopi : இது திமுக ஜால்ரா.
ஸ்டாலின் ஜால்ரா சப்தமாகவே கேட்கிறதே.
போட்டி அவருக்கும் இவருக்கும் தானே .
அதான் இந்த ஜால்ரா இவரை மட்டும்
குறி வைக்கிறது.