…
…
…
…
இது இப்போது தான் சுடச்சுட தமிழ் இந்து செய்தித்தளத்தில்
வெளிவந்திருக்கும் செய்தி –
——————–
கடந்த 1-ம் தேதி புதுக்கோட்டையில் திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ
பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில்
பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பேசினார்.
அப்போது, ”புதுக்கோட்டையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எப்படி பார்த்தேனோ,
அதே கட்டுடல் குறையாமலும், அழகு குறையாமலும்
அப்படியே இப்போதும் இருக்கிறார்.
எம்ஜிஆர் மாதிரி சும்மா தக தகன்னு மிண்றீங்க என்றார்….
இதை அரசியலுக்காக சொல்லவில்லை. ஆண்டவன் மீது
ஆணையிட்டுச் சொல்கிறேன். எம்ஜிஆருக்குப் பிறகு
நான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின்தான்.
(அப்போ – மோடிஜி….? )
ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று மக்கள்
கூறிக்கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் இருக்கையை
தட்டிப்பறிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால்
ஒரு இரவுக்குள் கூவத்தூருக்குச் சென்று பிடித்திருப்பார்.
ஆனால், ஆட்சி அதிகாரம் என்பது ஜனநாயகத்தின்
மூலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக
அவர் காத்திருக்கிறார்.
காலம் கனியும், காரியங்கள் நடக்கும். அதேபோல,
மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார். அதையெல்லாம்
நாங்கள் பார்த்து அகமகிழ்ச்சி கொள்வோம்” என்று
அரசகுமார் பேசினார்.
————————————-
இது பாஜகவுக்குள் சர்ச்சையை கிளப்பியது. அவர் மீது
நடவடிக்கை எடுக்க டெல்லி தலைமைக்கு
பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அறிவாலயத்தில் ஸ்டாலின்
முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டர்
அரசக்குமார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
“பாஜகவில் எனக்கு சுயமரியாதை இல்லாமல் செல்லும்
ஒரு சூழலை உருவாக்கினார்கள். திருமண நிகழ்ச்சியில்
பேசிய பின்னர் எனக்கு கடுமையான மனச்சோர்வு
ஏற்படும் வகையில் சூழ்நிலையை உருவாக்கினார்கள்.
எனக்கு ஆகாதவர்கள் எனக்கெதிராக செயல்பட்டார்கள்.
எனது வளர்ச்சியை பிடிக்காமல் தடுக்கும் நோக்கில்
செயல்பட்டார்கள். மாநில அலுவலகச் செயலாளர்
நரேந்திரன் எனக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்.
அது விளக்கம் கேட்கும் நோட்டீஸ்தானே அதை எனக்கு
அனுப்பாமல் அவர் ஏன் ஊடகங்களுக்கு கொடுக்கவேண்டும்.
அப்படியானால் இதன் நோக்கம் என்ன…
நான் பொறுப்பு எதையும் கேட்கவில்லை,
திமுக தலைவர் என்ன முடிவு செய்கிறாரோ
அதன்படி நடப்பேன்…..
————————————-
Fine… Well Mr.Arasakumar You are perfectly alright….!!!
ஆனால், நமக்கு ஒரே ஒரு சந்தேகம் –
நாளைக்கு மோடிஜியையும், அமீத்ஜீயையும் பற்றி
இவர் என்னவென்று கூறுவார்…..?
“சர்வாதிகாரி, ஹிந்தி வெறியர், மதவெறிக்கும்பலின்
தலைவர், தமிழ்நாட்டின் துரோகி” etc. etc…. ….
என்றெல்லாம் தாக்கிப் பேசுங்கள் என்று ஸ்டாலின்-ஜி
உத்திரவிட்டால் – தாக்கிப் பேசுவாரா…?
நடத்துங்கள் அரசகுமார்- ஜீ….!!!
எங்களுக்கும் கொஞ்சம் மாறுதலாக இருக்கும்… 🙂 🙂 🙂
.
—————————————————————————————————————————————————————–
இது – சிவாஜியா, அப்பரா, அல்லது காஞ்சி முனிவரா
என்று திகைக்க வைக்கிறது …!!!
இன்று பதிவாகியிருக்கும்
விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -09
…
…
.
—————————————————————————————————————————————————————–
சமீபகாலச் செய்திகள்லதான் இந்த அரசக்குமார் என்பவரைப் பற்றியே கேள்விப்படுகிறேன். இவர் பாஜக துணைத் தலைவராக இருந்து கட்சிக்குக் கிடத்திருக்கும் (தொகுதிக்கு) 1980 வாக்குகளை, 2000 வாக்குகளாக உயர்த்தியிருப்பார் போலிருக்கு. இவர் ஏதேனும் சாதித் தலைவராக இருந்தவரா இல்லை வேறு ஏதேனும் பின்னணி உண்டா?
இனி நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல பேச ஆரம்பிக்கவேண்டியதுதான். இல்லாவிட்டால் அந்தக் கூடாரத்தில் எவ்வாறு காலம் தள்ளுவது.
ஆமாம்.. அரசக்குமாருக்காக திமுகவுக்கு எத்தனைபேர் வாக்களிப்பார்கள்?
சிவாஜி மிகச் சிறந்த நடிகர். மிகத் திறமையானவர். அதில் சந்தேகமே இல்லை. அருமையான தமிழ் உச்சரிப்பும், பாட்டுக்கு ஏற்றபடி வாயசைப்பது மட்டுமல்லாமல் உணர்ச்சியையும் காட்டக்கூடியவர். தென்னிந்தியத் திரைப்பட உலகில் நடிகர்களுக்கு ‘அகராதி’யைப் போன்றவர். இந்தப் படத்தில் காஞ்சிப் பெரியவரைப் பின்பற்றி நடித்தேன் என்று சொல்லியிருக்கிறார். சிவாஜி மட்டும் தன் உடலில் (ரஜினி போன்று) கவனம் செலுத்தியிருப்பாரேயானால், தான் பெற்ற புகழை விட பல மடங்கு இன்னும் புகழ் பெற்றிருப்பார். இந்தப் படத்திலும் தன் உடலால், அந்தப் பாத்திரத்தை இன்னும் மிளிரவைக்க முடியவில்லை என்று எனக்கு அப்போதும் பட்டது, இப்போதும் அதுதான் தோன்றுகிறது.
Whenever I view this song on YouTube, my heart melts and I am moved to tears.
// நடத்துங்கள் அரசகுமார்- ஜீ….!!!
எங்களுக்கும் கொஞ்சம் மாறுதலாக இருக்கும்… //
இந்த ஆளெல்லாம் பெரிய தலைவன் மாதிரியும்,
இவரை இழப்பதெல்லாம் பாஜகவுக்கு பெரிய
நஷ்டம் மாதிரியும் நினைப்பது தவறு.
மிஞ்சிப் போனல், இவரது தம்பியும், மகனும்
மட்டும் தான் இவர் கூடப்போவார்கள்.
தன்னை எவனாவது புகழ்ந்துவிட்டால் போதும் ஸ்டாலினுக்கு.
அப்படி புகழ்பவனின் தகுதி என்ன; எதற்காக அப்படி புகழ்கிறான்
என்றெல்லாம் கொஞ்சம் கூட
யோசிக்கத் தெரியாத ஒரு “தக தக” தலைவர்.
அதிருக்கட்டும் சுப்ரமணியன். இந்த ப்ரோக்கரை எப்படி பாஜக, தன் துணைத் தலைவராக ஏற்றுக்கொண்டது? அங்கும் பதவிகள் ப்ரோக்கர் மூலம் பெற முடியுமோ? ஒருத்தருக்கு வாக்குகள் உண்டா என்பதுகூட ஒரு கட்சித் தலைவருக்கோ இல்லை கட்சி அதிகாரம் மிக்கவருக்கோ தெரியாதா? Pathetic. இல்லை, காங்கிரஸில் செய்வதுபோல, அங்கிருக்கும் நிர்வாகிகளில் ஒரு சிலருக்கு கப்பம் கட்டி, தன்னைப் பெரிய ஆளாக நிலைநிறுத்திக்கொள்ளும் உத்தி. இதைப் பற்றி நிறையச் செய்திகள் வந்திருக்கின்றன. ஒருவேளை பாஜகவிலும் அந்த நடைமுறை இருக்கோ என்னவோ.
எனக்கு இன்னொரு பார்வையும் இதில் இருக்கு. ‘தன்’ பணத்தை இந்த மாதிரி ஆட்கள் மூலம் பெருக்குவார்கள் அரசியல் தலைவர்கள். இப்படித்தான் லாட்டரிச் சீட்டு மார்ட்டின் பெரிய ஆளாக ஆனார். ஜெகத் ரட்சகனும், என் அனுமானத்தில் பெரிய குடும்பத்தின் பினாமிதான். இல்லையென்றால் அவருக்கு எங்கிருந்து 21,000 கோடிகள் கிடைத்திருக்கும்? பிரச்சனைகள் வரும்போது இவர்கள் அதனைச் சந்திக்கணும், பெரிய இடத்துத் தொடர்பை காட்டிக்கொடுக்க முடியாது. மற்றபடி அந்தப் பணத்தையும் அதிகாரத்தையும் கொஞ்சம் சுவைத்துக் கொள்ளலாம். இதுதான் மாஃபியாவின் ராஜ்ஜியம் நடத்தும் முறை. அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவரா?
இப்படி ஒவ்வொருத்தரா இழுத்து உள்ள போட்டுக்கிட்டா வெற்றி சுலபமா கிடைச்சுடும் நினைச்சுகிட்டு இருக்காரு போல ஸ்டாலின்.. இப்படி பண்ணினா கூடாரத்தில் இடமில்லாமல் மட்டும் தான் போகுமே தவிர வெற்றி கிடைக்க வாய்ப்பேயில்லை…
அப்படி இல்லை எழில். புதிதாக வந்தவர்களுக்கு மட்டும்தான் மரியாதை என்றால் (நிறைய உதாரணங்கள் இருக்கு), அங்கேயே பழம் தின்னு கொட்டை போட்ட உடன் பிறப்புகள், தேர்தலின்போது உள்குத்து வேலையில் இறங்கி தோற்கடித்துவிடுவார்கள். ஆனா ஸ்டாலின் இவரை உள்ளே சேர்த்துக்கொண்டது, ஏதேனும் சில தொகுதிகளுக்கு பணம் செலவழிப்பார் என்ற நம்பிக்கையில் என்று தோன்றுகிறது.