ட்ரோன்’களின் கண்காட்சி – இந்தியாவுக்கு ட்ரோன்கள் வராதது …?


கீழே இரண்டு காணொளிகள்…
முதலாவது துபாயில் நடந்த ட்ரோன் கண்காட்சி
குறித்தது….

2-வது கையடக்கமான ஒரு லேடஸ்ட் ட்ரோன்
இயங்கும் விதம் குறித்தது….

வெளிநாடுகளில் இவை சர்வசகஜமாக
பயன்படுத்தப்படும்போது, இந்தியா இன்னும்
இவற்றை அனுமதிப்பதில் தயக்கம் காட்டுவது சரியா…?

தவறான முறையில் பயன்படுத்தப்படாமலிருக்க
உரிய முறையில் அவற்றின் இயக்கத்தை, பயன்பாட்டை –
சரியான சட்டவிதிகளின் மூலம் உறுதி செய்துகொண்டு
ட்ரோன்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்திய அரசு
அனுமதிக்கலாம் என்று தோன்றுகிறது.

விஞஞான வளர்ச்சிகளைக் கண்டு நாம் மிரண்டு போகாமல்,
நமக்கேற்ற முறையில் அவற்றை பயன்படுத்திக் கொள்வது
தானே புத்திசாலித்தனம்….?

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ட்ரோன்’களின் கண்காட்சி – இந்தியாவுக்கு ட்ரோன்கள் வராதது …?

 1. புதியவன் சொல்கிறார்:

  //வெளிநாடுகளில் இவை சர்வசகஜமாக பயன்படுத்தப்படும்போது, இந்தியா இன்னும் இவற்றை அனுமதிப்பதில் தயக்கம் காட்டுவது சரியா…?// – துபாய் இந்த விஞ்ஞான விஷயங்களில் முயற்சி செய்து ‘முதன் முதலாக’ என்ற அடைமொழியைப் பெற முயல்கிறது. அங்கு உள்ள சட்டங்களை நிறைவேற்றும் அமைப்புகளும், பெரிய அளவு சட்டத்தை மதிக்கும் போக்கும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற போக்கும், சட்டத்தை மீறினால், அது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களானாலும் அவர்கள் மீதும் சட்டம் பாயும் என்ற நிலையும், இந்தியாவில் கனவில்கூட நினைக்க முடியாது. இந்திய அரசு ட்ரோன்களை அனுமதிக்க தயக்கம் காட்டுவது மிகவும் சரியான செயல்தான். ட்ரோன்கள் இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு முன் (இப்போதும் சிலவற்றில் டிரோன்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன..உதாரணம் காட்டில் விலங்குகளைப் பற்றிய தகவல் அறிய அல்லது படமெடுக்க) மிகவும் யோசனை செய்யவேண்டும்.

  //சரியான சட்டவிதிகளின் மூலம் உறுதி செய்துகொண்டு// – இந்தியாவில் இல்லாத சட்டங்களே கிடையாது. அதை யாரும் மதித்ததும் கிடையாது. ஒரு தடவை ரோட்டில் வாகனங்களை எவ்வாறு மக்கள் ஓட்டுகிறார்கள், சட்டத்தை எப்படி மதிக்கிறார்கள் என்று பார்த்தாலே இது புரிந்துவிடும். அரசு அலுவலகங்களில், லஞ்சத்தைக் குறைக்க, இந்த விஷயம் இத்தனை நாட்களுக்குள் முடியவேண்டும் என்ற சட்டம் இருந்தால், அந்த ரிக்வெஸ்டை பதிவு செய்யாமலேயே இருந்துவிடுவார்கள். லஞ்சம் படிந்து, எல்லாம் சரியாக இருந்தால்தான் பதியவே செய்வார்கள். இதுபோன்றே FIR விஷயத்திலும், solve செய்யப்படாத குற்றங்கள் அதிகமாகக்கூடாது என்பதற்காக பதியவே மாட்டார்கள். ஏன்.. மாஞ்சா கயிறினால் குழந்தைகள் இறப்பதைக்கூட நம்மால் தவிர்க்கமுடியவில்லை, இத்தனைக்கும் மாஞ்சா கயிறு செய்வது சட்டப்படியான குற்றம்.

  நான் ஒரு தடவை இந்தோநேஷியாவில் ஒரு ரிசார்டில் தங்கியிருந்தபோது, காலை 4 1/2 மணிக்கு, விர்ர்ர்ர் என்ற சப்தத்துடன் ட்ரோனில் கேமராக்கள் வைத்து அது ரிசார்ட்டைச் சுத்தி வந்தது. அப்போது ட்ரோன் என்பது எனக்குத் தெரியாது. ஏதேனும் தாக்குதல் நடக்கப்போகிறதோ என்று அஞ்சினேன், மறைந்திருந்து கேமராவில் படங்களும் காணொளியும் எடுத்தேன். பிறகு காலை உணவுக்குச் செல்லும்போது, அவர்களிடம் கேட்டபோது, என்னை முகப்புக்குக் கூட்டிச் சென்று ட்ரோன், ரிசார்ட் விளம்பரத்துக்காக காணொளி எடுப்பதற்காக உபயோகித்ததையும், சிறிது இயக்கியும் காண்பித்தார்கள். நம்ம ஊரில் சிறிய அளவில், திருமண விழாக்களைப் படம் பிடிக்கவும் ட்ரோன்களில் கேமரா வைத்து உபயோகிப்பதைப் பற்றிப் படித்திருக்கிறேன். பொருட்களை டெலிவரி செய்யும் விதத்தில் ட்ரோன்களை உபயோகிக்க முயல்கிறார்கள். (பல நாடுகளில்)

  கல்ஃப் தேசங்களில் ஒன்றான பஹ்ரைனில் (மற்றும் சவுதியும்) குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய ஹெலிகாப்டர் சாதனங்களை வெளி நாடுகளில் இருந்து கொண்டுவர அனுமதிக்க மாட்டார்கள். நான் ஒரு முறை துபாயிலிருந்து கொண்டு சென்றபோது, அதை அனுமதிக்காமல், செக் செய்து பிறகு கூப்பிடுகிறோம் என்று சொல்லி வாங்கி வைத்துக்கொண்டு, அக்கு வேறு ஆணிவேறாகக் கழற்றி பிறகு என்னிடம் கொடுத்தார்கள். இதுக்கே இவ்வளவு கட்டுப்பாடு என்றால், ட்ரோன்களிடம் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும், அதில் உள்ள செக்யூரிட்டி ரிஸ்க், அதை எப்படி கட்டுப்படுத்துவது, எதிர்கொள்வது என்பதெல்லாம் ஆராயணும்.

 2. Raja சொல்கிறார்:

  //இந்தியாவில் இல்லாத சட்டங்களே கிடையாது.
  அதை யாரும் மதித்ததும் கிடையாது. //

  மக்கள் கண்களை மூடிக்கொண்டு, மதவாத அரசியலை
  ஆதரித்தால், மதவெறி கொண்ட கட்சிகளை
  பதவிக்கு கொண்டு வந்தால் நாடு இப்படித்தான் இருக்கும்.

  • bandhu சொல்கிறார்:

   புதியவன் என்ன சொன்னாலும் பாஜாகா வை வைத்து குத்துவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை! என்னமோ எப்போதுமே எல்லோரும் சட்டத்தை மதித்து செயல் பட்ட மாதிரியும் கடந்த ஆறு வருடங்களாகத்தான் நிலைமை மோசம் என்பது போலவும் சொல்வது சரியா?

 3. Raja சொல்கிறார்:

  bandhu
  பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்,
  கும்பல் படுகொலைகளும்,(lynching)
  ஜாதி, மத பின்னணியில்
  வன்முறை சம்பவங்களும்
  வட மாநிலங்களில் அதிகரித்ததா
  இல்லையா என்று உங்கள் மனசாட்சியை
  தொட்டு பதில் சொல்ல முடியுமா ?

  • புதியவன் சொல்கிறார்:

   Raja….
   பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்த இஸ்லாமியத் தீவிரவாதமும், தீவிரவாத இயக்கங்களும், பயங்கரவாதிகளும், இஸ்லாமிய வன்முறைச் சம்பவங்களும் இந்தியாவில் அனேகமாக இல்லாத நிலைக்கு வந்திருக்கிறதா இல்லையா என்று உங்கள் மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்வீர்களா? எந்த பயங்கரவாத நிகழ்ச்சியிலாவது எத்தனை பேர் மடிந்திருக்கிறார்கள் என்று ஆதார பூர்வமாக 2000லிருந்து (காங்கிரஸ்/திமுக ஆட்சி, பாஜக ஆட்சி) பிரித்து சம்பவங்கள், இறந்தவர்கள் என்று ஆதாரபூர்வமாக எழுதிப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். இங்கேயும் பகிர்ந்துகொள்ளலாம்.

 4. Raja சொல்கிறார்:

  புதியவன் ; ஆக பாஜக ஆட்சிக்கு வந்தவுடன்
  இஸ்லாமியத்தீவிரவாதம் போய் விட்டது;
  அதற்கான விலைதான் , கும்பல் படுகொலைகளும்,(lynching)
  ஜாதி, மத பின்னணியில் வன்முறை சம்பவங்களும் –
  என்று சொல்ல வருகிறீர்கள் ; சரி தானே ?

  • புதியவன் சொல்கிறார்:

   நான் சில அதீத இந்துத்துவா பேச்சுக்களை வெறுக்கிறேன். அத்தகைய அரசியல்வாதிகள் சமூக விரோதிகள். காதலர் தினத்தை எதிர்க்கும் ‘இந்துத் தீவிரவாதிகளையும்தான் (கர்னாடகாவில் இது அதிகம்)… திடீர் பசுக் காவலர்களையும்தான். சக மனிதர்களிடம் அன்பு காட்ட முடியாத, அதிலும் ஏதிலிகளிடம் அன்பு காட்ட முடியாமல், பசுவிடம், வீட்டில் நாய், பூனைகளிடம் அன்பு காட்டுகிறேன் என்று சொல்கிற போலிகளையும் நான் வெறுக்கிறேன்.

   இஸ்லாமியத் தீவிரவாதம் போய்விட்டது என்று கருதவில்லை. தீவிரவாதிகள், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தன்மை இன்னும் இருக்கிறது. ஆனால் அது ஓரளவு அடங்கிக்கிடக்கிறது.

   ஜாதிச் சண்டை எல்லா மதங்களிலும் இருக்கிறது. அதனை நீங்களே அறிவீர்கள். இல்லை என்று என்னிடம் சொல்ல வேண்டாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.