40,000 கோடி விவகாரம்….!!!


அப்படியானால், முன்னாள் பாஜக மந்திரி – ஒரு லூசா…?

முன்னாள் மத்திய அமைச்சரும், இன்னாள் பாஜக
எம்.பி.யுமான திருவாளர் அனந்தகுமார் ஹெக்டே
ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளவற்றின்
சாராம்சம் கீழே –

——————————————

“மஹாராஷ்டிராவில் எங்களுக்கு மெஜாரிடி இல்லை
என்று தெரியாத அளவிற்கு நாங்கள் என்ன மடையர்களா…?

எல்லாம் காரணமாகத்தான்… ஒரு காரியத்திற்காகத்தான்…
மெஜாரிடி இல்லாமலே பதவியேற்றுக் கொண்டோம்…!!!

முன்னாள் மஹாராஷ்டிரா முதலமைச்சர் ஃபட்னாவிசின்
பொறுப்பில் 40,000 கோடி ரூபாயை மத்திய அரசு விட்டு
வைத்திருந்தது…. சிவசேனா கூட்டணி அரசு பதவியேற்று
விட்டால், இந்த பணம் அவர்கள் கைகளுக்குச் சென்று
விடும்… வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு
பதிலாக, அவர்களே அதைச் சாப்பிட்டு விடுவார்கள்.

இதைத் தடுப்பதற்காகத்தான், மெஜாரிடி இல்லாவிட்டாலும்,
ஒரு நாடகத்தை அரங்கேற்றி, ஃபட்னாவிசை பதவியில்
அமர்த்தினோம். பதவியேற்ற 15 மணி நேரத்திற்குள்ளாக,
அடுத்து பதவிக்கு வருபவர்கள் இதை பயன்படுத்த
முடியாதபடி, ஃபட்னாவிஸ் இந்த பணத்தை மத்திய அரசுக்கு
திரும்ப அனுப்பி விட்டார்…!!! ”

( ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்தச் செய்தியின்
முக்கிய பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன….

“All of us know. Recently our man became Chief Minister in
Maharashtra for just 80 hours.
Why did we have to do this drama?
Did we not know that we did not have majority?
Then why did we do this drama, is a common question everyone
is asking. Funds of over ₹40,000 crore were at the discretion
of the Chief Minister. If Congress, NCP and Shiv Sena came to
power, that money would have been misused.
Definitely that money wouldn’t have gone for development,
they would have eaten it,” Mr. Hegde is seen as saying
in the video.

(- நன்றி – ஹிந்து ஆங்கில நாளேடு….)

இந்த முன்னாள் மத்திய அமைச்சரின் பேச்சு அடங்கிய
வீடியோ, செய்தித்தளங்களில் ஆதாரபூர்வமாக வெளியானதும்,
மஹாராஷ்டிராவில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
எகனாமிக் டைம்ஸ் போன்ற ஆங்கில நாளிதழ்கள்
வீடியோ வெளியிடும்போது நம்பாமல் இருக்க முடியுமா…?

ஆனால், முன்னாள் முதலமைச்சரும் இந்த செய்தியில்
சம்பந்தப்பட்டவருமான ஃபட்னாவிஸ் –

” இந்த செய்தி அப்பட்டமான பொய்; முதலமைச்சரின்
பொறுப்பில் இந்த மாதிரி பணம் எதுவும் இருந்ததில்லை;
நான் எதையும் மத்திய அரசுக்கு திரும்ப அனுப்பவும் இல்லை –
என்று மறுத்திருக்கிறார்….!!!

————————————–

திருவாளர் ஃபட்னாவிஸ் சொல்வது உண்மையாக இருக்கும்
என்று நாமும் நம்புகிறோம்….

இருந்தாலும் –

“நெருப்பில்லாமல் புகையுமா….?”

என்று ஒரு கேள்வியையும்,

“இந்த மாதிரி லூசெல்லாமா மத்திய அரசில் அமைச்சராக
இருந்திருக்கிறார்கள், இப்போதும் பாஜகவில்
எம்.பி.யாக இருக்கிறார்கள்…?” –

– என்கிற துணைக்கேள்விகளையும் மஹாராஷ்டிராவில்
பல எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன…!!!

அந்த மாதிரி எல்லாம் எதுவும் முறைகேடாக
நடந்து விடவில்லை, அந்த மத்திய(முன்னாள்)மந்திரி
சொன்னது உளறல் தான் என்பதை வெளிப்படையாகவும்,
உறுதியாகவும் மக்களுக்கு புரியவைக்க
ஒரே வழி –

இந்த முன்னாள் மந்திரியை உடனடியாக
நல்ல மன நோய் மருத்துவ மனைக்கு ( மெண்டல்
ஹாஸ்பிடலுக்கு ) அனுப்பி முழுமையான
பரிசோதனையைச் செய்து பார்க்க வேண்டியது தான்…

மனநோய் மருத்துவமனை … இந்த ஆள் சித்தக்கோளாறு
உள்ளவர் தான் என்று ஒரு சர்டிபிகேட் கொடுத்து விட்டால்,
அவர் சொன்னது உளறல் தான் என்பதை
பாஜகவினர் சுலபமாக நிரூபித்து விடலாம்… 🙂 🙂 🙂

இன்னொரு சுலபமான வழி, பிராக்யா சாத்வியை
சஸ்பெண்ட் செய்தமாதிரி இவரையும் தற்காலிகமாக
சஸ்பெண்ட் செய்து விடலாம்….

இன்னும் 6 மாதத்திற்கு – இவர் சாப்பிடுவதைத்தவிர
வேறு எதற்கும் வாயே திறக்கக்கூடாது என்று உத்திரவும்
போட்டு விடலாம்….. 🙂 🙂

வர வர – நாடு இருக்கும் நிலையில்…
எதை காமெடி என்றும் எதை சீரியஸ் என்றும்
எடுத்துக் கொள்வது என்றே புரிவதில்லை….!!!

.
—————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to 40,000 கோடி விவகாரம்….!!!

 1. Raja சொல்கிறார்:

  // இவர் சாப்பிடுவதைத்தவிர
  வேறு எதற்கும் வாயே திறக்கக்கூடாது என்று உத்திரவும்
  போட்டு விடலாம்….. 🙂 🙂 🙂 //

  That will be a good idea for many of the present day politicians.

 2. raj சொல்கிறார்:

  He is always like this – just google him you will find many such statements by him just for பநஂதா

 3. புதியவன் சொல்கிறார்:

  இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? முதலமைச்சர், தன் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பு இப்படி எல்லாம் பணத்தை டிரான்ச்ஃபர் பண்ண முடியுமா?

  இந்த மாதிரி ஒருவர் உளறுகிறார் என்பதற்காக நாம் ஏன் கவலைப்படணும்? மழைவிட்ட பிறகு தூவானம் மாதிரித்தான் ஈழப்பகுதியில் லட்சக்கணக்கானவர் கொல்லப்பட்டனர் என்று சொன்னவருக்கே மெரீனாவில் படுக்கை கொடுத்து தினசரி பேப்பர் படிக்கச் சொன்னவர்கள் நாம். தமிழகத்தில் 234 சட்டமன்றங்கள் இருக்கின்றன, ஆக, ஆக என்று சொல்பவரே நமக்கு எதிர்கட்சித் தலைவர், அவரும் தான் முதலமைச்சராக இதோ ஆகிவிடுவோம் என்று சொல்கிறார், அதனை வாய் பிளந்து நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

  அரசியல்வாதிகளில் 80% முட்டாள்கள். மீதி, தாங்கள் அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள். எங்கேயாவது படித்தவர்கள் அரசியலுக்கு வந்து பார்த்திருக்கிறீர்களா?

 4. Prabhu Ram சொல்கிறார்:

  வித்தியாசமான கட்சி – வித்தியாசமான தலைவர்கள் 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.