செவ்வாயிலிருந்து வந்து குதித்த முகமூடித் தடியர்கள் …. !!!


80-லிருந்து 100 பேர் வரையில் இருக்கும் …..
முகத்தை துணியால் அடையாளம் தெரியாமல்
மறைத்து கட்டி இருக்கிறார்கள்.
ஆளுக்கு ஒரு ஆயுதத்தை, குண்டாந்தடி அல்லது
இரும்பு ராடு கையில் வைத்திருக்கிறார்கள்…..
தடதடவென்று பின் பக்கத்து கேட் வழியே உள்ளே
நுழைகிறார்கள். சுமார் ஒரு மணி நேரம் ஆட்டம்
போடுகிறார்கள். உள்ளேயே இருப்பவர் அடையாளம்
காட்ட,

ஒவ்வொரு இடமாக, குறிப்பிட்ட நபர்களாகப் பார்த்து
தாக்குகிறார்கள்; மண்டைகளை உடைக்கிறார்கள்.
அத்தனை பேரும் பேண்ட் சட்டை போட்டிருக்கிறார்கள்…
உள்ளூர் தான் என்று தெளிவாகத் தெரிகிறது….
பலபேரின் மீது தாக்குதல்களை முடித்து விட்டு,
கூட்டமாக அதே பின்பக்க வாசல் வழியாகவே
வெளியேறுகிறார்கள். அவர்களிடம் பிடிபட்டு
விடுவோமே என்கிற அச்சம் சிறிது கூட இருப்பதாகத்
தெரியவில்லை.

பல சிறு சிறு வீடியோக்கள், பலரால் எடுக்கப்பட்டவை –
வெளி வந்திருக்கின்றன…

நேற்று இரவு 6-7 மணி சுமாருக்கு நடந்த தாக்குதல்கள்.
இத்தனை வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால், காவல் துறையால் இன்னமும் சம்பந்தப்பட்ட
நபர்களில் ஒருவரைக் கூட அடையாளம் காணவோ,
கைது செய்யவோ முடியவில்லை….

பின் வாசல் நுழைவில் இருக்கும் சிசிடிவி காட்சிகள்
ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், அவர்கள் வேன்களில்,
இருசக்கர வண்டிகளில் வந்திறங்கிய காட்சிகள்
அருகேயுள்ள, எதிரேயுள்ள கடைகளில், வர்த்தக
அலுவலகங்களில் உள்ள சிசிடிவி காமிராக்களில்
நிச்சயம் கிடைத்திருக்கும்…. அதில் மறைக்கப்படாத
பல முகங்களும் தெரியும்.

தொலைக்காட்சி சேனல்கள் குறைந்த பட்சம்
3 நபர்களை, முகம் தெளிவாக, அடையாளம் தெளிவாக
தெரியும்படியான காட்சிகளை freeze செய்து புகைப்படமாக
எடுத்து வெளியிட்டிருக்கின்றன. 3 பேரும் எந்த அமைப்பை
சேர்ந்தவர்கள், என்ன பொறுப்பு வகிக்கிறார்கள் என்பதையும்
தொலைக்காட்சிகள் கண்டு பிடித்து தெரிவிக்கின்றன.ஆனாலும், இதுவரை கைது நடவடிக்கை எதுவும் இல்லை.
காவல் துறை தீவிரமாக விசாரணையில்
ஈடுபட்டிருக்கிறதாகச் சொல்கிறார்கள்….

கண்டு……. பிடித்து …. விடுவார்கள்…..
நடவடிக்கை …….நிச்சயம்…… இருக்கும்….
ஆனால்…..
எப்போது…..? யார் மீது…..?

.
————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to செவ்வாயிலிருந்து வந்து குதித்த முகமூடித் தடியர்கள் …. !!!

 1. புவியரசு சொல்கிறார்:

  தடியும் கையுமாக நிற்கிற இந்த தடியன்’களை
  கைது செய்ய காவல்துறைக்கு ஏன் தயக்கம் ?

  அமைச்சரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லையா ?

 2. Ramnath சொல்கிறார்:

  தொட முடியுமா ? ABVp ஆசாமி என்று தெரிந்த பிறகு ?
  பதட்டப்படாதீர்கள்.
  விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
  எப்போது முடியும் ?
  6 மாதத்திற்குள் விசாரணை முடிந்து விடும் –
  அதன் பிறகு ?
  அதன் பிறகு இதைப்பற்றி யாரும் கேள்வி கேட்கவே
  மாட்டார்கள். அதற்குள்ளாக வேறு பிரச்சினைகள்
  முளைத்து விடும்.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இது போல மீடியாவில் வரலாம் .
  வீடியோ தெளிவாக இல்லை .
  போலீஸ் பல்கலை உள்ளே வரக் கூடாது .
  அதனால் எப்படி பாதுகாப்பு தர முடியும் ?
  தாக்குதலில் காயமடைந்தவர் வலது சாரிகள் .
  இடது சாரி குண்டர்களை இரும்புக்கரம் அடக்க வேண்டும் .
  மாணவர்கள் படிப்பதை மட்டும் செய்ய வேண்டும் .
  அதனால் பல்கலையில் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்படும் .

  அப்புறம் சமூக விரோதிகள் , அர்பன் நக்ஸாலிட் கள்
  போராட்டத்தில் ஊடுருவி விட்டார்கள்

  குறை சொல்லும் ஆண்டி இந்தியர்கள் கலவரம் செய்வதற்கு பதில்
  பேசாமல் பாகிஸ்தான் போய் விடலாம்

 4. Prabhu Ram சொல்கிறார்:

  நேற்று நள்ளிரவு டிவியில் செய்திகளை
  பார்த்துக் கொண்டிருந்தபோது தான்
  ஒரு வார்த்தை பற்றி நீண்ட நாட்களாக
  எனக்கிருந்த சந்தேகம் விளங்கி
  அதற்கான ஒரு புதிய அர்த்தம் புரிந்தது.

  நக்சலைட் என்றால் – கிராமப்புறங்களில்,
  வனப்பகுதிகளில் – வன்முறையில்
  போராடும் இடதுசாரி தீவிரவாதிகள்.

  அர்பன் நக்சலைட் என்றால் ?
  நகர்ப்புறங்களில், பல்கலைக்கழகங்களில்
  வன்முறையில் ஈடுபடும் ஆளும்கட்சி
  வலதுசாரித் தீவிரவாதிகள்.

 5. bandhu சொல்கிறார்:

  பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? சுத்தமாக புரியவில்லை!

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  bandhu,

  ஜனநாயக முறையில் – அரசின் செயல்பாடுகளை
  எடைபோட்டு மக்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதாக
  இருந்தால் தானே, அவர்கள் இதைப்பற்றி யோசிக்க
  வேண்டும். மத அபிமானிகளின் நம்பிக்கையை மட்டும்
  பெற்றால் போதும்… ஆட்சிக்கு வந்து விடலாம் என்கிற
  நிலை இருந்தால் – நியாய அநியாயங்களைப்பற்றி
  அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.