திருவாளர் வைரமுத்து’வுக்கு “டாக்டர்” பட்டம் – திருமதி சின்மயி முன்வைக்கும் கேள்விகள் …!!!திருவாளர் – கவிஞர் – வைரமுத்து அவர்களுக்கு,
“கௌரவ டாக்டர்” பட்டம் கொடுக்கிறார்களாம்…

” இந்த டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின்
மொழி ஆளுமைத் திறனுக்காக வழங்கப்படுகிறது
என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

அத்துடன் கூடவே, பாலியல் துன்புறுத்தலுக்காகவும்
வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் தரலாம்…..”
என்று சிபாரிசு செய்கிறார் திருமதி சின்மயி.

திருமதி சின்மயி அவர்களின் குமுறல் –
அவரது வார்த்தைகளிலேயே –

” 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய
வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம்
வழங்கப்போகிறாராம்.

நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல
விரும்புகிறேன்.பெண்களை பாலியல் ரீதியாக
துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை.

ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய
தடை விதிக்கப்பட்டுள்ளது. டாக்டர் பட்டம்
கௌரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி
ஆளுமைத்திறனுக்காக வழங்கப்படுகிறது என்பதை
நான் ஒப்புக்கொள்கிறேன். அத்துடன் கூடவே
பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு
ஒரு டாக்டர் பட்டம் தரலாம். ”

கூடவே எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தையும் சாடுகிறார் –

” உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த
ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க..
வெல்டன் தனியார் பல்கலைக்கழகம்”

சின்மயி தனது இன்னொரு பதிவில்,

” வைரமுத்து இந்த ஒரு வருடத்தில் அருமையான
மல்டி ஸ்டார்களின் படங்களில் பணியாற்றி உள்ளார்.
உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார்.
அரசியல் மற்றும் கலைதுறை பெரியவர்களுடன்
மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால்
அவர் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும்
இல்லை.

நல்ல நாடு.. நல்ல மக்கள் ” என்று கூறியுள்ளார்.

—————

திருவாளர் வைரமுத்து தன்னிடம் வெளிநாட்டில்
தவறாக நடக்க முயன்றதாக சின்மயி தொடர்ந்து
டுவிட்டரில் குரல் எழுப்பி வருகிறார்.

ஆனால்……அதற்கான re-action….?

செல்வாக்குள்ள நபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்
என்று தமிழ்நாட்டில் தனி பண்பாட்டு வழிமுறை
இருக்கிறது போலும்…

மக்களை எளிதில் ஏமாற்றி, விஷயத்தை
திசைதிருப்பி விடுகிறார்கள்.
முகத்தில் சாணம் வந்து விழுந்தாலும் கூட,
துடைத்து விட்டு, ஒன்றுமே நடவாதது போல
சிரித்துக்கொண்டே மீண்டும் பொதுமேடைக்கு
வந்து விடுகிறார்கள்.

திருமதி சின்மயி’யின் இந்த சாடலில்/குமுறலில்
நியாயம் இருக்கிறது என்று தோன்றியதால்,
இந்த தளத்தில் அதை திரும்பவும் பதிவு செய்கிறேன்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கு என்ன ஆயிற்று….?
எதனால் அதற்கு இந்த பட்டம் கொடுக்கும் சூழ்நிலை
தற்போது உருவாகியது என்று கொஞ்சம் யோசித்தேன்….

கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க பரிசீலிக்கும்போது,
பெறுபவரின் தகுதிகளோடு, சமூகத்தில் அவரது
பின்னணி, அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள்
குறித்தெல்லாம் பல்கலை ஆராய வேண்டாமா,
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா – என்கிற
கேள்வி தோன்றியது.

அந்த பல்கலையை உருவாக்கிய பெருந்தகை தற்போது
திமுக கூட்டணியில் இருப்பது நினைவிற்கு வந்தது….
அரசியல் காரணியாக இருக்கும்போது,
இத்தகைய காரணங்கள் எல்லாம்
எப்படி எடுபடும்….?

இது தானாக முன்வந்து கொடுக்கப்படுகிறதா அல்லது
அழுத்தம் கொடுத்து பெறப்படுகிறதா என்கிற
சந்தேகம் இயற்கையாகவே எழுகிறது….

சொரணையற்ற சமுதாயம் என்று சின்மயி சாடியதில்
எந்த தவறும் இல்லையென்று தான் தோன்றுகிறது….

Link – https://tamil.oneindia.com/news/chennai/chinmayi-attacks-over-honorary-degree-to-kavignar-vairamuthu-372464.html

.
————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திருவாளர் வைரமுத்து’வுக்கு “டாக்டர்” பட்டம் – திருமதி சின்மயி முன்வைக்கும் கேள்விகள் …!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  வைரமுத்து ஒரு சொரணையற்ற மனிதர்.
  “எல்லாவற்றையும் துடைத்துப் போட்டு விட்டு,
  ஒன்றுமே நடக்காத மாதிரி சிரித்துக்கொண்டே
  உலா வருபவர்” என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

  தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறைக்கவே
  இப்போது டாக்டர் பட்டம் “வாங்க” முயற்சி
  செய்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் தான்
  “ஒரு விலை” இருக்கிறதே.
  அதுவும் எஸ்.ஆர்.எம். வேறு. சுலபமாக
  பேரம் நடந்திருக்கும்.
  அதனாலென்ன மக்களாகச் சேர்ந்து அவருக்கு
  சின்மயி சொன்ன கௌரவ டாக்டர் பட்டத்தை
  கொடுத்து விடுவோமே. 🙂
  மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

 2. Ramnath சொல்கிறார்:

  வைரமுத்து ஒரு “சுய கௌரவ(மில்லாத) டாக்டர் 🙂 🙂

 3. புவியரசு சொல்கிறார்:

  சின்மயிக்கு வழி காட்டும் விஷயத்தை தனியே வையுங்கள்.

  வைரமுத்துவுக்கு இப்போது டாக்டர் பட்டம் கொடுப்பது
  சரியா ? தேவையா ? அது கொடுக்கப்படும் பட்டமா அல்லது
  “வாங்கப்படும்” பட்டமா ? அது தான் முக்கிய விஷயம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.