மிகத் தெளிவான ஒரு பேட்டி …


மனசாட்சியை, மனதை – தொடாமலே பேசுவது,
பாஜக என்ன செய்தாலும் அது சரியே என்று தொடர்ந்து வாதிப்பது,
அவர்கள் என்ன தவறு செய்தாலும், கண்களை மூடிக்கொள்வது,
என்கிற வழியில் இயங்கும் பல நண்பர்கள் ( நண்பர் புதியவன்
போன்றவர்களா -? என்று நீங்கள் கேட்டால்,
நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று தான் நான் சொல்வேன்……) –

– கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அருமையாக விளக்கம்
தந்திருக்கிறார் திரு.ப.சிதம்பரம்….

புதியவன் போன்றவர்கள் எழுப்பும் அத்தனை கேள்விகளுக்கும்
இதில், விளக்கமான, தெளிவான விடை கிடைக்கிறது….

திரு.ப.சிதம்பரம் என்ன உத்தமரா…?
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தானே…?
அவர் சொல்வதெல்லாம் வேத வாக்கா…?
– என்று உடனடியாக புதியவன் போன்றவர்கள் கேள்வி எழுப்புவார்கள்.

அதற்காக, முன் கூட்டியே இதைச் சொல்கிறேன்.

திரு.ப.சி.யின் மீது நமக்கான விமரிசனங்கள் அத்தனையும்
அப்படியே தான் இருக்கின்றன. ஆனால், இந்த இடுகையில் நாம் அவற்றை
விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த விவாதம்-பேச்சு எல்லாம் – இப்போதைய அரசியல் நிலவரம் பற்றியே.

மீண்டும் அவர்கள் திரு.ப.சி.யைப் பற்றியே கேட்பார்களேயானால் –

அவர்களுக்கான நமது பதில் –

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் –
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு…”

– எனவே, பேசும் நபரை விட்டு விட்டு, பேசு பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு,
விவாதிக்கலாம்.

கீழே –
வெல்லும் சொல் நிகழ்ச்சியில்,
திரு.ப.சிதம்பரம் + திரு.குணசேகரன்.

தெளிவான கேள்விகள் – மழுப்பலில்லாத பதில்கள்…
பேட்டி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு
சிறந்த எடுத்துக்காட்டு – இருவருக்கும் நமது பாராட்டுகள்…..

….

….

பின் குறிப்பு – மற்றவற்றைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னர்
நான் முன்வைக்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி –

“புதிய சட்ட திருத்தத்தின்படி,
குடியுரிமை பெறத் தகுதி இல்லாதவர்
என்று தீர்மானிக்கப்படப்போகும் –
சுமார் 10 லட்சம் பேரை –
(என்று தோராயமாக வைத்துக்கொள்வோம் –
இதற்கு மேலும் இருக்கலாம் )

-உயிருள்ள மனிதர்களை –
எந்த வெளிநாடும் ஏற்கத்தயாரில்லை என்கிற பட்சத்தில் –
என்ன செய்வதாக உத்தேசம்…?

எங்கே dump செய்யப்போகிறார்கள்…?
வங்காள விரிகுடாவிலா,
இந்து மகா சமுத்திரத்திலா,
அரபிக்கடலிலா…?
அல்லது இத்தனை லட்சம் பேரையும் ஆயுள் முழுவதும் கேம்பிலா….?

நண்பர் புதியவன் –
அல்லது வேறு பாஜக ஆதரவு நண்பர்கள் யாராக இருந்தாலும் சரி –
இதற்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து
பதில் சொல்ல வேண்டுகிறேன்.

.
—————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to மிகத் தெளிவான ஒரு பேட்டி …

 1. புவியரசு சொல்கிறார்:

  இந்தியக் குடிமகன் யாருக்கும் எந்தவித பாதிப்புக்
  கிடையாது என்று தொடர்ந்து சாதித்து வரும்
  பாஜக தலைமை இந்த பேட்டியில் எழுப்பப்பட்டிருக்கும்
  கேள்விகளுக்கு விரிவாக பதில் சொல்ல முன்வருமா ?

  அல்லது பாஜக ஆதரவாளர்களாவது பதில்
  சொல்ல முன்வருவார்களா ?

 2. Jksmraja சொல்கிறார்:

  நேற்று இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே இது கண்டிப்பாக நாளை விமர்சன வலைதளத்தில் வரும் என்று நான் நினைத்தேன். நீங்களும் போட்டுவிட்டீர்கள். மிகவும் சிறப்பான பேட்டி. மாற்று கருத்திற்கு இடமே இல்லை. பாஜக என்ன நினைக்கிறது என்பது உங்களுக்கு புரியவில்லை. பாஜக நினைத்தது என்ன வென்றால், கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்கள் மனதில் உணர்ச்சியை தூண்டிவிட்டு குஜராத்தில் நடந்தது போலவோ அல்லது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பொது நடந்தது போலவோ கலவரத்தை பெரிய அளவில் ஏற்படுத்தி அவர்களை விரட்டிவிடலாம் என்பதுதான். ஆனால் கடவுளின் அருளால் அஸ்ஸாமில், அங்குள்ள மக்கள் குடியேறிய இந்துக்களையும் சேர்த்தே விரட்ட நினைப்பதால் பாஜகவின் எண்ணத்திற்கு மரண அடி கிடைத்திக்கிறது. பாஜகவின் எண்ணத்திற்கு எதிர்மறை ஆகிவிட்டதால் இப்பொழுதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தேடும் நிலையில் பாஜக இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், 1970 முதல் 1985 வரை பெரிய போராடடம் நடத்தி முதல்வர் ஆன புரபால் குமார் மகிந்தாவே இந்த மசோதாவிற்கு ஆதரித்து வாக்கு அளித்ததுதான். அதிகாரம் எந்த அளவிற்கு எதையும் மாற்ற வல்லது பாருங்கள்.

 3. Ramnath சொல்கிறார்:

  Mr.PUTHIYAVAN,

  PLEASE REPLY. WE ARE WAITING TO HEAR YOU.

 4. மனசாட்சி உள்ள ஒரு மனிதன் சொல்கிறார்:

  இந்திய குடிமகன்கள் யாரையும் இது பாதிக்காது –
  பின் ஏன் வீணாக எதிர்க்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
  40 ஆண்டுகளாக, நம் கண் எதிரே, நம்முடன் அகதிகள் முகாமில் வசித்து வரும்
  இலங்கைத் தமிழர்கள், 48 ஆண்டுகளாக நம்முடன் வசித்து வரும் கிழக்கு வங்க
  அகதிகள், ஆகியோரை, நாளை இந்த சட்டத்தின் அடிப்படையில்
  குழந்தை குட்டிகளுடன் வெளியேறுங்கள் என்று சொன்னால், அவர்கள்
  எங்கே போவார்கள் ? உனக்கென்ன, ரெகுலர் இந்தியக்குடிகளைத்தான்
  இந்த சட்டம் தொடவில்லையே என்று கேட்டால் காவிரிமைந்தன் சார்
  சொல்வது போல், மனசாட்சி இருக்கிறதே. 50 ஆண்டுகளாக கூடவே
  இருப்பவரை பாதித்தால், நம்மால் அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா ?
  இது என்ன மனமா அல்லது கல்லா ?

  கே.எம்.ஸார், நீங்கள் ஒரு தடவை எழுதியிருந்தீர்கள்.
  ஹிமாசல் பிரதேசில், தரம்தலா-டல்ஹௌசியில், தலாய் லாமா மற்றும்
  அவரைச் சேர்ந்த லட்சக்கணக்கான திபேத்தியர்களுக்கு தனியே
  பெரிய இடத்தைக் கொடுத்து, அவர்கள் வசதி போல் வாழ வகை செய்திருக்கிறது
  இந்திய அரசு என்று. அவர்கள் இப்போதும் அகதிகள் தானே ? இந்திய
  குடிமக்கள் இல்லையே ? தலாய் லாமா அவர்களையும், அவருடன் வந்த அகதிகளையும் வெளியேற்றுமா தற்போதைய அரசு ?
  அகதிகளுக்குள் ஏன் வேறுபாடு ?
  இலங்கைத் தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள் ?

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  வாட்ஸ் அப் போன்றவற்றில் பல விடியோக்கள் , செய்திகள்
  உலா வருகின்றன உண்மை எது என்று தெரியாமல்
  நெறைய பேர் பார்வேர்ட் செய்கிறார்கள் .

  செய்திகளை சரிபார்க்க
  youturn (dot )in
  altnews (dot )in

  என்ற தளங்களில் பார்க்கவும் .

 6. புதியவன் சொல்கிறார்:

  //உயிருள்ள மனிதர்களை – எந்த வெளிநாடும் ஏற்கத்தயாரில்லை என்கிற பட்சத்தில் – என்ன செய்வதாக உத்தேசம்…?// – நான் இன்னும் பேட்டியைக் கேட்கவில்லை. ஒரு சில நாட்களில் கேட்டு எழுதுகிறேன். இந்தக் கேள்வி ஒரு ட்ரிக்கி கேள்வி. புறம்போக்கு நிலத்தில் குடியேறி, அடையாறு ஆற்றங்கரையில் குடியேறி, யாரும் அதனைக் கண்டுகொள்ளாமல் (வேற யார்… அரசு ஊழியர்கள்தாம். அவங்கதான் சம்பளம் வாங்கிக்கொண்டு தூங்குவதில் கில்லாடிகள்), அவர்களுக்கு மின்சாரம் மற்றும் எல்லாவற்றையும் வழங்கி, பிறகு 20 வருடங்கள் ஆன பிறகு, ஆற்றைப் பற்றிக் கவலைப்படாமல், நிலத்தை பட்டா போட்டுக்கொடுக்கும் நாட்டில், வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

  என்னிடம் அதிகாரம் இருந்து, இருக்கும் சில வருடங்களில் நாட்டுக்கு நல்லது செய்யணும் என்று நினைத்தால், இவங்க இந்தியாவில் தொடரணும், ஆனால் குடிமகன்களுக்கு உரிய ப்ரிவிலேஜ் எதுவும் 3 தலைமுறைக்கு இவங்களுக்குக் கிடையாது என்ற நிலையைக் கொண்டுவருவேன். அது மட்டுமல்ல, அதற்குக் காரணமான அரசு ஊழியர்களின் பென்ஷன் பணத்தை முழுவதுமாக நிறுத்துவேன். இதற்கெல்லாம் சட்டம் இல்லாததால், இந்தியா இளிச்சவாய நாடு என்று எல்லோருக்கும் தெரியுமாதலால், இவங்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுத்துவிட வேண்டியதுதான்.

  மனிதாபிமானம் மிகவும் கொண்டுள்ள வாசகர்கள், தங்கள் நிலத்தில் உட்கார்ந்துகொண்டு, அதனைவிட்டு நீங்க மாட்டேன் என்று சொந்தம் கொண்டாடுபவர்களிடமும் அதே மனிதாபிமானத்தைக் காண்பித்து தங்கள் நிலத்தையும் வீட்டையும் தாங்களே வழங்குவார்கள் என்றும் நான் எதிர்பார்க்கிறேன். பிச்சைக்காரர்களும் ஒரு சில நாட்கள் தொடர்ந்து, மனிதாபிமானம் உடைய வாசகர்களின் வீட்டுத்தாழ்வாரத்தில் உட்கார்ந்தால், வீட்டுத் தாழ்வாரப் பகுதியை அவர்களுக்கே எழுதிக் கொடுத்துவிடுவார்கள் என்று நம்புகிறேன்.

  • Ezhil சொல்கிறார்:

   புதியவன் சார், முதல் ரெண்டு பத்தில அருமையா கருத்து சொல்லிருக்கீங்க… ஆனா கடைசி பத்தில சொன்னா மாதிரி யாரும் நம்ம நிலத்திலையோ, இல்ல திண்ணையையோ வந்து தங்குறவங்களுக்கு அந்த இடத்தை இலவசமா தர மாட்டாங்க.. ஆனா வந்து உக்காந்தவன் என் இனத்துக்காரன் அதனால எழுதி தர்றேன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே இப்போ… அது தானே பிரச்சனை..

 7. ஜால்ரா கிங் சொல்கிறார்:

  ஜால்ரா வேறு என்ன செய்யும் ?
  இப்படித்தான் வழுக்கும்; இழுக்கும்;
  இதே ரூலை எல்லாருக்கும் அப்ளை பண்ண வேண்டியது தானே ?
  அதில் ஏன் பார்ஷியாலடி ?

 8. Poor_fellow_National சொல்கிறார்:

  மிக சமீபத்தில் என்னை வேதனை அடைய வைத்த செய்தி. பங்களா தேசத்தை சார்ந்த ஒரு இளைஞர் எல்லையை தாண்டி கடைசியில், நமது தமிழ் நாட்டில் , திருப்பூரில் வேலை செய்து கொண்டு இருந்தார். அவர் தனது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த நமது தமிழ் பெண்ணை காதலித்து, கடைசியில் தன்னுடன் தனது பங்களா தேச நாட்டிற்க்கே அழைத்து சென்று விட்டார். இதில் அதிர்ச்சியான செய்தி, தனது மகள் அந்த கேடு கேட்ட இளைஞருடன் அவருடைய நாட்டிற்க்கே ஓடிப்போன செய்தி , அந்த பெண்ணின் அப்பாவிற்கே கடைசி வரை தெரியாமலே போனது. கடைசியில் அந்த பெண்ணின் இறப்பு செய்தியின் மூலம் மட்டுமே, அந்த பாவப்பட்ட தந்தை இதை அறிந்து கொண்டார். இருவரிடமும் passport இல்லை ..இருந்தாலும், நமது நாட்டிற்கும் ,பங்களா தேசத்திரும் உள்ள எல்லை கோடு ஒரு வித கட்டுப்பாடும் இல்லாமல் உள்ளதால், அங்கிருந்து இது போன்ற இளைஞர்கள் தினமும், இந்தியாவிற்குள் நுழைவது வாடிக்கையான செய்தி.
  அவர்கள் அசாம் போன்ற மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளால், அவர்கள், எந்த பிரச்சினையும் இல்லாத தமிழகம் போன்ற மாநிலங்களில் குடியேற முயற்ச்ப்பது கண்கூடு. இதுபோன்ற வந்தேறிகளுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற உரிமைகளை பெற்று தந்து , அவர்களிடம் ஒட்டு பிச்சை எடுத்து கொண்டிருப்பது மம்தா பானெர்ஜி போன்ற அரசியல் தலைவர்கள் செய்யும் தேச துரோகம்.
  இதற்க்கு நாம் நிச்சயம் முற்று புள்ளி வைத்தாக வேண்டும். அதற்கான ஒரு சிறு முயற்சியாக தான் நான் இதை பார்க்கிறேன்.
  ஏன் எல்லா மதத்தினரையும் வெளியேற்ற வேண்டியது தானே, என்று நம்மை போன்ற அறிவு ஜீவிகள் கேட்பதில் சிறிதளவும் அர்த்தம் இல்லை. உண்மையிலே பாதிக்க பட்ட, வேறு வழியே இல்லாத சிறுபான்மையினருக்கு அடைக்கலம் கொடுப்பது நமது கடமை யாகும். ஆனால் அதே சமயத்தில், அண்டை முஸ்லீம் நாடு மக்களுக்கும், நாம் இதை போன்றே வக்காலத்து வாங்கி கொண்டு இருந்தா, நாளையே, பாகிஸ்தானிலிருந்து, பங்காளதேசத்திலிருந்தம், ஆயிரம் ஆயிரம் மக்கள் இந்தியாவிருள் அடைக்கல கேட்க முயல்வார்கள்.
  இதை நிச்சயம் இந்தியா தாங்காது.
  அறிவு ஜீவிகள் புரிந்து கொண்டால் சரி.

 9. bandhu சொல்கிறார்:

  /-உயிருள்ள மனிதர்களை –
  எந்த வெளிநாடும் ஏற்கத்தயாரில்லை என்கிற பட்சத்தில் –
  என்ன செய்வதாக உத்தேசம்…?
  /
  இந்த பிரச்சனையை அமெரிக்காவிலும் உள்ளது. அமெரிக்காவில் undocumented என்று சட்டப்படி நுழையாமல் இருப்பவர்களை எப்படி handle செய்வது என்பது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

  ட்ரம்ப் கட்சியின் நிலை – அவர்கள் சட்டப்படி வந்தவர்கள் அல்ல. அதனால் எல்லோரையும் வெளியேற்றவேண்டும் என்பது. அவர்கள் கூறும் காரணங்கள் — இவர்கள் வருமான வரி காட்டுவதில்லை, illegal என்பதால். பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும் வசதிகள் இவர்கள் வரி கட்டாமலேயே அனுபவிக்கிறார்கள்.

  டெமாக்ரட் கட்சியின் நிலை – அவர்களை மனிதாபிமானமாக அணுகவேண்டும். அவர்கள் சில (பல) வருடங்களுக்குப் பிறகாவது குடியுரிமை பெறவேண்டும் என்கிறார்கள்.

  இதை மனிதாபிமான முறையில் அணுகவேண்டும் என்றே நானும் நினைக்கிறேன். இதில் மதத்தை நுழைத்தது குட்டையை குழப்பிவிட்டது!

  அந்த நாடுகளில் சகிப்புத் தன்மை இல்லை. அதனால் மதத்தை கொண்டு வந்தோம் என்று சொல்பவர்கள், அந்த நாடுகளில் வாழ வழியில்லை. அதனால் இங்கு வருகிறோம் என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?

  மொத்தத்தில் இது எளிதில் தீர்க்கக்கூடிய பிரச்சனை இல்லை!

  • Poor_fellow_National சொல்கிறார்:

   ஒரு வேலை இங்கு, மதத்தின் பெயரை குறிப்பிடாமல் , எல்லோருக்கும் சலுகை என்று அறிவிக்க பட்டிருந்தால், நமது எல்ல இந்திய மாநிலங்களும், பங்களாதேஷத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து, இங்கு படையெடுக்க போகும், பல்லாயிர கணக்கான முஸ்லீம் மக்களுக்கு அடைக்கலம் நாம் கொடுக்க வேண்டி இருக்கும். இங்குள்ள ஓட்டு பொறுக்கிகள் , அவர்களுக்கு ரேஷன் கார்டையும், ஆதார் உரிமை , மேலும், வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடும் பெற்று தந்து, அவர்களின் ஓட்டை பெற முயற்சிக்கும்.
   பி,ஜெ,பி யை எதிப்பதற்காக நாம் எல்லோரும் கண்ணை மூடி கொள்ள கூடாது.

   • Ezhil சொல்கிறார்:

    இந்த நாடுகள்ல இருந்து வந்த முஸ்லீம் தவிர உள்ள மற்ற மக்களுக்கு குடியுரிமை வழங்கி அடுத்த தேர்தல்ல அவங்கள ஒரு வாக்குவங்கியா பாஜக பாக்குறதுக்கும் நீங்க சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே … இதுல ஹிந்துவாவே இருந்தாலும் இலங்கைல இருந்து ஓடிவந்த சிறுபான்மைத் தமிழனால எந்த பிரயோஜனமும் இல்லனு மத்திய பாஜக அரசு நினைக்குறதும் இந்த விதத்தில தானே ?

    • Poor_indiannational சொல்கிறார்:

     நீங்கள் குற்றம் சொல்லுவது போல், மற்ற நாடுகளில் இருந்து வந்த இந்துக்கள் சில ஆயிரங்களே.ஆனால், மற்ற அண்டை நாடுகளில் இருந்து இது வரை இந்தியாவில் நுழைந்த, நுழைந்து கொண்டிருக்கும் (குறிப்பாக பங்காளதேசிகள் ) பல லட்சங்கள்.
     சமீபத்தில் தமிழகத்தில் 5000 பங்காளதேஷிகள் திருப்பூரில் ஆதார் கார்டுடன் சலுகைகளை அனுபவித்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டு கைது செய்ய பட்டிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ இது போன்ற ஆபத்துகளை உணராமல், பாஜக மீது உள்ள கோபத்தால் நமது தலையை மீது நாமே மண்ணை அல்லி கொட்டி கொள்ளுவது போன்று கேள்வி கேட்டு கொண்டிருக்கிறீர்கள்.
     மேலும் இலங்கை வாழ் தமிழர்கள் நீங்கள் சொல்லுவது போன்று, அங்குள்ள அரசால் அடித்து துரத்தப்பட்டவர்களில்லை.
     ஒரு வேலை அவர்களுக்கு நீங்கள் எல்ல அரசியல் வாதிகளும் நீலி கண்ணீர் வடிப்பது போல், அவர்களுக்கு குடியுரிமை வழங்க ஆசை பட்டாள், தமிழகம் தாங்குமா?
     அவர்களுக்கு அவர்களின் நாட்டிலேயே வாழ வழி ஏற்படுத்தி தர முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனம்.
     ஆனால் என்ன செய்வது, பாஜாகா வை ஏதாவது சொல்லி குறை சொன்னால் தான் நாம் தமிழர்கள்.இல்லையென்றால் தமிழின துரோகிகளாவோம்.
     தொடரட்டும் நமது சீரிய பனி. ஆனால் இந்தியா தாங்காது. தயவு செய்து தமிழகத்தை விற்று விடாதீர்கள்.

     https://www.vikatan.com/news/crime/95988-this-is-why-four-bangladeshis-arrested-in-tirupur

     • Ezhil சொல்கிறார்:

      அதெப்படிங்க உங்க வசதிக்கு பேசிக்குறீங்க ? மற்ற நாடுகள்ல இருந்து ஓடி வந்த அல்லது துரத்தி விடப்பட்ட இந்துக்களா இருக்கிற சிறுபான்மையினர் எல்லாம் உங்களுக்கு வேணும்… இலங்கைல இருந்து துரத்தி விடப்பட்ட அல்லது ஓடி வந்தவங்க இந்துக்களா இருந்தாலும் வேண்டாம்.. இதுவே இரட்டை முகம் தானே…

      வங்க தேசத்திலிருந்து வந்து இங்க ஆதார் அட்டை எல்லாம் வாங்கிருக்காங்கன்னா அப்போ எந்த அளவுக்கு பாதுகாப்பு நம்ம நாட்டுல இருக்கு, கூடவே அதிகாரிங்க எல்லாரும் எவ்வளவு மெத்தனமா இருந்திருக்காங்க … இதையெல்லாம் சேர்த்து சாதாரண மக்கள் தலைல தான் கட்டுவீங்க…

      அடுத்து இலங்கைத்தமிழர்கள் னு சொன்ன உடனே எல்லாரும் சொல்றது அவங்க அவங்க நாட்டுல போய் நிம்மதியா வாழட்டும், அதுக்காக மோடி அரசு உழைக்குதுனு.. இதே மாதிரி தான் பங்களாதேஷ் அரசாங்கமும் அவங்க நாட்டுல இருந்து போன மக்களை திரும்ப கூப்பிடறாங்கனு கேள்விபட்டேன்.. சரினு எல்லாத்தையும் அனுப்ப வேண்டியது தானே.. எதுக்கு இன்னும் அவங்களுக்கு குடியுரிமை … அவங்க நாட்டுக்கு போய் உயிரோட இருந்தாலோ செத்தாலோ நமக்கு எதுக்கு கவலை ?

     • Ramnath சொல்கிறார்:

      Mister Poor_indian national

      நீங்கள் பாஜகவின் அதி தீவிர ஆதரவாளராகவோ,
      செயல்பாட்டாளராகவோ இருப்பது குறித்து
      நமக்கு கவலை இல்லை.

      ஆனால் அதன் காரணமாக,
      தமிழை இப்படிக் கொலை செய்வது நியாயமா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.