ஸ்டாலின் அவர்களின் புலம்பல் ஆட்டம்….!!!


புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதை முக்கியமான
சாக்காக வைத்து –

திமுக, வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டில்
பஞ்சாயத்து தேர்தல்களை நிறுத்தி வைக்கும் விதமாக
மனு கொடுத்துள்ளது…

ஆனால், திரு.ஸ்டாலின் அதற்கு கொடுக்கும் விளக்கம்
தான் விசித்திரமாக இருக்கிறது….

————————————–

தினமணி வலைத்தளத்திலிருந்து
திரு.ஸ்டாலின் கூறிய செய்தி கீழே –

——————

யாராவது நீதிமன்றத்திற்கு சென்று தேர்தல் நடத்த
தடை பெறுவார்களா என்ற நோக்கத்தோடு
செயல்படும் அதிமுக: ஸ்டாலின் குற்றச்சாட்டு

By DIN | Published on : 29th November 2019 07:07 PM

—————-

சென்னை: யாராவது நீதிமன்றத்திற்கு சென்று
உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை பெறுவார்களா
என்ற நோக்கத்தோடு அதிமுக செயல்பட்டு வருகிறது
என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற
எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ,
வெள்ளியன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்
செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் பேசியதன்
விவரம் பின்வருமாறு:

உள்ளாட்சி மன்றத் தேர்தலை அ.தி.மு.க. ஆட்சி
தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடத்தாமல், ‘ஏதாவது சில
காரணங்களைச் சொல்லி யாராவது நீதிமன்றத்திற்கு
சென்று தடை பெறுவார்களா? – தடை பெற்று அதை
எப்படியாவது நிறுத்திவிடவேண்டும்’, என்கிற ஒரே
நோக்கத்தோடு அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், தேர்தலை நிறுத்துவதற்கான எல்லா சதித்
திட்டங்களையும் தீட்டி, அதற்கான வழிவகைகளை
வகுத்துவிட்டு, ஏதோ தி.மு.க.,தான் நீதிமன்றத்திற்கு
சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தும் முயற்சியில்
ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று திட்டமிட்டு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்,
கடைசியில் இருக்கும் கடைக்குட்டி அமைச்சர் வரை
தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்.

——————————————————

ஸ்டாலின் பேசுவது மகா அபத்தமாக இருக்கிறது.
திமுக நீதிமன்றத்திற்கு போய் தடைபெற வேண்டும்
என்றே அதிமுக திட்டம் போட்டு செயல்படுகிறது
என்று இவர் சொல்கிறார்….

அது சரியென்றே வைத்துக்கொள்வோம்…
ஆனால், அதைத் தெரிந்திருக்கும் இவர் ஏன் அதிமுகவின்
ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும்…?

நீதிமன்றத்திற்கு சென்றால் தேர்தல்கள்
ஒத்திவைக்கப்படும் என்றும் –
அதைத்தான் அதிமுக விரும்புகிறது என்று தெரிந்தும் –
இவர் ஏன் அதையே செய்ய வேண்டும்…?

உண்மையில் –
அண்மைய சட்டமன்ற தேர்தல்கள் இரண்டிலும்
திமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததால் –
இப்போதைக்கு தேர்தலைச் சந்திக்கும் துணிச்சல்
திமுகவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது….
சட்டமன்ற தேர்தல் வரை வேறு எந்த தேர்தலையும்
சந்திக்கும் துணிவையும், தன்னம்பிக்கையையும் –
திமுக இழந்து விட்டது வெளிப்படையாகவே தெரிகிறது.

அதிமுகவின் நோக்கமும் தற்போதைக்கு
தேர்தல்கள் வேண்டாம் என்பது தான் என்றாலும் கூட,

நீதிமன்ற வற்புறுத்தலின் காரணமாக,
பஞ்சாயத்து தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம்
ஏற்படுமேயானால் என்ன செய்வது என்று –

ஆட்சியில் இருக்கும் வசதியை பயன்படுத்திக்கொண்டு,
கூடுமான வரையில் தங்களுக்கு சாதகமான பின்னணியை
உருவாக்கிக் கொண்டு விட்டது.

அதே சமயம், படுபுத்திசாலித்தனமாக – தேர்தல்கள்
நடத்த முடியாமல் போனால் – அதற்கு காரணம்
தாங்கள் அல்ல – திமுக தான் என்கிற தோற்றத்தையும்
ஏற்படுத்த விரும்புகிறது.

தங்கள் விருப்பத்தை திமுகவைக் கொண்டே
நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.

அதற்காகவே, திமுகவை சீண்டும் செயல்களைச்
செய்கிறார்கள்.

ஆனால், அதிமுக எதிர்பார்ப்பதையே ஸ்டாலினும்
செய்வது தான் அபத்தம். அதைச் செய்துவிட்டு,
அதற்குக் காரணம் அதிமுக தான் என்று சொல்வது
அதைவிட அபத்தம்….!!!

கலைஞர் இருந்திருந்தால் – இப்படியா
அசட்டுத்தனமாக நடந்துகொண்டிருப்பார்…?

வெற்றிடம் இல்லை என்று திரும்பத் திரும்ப வாய் கிழியச்
சொல்லிக் கொள்ளலாம்…

ஆனால், கலைஞரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் –
திமுகவில் பளிச்சென்று தெரியவே செய்கிறது…..
திருவாளர் ஸ்டாலின் அவர்களே, தன் அபத்தமான,
அசட்டுத்தனமான செயல்களின் மூலம் அதை வெளிச்சம்
போட்டுக் காட்டுகிறார்.

என்ன இருந்தாலும் கலைஞர் கலைஞர் தான்….!!!

.
————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஸ்டாலின் அவர்களின் புலம்பல் ஆட்டம்….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    திமுக எப்போதும் எதிர்மறையான செயல்கள், எதிர்மறையான சிந்தனைகள் கொண்ட குடும்பக் கட்சி. அதற்கும் தமிழக நலனுக்கும் எப்போதும் சம்பந்தம் இருந்ததில்லை.

    ஏற்கனவே இடைத்தேர்தலில் சொந்தத் தொகுதிகளை இழந்த வருத்தம், இலவு காத்த கிளியாக இத்தனை காலம் காத்திருக்கவேண்டியிருக்கிறதே என்ற ஏக்கம், ஆளும் கட்சியாக அதிமுக இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான அறுவடை நடத்தினால், காங்கிரஸ் மற்றும் துணைக் கட்சிகள் தன்னிடம் நிறைய டிமாண்ட் வைக்குமே, பலவீனமாக சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க நேரிடுமே, அப்படி ஒரு நிலை வரும்போது வாக்களிக்க மனதில் நினைத்திருப்பவர்களும் வாக்களிக்க யோசிப்பார்களே என்பதனால்தான், தன் அல்லக்கைகளை வைத்துக்கொண்டு வழக்கு தொடுத்திருக்கிறார். அதற்கான சப்பைக்கட்டு தான் அவர் வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டு. பாவம் ஸ்டாலின்….. பெரிய ஆலமரத்தின் நிழலில் எதுவும் வளராது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அவர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.