…
…
…
ஒரு சிறுவன். தாயுடன் நடந்து செல்கிறான்.
ஒரு இடத்தில் பாதையின் அடுத்த புறத்திற்குச் செல்ல
தாயின் கையை பற்றியபடி, அந்தச் சிறுவன்
சாலையின் குறுக்கே கடந்து சென்று கொண்டிருக்கிறான்.
திடீரென்று வேகமாக வந்த கார் ஒன்று,
அவர்களைக் கண்டவுடன் நிற்க முயல்கிறது. இருந்தாலும்,
நிற்பதற்கு முன் அவர்களின் மீது லேசாக மோத,
பெரிதாக அடிபடவில்லை என்றாலும், அதிர்ச்சியில் –
தாயும், மகனும் நிலைகுலைந்து கீழே விழுகிறார்கள்.
நொடிப்பொழுதில் எழுந்துகொள்ளும் அந்தச் சிறுவன்,
தாய்க்கு சீரியசாக ஏதேனும் அடிபட்டிருக்கிறதா
என்பதை கவனித்துக் கொண்டே –
கோபத்துடன், நின்று விட்ட அந்த காரை காலால்
திரும்பத் திரும்ப கோபத்துடன் உதைக்கிறான்.
இடையே மீண்டும் வந்து தாயை கரிசனத்துடன் கவனித்து விட்டு,
மீண்டும் கோபம் குறையாமல் நின்றுகொண்டிருக்கும் காரை
எகிறி காலால் எட்டி உதைக்கிறான். காரிலிருந்து வெளிவரும்
ஓட்டுநரிடம் கடுமையாக முறைக்கிறான்….
அந்த அறியாச் சிறுவனின் கோபம் –
அவனது உணர்ச்சிகளின் இயல்பான வெளிப்பாடு –
அருகே இருந்த CCTV காமிராக்களில்
பதிந்து வெளியாகி இருக்கிறது…
சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் நடந்த இந்த சம்பவத்தின்,
காணொளி கீழே –
…
…
.
——————————————————————-