…
…
…
…
ஒப்பனை இல்லாத தோற்றமும் ….
உள்ளத்திலிருந்து வரும் இயல்பான பேச்சும் …
உண்மையைச் சொல்லும் பக்குவமும் –
பொதுமேடையில் இருக்கும்போது,
நடிகர்களுக்கு லேசில் வந்து விடாது.
அதுவும் இத்தனை சின்ன வயதில்…
கடந்த சில வருடங்களாகவே சூர்யாவை
உன்னிப்பாக பார்த்து வருகிறேன்.
நன்றாகச் சம்பாதிக்கும் சிலர்,
தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை,
நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக
கொடுப்பது என்பதை ஒரு பழக்கமாகவே
வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது – பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
ஆனால், சூர்யாவின் பணி, இதிலிருந்து
கொஞ்சம் மாறுபட்டது…. தனது உதவி
யாருக்கு கிடைக்க வேண்டும் – எப்படி
கிடைக்க வேண்டும் என்பதையும்
யோசித்துச்செய்கிறார்.
சமூகத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ள
தகுதி வாய்ந்த சில மாணவர்களை
தேர்ந்தெடுத்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையில்
ஒரு நல்ல நிலைக்கு உயரும் வரையிலும்
தொடர்ந்து உதவி செய்கிறார்….
அகரம் பவுண்டேஷன் மூலம் அவர்
ஆற்றி வரும் சமூகப்பணிகள் குறித்து
நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க
உதவுவது மட்டுமல்லாது –
அவர்களிடையே தன்னம்பிக்கையையும்,
செயல்திறனையும் வளர்த்து, ஊக்கப்படுத்தி –
அவர்களையும் பிறருக்கு உதவத்தூண்டும்
அடுத்த கட்ட பணிக்கு பயிற்சியும்
கொடுத்து வருகிறது…
சூர்யா ஒரு நல்ல நடிகரா என்பது குறித்து
யாருக்கேனும் விமரிசனங்கள் இருக்கலாம்.
ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதாபிமானி
என்பதை எடுத்துக் காட்டும் பல நிகழ்வுகளை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நல்ல மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டு,
ஊக்கப்படுத்துவது –
அவர்கள் உற்சாகத்துடன் இன்னும்
தீவிரமாக உழைக்க அது உதவும்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னரே சூர்யாவைப்பற்றி
எழுத வேண்டுமென்று தோன்றியது.
நேற்று ஒரு காணொளியை பார்த்தேன்….
அது இந்த இடுகையை உடனடியாக
பதிவிடத்தூண்டியது.
அத்துடன் தொடர்புடைய இன்னும்
சில காணொளிகளும் ….கீழே –
….
….
….
….
.
————————————————————————————————————————–
சூர்யா நடிகர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்.
மற்றவர்களைப்பற்றி, சமுதாயத்தைப்பற்றி
கவலைப்படுகிறார். தன்னால் இயன்ற உதவிகளை
பயனுள்ள வகையில் செய்கிறார்.
அவரைப்பாராட்டி நீங்கள் எழுதியது மகிழ்ச்சி
அளிக்கிறது.
அரசியல்வாதிகள் அவருக்கு வலை வீசுவர்.
அதில் சிக்காமல், தொடர்ந்து இதே போல்
செயல்பட வேண்டும்.
//சூர்யா ஒரு நல்ல நடிகரா என்பது குறித்து
யாருக்கேனும் விமரிசனங்கள் இருக்கலாம்.//
சூர்யா நிச்சயம் சிறந்த நடிகர் என்பதற்கு கஜினி , வாரணம் ஆயிரம் ,
பிதாமகன் போன்ற ஏராளமான படங்களை உதாரணமாக சொல்லலாம்.
நல்ல நடிகர் மட்டுமல்ல , நல்ல மனிதரும் கூட. அவர் நிச்சயம் விளம்பரத்துக்காக
ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யவில்லை. மேல் கல்வி கற்க குடும்ப நிதி நிலை ஒரு காரணமாக இருக்க கூடாது என்பதற்க்காக ஒரு தேர்நதெடுக்க பட்ட அரசு செய்ய வேண்டியதை
அகரம் மூலம் செய்கிறார்.