மெல்லிசை மன்னரும், திரை இசைத்திலகமும் – இணைந்து-தோன்றி பாடும் ஒரு வீடியோ….


திரை இசைத்திலகம் என்று புகழப்பட்டு வந்த இசையமைப்பாளர்
கே.வி.மஹாதேவனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்
ஒரே சமயத்தில் புகழின் உச்சியில் விளங்கியவர்கள்…

2001-ல் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்து விட்ட
கே.வி.எம். அவர்களின் வீடியோ கிடைப்பது மிகவும் அரிது.
அதுவும் அவரே பாடுவதைக் கேட்பது அரிது.

அந்த அரிதிலும் அரிது – விஸ்வநாதனும், மஹாதேவனும் சேர்ந்து
தோன்றும் ஒரு காணொளி….

அபூர்வமாக கிடைத்த அந்த காணொளியை நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன் – கீழே….

இதில் கே.வி.எம்.அவர்களுடன் இணைந்து பாடுவது
அவரது உதவியாளர் திரு.புகழேந்தி….

அவர்கள் பகிர்ந்து கொள்வது, ஏ.பி.நாகராஜனின் புகழ்பெற்ற படம்
திருவருட்செல்வரில் இடம்பெற்ற “மன்னவன் வந்தானடி” பாடலின்
இசையமைப்பு குறித்து…..

இந்த பாடலில், துவக்கத்தில் சிவாஜி தோன்றும்-
மிடுக்குடன் நடக்கும் அந்தக்காட்சியைக் காணும்போது
பிரமிப்பாக இருந்தது….. எப்பேற்பட்ட நடிகர் சிவாஜி….!
இந்த ஸ்டைல் அத்தனையும் அவரது சுயகற்பனை.

சிவாஜிக்குப் பின்னால் வந்த நடிகர்கள் அத்தனை பேருக்கும் –
சிவாஜி ஒரு சிறந்த முன் மாதிரியாகத் தெரிந்தார்.

ஆனால், சிவாஜிக்கு – முன் மாதிரியே கிடையாது.
அவருக்கு முன்னால், வந்த ஹீரோக்கள் எல்லாரும் –
பெரும்பாலும் பாடகர்கள்; சீரியசாக நடித்தவர்கள் அபூர்வம்…
சிவாஜி ஒரு சுயம்பு; தானாகவே, தன் கற்பனையிலேயே
பாத்திரங்களை உள்வாங்கிக்கொண்டு நடித்தவர்.
அவருக்கு ஒப்பும் கிடையாது; உவமையும் கிடையாது.

திரு.கே.வி.மஹாதேவன் அவர்களைப்பற்றி இன்னும் நிறைய-
விரிவாக எழுத வேண்டும். பிறகு தனியே எழுதுகிறேன்.

கே.வி.எம். அவர்களின் இசையமைப்பில் –
திருவிளையாடல் படத்திலிருந்து சில பாடல்கள்….


பொதிகை மலை உச்சியிலே –

ஒரு நாள் போதுமா …


பாட்டும் நானே -பாவமும் நானே …

.
——————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மெல்லிசை மன்னரும், திரை இசைத்திலகமும் – இணைந்து-தோன்றி பாடும் ஒரு வீடியோ….

 1. Gopi சொல்கிறார்:

  Wonderful.

 2. D. Chandramouli சொல்கிறார்:

  How lucky we are to have lived during the golden age of Tamil Cinema. I used to think that the training Sivaji went through on stage might have been the reason for his wonderful performance in movies. That he was self made is known to me only recently. Very aptly you described Sivaji as a ‘Suyambu’,I saw many Sivaji’s movies in my younger days and enjoyed,his unparalleled acting, lovely lyrics from Kannadasan, soothing tunes from ‘Mama’ and MSV-VR pair. Presently, thanks to YouTube, we can study the various aspects of Sivaji’s performance at our own pace and pleasure. Sivaji’s walking style alone can be researched for a doctoral thesis! . .

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  சிம்மேந்திர மத்தியமம் !
  சுருதிக்கு ஒரு தம்புரா மட்டுமே ! மற்றபடி பின்னணி எதுவும் இல்லை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.