…
…
எத்தனை வயதானாலும் பதவியாசை போகாத ஒரு மனிதர்…
…
…
இது செய்தி –
குடியுரிமை சட்டத்தை ஆதரிக்க அதிமுகவுக்கு
வந்த அழுத்தம்! எஸ்.ஆர்.பி. பேட்டி –
குடியுரிமை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற அதிமுகவின்
11 உறுப்பினர்களுடைய ஆதரவு மிகவும் அவசியமாக இருந்தது.
ராஜ்யசபாவில் அதிமுக இந்த மசோதாவை எதிர்த்திருந்தால்
குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேறியிருக்காது. இதனால்
அதிமுக மீது தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும்
கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவை
ஆதரித்ததன் பின்னால் மத்திய அரசின் அழுத்தம் இருந்ததாக
அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்
தெரிவித்திருக்கிறார். ஆங்கில நாளிதழ் தி இந்துவுக்கு அளித்த
பேட்டியில் இதுபற்றி எஸ்.ஆர்.பி. மனம் திறந்திருக்கிறார்.
“பாஜக கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் குடியுரிமை
சட்டத் திருத்த மசோதாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில்
இருந்தோம். . ஆனால் மசோதாவின் குறைபாடுகளை நான்
அவையில் பேசும்போது சுட்டிக்காட்டியுள்ளேன்.
‘முஸ்லிம்கள்’ என்ற சொல் அந்த மசோதாவில் இல்லாதது
தவறுதான்” என்ற எஸ்.ஆர்.பி, இந்த மசோதாவை ஆதரிக்க
அதிமுகவுக்கு பாஜக நேரடியாக அழுத்தம் கொடுத்ததா
என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
“பாஜக நேரடியாக எதையும் செய்யமாட்டார்கள்.
கட்சி அலுவலகத்தில் நாங்கள் இந்த விவகாரம் பற்றி
விவாதித்தபோது, தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த
துணைச் செயலாளர் என்னிடம் தொலைபேசியில் பேசி,
குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார். நான் எனது கருத்துக்களை
வெளிப்படுத்துவேன் என்று தெளிவுபடுத்தினேன். உங்கள்
கருத்தை பதிவு செய்ய நிச்சயமாக உரிமை உண்டு என்று
அவர் கூறினார்” என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஆர்.
பாலசுப்பிரமணியன்.
மேலும் அவர், “பாஜகவின் நோக்கம் ஒரு இந்து ராஷ்டிராவை
(இந்து தேசத்தை) உருவாக்குவதாகும். ஆனால் அது இந்த
வார்த்தையை வெளிப்படையாகப் பயன்படுத்தாமல்
பல்வேறு வார்த்தைகளின் மூலமாக சொல்கிறது. வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம், பாஜக தலைவர்கள், குறிப்பாக
உள்துறை அமைச்சகத்தை வழிநடத்தும் திரு. அமித் ஷா,
தனது நிலைப்பாட்டை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்திக்
கொள்கிறார்” என்று கூறியுள்ளார்.
“இந்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை
பற்றி பேசப்படவில்லையே?” என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள
எஸ்.ஆர்.பி, “ நான் இந்த விவாதத்தில் ஐந்து நிமிடங்கள்
பேசினேன். தமிழகத்தைப் பொறுத்தவரை, இலங்கைத்
தமிழர்கள் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
பலர் வெளியேறிவிட்டனர், சிலர் [இலங்கைக்கு] திரும்புவதற்கு
சூழ்நிலைகள் உகந்ததல்ல என்பதால் சிலர் இங்கு தொடர்ந்து
வாழ்கின்றனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
என்று கோரினேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
( https://minnambalam.com/politics/2019/12/16/34/cab-pressure-from-bjp-
admk-mp-open-talk )
———————————————————————————
– நாம் தவறு செய்கிறோம்… தப்புக்கு உடந்தை
போகிறோம் என்று தெரிந்தே, துணை போய் விட்டு,
இப்போது செய்த தவற்றை சரிக்கட்ட இப்படி சாக்கு-போக்கு
சொல்வது வெட்கங்கெட்ட செயல்.
இவரும் ஒரு காலத்தில் காங்கிரஸ்காரராக இருந்தார்…
காமராஜருடன், மூப்பனாருடன் நெருங்கிப் பழகி இருந்தார்
என்பதை நம்ப மனம் மறுக்கிறது.
தவறு என்று மனம் சொல்லும்போது –
மனசாட்சி சொல்வதைக் கேட்க வேண்டியது தானே…?
ராஜ்ய சபா உறுப்பினர் தானே…
என்ன செய்து விடுவார்கள்….?
– அடுத்த தடவை நாமினேட் செய்ய மாட்டார்கள்…
அவ்வளவு தானே…? வேண்டாமே…
இந்த வயதிற்கு மேலுமா பதவி ஆசை…?
——————————————
குடியுரிமை திருத்த சட்டம் – நாட்டு மக்களை மத
அடிப்படையில் பிரித்து, மெஜாரிடி மக்களை போதைக்குள்ளாக்கி,
தவறான வழியில் ஓட்டுகளை பெற்றே ஆட்சியை
தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாமென்று
செய்யப்பட்ட ஒரு முயற்சி –
இப்போது – திசை மாறிப்போகிறது…
வினை விதைத்தால் – தினையா அறுக்க முடியும்…?
.
————————————————————————————————————————————————————-
கா மை சார் சொல்கிறார் :
குடியுரிமை திருத்த சட்டம் – ஆட்சியை
தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாமென்று
செய்யப்பட்ட ஒரு முயற்சி .
இது ஓட்டு வாங்குவதற்காக செய்தது அல்ல .
திரு பாலசுப்ரமணியம் சொல்வது :
பாஜகவின் நோக்கம் ஒரு இந்து ராஷ்டிராவை
(இந்து தேசத்தை) உருவாக்குவதாகும். ஆனால் அது இந்த
வார்த்தையை வெளிப்படையாகப் பயன்படுத்தாமல்
பல்வேறு வார்த்தைகளின் மூலமாக சொல்கிறது.
வீர சாவர்க்கர் , குருஜி கோல்வால்கர் , தீன் தயாள் உபாத்யாயா
போன்றவர்கள் சொன்னதை பா ஜ க செய்கிறது
இந்துத்வா என்பது கொள்கை – முஸ்லீம் , கிறிஸ்துவர்
போன்றவர்கள் இந்து ஆக முடியாது .
இந்துத்வத்தை ஒப்புக்கொண்டவர் இந்து .
அல்லாதவர் இந்து தேசத்திற்கு விரோதிகள் .
ஆண்டி – நேஷனல் , ஆண்டி இந்தியன் எங்கிருந்து
வருகிறது என்பது இப்போது தெரிகிறதா ?
திரு பாலசுப்ரமணியம் வேறென்ன செய்திருக்க முடியும் ?
இவ்வளவு பேசியதே பெரிது .
What is wrong in bringing in CAB? What way it is a threat to muslims in India? Can you please explain.
who says it is threat to muslims in india? Why offer citizenship based on religion. Why not call offer it for any prosecuted one. Assam is opposing CAB from different perspective.
If we dont mention the religion, then the very next day, lakhs of bangladeshi muslims, and pakistan muslims, will enter into india.Are we ready to welcome them????
Whoever comes must prove they were prosecuted for their religion, no one will be given free/automatic citizenship. In that case, why on earth we leave out some religion.
https://pbs.twimg.com/media/EL_y_koX0AEHU1H?format=jpg&name=large இதை பார்த்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் ஐயா.
//வயதானாலும் பதவியாசை போகாத// – பதவி ஆசை இல்லாத ஒரு அரசியல்வாதியாவது என் கண்ணுக்குத் தெரியலை. இதில் இவரைக் குறை சொல்லி என்ன பயன்? இதோ ஸ்டாலின் எதுக்காக இங்கு தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்? அவர் போராட்டம் நடத்தியிருக்கணும்னா அவர் அப்பா மெரீனாவில் மாற்றாந்தாயுடன் காத்து வாங்கிக்கொண்டிருந்தபோது கட்சியை விட்டு வெளியில் வந்து போராடியிருக்கலாம். இப்போது போராடுவது ‘சிறுபான்மையினர்’ வாக்குக்காக. இந்த அணுகுமுறைதான் பாஜகவை தமிழகத்தில் வளர்க்க உதவும் என்பது அவருக்குத் தெரியாமல் போனது ஆச்சர்யம்தான். பலர் சொல்வதுபோல, கள்ளப்பணம் அவருக்கு இங்கிருந்துபோய் வெள்ளையாக வருவதுதான் இந்தப் பிரச்சனையில் அவர் ஒரு சார்பு நிலை எடுத்தற்குக் காரணம் என்பது உண்மைதான் போலிருக்கிறது.
கண்டிப்பாக பாஜக அழுத்தம் கொடுத்திருக்கும் அதிமுக மற்றும் பல கட்சிகளுக்கு. ஜெ. மாதிரி ஒரு தலைமை இல்லாததால், பாஜக கொடுக்கும் அழுத்தத்துக்குப் பணிந்து போகிறது அதிமுக. However I am not referring to this மசோதா alone.
அஸாம் தவிர (அவங்க பிரச்சனை வேறு விதம்), இந்த மசோதா கொண்டுவந்ததில் நான் எந்தத் தவறையும் காணவில்லை. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆஃப்கான் ஆகியவை இஸ்லாமிய நாடுகள். அங்கு இஸ்லாமியர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால், அவங்க மலேஷியா,சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் செல்லலாமே. எதற்காக இந்தியாவிற்கு வரவேண்டும்? இந்துக்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினர் சப்ரஸ் செய்யப்படுகிறார்கள், மதம் மாற கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்பதால் இந்தியா, அதன் பூர்வ குடிகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறது. இதில் தவறு எதையும் நான் காணவில்லை.
இலங்கைப் பிரச்சனைக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமே இல்லை. அதை வைத்து மக்கள் வாக்களிப்பதில்லை. அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு போதும் காங்கிரஸ், திமுக விரும்பியதில்லை, அதற்கான முயற்சிகளை எடுத்ததில்லை. இப்போது பாஜக ஆட்சி செய்வதால், இவங்க உடனே எல்லாப் பிரச்சனைகளையும் அவங்க விரும்பியபடி பாஜக தீர்க்கணும்னு நினைக்கறாங்க. இந்த அகதிப் பிரச்சனை 40 எம்.பி. சீட்டுகள் கிடைத்து பதவிப் பிச்சைக்காக சோனியாவின் வீட்டு வாசலில் கருணாநிதி காத்திருந்தபோது நினைவுக்கு வரவில்லையா? அப்போது ஸ்டாலின் சொல்லியிருக்கக்கூடாதா, பதவி தேவையில்லை அகதிக்கு இந்தியக் குடியுரிமைதான் தேவையென்று.
ஐயா புதியவன்,
காவேரிமைந்தன் என்ன சொல்ல வரார். அத விட்டுட்டு ஸ்டாலின் புடிச்சு தொங்குறீங்க ?
என்ன பதிவு எழுதினாலும் அதில் ஸ்டாலின் பற்றி ஒருசில வரிகளாவது எழுதாமல் இருக்க முடியவில்லை.
காவேரிமைந்தன்,
(உங்கள்
கருத்தை பதிவு செய்ய நிச்சயமாக உரிமை உண்டு என்று
அவர் கூறினார்) இத சொல்லலன்னா தன்னுடைய கருத்தகூட சொல்லியிருக்க மாட்டார் போலிருக்கு. SRB அவர்களின் அதள பாதாள வீழ்ச்சி. இந்த கேடுகட்ட பதவி தேவைதானா ?
அவர் சொல்லியிருப்பது எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் பற்றித்தான். ஆனால் எஸ்.ஆர்.பியைக் குறை சொல்லி என்ன புண்ணியம்? பார்க்கும் அரசியல்வாதிகள் அனைவரும் எஸ்.ஆர்.பி மாதிரித்தானே. அவங்க சுயநலம், தங்கள் பணவரவு – அதுக்கேத்தமாதிரி கொள்கைகள், பேச்சு, போராட்டம். இதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.
நீங்க, ஏதோ எஸ்.ஆர்.பி உன்னதமான அரசியல்வாதியாக இருந்ததாகவும், இப்போதுதான் பதவிக்காக கொள்கையை மாற்றிவிட்டதாகவும் சொல்றீங்க. பதவிக்காக, எந்த அரசியல்வாதி தன் கலரையும் கொள்கையையும் மாற்றிக்கொள்ளவில்லை? இதில் எஸ்.ஆர்.பி மட்டும் குறை சொல்லப்பட காரணம் என்ன? எஸ்.ஆர்.பி செய்வது `பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்` என்பதுதான். நாளை அவர், அதிமுக சார்பில் ஒருவேளை கோவையில் நின்றால், அங்கு அவருக்கு இஸ்லாமிய எதிர்ப்பு வாக்குகள் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார் (இப்போது ஒரு அதிமுக எம்.பி ஐ, இந்தக் காரணத்தால் ஜமா அத்தை விட்டு விலக்கியதுபோல). அதுக்காக இங்கயும் ஒரு துண்டு போட்டு வைக்கிறார். அவர் மனசாட்சிப்படி நடக்க நினைத்திருந்தால், எனக்கு இந்தச் சட்டம் பிடிக்கலை, கொறடா உத்தரவால் வேறு வழியில்லாமல் நான் ஆதரிக்கவேண்டி உள்ளது என்று அங்கேயே பேசியிருக்கலாம். நான் எஸ்.ஆர்.பியும் இன்னொரு பதவியாசையுள்ள அரசியல்வாதி என்ற எண்ணம் கொண்டிருப்பதால், அவரது பேச்சை நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.
எதுக்காக ஸ்டாலின் பற்றிச் சொன்னாலே அதை நியாயப்படுத்தவோ இல்லை கண்டுகொள்ளாமலோ இருக்க நினைக்கிறீங்க? இன்றைக்கு அதிமுகவுக்கு எதிர் கட்சி திமுக தான். அவங்களும் பதவிப் பித்து பிடித்தவங்கதான், கொள்கை என்று ஒன்று இல்லாதவங்கதான் என்பதை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சொல்கிறேன்.
காவேரிமைந்தன் சார்,
எல்லா அரசியல்வாதிகளும் சுயநலவாதிகள்தான். அதனால் யாரையும் கேள்விகேட்டு பதிவு போடாதீர்கள். அப்படி பதிவிட்டீர்கள் என்றால், அதில் ஒரு diclaimer போடுங்கள். அதாவது எல்லா அரசியல்வாதியை போலத்தான் SRB இருக்கிறார். சரிதானே புதியவன் ஐயா 😉.
கண்டிப்பாக ஸ்டாலின் விமர்சனத்துக்கு உள்ளவர்தான். ஆனால் குறைந்தபட்சம் BJP /அதிமுக விமர்சன கட்டுரையிலாவது ஸ்டாலின் பற்றி பேசாமல் மைந்தன் எழுதி இருப்பதை பற்றி பேசுங்கள் ஐயா!
எந்த தவறையும் காணாத புதியவன் ஐயா, இதை பார்த்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
https://pbs.twimg.com/media/EL_y_koX0AEHU1H?format=jpg&name=large
நண்பர்கள் எல்லாருக்குமாக,
பயணத்தில் இருந்ததால், பின்னூட்டங்களுக்கு
விளக்கங்கள் எழுத முடியவில்லை.
இப்போது தான் கணிணி தொடர்பு கிடைத்தது.
மொத்தமாக ஒரே வார்த்தையில் –
(முக்கியமாக நண்பர் புதியவன் பாரவைக்கு…)
————-
மத உணர்வு மேலோங்கி நிற்கும்போது
(மதவெறி என்கிற வார்த்தையை தவிர்த்திருக்கிறேன்…)
நியாய அநியாயங்களும், நீதியும், நேர்மையும்
கண்களுக்கோ – மனதிற்கோ – மூளைக்கோ –
முக்கியமாகப் படுவதில்லை.
நன்கு படித்தவர்களும், பொதுவாக நன்கு
சிந்திக்கக்கூடியவர்களும் கூட, மத உணர்வு
அவர்களிடம் மேலோங்கி நிற்குமேயானால் –
அவர்கள் யாருடைய வாதத்தையும் –
அது எவ்வளவு நியாயமானதாகவும்,
பாரபட்சமற்றதாகவும் இருந்தாலும் கூட –
ஏற்க மாட்டார்கள்.
———
அத்தகையோருக்கு, என்றாவது ஒரு நாள்
மனசாட்சி விழித்துக் கொள்ளும்போது –
– ஒரு வேளை எப்போதாவது விழித்துக் கொள்ளுமேயானால் –
அல்லது சம்பந்தப்பட்ட அவர்களே பாதிக்கப்படும்போது –
(ரூபாய் நோட்டு செல்லாக்காசான சம்பவத்தில் நிகழ்ந்தது போன்று… )
இந்த வாக்கியங்களில் உள்ள உண்மை புலப்படும்.
எழுதுவது என் கடமை என்று மனசாட்சி சொல்வதால் தான்,
எழுதிக் கொண்டிருக்கிறேன். இத்தகையோர் இவற்றை
உடனே ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்பதற்காக அல்ல ….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்