நித்தியானந்தா என்கிற – ஃப்ராடின் பின்னால் இருப்பவர்கள் …?


இந்த ஃப்ராடின் மீது தொடுக்கப்பட்டு:ள்ள பாலியல் புகார்
பற்றிய வழக்கில், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்,
2009 -லிருந்து நேற்று வரை 44 தடவை வாய்தாக்கள்
கொடுக்கப்பட்டுள்ளன…அநேகமாக – இதுவே கின்னஸ்
சரித்திரமாக இருக்கும்.

10 ஆண்டுகள் ஆயினும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும்
இல்லை…. ஏன்…? யார் இருக்கிறார்கள் பின்னால்…?

இத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்து விட்டு,
நாட்டை விட்டு தப்பியோடவும் முடியுமானால் இந்த
ஃப்ராடின் பின்னால் யார் இருக்கிறார்கள்….?

உயர் அரசு அதிகாரிகள்…? அரசு இயந்திரங்கள்…?
அரசியல்வாதிகள்….?

விஜய் மால்யா, லலித் மோடி, நீரவ் மோடி, சோக்சி
போன்றோரைப் போல், தனிப்பட்ட மனிதராக அல்ல –
தன்னுடன் ஒரு பெரும்கூட்டத்தையே ( குறைந்தது 30 பேர்…? )
சேர்த்துக்கொண்டு ஓடிப்போயிருக்கிறார் இந்த ஃப்ராடு –

இத்தனை கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கையில் –
எப்படி நாட்டை விட்டு வெளியேற முடிந்தது…

மொரீஷியஸ் நாட்டில், தனது பல்கலைக்கழகம் (….?)
ஒன்றை இந்த ஃப்ராடு துவக்கி இருக்கிறார்.
இது குறித்த ஒப்பந்தம் ஒன்றையும் போட்டிருக்கிறார்….?
(இதற்கு மத்திய அரசின் அனுமதி உண்டா…..? )

அந்த நாட்டு ஹைகமிஷனர், ஜூலை 9, 2017 அன்று
இந்த ஃப்ராடின் பங்களூரு ஆசிரமத்திற்கு வந்து –
காலில் விழுந்து “ஆசிர்வாதம்” பெற்று –
உலகில் யாருக்கும் கிடைக்காத “பெரும்பேறு” எனக்கு
கிடைத்திருக்கிறது… நான் கொடுத்து வைத்தவன் என்று
வேறு பேசி இருக்கிறார்….

High Commissioner of Mauritius in India, Jagdishwar Goburdhun, visited Nithyananda petham in Bengaluru on the occasion of Guru Purnima. at this event, Goburdhun met Nithyananda and signed the official paperwork to open a Nithyananda Gurukul and Nithyananda University in Mauritius.

நான் கொடுத்து வைத்தவன்.. பெரும்பேறு பெற்றவன் என்று நெகிழ்கிறார்….!!!

இந்த ஃப்ராடு இப்போது எங்கே இருக்கலாமென்று
க்ளூ கிடைத்திருக்குமே…?

நம்மிடையே இளிச்சவாயர்கள் இருக்கிற வரையில்,
இவர்களைப் போன்ற ஃப்ராடுகளின் வளர்ச்சிக்கு
குறைவே இருக்காது.

இந்த வலைத்தளத்தின் வாசக நண்பர்களும் தங்களின்
பிறவிபெரும் பேற்றை அடைய… கீழே சில
வித்தியாசமான புகைப்படங்கள்…..!!!

பாவம் – நமது அரசோ, வெளியுறவுத்துறையோ, இதைப்பற்றி
எல்லாம் – முக்கியமாக, மொரீஷியஸ் ஹைகமிஷனர்
இங்கு வந்ததையும், ஒப்பந்தம் போட்டதையும் பற்றி எல்லாம்….
– எப்படி அறிந்திருக்க முடியும்….? அவர்களிடம் யாராவது
சொன்னால் தானே தெரியும்…?

இந்த ஃப்ராடின் செயல்களுக்கு அவர்களை எப்படி
குறை சொல்ல முடியும்…?

.
—————————————————————————————————————————————————————–

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to நித்தியானந்தா என்கிற – ஃப்ராடின் பின்னால் இருப்பவர்கள் …?

 1. புதியவன் சொல்கிறார்:

  //நம்மிடையே இளிச்சவாயர்கள் இருக்கிற வரையில், இவர்களைப் போன்ற ஃப்ராடுகளின் வளர்ச்சிக்கு குறைவே இருக்காது.//

  //நித்யானந்தா, பா.ஜ.க அரசை மிகவும் குறைகூறி சமீபத்தில் பேசியிருக்கிறார்//

  இந்த இரண்டு ஸ்டேட்மண்டுகளுக்குமே தொடர்பிருக்கும் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

  எந்த ஃப்ராடுகளின் செயலுக்கும் நம் மத்திய அரசை எப்படிக் குறை சொல்லமுடியும்? அவங்கதான் பாவம் ரொம்ப அப்பாவியாச்சே. நித்தியானந்தா தனக்கு ‘ஜுரம்’ என்று லெட்டர் போட்டால், உடனே அவருக்கு அவர் நினைக்கும் நாட்டில் ரெசிடென்ஸ் பெர்மிட் விசா பெற்றுத்தர சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றவர்களைப் போன்றவர்கள் இந்த அரசில் இல்லாமலா போய்விடுவார்கள்? நித்தியானந்தா இந்த மாதிரி ஃப்ராடு வேலைகளை காங்கிரஸ் அரசு அன்று ஊக்குவித்ததால்தான் செய்ய ஆரம்பித்தார், தற்போதைய மத்திய அரசு அவர் எங்கு மறைந்துள்ளார் என்று தீவிரமாகத் தேடுகிறது என்று ஒரு போடு போட்டால், நாமும் தலையாட்டிக் கேட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழி?

  • Ramnath சொல்கிறார்:

   // எந்த ஃப்ராடுகளின் செயலுக்கும் நம் மத்திய அரசை
   எப்படிக் குறை சொல்லமுடியும்? //

   நித்தி போன்ற ஞானிகளை புரிந்துகொள்ளவே
   உங்களுக்கு ஞானம் வேண்டும் என்று சொல்லும்
   க்ரூப் தானே நீங்கள் ? உங்களிடமிருந்து
   வேறு எதைஎதிர்பார்க்க முடியும் ?

  • Rajs சொல்கிறார்:

   I think he is making fun of his favourite govt.

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பிராடு என்றாலும் சாமியார்களுக்கு பவர் இருக்கு .
  எந்த போலீசும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காது .
  போலீசை கட்டிப்போட எதுவும் மந்திரம் இருக்குமாய் இருக்கும் .

  பா ஜ க மீது ஏன் மஹாஸ்வாமிகள் கோபம் கொண்டார்
  என தெரியவில்லை .அதனாலேயே நடவடிக்கையா ?

 3. Ramnath சொல்கிறார்:

  பாஜக மீது சுவாமிகள் கோபம் கொண்டார்
  என்பதே புதியவன் போன்றவர்கள் விடும் கதை.
  மத்திய அரசு இந்த நாய்க்கு ஆதரவு தருகிறது
  என்கிற புகார் வராமல் தடுப்பதற்காக
  போடப்படும் ஒரு நாடகம் – pre-emptive formulae.
  அரசு ஆதரவு இல்லாமல் இந்த கூட்டம்
  வெளிநாட்டுக்கு ஓடியிருக்க முடியுமா ?
  கே.எம்.சார் எழுதியிருப்பது போல் மொரிஷியஸ்
  நாட்டுடன் அக்ரிமெண்ட் போட முடியுமா ?

  • புதியவன் சொல்கிறார்:

   Newsலாம் எதையும் படிக்காம வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு எழுதாதீங்க ராம்நாத். நித்தியை ஜகதீஷ் பிடதியில் 2017ல் சந்தித்தார்.

   நித்தியின் சமீப காணொளிகளையும் (கைலாஷ் தேசத்திலிருந்து -அவருக்கு வந்த வாழ்வு) கேட்டிருக்க மாட்டீங்க. அவர் வெஹெமென்டா பாஜகவை எதிர்க்கிறார். அப்போதான் வெளிநாட்டு ஆதரவு, அஸைலம் கிடைக்கும்னு நினைத்திருக்கலாம். பாஜகவும் இதன் பின்னணியில் இருக்கலாம், ஈஸாவுக்கு பாஜக ஆதரவு இருப்பதுபோல

   வெறும் assumption ல உங்க நிலைக்கு ஏற்ப கருத்தை எழுதறீங்க.

 4. Ramnath சொல்கிறார்:

  மத்திய அரசு மனம் வைத்தால்
  24 மணி நேரத்தில் இந்த போலி
  எங்கே பதுங்கி இருக்கிறது என்பதை
  கண்டுபிடிக்க முடியும்.
  மனம் எப்படி வைப்பார்கள் ?

 5. Ramnath சொல்கிறார்:

  Mr.Puthiyavan,
  // அப்போதான் வெளிநாட்டு ஆதரவு, அஸைலம் கிடைக்கும்னு நினைத்திருக்கலாம். பாஜகவும் இதன் பின்னணியில் இருக்கலாம், ஈஸாவுக்கு பாஜக ஆதரவு இருப்பதுபோல

  வெறும் assumption ல உங்க நிலைக்கு ஏற்ப கருத்தை எழுதறீங்க.//

  If mine is assumption, thEn What is yours ?

  • புதியவன் சொல்கிறார்:

   மொரீஷியஸ் நாட்டுடன் அக்ரீமென்ட்

   புதியவன் விடும் கதை

   நீங்க என்ன எழுதியிருக்கீங்க என்பதுகூட நினைவுக்கு வராதா ராம்நாத்?

 6. sakthi சொல்கிறார்:

  மொரீஷஸ் ஊடாக சென்றிருக்கலாம்.ஆனால் அவரின் இணையத்தளம் உட்பட அனைத்து பதிவுகளும் பனாமா நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.தொலைபேசி இலக்கமும் பனாமா நாட்டு இலக்கமே, பதிவு செய்யப்பட்ட விபரங்களில் காட்டப்பட்டுள்ளன.பதிவு செய்தவரின் பெயர் மட்டும் பாதுகாப்பு முறையில் மறைக்கப்பட்டுள்ன.

  அவர் அறிவித்த நாட்டின் பெயர் சிறீ கைலாச நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரடி ஒளிபரப்பில் எஸ்.வீ.சேகர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.