இரண்டு பிரமாதமான செய்திகள் ….!!!1) சம்ஸ்கிருதத்தில் பேசினால் –
சர்க்கரை நோய் வராது….

2) பாஸ்போர்ட்டில் புதிதாக தாமரைச்சின்னம்
அச்சிடப்படுவது, போலிகளை எளிதாக
அடையாளம் காணவே….

இவை லேடஸ்ட் செய்திகள் ….!!!

————————–

1) – Friday, December 13, 2019, 9:41 [IST] டெல்லி:
சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது,
இதயத்தில் கோளாறுகள் எதுவும் வராது….

கண்டுபிடிப்பாளர் – பாஜக எம்.பி. கணேஷ் சிங்

சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா நேற்று
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா
மீதான விவாதத்தில் பேசிய பாஜக எம்பி கணேஷ் சிங்,
சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை
நோய் வராது என்று தெரிவித்தார். மேலும் சமஸ்கிருத
மொழியில் பேசினால் இதய கோளாறுகள் ஏற்படாது
என்றும், கொழுப்பின் அளவினை தவிர்க்க முடியும் என்றும்
தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/delhi/speaking-sanskrit-keeps-diabetes-cholesterol-at-bay-says-bjp-mp-371211.html?utm_source=/rss/tamil-fb.xml&utm_medium=23.11.206.77&utm_campaign=client-rss

——————————————-

2) – போலி பாஸ்போர்ட்டுகளை எளிதாக அடையாளம் காணவே
புதிய பாஸ் போர்ட்டில் தாமரைச்சின்னம்….!!!

Friday, December 13, 2019, டெல்லி:

லோக்சபாவில் நேற்று முன்தினம் நடந்த கேள்வி நேரத்தில்
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ராகவன் இதுபற்றி
கேள்வி எழுப்பியதற்கு –

– போலி பாஸ்போர்ட்டுகளை எளிதாக அடையாளம்
காண்பதற்காக தாமரை சின்னம் அச்சிடப்படுவதாக மத்திய
அரசு விளக்கம் அளித்துள்ளது.

——————————————————————————————————————————————————————

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இரண்டு பிரமாதமான செய்திகள் ….!!!

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது,
  இதயத்தில் கோளாறுகள் எதுவும் வராது….

  அவர் அப்படி பேசியதில் காரணம் உண்டு .
  சமஸ்க்ரிதம் என்ற மொழி தொன்மை வாய்ந்தது .
  அதில் வேதம் எழுந்த காலத்தில் எழுத்துக்கள் இல்லை .
  எழுத்துக்கள் பிற்காலத்திலேயே ஏற்பட்டன .
  இந்த வேத மொழிக்கு சரியான பொருள்
  இவர்களால் கூற முடியவில்லை .

  வேதத்தை பழிக்க தி க காரர்கள் வர வேண்டும் என்பதில்லை .
  வேதத்திற்கு இவர்கள் கூறும் பொருந்தா விளக்கமே காரணம் .
  சோம பானம் என்றால் என்ன ?
  அது கஞ்சா மாதிரி உள்ள ஒரு கொடி .
  இந்திரன் சோமா பானத்திலே உருண்டான் என்ற
  பொருள் சொல்கிறார்கள் .
  ரிஷிக்கள் அதை உண்டு உருண்டு கிடந்தார்கள் என்பது அடாது .

  வேதம் வாய்வழியாகவே சொல்லப்பட்டு வந்தது .
  உச்சரிப்பு ,சொல்லும் விதம் எல்லாம் மிக கவனமாக இருந்தது .
  வேதம் மாறாமல் உள்ளது என்பதை அனைவருமே
  ஒப்புக்கொண்டுள்ளனர் .

  இவ்வளவு மெனக்கெட்டு ஏன் அதை பாதுகாத்தார்கள் ?
  பொருள் சொல்லத் தெரியாது . எனவே ஒரு கதை கிளம்பியது .

  வேதம் தேவபாஷையில் உள்ளது –
  மந்திரங்களுக்கு அதனால் சக்தி உள்ளது
  எல்லா மொழிகளும் சமஸ்க்ரிதத்தில் இருந்து பிறந்தன .
  தமிழ் நீச பாஷை – தமிழில் பேசினால் தீட்டு .

  அவர்களுக்கு தெரியாது என்பதால் மற்ற மொழிகளை
  தூஷணம் செய்தனர் .

  முதலில் சமஸ்க்ரிதம் ஒரு செயற்கை மொழி .
  என்றும் அது பேசப்பட்டதில்லை .
  அதனால் அதில் இருந்து பேசும் மொழிகள் பிறக்காது .
  அன்று இருந்த பிராகிருத மொழிகளில் இருந்து
  பிற்கால மொழிகள் ஏற்பட்டன .
  வேத மொழி பிராகிருதம் போன்ற மொழிகளில்
  இருந்து சொற்கள் கடன் வாங்கியுள்ளது .
  வேத மொழிக்கு சரியான பொருள் அந்தக்கால
  மொழிகளை பயின்றால் முடியும் .

  ஏன் இப்படி முட்டு கொடுக்கிறார்கள் என்பது புரிகிறதா ?

  • suswilc சொல்கிறார்:

   In english urban dictionary there’s a short word called “LMAO”.
   I was LMAO after hearing this MP’s speech.
   Nowadays MPs are acting like NOT only elected representatives but also Doctors as well as medical scientsts.
   Give ph.d to this man!!!

   Again the reply by Mr.Meyporul is adding petrol to my Laughter. Is he trying to defend or affend the doctor’s speech?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழையும், சம்ஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு,
   எது உயர்ந்தது என்று சண்டை போடுவது
   பைத்தியக்காரத்தனமானது என்பது என் கருத்து.

   இரண்டும் முற்றிலும் வித்தியாசமான மொழிகள்.
   இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கவில்லை.
   இரண்டுமே தம் தம் வழியில், பல சிறப்புகளை
   உடையவை.

   இரண்டும் தோன்றிய காலம் எது என்பதற்கு
   எந்தவித அறிவுபூர்வமான ஆதாரங்களோ,
   ஆவணங்களோ இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

   உலகத்திலேயே தொன்மையான இரண்டு மொழிகளுக்கு
   நாம் சொந்தக்காரர்கள் என்று பெருமையும்,
   சந்தோஷமும் கொள்வதை விட்டு விட்டு,
   இது உசத்தியா – அது உசத்தியா
   இது முன்னால் வந்ததா – அது முன்னால் வந்ததா ?
   என்று சண்டை போடுவது தேவையே இல்லாத
   விஷயம்.

   குறைந்த பட்சம் இந்த தளத்திலாவது அந்த
   பைத்தியக்காரத்தனம் வேண்டாம்…
   இரண்டையும் குறித்து நாம் பெருமைப்படுவோம்.

   மத்திய அரசைப் பொருத்தவரையில்,
   சம்ஸ்கிருதத்திற்கு கொடுக்கப்படும்
   அத்தனை மரியாதைகளும், தமிழ் மொழிக்கும்
   கொடுக்கப்பட வேண்டும்.

   இது நமது விருப்பம் மட்டுமல்ல –
   உரிமையும் கூட…

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  1. உளறுவாயர்களைத் தேர்ந்தெடுத்ததற்கு கணேஷ் சிங்கைத் தேர்ந்தெடுத்தவர்கள்தாம் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும்.
  2. இந்தியாவின் தொன்மை மொழி சமஸ்கிருதம் மற்றும் தமிழ். தமிழில் இருக்கும் பக்தி இலக்கியங்கள், சமஸ்கிருத மொழியில் அமைந்தவைகளை (வேதமோ, ராமாயணமோ மஹாபாரதமோ) பயின்று அதனைத் தமிழ்ப்படுத்தித் தந்தவைகளாகவும் இருக்கின்றன. உலகின் சில தொன்மொழிகளில் பாரதத்தில் உள்ள இரண்டு மொழிகள் என்று நாம் பெருமைப்படணும்.
  3. மற்றபடி என் மொழி சிறந்தது என்று பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. இந்த மொழி சிறந்ததல்ல என்று பேச எவருக்கும் உரிமை இல்லை. பொதுவாக தென்னக மொழிகளுக்குத் தமிழ் தாய், வட மாநில மொழிகளுக்கு சமஸ்கிருதம் தாய் என்றே நினைக்கிறேன்.

  இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நம் so called, தமிழில் ஒழுங்காக பேச, எழுதத் தெரியாத எம்.பிக்கள், பாராளுமன்றத்தில் சமஸ்கிருதத்தைத் தாழ்திப் பேசும்போது, தமிழ் மட்டுமே சிறந்த மொழி என்று பேசுவதில்லை. ஆனால், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் போன்ற திராவிட மொழிகள் என்று பேசுகிறார்கள். (இதனை நீங்கள் கேட்டிருக்கலாம்). இந்த போலி ‘மொழிச்சார்பின்மை’வாதிகள், தமிழை மட்டும் சிறந்த மொழி என்று பேசினால், அதில் உண்மையும் அர்த்தமும் இருக்கும், ஆனால், தென்னக மாநில எம்பிக்கள் இவர்களைத் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விரட்டுவார்கள் என்பதால் இப்படி போலி ‘சமஸ்கிருத எதிர்ப்பை’க் கைக்கொள்கின்றனர். இப்படிப் பேசுபவர்கள் ‘உருது’ இந்திய மொழி அல்ல என்று பேசும் துணிபு கொண்டவர்கள் அல்லர். இதற்குக் காரணமாக நான் நினைப்பது, இந்துமத துவேஷம் என்பதால்தான் இத்தகை போலி ‘தமிழ் ஆர்வலர்களை’ நான் வெறுக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.