…
…
…
– தலைப்பைப்பற்றி, முதலிலேயே ஒரு விளக்கம் –
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி(முன்னாள்) தலைவர்,
திருவாளர் தங்கபாலு தனது பெயரை Thangkabalu என்று
தான் போட்டுக்கொள்கிறார் ( நியூமராலஜி நம்பிக்கை…!!! )
தற்போது, வயநாடு எம்.பி. என்கிற முறையில் ராகுல் காந்தி,
3 நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருக்கிறார்….
மலப்புரம் அருகே கருவாரக்குண்டு என்னும் அரசு
உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தை
ராகுல் காந்தி நேற்று திறந்து வைத்திருக்கிறார்.
அப்போது அங்கே குழுமியிருந்த மாணவர்களிடையே பேசிய
அவர் (அரசியல் தொடர்பில்லாத பேச்சு), அங்குள்ள யாராவது
தனது பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்க்கத் தயாரா
என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்…. அதைக் கேட்ட
12-ம் வகுப்பு மாணவி சஃபா ஜெபின் தைரியமாக
முன் வந்திருக்கிறார்.
ராகுல் காந்தி பேசப்பேச அவரின் பேச்சை, உடனடியாக
மலையாளத்தில் மொழிபெயர்த்தார் சஃபா ஜெபின்.
தன்னம்பிக்கையுடன் தானாக முன்வந்து,
அழகாகவும், அற்புதமாகவும் எந்தவித தயக்கமும் இன்றி,
மொழி பெயர்த்த அந்த மாணவியைப் பற்றிய
இந்த நிகழ்வை, காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில்
வீடியோவாக வெளியிட்டுள்ளது.
அந்த மாணவியின் தன்னம்பிக்கைக்கும், செயலாற்றலுக்கும்
நமது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டும்.
நண்பர்களும் காண, அந்த வீடியோவை கீழே பதிந்திருக்கிறேன்….
…
…
இந்த சமயத்தில், நமது தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள்
தலைவர் திருவாளர் தங்க்க்க்கபாலு, இதே ராகுல் காந்தி
கடந்த மார்ச் மாதம் கன்யாகுமரி வந்தபோது, அவரது ஆங்கில
பேச்சை, தமிழில் மொழிபெயர்த்த அற்புத நிகழ்ச்சி நினைவிற்கு
வருவதை தவிர்க்க முடியவில்லை… 🙂 🙂 🙂
நமது விமரிசனம் தளத்தில் கூட, அப்போதே
அந்த வீடியோவை பதிவிட்டிருந்தோம்….
மலரும் நினைவுகளாக மீண்டும் ஒருமுறை அந்த
வீடியோவை திருவாளர் தங்க்க்க்கபாலு அவர்களுக்கு
சமர்ப்பிக்கிறோம்.
…
…
.
——————————————————————————————————————————————————————
கவுண்டமணி, செந்தில் ஜோக்குக்குப் பிறகு,
நான் அதிகப்படியாக ரசித்தது தங்க்க்க்க்க்கபாலு
ஜோக் தான்.
தங்க்க்க்க்க்கபாலுவையே இப்போதெல்லாம்
காணோம். அவர் அடிக்கடி மேடைக்கு வரவேண்டும்.
நம்மையெல்லாம் மகிழ்விக்கவேண்டும்.
ராகுல் காந்தி, தங்க்க்க்க்க்கபாலுவின் மொழிபெயர்ப்பு அனுபவத்தை இன்னும் மறக்கலை போலிருக்கு. அதைவிட மோசமாக யாருமே மொழிபெயர்க்க முடியாது என்று நினைத்துவிட்டார். ஆங்கிலம் தெரியாவிட்டால், மொழிபெயர்க்கும் வேலையில் இறங்கக்கூடாது.
மொழிபெயர்ப்பு என்பது கலை. அதுவும் மேடையில் மொழிபெயர்க்கும்போது அதே உணர்ச்சியில் மொழி பெயர்க்கணும். (நான் ப.சி. ராஜீவ் காந்தியின் தேர்தல் பேச்சை மொழிபெயர்த்ததைக் கேட்டிருக்கேன். சரியாக மொழிபெயர்த்திருந்தாலும் மனதுக்கு நெருக்கமாக அமையவில்லை)
இந்த மாணவியை மொழிபெயர்க்கச் சொன்னதன்மூலம் ராகுல், கூடியிருந்த கூட்டத்தினரின் பாராட்டைப் பெற்றிருப்பார்.
இந்த மொழிபெயர்ப்பில் யாரும் சொல்லாத விஷயத்தை கவணித்தீர்களா சார், அந்த மாணவி இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர் இது எதேச்சையாகவே நடந்தாதா இல்லை ஒருவேளை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு எதேச்சையாக நடத்தப்பட்டதா, நிச்சியமாக அந்த மாணவி மிக நன்றாக மொழி பெயத்தார் குறிப்பாக ஒன்றை சொல்லி நிறுத்தும் போது காத்திருந்து அடுத்த வாக்கியத்திற்குமான தொடர்பு கிடைத்தவுடன் அதை மொழி பெயர்த்தது நன்றாக இருந்தது. இதை ராகுலும் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார்
விடியோவை இப்போதுதான் பார்த்தேன் .
12 வது வகுப்பு மாணவியாய் இருந்தாலும்
மொழிபெயர்ப்பு சரியாகவே இருக்கிறது .
ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசுவது கேட்கும்
மாதிரி இருக்கின்றது . இதே அவர் இந்தியில்
பேசியிருந்தால் தங்கபாலு தமிழ் மாதிரி இருந்திருக்கும் .
ராஜீவ் காந்திக்கும் இதே பிரச்சினை இருந்தது .
சரியாக இந்தி வராததால் இவர்கள் இருவருமே
எடுபடாமல் இருக்கிறார்கள் என தோன்றுகிறது .