ஒரு வாசக நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சல் ……..வாசக நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு வித்தியாசமான
வேண்டுகோள் வந்திருக்கிறது….

நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் தற்போதைய
CAA மற்றும் NRC பற்றியது தான்….

நண்பர் ரவிகுமார், இந்த பிரச்சினையின் பின்னணியை
சுவாரஸ்யமான முறையில் விளக்கி இருக்கிறார்….

அவருக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டும்.

– இந்த மின்னஞ்சல் சிலரது சந்தேகங்களை போக்க
ஓரளவு உதவியாக இருக்கலாம் என்று தோன்றியதால் –
அவரது வேண்டுகோளின்படியே,
அதை இங்கே தனியாக பதிப்பித்திருக்கிறேன்.

from – Ravi Kumar
—————————

Kaviri Mainthan Sir,

Could you publish my article as a separate
blog post in your site please.

————–

‘ரவி அண்ணா, இந்த கூத்த பாத்தீங்களா? எதுக்கு போராடறோனே
தெரியாம பைத்தியங்கள் போராடுது !,’ தனக்கு வந்த whatsapp
forward பார்த்தபடியே சொன்னான் பாஸ்கர்.
நாங்கள் இருவரும் IIT madras மாணவர்கள். வேளச்சேரி IIT
நுழைவாயிலுக்கு முன்னுள்ள கடையில் தேனீர் அருந்திக்கொண்டிருந்தோம்.

‘பாஸ்கர், CAA போராட்டம் பத்தியா?’ யூகித்தபடியே கேட்டேன்.
‘ஆமாண்ணா. CAA நம்ம பக்கத்து நாட்டில அடிபட்ட மக்களுக்கு
குடியுரிமை குடுக்குது. ஆனா அது புரியாம, இந்த போராட்டக்காரங்க
இங்க இருக்கற முஸ்லிம்களை வெளியேத்தும்னு
வெளங்காபயலுங்க சொல்லுதுங்க! ஒரே சிரிப்புண்ணா.’
பாஸ்கர் BTech மெக்கானிக்கல் செகண்ட் year. நான் marine
fourth year . ஒரே ஹாஸ்டல் என்பதால் ஸ்நேகிதர்கள்.

‘பாஸ்கர், CAA பத்தி மட்டும் அவங்க போராடுல. இனிமேல் வர
இருக்கற NRC ய CAA கூட சேத்தி பாத்தா பெரும் குழப்பம் வரும்.
அதுக்கு எதுத்துதான் போராட்டம்’

பாஸ்கர் ஒருமாதிரியாக என்னை பார்த்தான். அதுக்கு காரணம்
உள்ளது. பொதுவாக பாஜக திட்டங்களை ஆதரிப்பவன் நான்.
ஹாஸ்டலில் என்னை பாஜக அனுதாபியாக பார்ப்பார்கள்.

‘துரத்தப்பட்ட மக்களுக்கு CAA ஹெல்ப் தாண்ணா பண்ணுது?
NRC க்கும் இதுக்கும் எண்னண்ணா சம்பந்தம்?’

‘NRC வந்ததுக்கு அப்புறம், மக்கள் தான் இந்த நாட்டுல
பல்லாண்டுகள் இருக்கறத நிரூபிக்க டாக்குமெண்ட்கள்
காண்பிக்கணும். NRC முதல்ல டாக்குமெண்ட் இல்லாத
எல்லாத்தையும் சட்டவிரோதம்னு சொல்லும்.
அங்கதான் CAA லிங்க் ஆகுது. டாக்குமெண்ட் இல்லைனாலும்,
மூணு நாட்டில இருந்து வந்த ஆறு மதத்தை சார்ந்தவர்களுக்கு
மட்டும் இங்க அஞ்சு வருஷம் இருந்தா CAA குடியுரிமை அளிக்கும்.
அதுதான் டேஞ்சர்.’ சுருக்கமாக சொன்னேன்.

‘ஓகேன்னா. அதுல நமக்கு என்னன்னா பிரச்சினை?’
பாஸ்கர் கவனிக்க ஆரம்பித்தான்.

‘இந்த NRC அஸ்ஸாமுக்குனு பண்ணது. ஏன்னா அங்கதான்
அண்டை நாடு மக்கள் நிறைய குடியேறி இருக்காங்க. அதை இப்ப
நாடு முழுசும் பண்ணப் போறேன்னு நிக்கறதுதான் பிரச்சினை.’

‘என்னா பிரச்சனை?’

‘நிறைய. ஒன்னு, அஸ்ஸாம் மாதிரி மத்த பெரும்பாலான
மாநிலங்களில் குடியேறிகள் இல்லை.
ரெண்டு, டாக்குமெண்ட் எல்லாம் பிராபரா
வெச்சுக்கற அளவு நம்ம பழக்கம் இல்லை.
மூணு, பல்லாண்டுக்கு முன்னாடி வரைக்கும்
டாக்குமெண்ட் காண்பிக்க பெரும்பாலானோருக்கு முடியாது.
நாலு, டாக்குமெண்ட் இருந்தாலும் நம்ம அதிகாரிங்களோட
லட்சணம் தெரியும். துட்டு இல்லாம எதையும் பண்ண
மாட்டான்.
அஞ்சு, இதுக்கு பல்லாயிரம் கோடி வரிப்பணம் செலவு.
ஏழு, குடிமக்கள் இல்லேனு கண்டுபிடிக்கற மக்களை
என்ன செய்றது. இப்படி நிறைய சொல்லிட்டே போலாம்.

பண மதிப்பிழப்பு அப்ப புது ஐநூறுக்கு
ATM மெஷின் வேல செய்யாதுன்னு முன்கூட்டிய திட்டமிடாத
கவர்ன்மெண்டு இதெல்லாம் அமல்படுத்த பலம் இல்ல.’

‘இவளோ இருக்கா?’ கண்களை விரித்தான் பாஸ்கர். அப்புறம்
விசயத்துக்கு வந்தான் ‘நமக்குத்தான் CAA இருக்குல்லண்ணா?
அஞ்சு வருஷம் டாக்குமெண்ட் வச்சு தப்பிச்சிரலாமே.
முஸ்லிம்களுதானே பிரச்சினை?’

‘அதுதான் தப்பு கணக்கு. இப்ப உன்கிட்ட பல்லாண்டுக்கான
டாக்குமெண்ட் இல்லனு வச்சுக்கோ. இந்துவா இருந்தாலும்
இந்த மூணு நாட்டுல இருந்து வந்தேன்னு எப்பிடி நிருபிப்பே?’

‘என்னண்ணா இப்டி சொல்றிங்க?’

‘ஆமா. இப்ப நீ ஆளுங்கட்சிக்கு எதிரான ஆளுன்னு வச்சுக்கோ.
கட்டம் கட்டி உஸ்ஸுதான். இந்தியை எதிர்க்கறேன்னு வையி.
உனக்கும் உஸ்ஸுதான்.’ புரிய வைத்தேன்.

‘ஓகே. CAA பிரச்சினை இல்லை. NRC பிளஸ் CAA தான் விஷயம்.
ஆனா, நம்ம பிரதமர்தான் NRC பத்தி முடிவு எடுக்கலேன்னு
சொல்லிட்டாரே.’ நம்பிக்கையோட சொன்னான் பாஸ்கர்.

‘நல்ல விஷயம்தான். ஆனா இத பண்ணுவோன்னு
பலமுறை சொன்னவரூ அமித்ஷா. அவரு ஒரு ஓபன்
அறிக்கை விட்டாருன்னா, இந்த போராட்டம்
அப்பவே சுதி இறங்கிரும். ஆனா பண்ண வாய்ப்பில்லே.’

‘ஏன்?’

‘ஏன்னா, இதை வச்சு நிறைய அரசியல் லாபம் இருக்குன்னு
அவங்க நம்பற மாதிரி இருக்கு.’

‘என்னண்ணே? பாஜகவ பத்தி நிறைய சப்போர்ட் பண்ணுவீங்க.
இப்ப வேற மாரி தொனி மாறிடுச்சு.’ பாஸ்கர் வருத்தமாக கேட்ட
மாதிரி இருந்தது.

‘ஆமாப்பா. காங்கிரஸ் பண்ண ஊழல் கொஞ்ச நஞ்சமில்ல.
வோட்டுக்காக முஸ்லீம் கிறிஸ்டியனுக்கு சலுகைகள்
கொடுத்தானுங்க. அதுக்கு மாற்றா பாஜக இருந்துது. உனக்கே
யாபகம் இருக்கும். 370 பிரிவு ரத்து செஞ்சப்ப ஹாஸ்டல்ல
சாக்கலேட்டு எல்லாத்துக்கும் குடுத்தேன். ஆனா இப்ப இவங்க
போக்கு பாத்தா எல்லாம் வோட்டுக்கும் கட்சி நலத்துக்கும்
பண்ற மாதிரி இருக்கு.’

‘இதுல என்னண்ணா அவங்களுக்கு லாபம்? போராட்டம் பண்ணா
வன்முறை நடக்கும். வியாபாரம் பாதிக்கப்பட்டா வரி குறையும்.
புரியலையே.’ பாஸ்கர் புருவத்தை சுருக்கினான்.

‘இவங்க ஆட்சியில நம்ம மாதிரி இந்துக்களுக்கு
ஒரு கிளுகிளுப்பை கொடுத்ததை தவிர மற்ற விஷயங்கள்ல
அவ்ளோ முன்னேற்றம் இல்ல.

எந்த நாட்டுக்குமே சொல்லாத அளவு, IMF தலைவர் கீதா
அவர்கள் இந்தியாவுக்கு ‘உங்கள் பொருளாதாரம் மிக
அவசரமா கவனிக்கப்படும்’ நிலையில் உள்ளதுன்னு
எச்சரிக்கை கொடுத்திருக்கார்.

ஊழல் மிகுந்த நாடுகள்ல அதே கண்டிஷன்லதான் இருக்கோம்.
வைட் காலர் வேலைக்கு போறவங்களுக்கு அவ்ளோ பாதிப்பு
இன்னும் இல்லைனாலும் ப்ளூ காலர் தொழிலாளிகள்
நிறைய வேலை போச்சு.

இன்னும் பல பிரச்சினைகளில மோசமா இருக்கோம்.
அதனால இந்த போராட்டம் நடக்கிறத வெச்சு,
இதை தீவிரவாதிகளை கண்டுபிடிக்க அரசு
முயற்சி எடுக்கறதாகவும், அதை இந்துக்களின் நலனில்
அக்கறையில்லாத சக்திகள் தடுக்க முயற்சி செய்யறதாவும்
சித்தரிச்சு இந்துக்களின் ஆதரவு பெருக்கலாம்னு பண்ணலாம்.
இவங்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே
முக்கியம். அதுக்கு உதாரணம் உத்திரபிரதேச
எலெக்ஷ்ன் முன்னாடி அந்த மாநில கட்சிகள்
தேர்தல் செலவுக்கு வச்சிருந்த கருப்பு பணத்த செல்லாததாக்க,
நாடு முழுக்க பணத்த செல்லாததுன்னு ஆக்கனாங்க.’

‘என்னண்ணே, இப்டி பல்டி அடிச்சிட்டீங்க? தீமானிடீசன் அப்ப
அவ்ளோ சப்போர்ட்டா facebook போஸ்ட் எல்லாம் போட்டிங்களே?’
நான் பேசியதை பார்த்து பாஸ்கருக்கு உண்மையிலே அதிர்ச்சிதான்.

‘பாஸ்கர், இந்த CAA, NRC பிரச்சனை ஆரம்பம் ஆனப்ப நான்
பாஜகவுக்கு சப்போர்ட் தான் பண்ணேன்.
என்னுடைய கருத்தெல்லாம் மாற ஆரம்பிச்சுது
Organization Development அப்படிங்கிற கோர்ஸில,
புரபசர் கணேஷ் கொடுத்த ‘Echo Chambers’
அப்படிங்கற அசைன்மெண்ட்த்தான்.

அதில, நாம ரொம்ப நம்பற ஒரு கோட்பாடை எடுத்து
அதை நேரெதிராக கேள்வி கேட்பது, ஆராய்ச்சி
செய்வதுனு பண்ணனும். நான் என்னோட பாஜக ஆதரவு
அரசியல் நிலையை எடுத்துகிட்டு நிறைய படித்தேன்.

எதிர்க்கருத்து உள்ளவங்களை கவனித்தேன். பெரும் இயக்கங்கள்
எப்படி கட்டமைக்கப்படுகின்றன என்பதனை கற்று கொண்டேன்.
முதலில், நீ வஞ்சிக்கபடுகிறாய் என ஆரம்பிப்பது, பிறகு அதுக்கு
காரணமாக ஒரு பொது எதிரியை உருவாக்குவது, கேள்விக்கும்
சந்தேகத்திற்கும் அப்பாற்பட்ட தலைவர்களாக சிலருடைய பிம்பத்தை
உருவாக்கி அவருக்கு உயிரை கொடுக்கும் ரசிகர்களை உருவாக்குவது,

இந்த இயக்கம் இல்லாவிட்டால் உன்னை காப்பாற்ற யாருமில்லை
என ஆழமான சில நம்பிக்கைகளை விதைப்பது,
இந்த இயக்கத்தையும், உன்னையும் அழிக்க பொது எதிரி
எதாவது செய்து கொண்டே இருக்கிறான்
என பதட்டத்திலேயே வைப்பது என நிறைய வரலாறுகள்
என்னை ரொம்ப சிந்திக்க வைத்தது. ’ நீளமாக பேசி முடித்தேன்.

.
—————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஒரு வாசக நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சல் ……..

 1. Ravi Kumar சொல்கிறார்:

  Thank you sir.
  I was criticizing your posts also earlier.
  After I changed my BJP supporting stand, I immediately got branded as sickular, leftist, tukde gang, etc by very own friends who were praising me before. I was doing it to others. Now I am the victim myself.

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ரவிக்குமார் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார் – வாழ்த்துக்கள் .

  What is the matter with Kansas ? என்ற நூல் .2004 ல் வந்தது .
  இன்று நடப்பதை படம் பிடித்துக் காட்டுகிறது .

  Populism என்பது வெறுப்பை வைத்து அரசியல் செய்வது .
  மக்களை சீண்டி விட்டு அவர்களை ஒரு கொதிப்பில்
  வைத்து , மக்கள் கோபத்தில் ஒட்டு வாங்குவது .
  In short , people should not think !

  பொருளாதாரம் பற்றி கவலை கிடையாது .
  நிலைமை மோசமானால் , மக்கள் வெறுப்பில்
  இன்னும் ஒட்டு போடுவார்கள் என்ற கணக்கு .

  சொன்னதை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் .
  எதிராளியை பேச விடக் கூடாது .அதற்காக
  மட்டம் தட்டி கேவலப்படுத்தணும் .
  சுருக்கமாக தன் பேச்சு ஒன்றே எடுபடணும் .
  கேள்வி கேட்பவர்கள் விஷக்கிருமி .

  தொலைக்காட்சியில் பா ஜ க வினர் பேசும் போது
  நீங்கள் இதை காண முடியும் .

  சீண்டிவிட்டால் மக்கள் தங்களுக்கு கேடு விளைவிக்கும்
  ஒன்றுக்கு ஒட்டு போடுவார்கள் .
  Brexit நடந்தது இப்படித்தான் !

 3. jayakumar chandrasekaran சொல்கிறார்:

  ஒரு வேளை ரவிக்குமார் தான் பழைய புதியவனோ? இப்போ மனசு மாறிட்டாரோ? Jayakumar

  • Ravi Kumar சொல்கிறார்:

   அய்யா புதியவன் அவர்கள் ஒரு வகையில் என் அபிமான குரு! ஆனால் இப்போது எனக்கு பார்வைகள் தெளிவாகி விட்டது..
   புதியவன் அவர்கள் சிந்திப்பவராக இருப்பதால் அவரும் தன்னை சுயபரிசோதனை செய்வார் என்ன கட்டாயம் நம்புகின்றேன்.

 4. Ramnath சொல்கிறார்:

  jayakumar chandrasekaran :

  புதியவன் கொஞ்சம் வித்தியாசமானவர்;
  பாஜகவை குறை கூறுவது போல் தன்னை
  காட்டிக்கொண்டே மறைமுகமாக அதை ஆதரிப்பவர்.

 5. Ezhil சொல்கிறார்:

  பாஜக இருந்தால் மட்டுமே இந்துக்கள் இந்த நாட்டில் உயிர் வாழ முடியும்.. மோடி இருந்தால் மட்டுமே எல்லா நாடுகளும் இந்தியாவுக்கு கட்டுப்பட்டு காசை வந்து கொட்டும் என்று நம்பும் மக்களுக்கு இது புரியுமா என்று தெரியவில்லை அய்யா.. நான் இந்து என்று சுயதம்பட்டம் செய்து மார்தட்டி மற்ற மதத்தினரை பயப்பட வைக்கும் எண்ணத்தை விதைத்தது மட்டுமே பாஜகவின் சாதனை…

 6. Mani balan சொல்கிறார்:

  Arumai

 7. indrillavittalum சொல்கிறார்:

  Very interesting comments

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.