…
…

“ஞான ஒளி “
…
திருவாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள், ஒரு பேட்டியில் –
சுவாமி பரமஹம்ச நித்தியானந்தர் அவர்களிடம் நிச்சயம்
ஒரு அபூர்வ சக்தி இருக்கிறது என்று தன்னால் உறுதியாகச்
சொல்ல முடியும் என்றும்,
அவரைப் புரிந்துகொள்ள எல்லாராலும் முடியாதென்றும்,
அவரைப்போன்ற ஞானி’களை புரிந்து
கொள்ளவே ஒரு ஞானம் வேண்டுமென்றும் சொல்லி
இருந்தார்….
ரங்கராஜ் பாண்டே அவர்கள் கண்டு வியக்கும் அந்த
ஞானி’யின் லேடஸ்ட் ஞான ஒளி கீழே –
அதில் ஸ்ரீமான் பரமஹம்ஸ நித்தியானந்தர் உதிர்க்கும் –
” மீனாட்சி, மீனாட்சி ”
” என்னாச்சி, என்னாச்சி ”
” செட்டி வீட்டு பொட்டியடிப் பையன் ”
” அன்னாசிப்பழ கர்ப்ப்பம் ”
” உண்டை கட்டி வாங்கிட்டு கெடந்த என்னை -”
” அடி அடி அடின்னு ரவுண்டு கட்டி அடிச்சீங்களேடா டேய்…. ”
” இது என் கெரகமா – உங்க கெரகமா தெரியல்லை”
” நான் வளந்துண்டே தானே இருக்கேன் – பாருங்களேண்டா…”
-போன்ற உன்னத “ஞானமொழி”யை புரிந்து கொள்ள எத்தகைய
விசேஷ ஞானம் வேண்டும் என்பதை அடுத்த பேட்டியில்
விவரமாக விளக்கினால் தேவலை….!!!
ஃப்ராடின் மீது கோபம் புரிகிறது.
ஆனால் திருவாளர் ரங்கராஜ் பாண்டே’யின் மீது ஏன் கோபம்
என்று கேட்கலாம்…
ஃப்ராடுகளையும், சமூக விரோதிகளையும், அவர்களின்
வேடத்தைக் கலைத்து, அடையாளப்படுத்தி வெளிப்படுத்த
வேண்டிய சமூகப் பொறுப்புள்ள ஒரு ஊடகவியலாளர்,
ஒரு ஃப்ராடுக்கு வக்காலத்து வாங்கி, அவருக்கு அபூர்வ சக்தி
இருக்கிறது என்றும் ஞானிகளால் மட்டுமே அவரை
புரிந்து கொள்ள முடியுமென்றும் “மார்க்கெட்டிங்”
செய்தால்….???
…
…
.
—————————————————————————————————————————————————————–
//ஒரு ஃப்ராடுக்கு வக்காலத்து வாங்கி, அவருக்கு அபூர்வ சக்தி
இருக்கிறது என்றும் ஞானிகளால் மட்டுமே அவரை
புரிந்து கொள்ள முடியுமென்றும் “மார்க்கெட்டிங்”
செய்தால்….???//
இப்படித்தானே ஐயா 2014 தேர்தலில் மார்க்கெடிங் செய்தீங்க! அதுபோலத்தான் இதுவும்.
சிரிச்சுட்டே கடந்து போகவேண்டியதுதான்.
(என்ன செய்வது, நம்ம தலைலே அப்படி எழுதப்பட்டுள்ளது)
அப்படி இல்லை அஜீஸ்,
உங்கள் உதாரணம் இதற்கு பொருந்தாது
என்பதை நீங்களே உணர்வீர்கள்.
அப்போது நாம் மார்க்கெட்டிங் எதுவும்
செய்யவில்லை; எரிகிற கொள்ளிகளில்
எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று
தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில்
இருந்தோம்… 🙂 🙂
அப்போதைக்கு பெட்டர் கொள்ளி என்று
தோன்றியதை எடுத்து தலையில்
வைத்துக் கொண்டோம்….
இப்போது – பற்றி எரிவதைப் பார்த்து
செயலற்றவராய் திகைக்கிறோம் … 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பரமஹம்சர்
இந்தியாவில் இல்லை – ஏன் ?
2010 ஆண்டு அவர் மேல் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது .
வேறென்ன – மற்ற சாமியார்கள் செய்கிற வேலைதான் .
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்தது பொய்க் குற்றச்சாட்டு
என ராம்நகர செஷன்ஸ் கோர்ட்டில் சொல்லப்பட்டது .
பரமஹம்சருக்கு கன்னடம் ,ஆங்கிலம் தெரியாது .
பூஜை புனஸ்காரத்தை விட்டு கோர்ட் வர முடியாது .
அப்புறம் “அதெல்லாம்” அவரால் முடியாது .
etc ,etc
அப்புறம் ஹைகோர்ட் சுப்ரீம் கோர்ட் சுற்றி வந்து
திரு குருமூர்த்தி மாதிரி ஒரு கேள்வியையும் கோர்ட் கேட்டது
2012 ல் சோதனை செய்ய உத்தரவு விடப்பட்டது .
சோதனை கடைசியில் 2014 ஆண்டு நடந்தது .
மஹாஸ்வாமிகள் அதில் பாஸ் !
2018 ல் சுப்ரீம் கோர்ட் வழக்கை நடத்த சொல்லிவிட்டது .
அதிலிருந்து ஸ்வாமிகள் எங்கே போனார் ஏன் யாருக்கும்
தெரியாது .
இப்போது இன்னும் ஒருவர் கிளம்பி இருக்கிறார். திருவாளர். எஸ்.வி. சேகர் – இவர் இப்போது பரமஹம்சருக்கு வக்காலத்து வாங்குகிறார். முதலில் குடும்பத்துடன் கைலாசம் வருகிறேன் என்று சொன்னவர், சற்று பின் வாங்கி, தான் மட்டும் வருவதாக சொல்லி இருக்கிறார். எஸ். வி. சேகர் கைலாச நாட்டு பிரதமர் பதவி கொடுத்தால், ஏற்றுக் கொள்ளுவாராம். “நித்தி இந்து மதத்துக்கு மிகச் சிறந்த தொண்டு ஆற்றி இருக்கிறாரார்,” என்று எஸ். வி. சேகர் திருவாய் மலர்ந்து இருக்கிறார்.
நித்தியானந்தாவின் பேச்சு இண்டெரெஸ்டிங் ஆக இருந்தது. நம்மைப் போல்தான் மற்றவர்களும் பிறக்கிறார்கள். அவர்களால் மட்டும் எப்படி லட்சங்களில், கோடிகளில் பக்தர்களையோ, ரசிகர்களையோ, ஆதரவாளர்களையோ பெற முடிகிறது என்று நான் ஆச்சர்யப்படுவேன். இது எந்த விதமான மனிதர்களுக்கும் பொருந்தும். இடி அமீன், ஹிட்லர், பின் லாடன், …. ஓவாயிஸ், ….. அப்புறம் சாமியார்கள் வரிசையில் நித்தியானந்தா, ஈஷா, ஸ்ரீஸ்ரீ……ப்ரேமானந்தா…. There is something in these people which others dont have. May be ஆகர்ஷண சக்தி, வசீகரிக்கும் தன்மை, பேச்சு இவைகள் இருக்கலாமோ?
ஆனாலும் நித்தியானந்தாவின் பேச்சு, கண்ணியக்குறைவாக (Low Class ஆக) இருப்பதாகத் தோன்றியது. ஏற்கனவே மதுரை ஆதீனத்தை அபகரிக்கத் துணிந்தவராயிற்றே.
புதியவன் சார் – அப்போ பாண்டே சொன்ன
“ஞானம் “பற்றி
நீங்க என்ன நெனைக்கறீங்க ?
அப்படிச் சொன்னதைத் தவறாக நினைக்கலை. எனக்கு நித்தியின் செய்கையில் எந்த ஞானம் இருப்பதாகத் தெரியலை. ஒருவேளை இது என் ‘ஞானக் குறைவோ’ என்னவோ.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – இது படிச்சிருக்கீங்களா?
எவன் போலி, எவன் உண்மை என்பதை (துறவிகளில்) பொதுவா, அந்த ஞான நிலையை அடைந்தவர்களால்தான் சொல்லமுடியும். இதைப் பற்றி நிறைய புத்தகங்களில் (இமயமலை குருக்களின் தன் வரலாறு, அனுபவம் போன்ற புத்தகங்கள்) படித்திருக்கிறேன். கும்ப்மேளாவுக்கு லட்சக்கணக்கில் சாமியார்கள் வந்தாலும் அவர்களிலும் குறைந்த அளவு உள்ளவர்களே உண்மைத் துறவிகள், ஞானம் பெற்றவர்கள். அவர்களை சாதாரணர்கள் இனம் காணுவது கடினம்.
நித்தியானந்தா இதில் உண்மையே பேசியிருக்கிறார் .
இரண்டு வேளை உண்டைக்கட்டி கிடைத்தால் போதும்
என்று இருந்தவர் ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு
வந்துவிட்டார் .
அவரிடம் மற்றவர்களை குணப்படுத்தும் ஒரு சக்தி
இருந்தாக எல்லோரும் நம்பினார்கள் .
ஒரு வேளை அந்த நம்பிக்கையே குணப்படுத்தி இருக்கலாம் .
நம்மால் எதையும் நேரில் பார்க்க முடியாத போது
அடுத்தவர்கள் சொல்வதை வைத்து கணிக்கிறோம் .
சும்மாவாலும் கிளப்பி விட்டால் எல்லோரும் நம்பத்
தொடங்கி விடுவார்கள் .
குமுதம் ,விகடன் போன்றவை எழுதும் புரட்டுக்கள்
உண்மையென நம்புவர்கள் அதிகம் .பொய் எடுபடுகிறது .
Perception is Reality !
டொனால்ட் டிரம்ப் எப்படி அதிபர் ஆனார் ?
இப்போது ஏன் மறுபடியும் அதிபர் ஆவார் ?
போரிஸ் ஜான்சன் எப்படி பிரதமர் ஆனார் ?
எல்லாம் வெறும் பிரமை – ஆதி சங்கரர் .
// டொனால்ட் டிரம்ப் எப்படி அதிபர் ஆனார் ?
இப்போது ஏன் மறுபடியும் அதிபர் ஆவார் ?
போரிஸ் ஜான்சன் எப்படி பிரதமர் ஆனார் ? //
தற்காலத்தில் பொதுவாகவே, உலகம் முழுவதுமே
பெரும்பாலான மக்கள்
வலதுசாரி தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்.
இடதுசாரிகள் வெளிப்படையாகத் தெரிவார்கள்.
ஆனால்,வலதுசாரி தீவிரவாதிகள் நடைமுறையில்
தீவிரவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
ஆனால், தங்கள் சாமர்த்தியத்தால், மறைமுகமாக
அதன் பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்கள்.
வெளியிலிருந்து பார்ப்போருக்கு
ட்ரம்பையும், ஜாண்சனையும் பார்த்தால்
பைத்தியக்காரர்கள் போலத்தான் தெரிகிறது.
ஆனால், அவர்கள் தங்கள் மக்களிடம் மெஜாரிடி
ஓட்டுக்களை பெறுகிறார்களே.