“துக்ளக்” ஆசிரியர் “சோ” கலைஞர் தலையில் அட்சதை தூவிய சுவாரஸ்யமான சம்பவம் …!!!


துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் குறித்த ஒரு சுவாரஸ்யமான
சம்பவம்… இதை அண்மையில் மதுரையில் நடந்த
ஒரு நிகழ்ச்சியில் கூறியவர் – மதுரை தியாகராஜா மில்ஸ் மற்றும்
கல்விக் குழுமத்தின் அதிபரான திரு.கருமுத்து கண்ணன் அவர்கள் –

அவருடைய வார்த்தைகளிலேயே…..
————————

” எமர்ஜென்ஸி காலகட்டத்தில், அதை துணிச்சலோடும்,
புத்திசாலித்தனத்தோடும் – எதிர்கொண்டவர் துக்ளக் ஆசிரியர் சோ.

நகைச்சுவையை மட்டும் அல்லாமல் ஆன்மிகத்தையும் தனது
அடையாளமாகக் கொண்டிருந்தார் அவர்.

1982-83 காலகட்டத்தில், கலைஞர் வீட்டில் ஒரு திருமணம்
நடைபெற்றது. அப்போது திமுக ஆட்சியில் இல்லை. அந்தக்
கல்யாணத்திற்கு சோவும் வந்திருந்தார். ஆனால், கீழ்வரிசையில்
அமர்ந்திருந்தார். அப்போது அவரை கவனித்த கலைஞர் கருணாநிதி
அவர்கள், ‘சோ’ வை மேடைக்கு அழைத்து, அவரை பேசுமாறூ
கேட்டுக் கொண்டார்.

ஆன்மிகவாதியான சோ, ஒரு சுயமரியாதை திருமணத்தில்
என்ன பேசப்போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு காத்திருந்தனர்.

” இங்கே புரோகிதரைத் தேடினேன். காணவில்லை.
நானே புரோகிதர் தான். நானே மந்திரம் சொன்னால் தப்பில்லை ”
என்று கூறி,

“மாங்கல்யம் தந்துனானே” என்கிற சம்ஸ்கிருத மந்திரத்தை
முழுமையாகச் சொன்னார் சோ.

அத்தோடு நில்லாமல், தன் பாக்கெட்டில் மடித்து கொண்டு
வந்திருந்த அட்சதையை மணமக்கள் தலையில் தூவி,

அதன் மீதியை, மேடையிலிருந்த கலைஞர் தலையிலும்
தூவி விட்டுப் போனார்….!!! இதை நான் நேரில் பார்த்தேன்.

.
————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “துக்ளக்” ஆசிரியர் “சோ” கலைஞர் தலையில் அட்சதை தூவிய சுவாரஸ்யமான சம்பவம் …!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  சீரியஸ்னஸ், அதே சமயம்
  உச்சபட்ச நகைச்சுவை உணர்வு,
  உண்மை, நேர்மை,
  எதற்கும், எவருக்கும் அஞ்சாத துணிச்சல்,
  ஆழ்ந்த சிந்தனை,
  அற்புதமான சொல்லாற்றல்,
  இத்தனையும் ஒருங்கே அமையப்பெற்றவர்
  “சோ” அவர்கள்.
  இனி எங்கே பார்க்கப்போகிறோம்
  இவர் போன்ற மனிதர்களை ?

 2. D Chandramouli சொல்கிறார்:

  Cho was a versatile and interesting personality. He was tolerated, rather liked,even by persons holding opposite views’ In the sixties, Cho held a huge meeting on Marina beach and about a lakh of people gathered to hear him. In fact, the posters about this meeting just said “Cho speaks’. While the public cheered him, many voted in their own,way, not as recommended by Cho. He took this message sportively. In politics as in other spheres, his humor sense was liked by all. We miss him at this juncture of political situation in India.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.