…
…
…
மாலையில் குருஜி வெளியிட்ட நீண்ட அறிக்கையின்
இறுதிப்பகுதி –
” நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும்
பதிவு இருக்க வேண்டும்.
கோவை மாநகரத்தில் வளர்ப்பு நாய்களைப்
பதிவு செய்ய வேண்டுமென்ற ஒருமுறை இருக்கிறது.
பதிவு செய்யப்பட்ட நாய்களுக்குக் கழுத்தில் பட்டைகள்
அணிவிக்கப்படுகின்றன. நாய்களுக்கே பதிவு தேவை
என்கிறபோது இந்தியக் குடிமகன்களுக்குப் பதிவு
தேவையில்லையா?” என்கிறார் சத்குரு.
– ஆச்சரியமாக இருக்கிறதே….
குருஜி இன்னும் ஆதார் கார்டு வாங்கவில்லையா….?
அல்லது கழுத்தில் தொங்க விடுவது போல்
வேறு எதாவது format -ல் வேண்டும் என்கிறாரா …?
.
—————————————————————————————————————–
சத்குரு மிக கவனமாக பேசியிருக்கிறார் .
ரங்கராஜ் பாண்டே கூட இவ்வளவு அழகாக முட்டு
கொடுத்திருக்க மாட்டார் . கேட்பவர்கள் அப்படியே
பக்தி சிரத்தையாய் மே மறந்து கேட்கிறார்கள் .
அரசு சரியாக விளக்கம் கொடுக்க தவறிவிட்டது .
அதனை சிலர் பயன்படுத்தி கலவரம் செய்கிறார்கள் .
இந்த சட்டத்தில் தவறு எதுவும் இல்லை .
மாணவர்கள் சட்டத்தை படிக்காமல் கலவரம் செய்தார்கள் .
போலீஸ் பல்கலைக்குள் நுழைந்தது சரியே .
கலவரத்தை கட்டுப்படுத்த லத்தியால் அடித்ததும் சரியே .
போலீஸ் சுட்டு பொசுக்காமல் விட்டது பெரிய காரியம் .
பா ஜ க கூட இதை சொல்லவில்லை .
NRC தேவை – நாய்க்கே அடையாள அட்டை இருக்கிறது .
அப்போது ஆட்களுக்கு வேண்டாமா என கேட்கிறார் .
இவர் சொல்கிறபடியே வருவோம் .
அடையாள அட்டை இல்லாதது தெருநாய் –
அதை என்ன செய்வார்கள் ?
நித்யானந்தா மேல் உள்ள எல்லா புகார்களும்
இவர் மேலும் உள்ளன .
இப்ப சத்குருவுக்கு ஒரு பாரத ரத்னா பார்ஸல் !
செஞ்சோற்றுக் கடன்;
தான் செய்யும் சட்டமீறல்களுக்கெல்லாம் துணையாக
இருப்பவர்களுக்கு பதிலுக்கு காட்டும் விசுவாசம்.
வனங்கள் பாதுகாப்பு சட்டம், நில அபகரிப்பு,
யானைகள் தட மறிப்பு, அனுமதியின்றி
கட்டப்படும் கான்க்ரீட் கட்டிடங்கள்,
சட்டவிதிமுறைகளை மீறி நடத்தப்படும் பள்ளிகள்
அத்தனையும் மூடி மறைக்கப்படுகிறதே !
பதிலுக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி ?
முக்கியம். எல்லாருக்கும் ஷேர் செய்யவும். இந்து முஸ்லிம்களை பிரிக்கும் சக்திகளுக்கு பீதியை குடுக்கும் விதமாக இந்த புத்தாண்டை ஆக்கிடுவோம்.
புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக இருந்தாலோ அல்லது பதில் சொல்வதாக இருந்தாலோ பின்வரும் சொல்லை பயன்படுத்தும்படி புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரோ ராமச்சந்திர குஹா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
‘Wish you a Hands-Together New Year’ (கவனிக்கவும் Happy New Year அல்ல)
ஆகவே புத்தாண்டை வாய்ப்பாக கருதி இந்த சுலபமான போராட்டத்தை கையிலெடுங்கள். இந்த வார்த்தைகளை உலக ட்ரெண்ட் ஆக்கவும்.
பிரிக்க நினைக்கும சங்கிகளுக்கு தக்க பதில் கொடுக்க இந்த சிறிய செயலை செய்யலாமே!
இந்தியக் குடிமகன்களுக்கு ஆதார் அட்டை போன்று ஒரு அடையாள அட்டை போதாதா? வேறு என்ன என்ன வேண்டும்? ஜக்கி அவர்கள் சொல்வது சரியான உதாரணம் அல்ல.. எகத்தாளமான உதாரணம்.