மத்திய தமிழ் அமைச்சருடன் அக்னி பரீட்சை சிறப்பு நேர்காணல் – கார்த்திகைச் செல்வனின் சிறப்பான கேள்விகள்….நேற்றிரவு (22/12/2019) புதிய தலைமுறை தொலைக்காட்சியில்,
சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர்
திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை, திரு.கார்த்திகைச் செல்வன்
பேட்டி கண்டார்.

பேட்டி மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
சாதாரணமாக, நாளேடுகளின் பேட்டியிலிருந்து – தொலைக்காட்சி
பேட்டிகள் சில விதங்களில் வித்தியாசப்படும்.

நாளேடுகளில் – பேட்டி காண்பவர்
மற்றும் பேட்டி காணப்படுபவர் ஆகியோரின் உணர்வுகளை
உணர முடியாது. அச்சில் படிக்கும்போது,
உணர்வுகள் வெளிப்படாது.

ஆனால், தொலைக்காட்சி நேரடிப் பேட்டிகளில் உள்ள அனுகூலம் –
என்னவென்றால் -பேட்டி காணப்படுபவர் – சில விஷயங்களை
மழுப்பினாலும், மறுத்தாலும், மறைக்க முயன்றாலும், அவர்களின்
முகபாவங்கள், body language ஆகியவற்றை வைத்து,
காண்பவர்கள் அதனூடே அடங்கியிருக்கும் அர்த்தத்தை
ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

அமைச்சர் கெட்டிக்காரர். அவர் பேசுவதை மிகவும் கவனமாகப்
பேசுகிறார். அவர் விருப்பத்தைத் தாண்டி, எந்த செய்தியையும்
அவரிடமிருந்து வெளிக்கொண்டு வர இயலாது.

தற்போதைய காலகட்டத்தில், தொலைக்காட்சி மீடியாக்களின்
மீதுள்ள அழுத்தங்களையும் தாண்டி –

சிறப்பான விதத்தில் இந்த பேட்டியை நிகழ்த்தியதன் மூலம்,
பல செய்திகளை வெளிக்கொண்டு வந்தமைக்காக
கார்த்திகைச் செல்வனுக்கு நமது பாராட்டும் வாழ்த்துகளும்.

தொலைக்காட்சியில் பேட்டியை காண முடியாத நண்பர்களின்
வசதிக்காக, அந்த பேட்டியை கீழே பதிவு செய்திருக்கிறேன்.

——–

……..

.
———————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மத்திய தமிழ் அமைச்சருடன் அக்னி பரீட்சை சிறப்பு நேர்காணல் – கார்த்திகைச் செல்வனின் சிறப்பான கேள்விகள்….

 1. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  உள்துறை அமைச்சரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை நிதியமைச்சரிடம் கேட்டு பதில் பெற நினைப்பது விந்தையாக இருக்கிறது

 2. வாரணாசியான் சொல்கிறார்:

  அவர் அந்த விஷயங்களைப்பற்றி
  பேசியதால் தான் இவரும் அதைப்பற்றி
  கேட்டார்.
  பேட்டி கொடுத்தவருக்கே இல்லாத
  ஆட்சேபணை உங்களுக்கேன் சங்கி ?

 3. Ravi Kumar சொல்கிறார்:

  Kaviri Mainthan Sir,

  Could you publish my article as a separate blog post in your site please.

  ‘ரவி அண்ணா, இந்த கூத்த பாத்தீங்களா? எதுக்கு போராடறோனே தெரியாம பைத்தியங்கள் போராடுது !,’ தனக்கு வந்த whatsapp forward பார்த்தபடியே சொன்னான் பாஸ்கர்.
  நாங்கள் இருவரும் IIT madras மாணவர்கள். வேளச்சேரி IIT நுழைவாயிலுக்கு முன்னுள்ள கடையில் தேனீர் அருந்திக்கொண்டிருந்தோம்.

  ‘பாஸ்கர், CAA போராட்டம் பத்தியா?’ யூகித்தபடியே கேட்டேன்.
  ‘ஆமாண்ணா. CAA நம்ம பக்கத்து நாட்டில அடிபட்ட மக்களுக்கு குடியுரிமை குடுக்குது. ஆனா அது புரியாம, இந்த போராட்டக்காரங்க இங்க இருக்கற முஸ்லிம்களை வெளியேத்தும்னு வெளங்காபயலுங்க சொல்லுதுங்க! ஒரே சிரிப்புண்ணா.’
  பாஸ்கர் BTech மெக்கானிக்கல் செகண்ட் year. நான் marine fourth year . ஒரே ஹாஸ்டல் என்பதால் ஸ்நேகிதர்கள்.

  ‘பாஸ்கர், CAA பத்தி மட்டும் அவங்க போராடுல. இனிமேல் வர இருக்கற NRC ய CAA கூட சேத்தி பாத்தா பெரும் குழப்பம் வரும். அதுக்கு எதுத்துதான் போராட்டம்’

  பாஸ்கர் ஒருமாதிரியாக என்னை பார்த்தான். அதுக்கு காரணம் உள்ளது. பொதுவாக பாஜக திட்டங்களை ஆதரிப்பவன் நான். ஹாஸ்டலில் என்னை பாஜக அனுதாபியாக பார்ப்பார்கள்.

  ‘துரத்தப்பட்ட மக்களுக்கு CAA ஹெல்ப் தாண்ணா பண்ணுது? NRC க்கும் இதுக்கும் எண்னண்ணா சம்பந்தம்?’

  ‘NRC வந்ததுக்கு அப்புறம், மக்கள் தான் இந்த நாட்டுல பல்லாண்டுகள் இருக்கறத நிரூபிக்க டாக்குமெண்ட்கள் காண்பிக்கணும். NRC முதல்ல டாக்குமெண்ட் இல்லாத எல்லாத்தையும் சட்டவிரோதம்னு சொல்லும். அங்கதான் CAA லிங்க் ஆகுது. டாக்குமெண்ட் இல்லைனாலும், மூணு நாட்டில இருந்து வந்த ஆறு மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் இங்க அஞ்சு வருஷம் இருந்தா CAA குடியுரிமை அளிக்கும். அதுதான் டேஞ்சர்.’ சுருக்கமாக சொன்னேன்.

  ‘ஓகேன்னா. அதுல நமக்கு என்னன்னா பிரச்சினை?’ பாஸ்கர் கவனிக்க ஆரம்பித்தான்.

  ‘இந்த NRC அஸ்ஸாமுக்குனு பண்ணது. ஏன்னா அங்கதான் அண்டை நாடு மக்கள் நிறைய குடியேறி இருக்காங்க. அதை இப்ப நாடு முழுசும் பண்ணப் போறேன்னு நிக்கறதுதான் பிரச்சினை.’

  ‘என்னா பிரச்சனை?’

  ‘நிறைய. ஒன்னு, அஸ்ஸாம் மாதிரி மத்த பெரும்பாலான மாநிலங்களில் குடியேறிகள் இல்லை. ரெண்டு, டாக்குமெண்ட் எல்லாம் பிராபரா வெச்சுக்கற அளவு நம்ம பழக்கம் இல்லை. மூணு, பல்லாண்டுக்கு முன்னாடி வரைக்கும் டாக்குமெண்ட் காண்பிக்க பெரும்பாலானோருக்கு முடியாது. நாலு, டாக்குமெண்ட் இருந்தாலும் நம்ம அதிகாரிங்களோட லட்சணம் தெரியும். துட்டு இல்லாம எதையும் பண்ண மாட்டான். அஞ்சு, இதுக்கு பல்லாயிரம் கோடி வரிப்பணம் செலவு. ஏழு, குடிமக்கள் இல்லேனு கண்டுபிடிக்கற மக்களை என்ன செய்றது. இப்படி நிறைய சொல்லிட்டே போலாம். பண மதிப்பிழப்பு அப்ப புது ஐநூறுக்கு ATM மெஷின் வேல செய்யாதுன்னு முன்கூட்டிய திட்டமிடாத கவர்ன்மெண்டு இதெல்லாம் அமல்படுத்த பலம் இல்ல.’

  ‘இவளோ இருக்கா?’ கண்களை விரித்தான் பாஸ்கர். அப்புறம் விசயத்துக்கு வந்தான் ‘நமக்குத்தான் CAA இருக்குல்லண்ணா? அஞ்சு வருஷம் டாக்குமெண்ட் வச்சு தப்பிச்சிரலாமே. முஸ்லிம்களுதானே பிரச்சினை?’

  ‘அதுதான் தப்பு கணக்கு. இப்ப உன்கிட்ட பல்லாண்டுக்கான டாக்குமெண்ட் இல்லனு வச்சுக்கோ. இந்துவா இருந்தாலும் இந்த மூணு நாட்டுல இருந்து வந்தேன்னு எப்பிடி நிருபிப்பே?’

  ‘என்னண்ணா இப்டி சொல்றிங்க?’

  ‘ஆமா. இப்ப நீ ஆளுங்கட்சிக்கு எதிரான ஆளுன்னு வச்சுக்கோ. கட்டம் கட்டி உஸ்ஸுதான். இந்தியை எதிர்க்கறேன்னு வையி. உனக்கும் உஸ்ஸுதான்.’ புரிய வைத்தேன்.

  ‘ஓகே. CAA பிரச்சினை இல்லை. NRC பிளஸ் CAA தான் விஷயம். ஆனா, நம்ம பிரதமர்தான் NRC பத்தி முடிவு எடுக்கலேன்னு சொல்லிட்டாரே.’ நம்பிக்கையோட சொன்னான் பாஸ்கர்.

  ‘நல்ல விஷயம்தான். ஆனா இத பண்ணுவோன்னு பலமுறை சொன்னவரூ அமித்ஷா. அவரு ஒரு ஓபன் அறிக்கை விட்டாருன்னா, இந்த போராட்டம் அப்பவே சுதி இறங்கிரும். ஆனா பண்ண வாய்ப்பில்லே.’

  ‘ஏன்?’

  ‘ஏன்னா, இதை வச்சு நிறைய அரசியல் லாபம் இருக்குன்னு அவங்க நம்பற மாதிரி இருக்கு.’

  ‘என்னண்ணே? பாஜகவ பத்தி நிறைய சப்போர்ட் பண்ணுவீங்க. இப்ப வேற மாரி தொனி மாறிடுச்சு.’ பாஸ்கர் வருத்தமாக கேட்ட மாதிரி இருந்தது.

  ‘ஆமாப்பா. காங்கிரஸ் பண்ண ஊழல் கொஞ்ச நஞ்சமில்ல. வோட்டுக்காக முஸ்லீம் கிறிஸ்டியனுக்கு சலுகைகள் கொடுத்தானுங்க. அதுக்கு மாற்றா பாஜக இருந்துது. உனக்கே யாபகம் இருக்கும். 370 பிரிவு ரத்து செஞ்சப்ப ஹாஸ்டல்ல சாக்கலேட்டு எல்லாத்துக்கும் குடுத்தேன். ஆனா இப்ப இவங்க போக்கு பாத்தா எல்லாம் வோட்டுக்கும் கட்சி நலத்துக்கும் பண்ற மாதிரி இருக்கு.’

  ‘இதுல என்னண்ணா அவங்களுக்கு லாபம்? போராட்டம் பண்ணா வன்முறை நடக்கும். வியாபாரம் பாதிக்கப்பட்டா வரி குறையும். புரியலையே.’ பாஸ்கர் புருவத்தை சுருக்கினான்.

  ‘இவங்க ஆட்சியில நம்ம மாதிரி இந்துக்களுக்கு ஒரு கிளுகிளுப்பை கொடுத்ததை தவிர மற்ற விஷயங்கள்ல அவ்ளோ முன்னேற்றம் இல்ல. எந்த நாட்டுக்குமே சொல்லாத அளவு, IMF தலைவர் கீதா அவர்கள் இந்தியாவுக்கு ‘உங்கள் பொருளாதாரம் மிக அவசரமா கவனிக்கப்படும்’ நிலையில் உள்ளதுன்னு எச்சரிக்கை கொடுத்திருக்கார். ஊழல் மிகுந்த நாடுகள்ல அதே கண்டிஷன்லதான் இருக்கோம். வைட் காலர் வேலைக்கு போறவங்களுக்கு அவ்ளோ பாதிப்பு இன்னும் இல்லைனாலும் ப்ளூ காலர் தொழிலாளிகள் நிறைய வேலை போச்சு. இன்னும் பல பிரச்சினைகளில மோசமா இருக்கோம். அதனால இந்த போராட்டம் நடக்கிறத வெச்சு, இதை தீவிரவாதிகளை கண்டுபிடிக்க அரசு முயற்சி எடுக்கறதாகவும், அதை இந்துக்களின் நலனில் அக்கறையில்லாத சக்திகள் தடுக்க முயற்சி செய்யறதாவும் சித்தரிச்சு இந்துக்களின் ஆதரவு பெருக்கலாம்னு பண்ணலாம். இவங்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியம். அதுக்கு உதாரணம் உத்திரபிரதேச எலெக்ஷ்ன் முன்னாடி அந்த மாநில கட்சிகள் தேர்தல் செலவுக்கு வச்சிருந்த கருப்பு பணத்த செல்லாததாக்க, நாடு முழுக்க பணத்த செல்லாததுன்னு ஆக்கனாங்க.’

  ‘என்னண்ணே, இப்டி பல்டி அடிச்சிட்டீங்க? தீமானிடீசன் அப்ப அவ்ளோ சப்போர்ட்டா facebook போஸ்ட் எல்லாம் போட்டிங்களே?’ நான் பேசியதை பார்த்து பாஸ்கருக்கு உண்மையிலே அதிர்ச்சிதான்.

  ‘பாஸ்கர், இந்த CAA, NRC பிரச்சனை ஆரம்பம் ஆனப்ப நான் பாஜகவுக்கு சப்போர்ட் தான் பண்ணேன். என்னுடைய கருத்தெல்லாம் மாற ஆரம்பிச்சுது Organization Development அப்படிங்கிற கோர்ஸில, புரபசர் கணேஷ் கொடுத்த ‘Echo Chambers’ அப்படிங்கற அசைன்மெண்ட்த்தான். அதில, நாம ரொம்ப நம்பற ஒரு கோட்பாடை எடுத்து அதை நேரெதிராக கேள்வி கேட்பது, ஆராய்ச்சி செய்வதுனு பண்ணனும். நான் என்னோட பாஜக ஆதரவு அரசியல் நிலையை எடுத்துகிட்டு நிறைய படித்தேன். எதிர்க்கருத்து உள்ளவங்களை கவனித்தேன். பெரும் இயக்கங்கள் எப்படி கட்டமைக்கப்படுகின்றன என்பதனை கற்று கொண்டேன். முதலில், நீ வஞ்சிக்கபடுகிறாய் என ஆரம்பிப்பது, பிறகு அதுக்கு காரணமாக ஒரு பொது எதிரியை உருவாக்குவது, கேள்விக்கும் சந்தேகத்திற்கும் அப்பாற்பட்ட தலைவர்களாக சிலருடைய பிம்பத்தை உருவாக்கி அவருக்கு உயிரை கொடுக்கும் ரசிகர்களை உருவாக்குவது, இந்த இயக்கம் இல்லாவிட்டால் உன்னை காப்பாற்ற யாருமில்லை என ஆழமான சில நம்பிக்கைகளை விதைப்பது, இந்த இயக்கத்தையும், உன்னையும் அழிக்க பொது எதிரி எதாவது செய்து கொண்டே இருக்கிறான் என பதட்டத்திலேயே வைப்பது என நிறைய வரலாறுகள் என்னை ரொம்ப சிந்திக்க வைத்தது. நீ என் ரூமுக்கு வா அப்புறம். சில விஷயங்களை காண்பிக்கிறேன்.’ நீளமாக பேசி முடித்தேன்.

  தேனீர் கோப்பை காலியாகிவிட்டிருந்தது. கொஞ்சம் அமைதியாக இருந்தான் பாஸ்கர்.

  ‘அண்ணா, இந்த CAA மற்றும் NRC பத்தி விளக்கமா எங்க இருக்கு?’

  ‘யூ ட்யூப்ல பத்திரிக்கையாளர் மணி ஒரு முக்கால் மணிநேரம் interview கொடுத்துருக்கார் பாரு. முழு வரலாறும் சொல்லுவாரு.’

  இரண்டு நாளாக பாஸ்கரை பார்க்கவில்லை. இன்று காலையில் கதவை யாரோ தட்ட, திறந்தால் – பாஸ்கர்.
  ‘அண்ணா, நீங்க போராட்டம் எதுவும் போனீங்கன்னா சொல்லுங்க. நானும் வரேன்.’

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரவிகுமார்,

   உங்கள் விருப்பப்படியே உங்கள் மின்னஞ்சல்
   தனி இடுகையாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

   நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாக, நன்றாகச்
   சொல்லி இருக்கிறீர்கள்….வாழ்த்துகள்.

   உங்கள் கருத்து எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது
   என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

   ஆமாம் – நீங்கள் எத்தனைக் காலமாக விமரிசனம் தளத்தில்
   படித்து வருகிறீர்கள்…? ஏன் இதுவரை இங்கு விவாதங்களில்
   கலந்து கொள்ளவில்லை…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.