இதை யார் தடுப்பது….? ஆளும் கட்சி எம்.பி.க்களா…? எதிர்க்கட்சிகளா…?


கீழே – தமிழ் இந்து’வில் வெளிவந்துள்ள
ஒரு செய்தி –

( https://www.hindutamil.in/news/india/529293-rape-pocso-case-probes-should-
be-completed-in-2-months-prasad-to-write-to-cms-cjs-1.html )

பலாத்கார, போக்ஸோ வழக்குகளை
2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்:
ரவிசங்கர் பிரசாத் கடிதம் –

———————-

பலாத்கார வழக்குகள், போக்ஸோ வழக்குகளை
2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று
மாநில முதல்வர்களுக்கும், உயர் நீதிமன்ற தலைமை
நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்று மத்திய
சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் கடந்தவாரம் கால்நடை பெண் மருத்துவர்
ஒருவர் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்,
உத்தரப்பிரதேசம் உன்னாவ் நகரில் பெண் ஒருவர்
பலாத்காரம் செய்து எரித்துக்கொல்லப்பட்டார். இந்த
சம்பவங்கள் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை
ஏற்படுத்தியுள்ளன.

போலீஸார் விசாரணையை முடிக்கக் காலதாமதம்
செய்கிறார்கள், நீதிமன்றங்கள் நீதி வழங்கப் பல ஆண்டுகள்
எடுத்துக்கொள்கின்றன என்று மக்கள் மத்தியில் பரவலான
குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
பாட்னாவில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி
எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ” பெண்களுக்கு
எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து
வன்முறைகள் நிகழ்வது கண்டிக்கத்தக்கது. போக்ஸோ
வழக்குகள், பாலியல் பலாத்கார வழக்குகள் விசாரித்து
நீதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு
எழுந்தது.

ஆதலால், போக்ஸோ, பலாத்கார வழக்குகளை
2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று
அனைத்து மாநில முதல்வர்களுக்கும், மாநில உயர் நீதிமன்ற
தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.
நீதிமன்ற விசாரணை அனைத்தும் 6 மாதங்களுக்குள்
முடிக்கப் பட வேண்டும்.

விரைவு நீதிமன்றங்களை உருவாக்கி இந்த பலாத்கார
மற்றும் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருந்தால்
அவற்றை விரைவாக விசாரித்த முடிக்க முயல வேண்டும்
என்று உயர் நீதிமன்றங்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன் ”
எனத் தெரிவித்தார்.

——————————————————————————————————————————————————————

இந்த செய்தியைப்பற்றி நமக்கு விமரிசனம் ஏதுமில்லை.

ஆனால் – ஒரே ஒரு கேள்வி மட்டும் உண்டு.

கிரிமினல் ப்ரொசீஜர் கோடு’க்கு (Criminal Procedure Code)
ஒரு சின்ன திருத்தம் கொண்டு வந்து பாராளுமன்றத்தில்
இதையே ஒரு விதியாக/சட்டமாக நிறைவேற்றி விட்டால் –

அது காவல்துறை, மத்திய அரசு, மாநில அரசுகள், நீதித்துறை –
போன்ற அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்துமே –

அமைச்சருக்கு யாரையும் கடிதம் எழுதி கெஞ்சவேண்டிய
அவசியமே இருக்காதே….

இப்படி ஒரு சட்ட திருத்த மசோதா தயாரிக்க அரைகுறையான
எனக்கே அரை மணி நேரம் போதும்… மத்திய சட்ட மந்திரிக்கு…..?

அப்படிச் சட்டம் ஒன்று கொண்டு வருவதை
யார் தடுப்பது….?
எம்.பி.க்களா…?

எந்த கட்சி எம்.பி.க்கள்..?

பிற கட்சிகள் தடுத்தால், நீங்கள் கேட்க வேண்டிய
அவசியமே இல்லையே; உங்களுக்குத்தான் தனி மெஜாரிடி
இருக்கிறதே…

பின் ஏன் தயக்கம்…?
தடுப்பது ஆளும் கட்சி எம்.பி.க்களேயா …?

இதை சட்டமாக்க, பாராளுமன்றத்தில் உடனடியாக
ஒரு மசோதா கொண்டு வாருங்களேன்.

மக்கள் பார்க்கட்டும்… யார் இதை எதிர்க்கிறார்கள் என்று…

.
—————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to இதை யார் தடுப்பது….? ஆளும் கட்சி எம்.பி.க்களா…? எதிர்க்கட்சிகளா…?

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மேற்படி இடுகைக்கு சம்பந்தம் இல்லாத மற்றொரு விஷயம் –

  இன்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும்
  குடியுரிமை திருத்த மசோதாவில் –

  இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை
  என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்,
  “இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக மட்டுமே துன்புறுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு
  தமிழ் பிரச்சினை தீர்க்கப்பட்டது. மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும்
  வித்தியாசம் உள்ளது” என்றார்.

  Read more at: https://tamil.oneindia.com/news/delhi/why-tamils-in-sri-lanka-are-not-covered-under-cab-rajnath-singh-explain-370782.htmlarticlecontent-pf420434-370782.html?utm_source=/rss/tamil-fb.xml&utm_medium=23.11.206.86&utm_campaign=client-rss

  தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டதா….?
  மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் இருக்கிறது
  என்கிறார் மத்திய மந்திரி. உண்மை தான்…

  ஆனால், தமிழர்கள், இனப்பாகுபாடு காரணமாகவே இலங்கையில் துன்புறுத்தப்படவில்லையா…?

  மந்திரியின் இந்த வாதத்தை அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள்,
  முக்கியமாக ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டு,
  அந்த மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தால் –

  இலங்கைத் தமிழர்களுக்கு – திமுக செய்ததை விட
  மோசமான துரோகத்தை அவர்கள் செய்கிறார்கள் என்றே பொருள்.

  ———————————–
  இதைத் தவிரவும் – பொதுவாகவே,

  மத அடிப்படையில் மட்டும்
  குடியுரிமை வழங்கும் இந்த திட்டம் அரசியல் சட்டத்திற்கு
  மட்டுமல்ல – நியாயமான மக்களின் மனசாட்சிக்கும் எதிரானது.

  ஜெ. இருந்திருந்தால், நிச்சயமாக இந்த மசோதாவிற்கு
  ஆதரவு அளித்த்திருக்க மாட்டார். இப்போதைய
  அதிமுக தலைமை தங்களது சுயநலனுக்காக –
  ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்கிறது.

  பாராளுமன்றத்தில் by hook or crook – இந்த மசோதா
  நிறைவேறினாலும் –

  எப்படியும், உச்சநீதிமன்றம் இறுதியில் இதை
  நிராகரிக்கும் என்று நம்புவோமாக.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மேலும், தங்களுக்கு தேவையென்றால் –

   பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இந்த சட்டத்தை
   அவசர அவசரமாக கொண்டு வரும் பாஜக அரசு,
   கற்பழிப்பு வழக்குகளை விரைவு படுத்தும்
   சட்டத்தை – மேலே இடுகையில் விவரித்திருக்கிற
   முறையில் – ஏன் கொண்டு வரவில்லை…?

   அந்த சட்டத்திருத்தத்தில் ஆளும் கட்சி தலைமைக்கே
   விருப்பமில்லையா … ? சொந்த கட்சி உறுப்பினர்களே
   சிக்கிக் கொள்வார்கள்; ஆதரவு தர மாட்டார்கள்
   என்கிற அச்சமா…?

   .

   • புதியவன் சொல்கிறார்:

    இடுகைக்கு பிறகு வருகிறேன்.

    //மத அடிப்படையில் மட்டும் குடியுரிமை வழங்கும் இந்த திட்டம் அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல – நியாயமான மக்களின் மனசாட்சிக்கும் எதிரானது//

    இதை நான் ஏற்கவில்லை. (உங்கள் கருத்தை ஏற்கவில்லை). அரசின் விளக்கத்தையும் படிக்கிறேன். பிறகு வருகிறேன்.

    இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்? அவர்களது பிரச்சனையை அவர்கள் இலங்கை அரசுடன் தீர்த்துக்கொள்வார்கள். அவர்கள் எதற்கு இந்திய அரசை நம்பவேண்டும், அவர்கள் பிரச்சனை தீர்வதற்கு?

    • Ramnath சொல்கிறார்:

     //இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்? //

     தெரியாமல் சொன்னால் அறியாமை.

     தெரிந்தே சொன்னால் திமிர் வாதம்.

     தமிழகத்தில் இருக்கும் 90,000 அகதிகளின்
     பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மத்திய அரசின்
     பொறுப்பு இல்லையா ?

     இந்திய அரசுக்கு சம்பந்தம் இல்லையென்றால்,
     புதிய ஜனாதிபதி பொறுப்பேற்றதும், அவசர அவசரமாக
     அவரை இந்தியாவிற்கு வரவழைத்தது ஏன் ?

     இந்தியா இன்னும் 13,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் என்று
     சொன்னது ஏன் ? இருக்க இடமில்லையென்றால் கடலில் விழுந்து
     சாகட்டுமென்று சொல்ல வேண்டியது தானே ?
     சம்பந்தம் இல்லையென்றால்
     13-வது சட்ட திருத்தத்தை அமல் செய்ய வேண்டுமென்று
     இந்தியா வலியுறுத்துவது ஏன் ?

     சம்பந்தம் இல்லையென்றால் இந்தியா ஏன் சம்பந்தத்துடன்
     பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் ?

     • Ramnath சொல்கிறார்:

      பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷுக்கும்,
      ஆப்கானிஸ்தானுக்கும் சென்ற இந்துக்கள்
      விரும்பித்தானே சென்றார்கள் ? அவர்களை
      யார் அங்கு போகச் சொன்னது ? பிறகு இங்கே
      திரும்ப வரச்சொன்னது ? இப்போது குடியுரிமை
      கேட்கச் சொன்னது ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     பாஜக அரசை குறை கூறினால் உங்களுக்கு
     பிடிக்காது என்பது தெரியும். வெளிப்படையாக
     ஆதரிப்பதற்கு பதிலாக, சுற்றி வளைத்து ஆதரிப்பது தான்
     உங்கள் வழக்கம் என்பதும் தெரிந்ததே…..

     மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் –
     இந்தியாவுக்கும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும்
     எந்தவித சம்பந்தமும் இல்லையா ?

     தமிழ்ப் போராளிகளுக்கு கொடைக்கானலில்
     ஆயுதப்பயிற்சி கொடுத்தது எந்த நாட்டின் அரசு ?
     கடைசியில் அதே போராளிகளை அழிக்க இலங்கைக்கு
     துணை போனது எந்த நாட்டின் அரசு ?
     அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது
     எந்த நாட்டின் அரசு ?
     வான் வழியே சென்று உதவிப் பொருட்களை போட்டது
     எந்த அரசு ?

     உங்களுக்கு வேண்டுமென்றால், சம்பந்தம் உண்டு.
     வேண்டாம் என்றால், என்ன சம்பந்தம் என்று கேட்பா ?

     சம்பந்தம் இல்லையென்றால், இலங்கைத் தமிழர்களுக்கு
     இந்திய அரசு வீடு கட்டிக் கொடுப்பானேன்…?
     13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று
     மீண்டும் மீண்டும் இலங்கை அரசை வற்புறுத்துவானேன் ?

     .
     -காவிரிமைந்தன்

     • புதியவன் சொல்கிறார்:

      //சம்பந்தம் இல்லையென்றால், இலங்கைத் தமிழர்களுக்கு
      இந்திய அரசு வீடு கட்டிக் கொடுப்பானேன்…?
      13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று
      மீண்டும் மீண்டும் இலங்கை அரசை வற்புறுத்துவானேன் ?//

      கா.மை. சார்.. என்னவோ என் மனது இதனை நம்பவில்லை. வேற அஜெண்டாவோட இந்திய அரசு (மன்மோகன் சிங்கிலிருந்து ஆரம்பித்து) இதனைச் செய்கிறது என்றே நம்புகிறேன் (வீடு கட்டிக்கொடுப்பதை). 13வது சட்டத் திருத்தம் – அந்தக் காலம் மலையேறிப்போய்விட்டது சார். இது ‘மகளை எப்படியாவது வெளியில் விட்டுவிடக்கூடாதா’ என்று கெஞ்ச சோனியாவைச் சந்தித்துவிட்டு, நெய்வேலித் தொழிலாளர்கள் சம்பந்தமாக சோனியாவிடம் விவாதித்தோம் என்று சொல்வதைப் போன்றது.

    • Ramnath சொல்கிறார்:

     மத துன்புறுத்தல்கள் காரணமாக
     பங்களா தேஷிலிருந்து யாராவது
     இந்தியாவிற்கு ஓடி வந்திருக்கிறார்களா ?
     எத்தனை பேர் இருக்கும் ?
     அவர்களில் எத்தனை பேர் குடியுரிமை கோரி
     அப்ளிகேஷன் போட்டிருப்பார்கள் ?

     புதியவன் சார் பதில் சொல்ல வேண்டும்

     • புதியவன் சொல்கிறார்:

      ராம்னாத் ஜி – பிரிவினையின்போது 20%க்கும் அதிகமான இந்துக்கள் பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் வாழ்ந்தார்கள். இப்போது அதன் % என்ன? காங்கிரஸுக்கு சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக வைத்திருப்பதிலேயே கவனம் இருந்ததால், இந்த இரு தேசத்தையும் சேர்ந்தவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. கத்தி முனையில் மதம் மாறியாகவேண்டிய கட்டாயம். இப்போது மிஞ்சியவர்களுக்காவது வாய்ப்பு இருக்கிறது.

      இதனால் எத்தனைபேர் வருவார்கள் என்பதெல்லாம் பாஜகவின் எதிர்பார்ப்பா இல்லை, வட இந்தியாவில், இதன் மூலம் வாக்காளர் மனதில் இடம் பிடிப்பதுதான் அவங்களோட தந்திரமா என்பது டிபேட்டபிள் (எனக்கு வாக்குக்குக் குறிவைத்து என்பதில்தான் நம்பிக்கை. ஏதோ நல்லது பண்ணுவோம் என்ற எண்ணம் பாஜகவுக்கு இருப்பதுபோலத் தெரியவில்லை)

 2. Prabhu Ram சொல்கிறார்:

  அன்று தலைவர் காமராஜர் சொன்னது
  திமுக, அதிமுக வைக் குறித்து;

  இன்று அதையே நாம் சொல்லலாம்
  பாஜக, காங்கிரஸ் இரண்டையும் குறித்து;

  “எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்”
  அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் அரசியல் ?

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இந்தியாவில் இன்னும் நாம்
  இ பி கோ என்ற இந்தியன் பீனல் கோட் – 1860
  கோட் ஆப் கிரிமினல் ப்ரொசீஜர் 1861
  (பெயருக்கு இதை 1973 என்று மாற்றியிருக்கிறது )
  இதை வைத்துதான் கட்டி அழுகிறோம் .

  அதன்படி மரணதண்டனை ஹைகோர்ட்தான் தீர்மானிக்கும் .
  செஷன் கோர்ட் (அதாவது மாவாட்ட நீதி மன்றம் )
  7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கொடுக்க முடியாது .
  கொடுத்தால் அதை ஹைகோர்ட் உறுதி செய்ய வேண்டும் .

  ஹைகோர்ட் அப்புறம் சுப்ரீம் கோர்ட் அதற்கு அப்புறம்
  மெர்ஸி பெட்டிஷன்
  ம்ம் பிறகென்ன ஒரு ஏழு – எட்டு வருஷம் இழுத்து விடலாம் .

  பி கு – மேலே சொன்னது சரிதானா என்று சட்டம் படித்தவர்கள் விளக்கவும் .

 4. புவியரசு சொல்கிறார்:

  எங்களுக்கு மேண்டேட் இருக்கிறது.
  அடுத்த 5 வருடங்களுக்கு நாங்கள்
  நினைப்பதைத்தான் செய்வோம். ;அதை
  பார்த்துக் கொண்டிருப்பதைத்தவிர
  வேறு ஒன்றும் உங்களால் செய்ய முடியாது
  என்று பாராளுமன்றத்திலேயே உரத்த குரலில்
  கூறுகிறார்களே; பின் யார் என்ன கேட்டு
  என்ன பயன் ? ஓட்டு போட்டதற்கு மக்கள்
  அனுபவிக்க வேண்டியது தான்.

 5. புதியவன் சொல்கிறார்:

  //பலாத்கார, போக்ஸோ வழக்குகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத் கடிதம்//

  நல்ல ஜோக்.

 6. Ramnath சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார் சட்டம் ஏன்
  கொண்டு வரவில்லை என்று கேட்கிறார் ?
  பாஜக அரசின் failure தானே இது ?
  பூசி மழுப்பாமல், அதை ஒப்புக்கொள்ளுங்கள்.

  • புதியவன் சொல்கிறார்:

   இந்தச் சட்டத்தை யாரும் கொண்டுவர முடியாது. (அது ஏகப்பட்ட ஷரத்துக்களைப் பாதிக்கும். அல்லது முழு இந்தியச் சட்டத்தையும் மாற்றணும்). அதுபோல ஒரு குற்றத்திற்கு இரு மாதங்களுக்குள் தீர்ப்பு சொல்லியாகணும் என்றும் யாரும் சொல்ல முடியாது. நம் இந்தியச் சட்டப்படி, ஒரு குற்றவாளிக்கோ, பயங்கரவாதிக்கோ, தேசவிரோதிக்கோ கூட, பல்வேறு வாய்ப்புகளைச் சட்டம் வழங்குகிறது. அதனால்தான் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் கூட, 25 வருடங்களாக அப்பீலுக்கு மேல் அப்பீல் போட முடிகிறது.

   மத்திய அமைச்சர் ரவி சங்கர்பிரசாத் அவர்கள் எழுதியிருப்பது, ‘சும்மா உள உளாக்காட்டிக்கு’த்தான்.

 7. புதியவன் சொல்கிறார்:

  //இந்தியாவுக்கும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும்
  எந்தவித சம்பந்தமும் இல்லையா ?

  தமிழ்ப் போராளிகளுக்கு கொடைக்கானலில் ஆயுதப்பயிற்சி கொடுத்தது எந்த நாட்டின் அரசு ? கடைசியில் அதே போராளிகளை அழிக்க இலங்கைக்கு
  துணை போனது எந்த நாட்டின் அரசு ? அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது எந்த நாட்டின் அரசு ? வான் வழியே சென்று உதவிப் பொருட்களை போட்டது எந்த அரசு ?//

  நான் rude ஆகத்தான் பதில் எழுதியிருக்கிறேன். (அந்தத் தொனி). தவறா எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் இலங்கையின் இனப் போராட்டத்தையும், அதில் நடந்த பலவற்றையும் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், பலர் (பங்குபெற்றவர்கள்) எழுதியதையும் படித்திருக்கிறேன்.

  1. இஸ்லாமிய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவிற்குள் அனுப்புகிறது. இதனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
  2. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களுல் சிலர் இத்தகைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்கள் உதவியுடன் பயங்கரவாதச் செயல்களை இந்த மண்ணில் நடத்துவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
  3. ராஜீவ் காந்தியின் மரணம் நிகழ்ந்தபோது, ஈழ பயங்கரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுத்த திமுக, திக, பெரியார் தி.க போன்றவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
  4. தமிழகத்தில் ‘பின்லேடனை ஆதரித்து’ ஊர்வலம் போனவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

  இதற்கெல்லாம் ‘ஆமாம்’ என்று முழு மனதுடன் நீங்கள் சொன்னால், நீங்கள் இந்தியா, இலங்கையில் வாழும் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த செயலையும், அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுத்ததையும், அவர்கள் (வி.பு போன்ற போராட்டக் குழுக்கள்) நம் மண்ணில் அவர்களது ஆயுதப் பசியைத் தீர்த்துக்கொள்ள ஆதரவு அளித்து பாண்டி பஜாரில் துப்பாக்கிச் சூட்டில் பிறரைக் கொன்று அவர்கள் தப்பிக்க வழி ஏற்படுத்திக்கொடுத்த தமிழக அரசின் செய்கையையும், ஈழ பயங்கரவாதிகளுக்கு தமிழ் மண்ணை அவர்களது போராட்டத்திற்கு ‘தமிழன்’ என்ற பெயரால் பட்டா போட்டுக்கொடுத்த தமிழக அரசியல் பயங்கரவாதிகளையும் (சாரி.. தேசவிரோதிகளையும்) ஆதரிப்பதும் சரிதான்.

  இந்தியா ஈழத் தமிழர்கள் விஷயத்தில், விடுதலைப் புலிகள் விஷயத்தில் நடந்துகொண்டது (ஆதரித்தது) தவறு என்றே நான் நினைக்கிறேன். பிறகு ராஜீவ் காந்தி, தான் விரும்பியதை அடிமை போல பிரபாகரன் ஏற்றுக்கொள்ளணும் என்று கிட்டத்தட்ட துப்பாக்கி முனையில் மிரட்டியதும் தவறு. பிறகு அமைதிப்படை, பதிலுக்கு இந்தியப் பிரதமரைக் கொலை செய்தது… என்ற பலவும் தவறு. திமுக, தன் பங்குக்கு, ஈழ பயங்கரவாத இயக்கங்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுத்து அவர்களது ஆயுதப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதும் தவறுதான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // 1. இஸ்லாமிய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவிற்குள் அனுப்புகிறது. இதனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
   2. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களுல் சிலர் இத்தகைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்கள் உதவியுடன் பயங்கரவாதச் செயல்களை இந்த மண்ணில் நடத்துவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
   3. ராஜீவ் காந்தியின் மரணம் நிகழ்ந்தபோது, ஈழ பயங்கரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுத்த திமுக, திக, பெரியார் தி.க போன்றவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
   4. தமிழகத்தில் ‘பின்லேடனை ஆதரித்து’ ஊர்வலம் போனவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

   இதற்கெல்லாம் ‘ஆமாம்’ என்று முழு மனதுடன் நீங்கள் சொன்னால், நீங்கள் இந்தியா, இலங்கையில் வாழும் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த செயலையும், அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுத்ததையும், அவர்கள் (வி.பு போன்ற போராட்டக் குழுக்கள்) நம் மண்ணில் அவர்களது ஆயுதப் பசியைத் தீர்த்துக்கொள்ள ஆதரவு அளித்து பாண்டி பஜாரில் துப்பாக்கிச் சூட்டில் பிறரைக் கொன்று அவர்கள் தப்பிக்க வழி ஏற்படுத்திக்கொடுத்த தமிழக அரசின் செய்கையையும், ஈழ பயங்கரவாதிகளுக்கு தமிழ் மண்ணை அவர்களது போராட்டத்திற்கு ‘தமிழன்’ என்ற பெயரால் பட்டா போட்டுக்கொடுத்த தமிழக அரசியல் பயங்கரவாதிகளையும் (சாரி.. தேசவிரோதிகளையும்) ஆதரிப்பதும்
   சரிதான். //

   ———————————————————————

   மன்னிக்கவும்.
   உங்களிடமிருந்து இன்னமும் கொஞ்சம்
   பொறுப்பான பதிலை எதிர்பார்த்தேன்.

   நீங்களும் கூட இப்படிப்பட்ட வாதங்களில்
   எல்லாம் ஈடுபடுவீர்களென்று
   எதிர்பார்க்கவில்லை.

   இதைவிட பாஜகவினரின்
   வழக்கமான அணுகுமுறையான –
   “தேசத்துரோகி” என்கிற பட்டத்தை
   நீங்கள் எனக்கு தந்து விட்டுப் போகலாம்.

   உங்கள் விளக்கமான –
   பதில் கேள்விகளுக்கு மிக்க நன்றி.
   எனக்கு கொடுக்கப்பட்டுள்ள
   “தேசத் துரோகி” பட்டத்திற்கும் நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… கோபப்படாதீர்கள்.
    Our sympathy is with you என்பதற்கும் You stay here and do terrorism in your country என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

    ‘முஸ்லீம்’ என்ற நோக்கில் வெளிநாட்டு பயங்கரவாதிகள், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, ஆதரிக்கும் செய்கைக்கும், ‘தமிழர்’ என்பதால், தமிழகத்தில் ஆயுதங்களைப் புதைத்துவைத்துக்கொள், உன் நாட்டில் உனக்குப் பிடிக்காத தமிழர் தலைவர்கள் உட்பல பலரையும் கொன்றுகொள், சண்டையில் காயமேற்படும்போது இங்கு வந்து மருந்துகளைப் பெற்றுக்கொள் என்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.

    மத்திய அரசு, என் புரிதலில், எப்போதும் ‘தமிழர் உரிமை, வாழ்வு’ என்பதற்காக முனைந்ததே கிடையாது. அது நமது வெளிநாட்டுக் கொள்கையாக இருப்பதாகவும் தெரியவில்லை. “நீ எனக்கு இதைச் செய், அல்லது என் விருப்பப்படி நடந்துகொள், இல்லைனா ‘தமிழர் உரிமை’ என்று நான் ஆரம்பித்துவிடுவேன்’ என்பதைப் போலத்தான் நம் அரசின் கொள்கை இருந்துள்ளது என்றுதான் நான் புரிந்துகொள்கிறேன். அதனால்தான் நம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும் நாம் கண்டுகொண்டதில்லை. கண்ணை மூடிக்கொண்டு கச்சத்தீவைத் தாரை வார்த்தபோதும் தமிழரது நலனைப் பற்றிச் சிந்தித்ததில்லை. நம்மால் அதிகபட்சம் செய்ய முடிந்ததெல்லாம் மெரீனாவில் கிங் சைஸ் பெட் போட்டுக்கொண்டு, ஏர்கூலரில் காற்றுவாங்குவதுதான்.

    இரு எதிரிகள் போரிட்டுக்கொண்டிருக்கும்போது, இருவராலும் இருவரும் பாதிப்பு அடையும்போதுதான் அங்கு ‘உடன்படிக்கை’ என்பது சாத்தியம். தோல்வி அடைந்த ஒருவனிடம் எனக்குத் தெரிந்து யாரும் ‘சமரசம் பேசி, காலில் விழுந்து விட்டுக்கொடுத்து’ உடன்படிக்கை செய்துகொள்ள மாட்டார்கள், இந்திராகாந்தியைத் தவிர.

    • Ezhil சொல்கிறார்:

     புதியவன் சார், நீங்க பேசுறது கொஞ்சமாவது அர்த்தமா இருக்கா ? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில இருந்து வந்தா, இந்துக்கள் மத ரீதியா சிறுபான்மைபடுத்தப்பட்டு நாடு கடந்து ஓடி வந்துருக்காங்க அவங்களுக்கு இந்த அரசாங்கம் ஆதரவு கரம் நீட்டும்… ஆனால் அதே மாதிரி இலங்கைல இருந்து உயிரைக் காக்க ஓடி வந்த தமிழனுக்கு எதுவும் கிடையாது.. கேட்டா எல்லாரும் அது இலங்கையோட உள்நாட்டு பிரச்சனை.. அதுவும் அது எப்பவோ சரியாயிடுச்சு.. இனிமேல் அங்க அவங்க போய்டலாம் னு கதை சொல்றீங்க… வடக்கத்தி வெள்ளைத்தோல் இந்துக்கள்ன உசத்தி, தமிழன் இந்துவா இருந்தாலும் தாழ்ந்தவன் தான் அப்படி தானே … நல்லா இருக்கு சார்…

 8. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  புதியவன் சொல்கிறார்
  “இந்தச் சட்டத்தை யாரும் கொண்டுவர முடியாது.
  அது ஏகப்பட்ட ஷரத்துக்களைப் பாதிக்கும். அல்லது
  முழு இந்தியச் சட்டத்தையும் மாற்றணும்.
  அதுபோல ஒரு குற்றத்திற்கு இரு மாதங்களுக்குள்
  தீர்ப்பு சொல்லியாகணும் என்றும் யாரும் சொல்ல முடியாது.”

  அதைத்தான் நங்கள் சொல்கிறோம் .
  சட்டத்தை மாற்றுங்கள் .
  வெள்ளைக்காரன் போட்ட சட்டத்தை மாற்ற முடியாது என
  எதாவது சட்டம் இருக்கிறதா என்ன ?

  எந்த வழக்கானாலும் இரண்டு மாதங்களில் முடியுங்கள் .

  இப்போது இருக்கும் சட்டம் ஆட்சியாளர்களுக்கு வசதி ஆக
  உள்ளது – அதை குப்பையில் போடுங்கள்

  ஒரு உதாரணம் – சட்ட விரோதமாக தி நகரில் கட்டடம்
  கட்டி விட்டு கோர்ட்டில் போய் ஸ்டே வாங்குவார்கள் .
  அரசு அதிகாரிகள் அப்படியே கண்டு கொள்ளாமல்
  இருப்பார்கள் . இருபது வருடம் கூட ஸ்டே இருக்கும் .
  ரிசல்ட் – நடவடிக்கை ஒன்றும் கிடையாது .
  ஆக சட்ட விரோத கட்டடங்களுக்கு கோர்ட்டே துணை !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.