…
…
…
CAA ( Citizenship Amendment Act )
( -முன்னதாக CAB -Citizenship Amendment Bill-
என்று கூறப்பட்டது ) மற்றும்
NRC ( National Register of Citizens of India )
ஆகிய இரண்டையும் ஆளும் தரப்பிலிருந்து இயன்ற வரை
குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது கூடவே, NPC ( National Population Register)
என்று ஒன்றையும் சேர்த்து ….!!!
மூத்த பத்திரிகையாளர் மணி அவர்களை விமரிசனம்
வாசக நண்பர்கள், தொலைக்காட்சி விவாதங்களின் மூலம்
அவசியம் அறிந்திருப்பார்கள். எப்போதும், தெளிவாகவும்,
அழுத்தந்திருத்தமாக தன் கருத்துகளைச் சொல்பவர் மணி.
அவர் சொல்லும் கருத்துகளை அப்படியே ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்கிற அவசியம் வாசக
நண்பர்களுக்கு இல்லை…. ஆனால்,
அவர் தரும் செய்திகள், தகவல்கள் – முற்றிலும்
உண்மையானவை, ஆதாரபூர்வமானவை. எனவே,
அந்த தகவல்களை ஏற்றுக்கொள்வதில்
எந்தவித தயக்கமும் வேண்டியதில்லை.
அண்மையில் வெளியான ஒரு காணொளிப் பேட்டியில்,
மணி அவர்கள் மேற்கண்ட இரண்டு விஷயங்களைப் பற்றியும்
தெளிவாக, புள்ளி விவரங்களுடன் விளக்குகிறார்.
நண்பர்கள், இந்த தலைப்பிலான தகவல்களை முழுவதுமாக
தெரிந்துகொள்ள வசதியாக, அந்த காணொளியை
கீழே பதிப்பித்திருக்கிறேன்.
….
….
.
————————————————————————————————–
NRC -க்கு எதிராக போராட்டம் என்றதும்
இப்போது அவசரம் அவசரமாக NPC
என்கிறார்கள். கேட்டால் 2010-ல் காங்கிரஸ்
கொண்டு வந்தது தான் என்கிறார்கள். காங்கிரஸ்
கொண்டு வந்தபோது NRC பற்றி பேச்சே இல்லை.
இப்போது இவர்கள் கொண்டு வரும் NPC தான்
இவர்களின் NRC க்கு ஆதாரமாக, அடிப்படையாக
அமையப்போகிறது. பழைய NPC -யில்
பெற்றோரின் பிறந்த ஊர் கேட்கப்படவில்லை.
இப்போது கேட்கிறார்கள். எதற்காக ?
மக்களீடமே கேட்டு தகவலை
வாங்கி அவர்களையே மிரட்ட திட்டமா ?
2010 -NPC க்கும் 2020 NPC க்கும் நிறைய
வேறுபாடுகள் இருக்கின்றன. புதிதாக கூடுதல்
தகவல்கள் கேட்கப்படுகின்றன. எதற்காக ?
அவற்றிற்கான அவசியம் எங்கே வந்தது ?
2010 தகவல் திரட்டின்போது ஆதார் இல்லை.
இப்போது தான் தேவையான விவரங்களுடன்
ஆதார் இருக்கிறதே. பின் மீண்டும் ஏன் இன்னொரு
தகவல் திரட்டல் ?
மற்ற எல்லாவற்றையும் விடுங்கள்.
இவர்களின் தீய எண்ணம் வெளியே தெரிந்து
விட்டதால், இவர்கள் எதைக் கொண்டு வந்தாலும்
இனிமேல் மக்கள் நம்ப மாட்டார்கள்.
நாடு கொந்தளிக்கும்போது மீண்டும் எதற்காக
ஒரு கணக்கெடுப்பு ? அதை ஒருவருடம் கழித்து
செய்ய முடியாதா ? மக்கள் அச்சப்படும் கேள்விகளை,
விலக்கி விட்டு விவரங்களைத் திரட்ட முடியாதா ?