…
…

இந்த மூஞ்சியை பார்த்தாலே – இது போட்டுக்கொண்டிருக்கும் “அணிகலன்களை” பார்த்தாலே தெரியவில்லையா இது ஒரு பக்கா ஃப்ராடு என்று…? இந்த “ஞாநி”யை புரிந்து கொள்ள – நமக்குத் தான் ஞானம் போதவில்லை -என்று சொல்கிறார் பாண்டே…!!!
…
கீழே ஒரு காணொளி …
திரு.ரங்கராஜ் பாண்டே, தனக்கு நன்கு அறிமுகமான
ஒரு அயோக்கிய சிகாமணியைப் பற்றியதான தனது
கருத்துகளை/மதிப்பீடுகளை வெளியிட்டுள்ள காணொளி –
” என்னைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால்,
பாண்டேயை கேட்டுப்பாருங்கள் ” – என்று நித்யானந்தா
சொன்னதாக பெருமையுடன் ( ??? ) சொல்லிக்கொண்டே
பேட்டியைத் துவங்குகிறார் பாண்டே….
“பாண்டே உண்மையே பேசக்கூடியர்…
நியாயம் சொல்லக்கூடியவர்….” என்று மக்கள் என்னை
நம்புகிறார்கள் – என்று பீடிகை போட்டு
காணொளியைத் துவங்குகிறார்….
முழு காணொளியையும் பார்த்த பிறகு, ரங்கராஜ் பாண்டே
உண்மையே பேசுபவராகவோ,
நியாயம் சொல்லக்கூடியவராகவோ – தோன்றவில்லை.
நித்தியானந்தாவைப் பற்றிய தன் கருத்துகளை அவர் இதில்
நேர்மையாக வெளியிட்டிருக்கிறார் என்கிற எண்ணமும்
தோன்றவில்லை.
மாறாக, போலிச்சாமியாரின் மீது எழுந்துள்ள கிரிமினல்
புகார்களை பூசி மெழுகி மறைத்து, அவரை ஒரு உயர்ந்த
ஸ்தானத்தில் கொண்டுபோய் நிறுத்தும் முயற்சியில்
பாண்டே ஈடுபட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
அதாவது நித்தியானந்தா மீதான கிரிமினல் புகார்கள்
வெளிவந்திருக்கும் நிலையில், தனது செய்தித் தளங்களை
வைத்துக்கொண்டு – அவருக்கு உதவியாக, அவரது
பெர்சனாலிடியை உயர்த்த, damage control செய்யும்
முயற்சியில் பாண்டே இறங்கி இருக்கிறார்
என்பது புலப்படுகிறது…
உண்மையிலேயே நேர்மையான செய்தியாளராக இருந்தால்,
பாண்டே பல கேள்விகளை எழுப்பி இருக்க வேண்டும்…..
எப்படி…?
1) நித்யானந்தா
ஏன் திருட்டுத்தனமாக வெளிநாடு சென்றார்…?
எந்த நாட்டிற்கு சென்றார்.. ?
இப்போது எங்கே இருக்கிறார் ..?
– இதை எல்லாம் ஏன் இன்னமும் ரகசியமாக
வைத்திருக்கிறார்…?
2) ஆசிரமத்தில் படிக்க வந்த சிறுபெண்களை, அவர்களின்
பெற்றோர்கள் அனுமதியின்றி – தன்னுடன் எப்படி, ஏன்
அழைத்துச் சென்றார்…?
3) தன் மீது ஆள் கடத்தல் கிரிமினல் புகார்கள் வெளிவந்த
உடனேயே – அவர் பொதுவெளியில் தோன்றி, முழு
விவரங்களையும் வெளியிட்டிருக்க வேண்டுமே –
ஏன் செய்யவில்லை…?
4) உடனடியாக, காவல் துறை, உயர் அதிகாரியின்
தலைமையில்குழுக்களை அமைத்து, இந்த ஆசிரமங்களுக்குச்
சென்று உரியமுறையில் விசாரித்து, சட்டவிரோதமாக
அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்க வேண்டும்…
5) பத்திரிகையாளர்கள் ஒரு குழு அமைத்து,
நித்யானந்தாவின் ஐந்து ஆசிரமங்களுக்கும் சென்று,
அங்கிருக்கும் மைனர் பெண்கள் மற்றும்
பையன்கள் மற்றும் ஆசிரமவாசிகளுடன் பேசி,
ஆசிரமத்தில் என்ன நடக்கிறது,
எப்படி நடக்கிறது போன்ற விவரங்களை அறிந்து
உண்மைகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும்…
6) நித்தியானந்தா 5 இடங்களில் இவ்வளவு வசதிகளுடன்
பெரிய அளவில் ஆசிரமங்கள் அமைக்க அவருக்கு பணம்
எப்படி கிடைத்தது…? எங்கிருந்து வருகிறது…?
7) எந்த அரசியல்வாதி –
அல்லது எந்த தொழிலதிபர்,
அல்லது எந்த அமைச்சர்,
அல்லது எந்த கட்சியின் –
உதவியுடன் நித்தியானந்தா இத்தனை சட்டவிரோதமான
செயல்களிலும் ஈடுபடுகிறார்…?
8) அவருக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகளுக்கான
உரிய அனுமதி மத்திய நிதியமைச்சகத்திடமிருந்து
பெறப்பட்டிருக்கிறதா…?
9) அவருக்கு வரும் “வரும்படிகளை”
எல்லாம் வருமான வரி இலாகாவிற்கு
உரிய முறையில் தெரிவித்திருக்கிறாரா…?
ஆண்டுதோறும் வருமான வரி அறிக்கையில்
தெரிவிக்கிறாரா…?
வருமான வரி இலாகாவிற்கு அவர் மீது எந்தவித
சந்தேகமும் இல்லையா…? அவ்வளவு சுத்தமாக அவரது
நடவடிக்கைகள் இருக்கின்றனவா…?
10) கடந்த சுமார் 15 வருடங்களாக அவர் மீது –
கற்பழிப்பு, ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகள் உட்பட ஏகப்பட்ட
கிரிமினல் புகார்கள் கூறப்பட்டுள்ளன… பல வழக்குகள்
நிலுவையில் உள்ளன… ஏன் எந்த விஷயத்திலும் இதுவரை
எத்தகைய முன்னேற்றமும் இல்லை…?
சமுதாயப் பொறுப்புள்ள – ஒரு நடுநிலைச் செய்தியாளராக
திருவாளர் ரங்கராஜ் பாண்டே இந்த மாதிரி கேள்விகளை
எல்லாம் எழுப்புவாரென்று நினைத்தால் –
“நித்யானந்தாவிடம் ஏதோ ஒரு
விசேஷ சக்தி இருக்கிறது.
அவர் தொட்டாலே பல வியாதிகள்
குணமாகி விடுகின்றன
என்று மக்கள் நம்புகிறார்கள்….
அவர் ஈகுவேடார் அருகே
தனியாக ஒரு தீவையே விலைக்கு வாங்கி,
அங்கே ஒரு “இந்து நாட்டை” உருவாக்கும்
முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்”
– என்றெல்லாம் பாண்டே
நித்யானந்தா பஜனை பாடுவது சரியா…?
நித்தியானந்தாவை ஒரு ஞாநி என்று தெரிந்துகொள்ளவே
நமக்கு ஞானம் வேண்டுமாம்…!!!
மகா கனம் பொருந்திய நித்தியானந்தா அவர்களே
பெரிய மனது வைத்து –
ஒரு விளக்கம் கொடுத்து விட்டால் இந்த சர்ச்சைகள்
எல்லாம் ஒரு முடிவிற்கு வந்து விடுமாம்….!!!
திருவாளர் பாண்டேயின் பேட்டி –
-புல்லரிக்க வக்கிறது…
-பல்லிளிக்கிறது….
இதை நிச்சயம் நாம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை…
நித்யானந்தா மட்டுமல்ல – அவரைப்போன்ற இன்னும்
சில “போலி”களும் மதப்போர்வையில்
ஒளிந்து கொண்டு “ஹிந்து” மதத்தையே அசிங்கம் செய்து
கொண்டிருக்கிறார்கள்.
இந்து மத உணர்வாளர்கள் இத்தகைய களைகளை
– “காலி”களை – முனைந்து அப்புறப்படுத்த வேண்டியது
அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.
…
இது திருவாளர் பாண்டே காணொளி –
….
நேரமிருந்தால் இதையும் பாருங்கள் –
இந்த ஆசாமி சொல்வதையெல்லாம் நான்
அப்படியே நம்பவில்லை; 3 வருடங்கள்
அந்த போலியுடன் கூடவே இருந்து அத்தனை
ஃப்ராடுகளிலும் பங்கேற்ற ஆசாமி தான் இவர் –
….
இது நியூஸ் -18 செய்தி –
………..
………———————————..
பின் சேர்க்கை – தற்காலிகமாக மேற்கண்ட யூ ட்யூப் தளங்களை
அணுக முடியவில்லை. என்ன காரணம் என்று கண்டுபிடிக்க
முனைந்தபோது, எனக்கு பின் வரும் தகவல் சொல்லப்பட்டது….
—————–
This may happen when an attacker is
trying to pretend to be http://www.youtube.com,
You cannot visit http://www.youtube.com right now
because the website uses HSTS.
Network errors and attacks are usually
temporary, so this page will probably work later.
-அதாவது தற்காலிகமாக மேற்படி தளங்களை
நாம் பார்க்க முடியாதபடி தடைகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளது… (யாரால்…?? 🙂 🙂 🙂 )
கொஞ்ச நேரத்தில் இந்த நிலை சீர்படுத்தப்படும்
என்று security தகவல்கள் கூறுகின்றன.
எனவே, நண்பர்கள் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும்
மேற்கண்ட யூ ட்யூப் தளங்களை முயற்சி செய்தால்
பார்க்க முடியுமென்று நம்புகிறேன்..
-நன்றி,
காவிரிமைந்தன்
—————————————————————————————————————————————————————–
Suspence
C,venkatasubramanian ,
காரணத்தை மேலே பின்-சேர்க்கையில் விவரித்திருக்கிறேன்.
நம்மை பார்க்க விடாமல் ஏதோ ஒரு சக்தி ( 🙂 🙂 ) தடுக்கிறது.
கொஞ்ச நேரம் கழித்து முயற்சி செய்து பாருங்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கீழே இருப்பவை தான் மேற்கூறிய
இரண்டு காணொளிகளுக்குமான links –
நண்பர்கள் தனியே யூட்யூப் தளத்தில்
முயற்சி செய்து பாருங்கள்… ஒருவேளை
கிடைத்தாலும் கிடைக்கலாம்.
இது திருவாளர் பாண்டே காணொளி –
youtu.be/9dmABgTAcHs
———————–
இது நியூஸ் -18 செய்தி –
youtu.be/PP9F30LJVCU
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நித்யானந்தா மட்டுமல்ல – அவரைப்போன்ற இன்னும்
சில “போலி”களும் .. என்று கா மை சார் சொல்கிறார் .
ரங்கராஜ் பாண்டே ஒரு லிஸ்டே கொடுக்கிறார் .
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் , சத்குரு , ஓஷோ , சாய்பாபா .
கடைசி இரண்டு பெரும் இப்போது உயிருடன் இல்லை .
ஆசிரமத்தில் அடிப்பார்கள் , தனிமைச்சிறை உண்டு .
புகார் கொடுத்தவர்கள் காணாமல் போகிறார்கள் .
நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது தெரியாது .
இதையெல்லாம் புரிஞ்சு கொள்ள “ஞானம் ” தேவை .
இதையும் தாண்டி மகா ஸ்வாமிகள் வெளியே ,
வெளிப்படையாக வருவார் என்று பாண்டே சொல்கிறார் .
அதானே – கல்லா கட்டும் உரிமை எல்லோருக்கும் உண்டு !
ரங்கராஜ் பாண்டே தன் வீடியோவில் எந்த இடத்திலும் நித்தியானந்தாவின் செயல்பாடுகளை நியாயப் படுத்த வில்லை. அவர் கூறியிருப்பது நித்தியானந்தாவும் அவரை சார்ந்தவர்களும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றே சொல்லுகிறார். பாண்டே லுக்கு அவருடைய கருத்தை வெளியிட உரிமை இருக்கிறது. இதில் தவறு? நித்தியானந்தா மீது கூறப்பட்டுள்ள புகார்களை தீர விசாரிக்க கூடாது என்று எங்குமே சொல்ல வில்லையே?
மோகன்,
பாண்டேயிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன ?
மேலே கே.எம்.சார் எழுதியிருப்பதை இன்னுமொரு
தடவை பாருங்கள்.
// மாறாக, போலிச்சாமியாரின் மீது எழுந்துள்ள கிரிமினல்
புகார்களை பூசி மெழுகி மறைத்து, அவரை ஒரு உயர்ந்த
ஸ்தானத்தில் கொண்டுபோய் நிறுத்தும் முயற்சியில்
பாண்டே ஈடுபட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
அதாவது நித்தியானந்தா மீதான கிரிமினல் புகார்கள்
வெளிவந்திருக்கும் நிலையில், தனது செய்தித் தளங்களை
வைத்துக்கொண்டு – அவருக்கு உதவியாக, அவரது
பெர்சனாலிடியை உயர்த்த, damage control செய்யும்
முயற்சியில் பாண்டே இறங்கி இருக்கிறார்
என்பது புலப்படுகிறது…
உண்மையிலேயே நேர்மையான செய்தியாளராக இருந்தால்,
பாண்டே பல கேள்விகளை எழுப்பி இருக்க வேண்டும்…..
எப்படி…?
1) நித்யானந்தா
ஏன் திருட்டுத்தனமாக வெளிநாடு சென்றார்…?
எந்த நாட்டிற்கு சென்றார்.. ?
இப்போது எங்கே இருக்கிறார் ..?
– இதை எல்லாம் ஏன் இன்னமும் ரகசியமாக
வைத்திருக்கிறார்…?
2) ஆசிரமத்தில் படிக்க வந்த சிறுபெண்களை, அவர்களின்
பெற்றோர்கள் அனுமதியின்றி – தன்னுடன் எப்படி, ஏன்
அழைத்துச் சென்றார்…?
3) தன் மீது ஆள் கடத்தல் கிரிமினல் புகார்கள் வெளிவந்த
உடனேயே – அவர் பொதுவெளியில் தோன்றி, முழு
விவரங்களையும் வெளியிட்டிருக்க வேண்டுமே –
ஏன் செய்யவில்லை…?
4) உடனடியாக, காவல் துறை, உயர் அதிகாரியின்
தலைமையில்குழுக்களை அமைத்து, இந்த ஆசிரமங்களுக்குச்
சென்று உரியமுறையில் விசாரித்து, சட்டவிரோதமாக
அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்க வேண்டும்…
5) பத்திரிகையாளர்கள் ஒரு குழு அமைத்து,
நித்யானந்தாவின் ஐந்து ஆசிரமங்களுக்கும் சென்று,
அங்கிருக்கும் மைனர் பெண்கள் மற்றும்
பையன்கள் மற்றும் ஆசிரமவாசிகளுடன் பேசி,
ஆசிரமத்தில் என்ன நடக்கிறது,
எப்படி நடக்கிறது போன்ற விவரங்களை அறிந்து
உண்மைகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும்…
6) நித்தியானந்தா 5 இடங்களில் இவ்வளவு வசதிகளுடன்
பெரிய அளவில் ஆசிரமங்கள் அமைக்க அவருக்கு பணம்
எப்படி கிடைத்தது…? எங்கிருந்து வருகிறது…?
7) எந்த அரசியல்வாதி –
அல்லது எந்த தொழிலதிபர்,
அல்லது எந்த அமைச்சர்,
அல்லது எந்த கட்சியின் –
உதவியுடன் நித்தியானந்தா இத்தனை சட்டவிரோதமான
செயல்களிலும் ஈடுபடுகிறார்…?
8) அவருக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகளுக்கான
உரிய அனுமதி மத்திய நிதியமைச்சகத்திடமிருந்து
பெறப்பட்டிருக்கிறதா…?
9) அவருக்கு வரும் “வரும்படிகளை”
எல்லாம் வருமான வரி இலாகாவிற்கு
உரிய முறையில் தெரிவித்திருக்கிறாரா…?
ஆண்டுதோறும் வருமான வரி அறிக்கையில்
தெரிவிக்கிறாரா…?
வருமான வரி இலாகாவிற்கு அவர் மீது எந்தவித
சந்தேகமும் இல்லையா…? அவ்வளவு சுத்தமாக அவரது
நடவடிக்கைகள் இருக்கின்றனவா…?
10) கடந்த சுமார் 15 வருடங்களாக அவர் மீது –
கற்பழிப்பு, ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகள் உட்பட ஏகப்பட்ட
கிரிமினல் புகார்கள் கூறப்பட்டுள்ளன… பல வழக்குகள்
நிலுவையில் உள்ளன… ஏன் எந்த விஷயத்திலும் இதுவரை
எத்தகைய முன்னேற்றமும் இல்லை…?
சமுதாயப் பொறுப்புள்ள – ஒரு நடுநிலைச் செய்தியாளராக
திருவாளர் ரங்கராஜ் பாண்டே இந்த மாதிரி கேள்விகளை
எல்லாம் எழுப்புவாரென்று நினைத்தால் –//
பாண்டே நித்யானந்தாவை வெளிப்படையாக ஆதரிக்கா
விட்டாலும், ஒரு பத்திரிக்கையாளராக தனது
கடமையைச் செய்திருக்கிறாரா ?
இந்த டாபிக்குகளை நான் தொடவில்லை. அடல்ட் இல்லாதவர்களை ஆசிரமத்துக்குள் அனுமதிப்பதே மிகப் பெரும் தவறு. நித்யானந்தா மீது ஏகப்பட்ட புகார்கள், மதுரை ஆஸ்ரமத்தை அபகரிக்கப்பார்த்தது என்று பெரிய லிஸ்ட் உண்டு.
மற்றபடி பணம் வரவு என்பது பெரிய விஷயமல்ல. எல்லா மத ஆஸ்ரமங்கள் இயக்கங்களுக்கும் பணம் என்பது கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இந்திய அரசு எல்லா அறக்கட்டளைகள், ஆசிரமங்கள், மதக் கல்வி நிறுவனங்கள், மதத்தின் பெயரால் நடக்கும் எல்லாவற்றையும் முற்றிலும் தடை செய்யவேண்டும். வெளிநாட்டு நிதி முழுக்க முழுக்க தடை செய்யப்படவேண்டும். நிதி அனைத்தும் இந்திய அரசுக்கு மட்டும்தான் அனுப்பவேண்டும் என்ற நிலை வரணும்.
//அவரது பெர்சனாலிடியை உயர்த்த, damage control செய்யும் முயற்சியில் பாண்டே இறங்கி இருக்கிறார்// – எனது நேரத்தைச் செலவழித்து இரண்டு காணொளிகளையும் பார்த்தேன். உங்கள் கருத்திலிருந்து நான் வெகுவாக மாறுபடுகிறேன்.
1. ரங்கராஜ் பாண்டே, நித்யானந்தாவிற்கு ஏஜெண்ட் மாதிரி பேசவில்லை. ஒரு செய்தியாளராக அவரது உணர்வை, எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவரது விளக்கம் ஓரளவு அவரது எண்ணத்தைப் புரியவைத்தது. எனக்கு அதில் ஒரு தவறும் புலப்படவில்லை. (உதாரணத்துக்கு, நான் கருணாநிதி, திமுகவை வெறுக்கிறேன். அதனால் புதுச்சட்டை அணிந்துகொண்டு, சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்து காரில் அமர்ந்து பிறகு வெளியில் வந்து, என் சட்டையைக் கிழித்தார்கள் என்று கட்-அவுட் போல போஸ் கொடுத்த ஸ்டாலினைக் கண்டித்து பின்னூட்டம் இடும்போது, நீ ஏன் ஜெயலலிதா சட்டசபையிலிருந்து வெளியே வந்த நிகழ்ச்சியை அவ்வாறு எழுதவில்லை என்று கேட்டால், என் பதில், ஜெ.வுக்கு கருணாநிதி கும்பலால் சட்டசபையில் அநீதி நடந்தது என்பது என் நம்பிக்கை, அது உண்மை. ஸ்டாலினுடையது மூன்றாந்தர நடிப்பு என்பதும் என் நம்பிக்கை என்றுதான் சொல்வேன். அதில் எப்படி மூன்றாமவர் சந்தேகம் கிளப்ப முடியும்?)
2. ஜனார்த்தன் சர்மா – அவ்வளவு ஆண்டுகள் அங்கேயே இருந்தவர், ஏன் தன் குழந்தைகளை, அவர்கள் அறியாப் பருவத்தில் ஆஸ்ரமத்தில் சேர்க்கவேண்டும்? இவர் நினைத்தால், நித்யானந்த ஸ்வாமிகள் நம் குரு என்றும், அவருக்குப் பிடிக்கவில்லை என்றால், ஆஸ்ரமத்திலிருந்து வெளியேறுங்கள் என்று சொல்லவும், அவருடைய குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளா? தன் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை அழிக்க (from external point of view) ஜனார்த்தனனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
3. /மதப்போர்வையில் ஒளிந்து கொண்டு “ஹிந்து” மதத்தையே அசிங்கம் செய்து
கொண்டிருக்கிறார்கள்// – ஒவ்வொருவரும், மற்ற மதங்களில் இருக்கும் போக்கை விமர்சனம் செய்யாமல், அங்கிருக்கும் ஆசாமிகளைக் கண்டுகொள்ளாமல், ஹிந்து மதத்தைப் பற்றி மட்டும் விமர்சனம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அப்படி விமர்சனம் செய்பவர்களுக்கும், ஸ்டாலின், வீரமணி கும்பலுக்கும், ‘சிறுபான்மையினரின்’ அடிவருடிகளாக இருந்த காங்கிரஸின் இத்தாலிய மாஃபியாவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இந்த உணர்வு இருப்பதால்தான் (அதாவது மத ரீதியான உணர்வு) பலரும் இத்தகைய ஜக்கி, நித்யானந்தா…….. விமர்சனங்களைக் கண்டுகொள்வதில்லை. இதே உணர்வினால்தான் பச்சமுத்து, வைகுண்டராஜன், ஓவையிஸ், ஜவாஹரில்ல்லா, திருமாவளவன், …. என்ற பெரிய லிஸ்டில் உள்ள ஆசாமிகளை, அந்த அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தவறாக நினைப்பதில்லை, நினைத்தாலும் வெளியே சொல்லுவதில்லை.
4. நித்யானந்தாவிற்கு மட்டுமல்ல, பல ஆன்மீகத் தலைவர்கள் (சிலர் அதை பிஸினெஸாக நடத்துகிறார்கள்) விசேஷ சக்திகளைக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அவற்றில் சில அனுபவங்கள் உண்டு. (அந்த விசேஷ சக்தியை பிறருக்கு உபயோகப்படுத்துவது நல்லதா என்பது ஆன்மீக ரீதியில் கேள்விக்குரியது. உபயோகிக்கக்கூடாது, மேலும் மேலும் தான் ஆன்மீகத்தில் முன்னேறப் பார்க்கணும் என்பது என் அபிப்ராயம். இல்லை, மற்றவர்களுக்கு உதவி அதன்மூலம் அவர்கள் நம்பிக்கையைப் பெற்று அவர்களையும் ஆன்மீகத்தின்பால் திருப்பலாம் என்பது இன்னொரு பார்வை). பல்லின் வேரைச் சுத்தம் செய்ய (root canal treatment) 12,000 ரூ டாக்டர் கேட்கும்போது (Cap, additional 6,000 Rs) கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கும் நாம், நிலத்துக்கு பட்டா வேணுமா, நிலத்தை விற்றால் உனக்குத்தானே 1 கோடிரூபாய் கிடைக்கும், 1 லட்சம் ரூபாயை எனக்கு வெட்டு என்று அநீதியாக கேட்கும் அரசு அலுவலர்களிடம் சரி..சரி என்று காசை அழும் நாம், நித்யானந்தாவோ இல்லை மற்றவர்களோ, அவர்கள் நடத்தும் கோர்ஸுக்கு காசு வாங்கக்கூடாது, எல்லாமே ஓசியில் கிடைக்கணும் என்று நினைக்கிறோம். காசு வாங்கினால் வியாபாரிகள் என்கிறோம். இது சரியான பார்வையா?
புதியவன்,
உங்கள் கருத்துகள் எனக்கு ஆச்சரியத்தை
உண்டாக்குகின்றன.
அந்த கழிசடை நித்யானந்தாவையும்,
யூட்யூபில் கொட்டிக்கிடக்கும் அவரது
சேஷ்டைகளையும் பார்த்தாலே எனக்கு
குமட்டிக் கொண்டு வருகிறது.
படு அயோக்கியன், வேடதாரி என்று
முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.
இந்த ஆளை நீங்கள் நம்புகிறீர்களா…?
ஒரு நம்பிக்கையான செய்தியாளராக
தன்னை நிலைநிறுத்திக் கொள்ள
முயற்சி செய்துகொண்டிருக்கும்,
ரங்கராஜ் பாண்டே, இன்னும் கொஞ்சம்
தீவிரமாக உள்ளே இறங்கி, இதில்
நிஜம் எவ்வளவு, கட்டுக்கதை எவ்வளவு
என்பதை தெளிவாக்கி இருக்க வேண்டும்.
ரங்கராஜ் பாண்டே’யின் மீது ஆர்.எஸ்.எஸ்.
ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்படுவதை
உறுதிப்படுத்தும் வண்ணம் தான் அவரும்
செயல்படுகிறார் என்பதற்கு இந்த வீடியோ
ஒரு உதாரணமோ என்று தோன்றுகிறது.
மதவாதத்தை ஆன்மிகம் என்று சொல்வதும்,
அதை brand செய்து, வியாபாரமாக்கி
பணம் சம்பாதிப்பதும் தவறு இல்லை என்று
நீங்கள் வாதிக்கிறீர்கள்…
இதற்கு மேல் நானென்ன சொல்ல முடியும்…?
என்னைப் பொருத்த வரை –
“சொத்துக்களை சேர்த்து குவிப்பவனும்,
விளம்பரத்திற்கு ஆசைப்படுபவனும் ”
– உண்மையான சந்நியாசியாக
இருக்கவே முடியாது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
புதியவன்,
உங்கள் பின்னூட்டத்தில் உள்ள சில கருத்துகள் குறித்து –
——————–
// அதில் எப்படி மூன்றாமவர் சந்தேகம் கிளப்ப முடியும்? //
பாண்டே தன்னைப்பற்றி தானே அறிமுகப்படுத்திக்
கொள்கிறார்…
எப்படி….?
““பாண்டே உண்மையே பேசக்கூடியர்…
நியாயம் சொல்லக்கூடியவர்….” என்று மக்கள் என்னை
நம்புகிறார்கள் –”
-அப்படி சொல்லிக் கொள்பவர், அதற்கேற்ப
நடந்துகொள்ளவில்லை என்றால், மூன்றாமவர், நான்காமவர்
எல்லாருமே கேட்கத்தான் செய்வார்கள். அதில் ஒருவன்
தான் நானும்…
——————————-
// தன் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை அழிக்க
(from external point of view) ஜனார்த்தனனுக்கு
யார் அதிகாரம் கொடுத்தது?//
ஆக, தன் குழந்தைகள், முக்கியமாக பெண்குழந்தைகள் –
என்ன படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும்
என்பதை தீர்மானிக்க அவர்களது தந்தைக்கு
அதிகாரமில்லை என்பது உங்கள் கருத்து…..?
புதியவன் – உங்களுக்கு குழந்தைகள் – முக்கியமாக
பெண் குழந்தைகள் … இருக்கிறார்களா…?
அவர்களின் படிப்பைப்பற்றி நீங்கள் முடிவெடுத்தீர்களா
அல்லது ….?
——————————-
// இதே உணர்வினால்தான் பச்சமுத்து, வைகுண்டராஜன்,
ஓவையிஸ், ஜவாஹரில்ல்லா, திருமாவளவன், ….
என்ற பெரிய லிஸ்டில் உள்ள ஆசாமிகளை, அந்த அந்த
சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தவறாக நினைப்பதில்லை,
நினைத்தாலும் வெளியே சொல்லுவதில்லை.//
ஆக, நீங்கள் நடந்துகொள்வதும் அவர்களைப்போன்று தான்
என்று – justify – நியாயப்படுத்துகிறீர்களா…?
——————————-
// எல்லாமே ஓசியில் கிடைக்கணும் என்று நினைக்கிறோம்.
காசு வாங்கினால் வியாபாரிகள் என்கிறோம். இது சரியான
பார்வையா? //
நான் ஒரு வியாபாரி என்று சொல்லிக்கொண்டு
இதைச் செய்யட்டுமே – யார் வேண்டாமென்றார்கள்…?
நான் சந்நியாசி, சத்குரு, யோகி என்றெல்லாம் ஏன்
சொல்லிக் கொள்ள வேண்டும்…? வியாபாரியின் கால்களில்
யாராவது விழுந்து வணங்குவார்களா என்ன…?
இந்த வியாபாரிகள் மட்டும் தங்களை வணங்க வேண்டுமென்று
ஏன் எதிர்பார்க்கிறார்கள்…? மற்ற வியாபாரிகளை விட
இவர்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்…?
—————————–
மதத்தை இறுகப்பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு,
அதிலிருந்து நகர / உயர – மறுப்பவர்களுக்கு –
ஆன்மிகம் என்றும் கைகூடாது …. இது நடைமுறை நிஜம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//தன் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை அழிக்க// – //அவர்களின் படிப்பைப்பற்றி நீங்கள் முடிவெடுத்தீர்களா// – கா.மை. சார்… படிப்பு வேறு. ஆசிரமத்தில் ஈடுபடுத்துவது வேறு. பிடிக்கும்போது ஜக்கி வாசுதேவ் கூட்டத்தில் குடும்பத்தோடு ஐக்கியமாகிறவர்களும், பிற்பாடு தங்கள் மகன்/மகளைப் பற்றி கவலைப்படுபவர்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். தங்கள் நம்பிக்கைகளை (அனுபவப்படாத, முழுவதும் தெரிந்துகொள்ளாத) குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது. இப்போ பாருங்க.. அவருடைய பெண்களே சொல்கின்றனர்… அப்பா/அம்மா தவறாக குற்றம் சாட்டுகின்றனர், நித்யானந்தா தான் தங்கள் தலைவர் , அப்பா மாதிரி என்று
உண்மையைச் சொல்லப்போனால், என் பசங்க படிப்பை நான் நிஜமா தீர்மானிக்கலை. அவங்கதான் தீர்மானித்துப் படித்துக்கொண்டு வருகிறார்கள். நான் அவங்கள்ட என் அட்வைஸா சொன்னது இரண்டே இரண்டு. ஒன்று- ஷேர் மார்க்கெட்டில் இறங்குவது, லாட்டரிச் சீட்டில் முதலீடு செய்வது, சூதாட்டத்தில் ஈடுபடுவது இவை யாவும் ஒன்றே. அதில் ஈடுபடாதீர்கள். இரண்டாவது, எந்தக் காரணம் கொண்டும் கிரெடிட் கார்ட் வைத்துக்கொள்ளாதீர்கள், எதிர்கால சம்பாத்தியத்தை எண்ணிக்கொண்டு இன்று லோன் வாங்காதீர்கள். – இவைகளை நான் தொடர்ந்து கடைபிடித்துக்கொண்டு வருவதை அவர்கள் அறிவர்.
ஆக சத்குரு, ஞானின்னு சொல்றவன்லாம் வெறும் வியாபாரி… செருப்பால அடிக்கணும்டா உன்ன..
//உண்மையைச் சொல்லப்போனால்,
என் பசங்க படிப்பை நான் நிஜமா தீர்மானிக்கலை.
அவங்கதான் தீர்மானித்துப் படித்துக்கொண்டு
வருகிறார்கள்.//
நல்லாவே பல்ட்டி அடிக்கறீங்க. 🙂
எப்போலேந்து சார் ? ஒண்ணாங்கிளாஸ்லேந்தா ?
அவங்களே தீர்மானிக்கறாங்களா ?
ராம்னாத் – உங்களுக்கு உள்ளூரில் வேலை என்பதால் விஷயம் தெரியாமல் எதையாவது எழுதறீங்க. அதற்காக உங்களை குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர் என்று சொல்ல மாட்டேன்.
நான் எழுதியது உண்மை. அதன் பின்னணியை இங்கு விளக்கினால் உங்களுக்குப் புரியாது. நான் வெளிநாட்டில் 25 வருடங்கள் வாழ்ந்தவன். என் குழந்தைகள் பள்ளிப்படிப்பின் பெரும்பகுதியை அங்குதான் முடித்தார்கள்.
Ramanath Sir, its common that children decide their future themselves in West. Parents educate them up to high school, the curriculum is common. Here even the elective courses in HS, parents only can suggest & guide but children’s decision are final.From college level onward they are on their own. that includes marriage , job etc., (there could be minuscule % that may not follow this general rule)
Mr.புதியவன் , Mr.thiagarajan
Both of you have either failed to
understand or knowingly/unknowingly
bypassing the core issue.
The issue is when children can
decide their own future ?
Certainly not at the Pimary level.
Not even at the High school level.
It is only when they reach certain level of
understanding/analyzing capability
to take decisions considering
various options/choices
available before them. This,
certainly can’t be
before they reach atleast 10th Std.
or 15-16 years old.
I meant that only.
Mr.Ramnath,
Still you have not understood the issue. In my case, we had 4-5 schools and my kids decided where to join (of course my son followed his sister’s foot steps). Nobody in the world can decide what to study ie from subject and it’s contents point of view. They can only decide which stream to follow. Personally my choice for them, from initial stage was computer science related. But they chose their own stream and pursuing further.
Why Janarthan admitted his kids in Nithyanantha influenced place? He wanted them to pursue that idealogy. His decision influenced them in teen age. Now why he should cry about it? He only showed them wrong path. இதுதாண்டா கடவுள், இதுதாண்டா நம்ம பாதை என்று நம்ம பையனை சின்ன வயசுலேர்ந்தே வளர்த்துட்டு, டபக் என்று 15 வயசுல, iஇது கடவுளே இல்லைடா, வேற கடவுளை நான் காட்டறேன் என்று சொல்வதை எத்தனை குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும்?
https://vimarisanam.wordpress.com/2013/03/30/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/
மெய்ப்பொருள்,
இதைப்போல் போலி’களைப் பற்றி
இன்னும் நிறைய கட்டுரைகள்
எழுதி இருக்கிறேனே. ஆனால்,
என்ன பயன்…? இந்த தளத்தில்
ரெகுலராக பின்னூட்டம் போடுபவர்கள்
கூட ஏற்க மறுக்கிறார்களே…!
அப்பேற்பட்ட பெரியவர் வள்ளலாரே
ஒரு சமயம் சொன்னாரே
“கடை விரித்தேன் – கொள்வாரில்லை” என்று…
ஆனாலும், என் மனதில் தோன்றுவதை
நான் எழுதிக் கொண்டே தான் இருபேன்.
குறைந்த பட்சம், என் மனசாட்சியாவது
திருப்தி கொள்ளும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்… அப்படி நினைக்காதீர்கள். (அதாவது நீங்கள் சொல்வதை ஏற்கவில்லை என்று).
எனக்கும் நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ், கல்கி, மேல்மருவத்தூர் போன்ற பலரிடம் நம்பிக்கைலாம் கிடையாது. ஆன்மீகத்தை காசாக்குபவர், ஆன்மீகத்தில் முன்னேறவே முடியாது, நமக்கு வழிகாட்டியாக இருப்பது கடினம். ஆனால் இந்த விஷயத்தில் ரங்கராஜ் பாண்டேவை குறை சொல்ல எனக்கு இஷ்டமில்லை.
நீங்கள் ஞானியா? ஞானம் என்று எதைக் கருதுகிறீர்கள்? ஞானி காமவயப்படுதல் தவறா? சுயஒழுக்கம் தான் ஞானமா?
அய்யா மஹாஆஆஆஆ ஞானம்,
யார் சொன்னது “ஞானி காம வயப்படுதல்” – தவறு என்று …?
சரி, உங்கள் பெண்டு பிள்ளைகளை நித்யானந்தா ஆசிரமத்தில்
சேர்த்து விட்டீர்களா…?
நீங்கள்…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
பக்குவமாக பதில் சொல்வீர்கள் என்று பார்த்தால் பைத்தியம் போல உளறுகிறீர்கள்.!
ஞானம் என்றால் என்ன ன்னு சொல்லு. தெரியலன்னா நித்யானந்தாவுக்கு ஊ..
பிரச்சினை உள்ள மக்கள் ஆசிரமம் நோக்கி செல்கிறார்கள்.
அய்யா மஹாஆஆ ஞான குருகுலம் அவர்களே,
உங்கள் பதிலை இன்னும் இப்படி விஸ்தரித்துக்
கொள்வது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் –
“பிரச்சினைஉள்ள மக்கள் ஆசிரமம் நோக்கிச்
செல்கிறார்கள் – டாஸ்மாக் கடைக்கு போவது போல,
விலைமாதரைத் தேடிப் போவதுபோல, போதை/
லாகிரி வஸ்துக்களை தேடிப் போவது போல….”
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஆசிரமங்களை டாஸ்மாக் போன்றவற்றுடன் தொடர்புபடுத்துவதிலிருந்தே உன் ஞானம் என்னன்னு தெரிகிறது.
மக்களின் பிரச்சினைகளுக்கு நீங்கள் என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்..?
இறுதியாக ஆன்மீகம் என்பதே மாயை. மதம் என்பது நிதர்சனம். இது உங்களுக்குப் புரியாது. ஏனென்றால் ர.பாண்டே சொல்வது போல் ஒரு ஞானியை விமர்சிக்க ஞானம் வேண்டும்.
அய்யா மஹாஆஆஆ ஞானம்,
உங்களின் இந்த கேள்வியை நான்
நண்பர் புதியவன் அவர்களுக்கு
சமர்ப்பணம் செய்கிறேன்….
அவர் தான் உங்களுக்கு திருப்தியான
பதிலை தரக்கூடியவர்….
புதியவன் – நீங்கள் இந்த மஹாஆஆ ஞானிக்கு
“உரிய” விளக்கம் தரும்படியாக வேண்டி விரும்பி
கேட்டுக்கொள்கிறேன். 🙂 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஆன்மீகம் மதம்ன்னு பேசறதுக்கெல்லாம் ஞானம் வேண்டும். அது உன்கிட்ட இருக்கா?
நீங்க முதல்ல எப்படி கேள்வி கேட்கணும் என்பதைப் புரிஞ்சுக்கணும். அதுவே தெரியாது என்றால், இந்த சப்ஜெக்டைப் பற்றி நீங்க எழுதும் பக்குவமோ அது என்ன என்று தெரிந்துகொள்ளும் மெச்சூரிட்டியோ உங்களுக்கு இல்லை என்றுதான் அர்த்தம்.
ஞானி என்பவன், எதையும் காசுக்கு விற்க மாட்டான். யாரிடம் தன் அறிவைப் பகிர்ந்துகொள்ளும் தகுதி இருக்கோ, அவர்களை மட்டும் சீடனாக ஏற்பான். அவனது ஞானத்தின் தகுதியினாலே, அவனைக் காண வருபவர்கள், அவனுக்கு வேண்டிய அடிப்படை உணவு, மிக அடிப்படை உதவிகளைச் செய்வார்கள். எவன் ‘காசு’ கேட்கிறானோ, அவன் ஞானி என்று சொல்லும் தகுதியோ இல்லை ‘குரு’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் தகுதியையோ இழக்கிறான் என்பது என் அபிப்ராயம். அதே சமயம், பணம் இல்லாமல் ‘தன் கருத்துக்களைப் பரப்ப இயலாது’ என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். எப்போ ஒரு காரணத்துக்காக, காசு வாங்க ஆரம்பிக்கிறார்களோ அப்போ அவர்களும் ‘வியாபாரி’ என்ற குரூப்பில்தான் சேர்வார்கள்.
ஆன்மீகவாதி, எனக்குத் தெரிந்து ‘வழிமுறைகளை’ மட்டும்தான் பேசுவான். மதத்தைப் பற்றிப் பேச மாட்டான். மதத்தில் இருக்கும் கருத்துக்களை, உதாரணங்களைச் சொல்லுவான். வேறு மதத்தைப் பற்றிப் பேச்சே எடுக்க மாட்டான். அதைவிட மிக மிக முக்கியமாக, ‘தற்பெருமை’, ‘நானே கடவுள்’, ‘நான் சொல்லித்தான் சூரியன் இன்று 30 நிமிடங்கள் தாமதமாக உதித்தான்’ என்றெல்லாம் புரூடா விட மாட்டான். நாந்தான் கடவுளின் ரெப்ரசெண்டேடிவ் என்று சொல்ல மாட்டான். அவனுக்கு வியாபாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை. தங்க சிம்மாசனத்தில் அமரவேண்டிய அவசியம் இல்லை.
//காம வயப்படுதல் தவறா//, //சுய ஒழுக்கம்தான் ஞானமா// – என்னுடைய புரிதல், ஞானம் அடைவதன் முதல் தகுதி, சுய கட்டுப்பாடு. கோபம், காமம், க்ரோதம், மோகம் போன்றவற்றைக் கடந்த பிறகுதான் ஒருவன் ஞானியாக இயலும். அப்படி ஞானியாக ஆனபிறகும் இவைகளை அவன் கைக்கொண்டால், ஞானி என்ற தகுதியிலிருந்து வழுவிவிடுவான்.
ஆனால் நண்பரே… உங்களுக்கு இந்தப் பதில் எழுத எனக்கு இஷ்டமில்லை. கா.மை. சார் இங்கு சொன்னதால் எழுதினேன். இந்தத் தளத்தில் எந்தக் கருத்தும் சொல்லலாம், அது ஆபாசமாகவோ, ஆத்திரத்தி வருவதுபோலவோ, மோசமான வார்த்தைகளாகவோ இல்லாத வரையில். கா.மை. சார் உங்க பின்னூட்டத்தை வைத்திருந்து அதற்கு பதில் எழுதியதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
தனிப்பட்ட உங்கள் அபிப்ராயம் ஞானம் கிடையாது.
மக்களுக்கு நன்மை செய்ய பணம் தேவை. அது ஞானியாக இருந்தாலும் கூட. பணத்தை மறுப்பவன் ஞானியல்ல.
காமம், கோபம், குரோதம் கடந்தவன் என்பவன் ஒரு ஜடம் அல்லது சமூகத்திற்கு எந்த வகையிலும் உபயோகமற்றவன்.
அவர்கள் தவறே புரிந்திருந்தாலும் அவர்கள் தியானத்தின் இறுதியாக பேரானந்த நிலையை அடைந்தவர்கள்.
அந்த நிலையை அடைய முயற்சி செய்பவர்கள் அவர்களை நாடுகிறார்கள். அந்த முயற்சி இல்லாதவர்கள் அவர்களை விமர்சிக்கிறார்கள்.
நான் ஞானி. எனக்குத் தெரியும் என்னை எடை போட உன்னால் முடியாது.
ஏனென்றால் நான் கண்ட அனுபவம் நீயும் கண்டிருந்தால் மட்டுமே என் கூட உன்னால் வாதாட முடியும்.
அவர்கள் வேறு ஒரு உணர்வு நிலையில் இருந்து சிந்திக்கிறார்கள்.
திரும்பவும் சொல்கிறேன். ஆன்மீகம் என்பது மயக்கம். மதம் என்பது நிதர்சனம். ஹிந்து மதத்தைக் காக்க எந்த ஞானியையும் விமர்சனம் செய்யாதீர்கள். இந்தியாவை ஹிந்து மதச் சட்டங்கள் ஆளவில்லை. எதையும் சட்டம் தீர்மானிக்கும்.
நீங்கள் ஞானம் காணாமல் எந்த ஹிந்து ஞானியின் செய்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்.
புதியவன்,
// கா.மை. சார் உங்க பின்னூட்டத்தை வைத்திருந்து
அதற்கு பதில் எழுதியதே எனக்கு ஆச்சர்யமாக
இருக்கிறது. //
புதியவன், காரணம் இருக்கிறது.
இந்த ஆசாமி இந்த தளத்திற்கு புதியவர்.
நித்யானந்தாவின் சீடர் ஒருவரின்
புரிதல் எந்த அளவில் இருக்கிறது..
அவர்கள் ஏன் அந்த போலி’யின் பின்னால்
அலைகிறார்கள் என்று தெரிந்துகொள்ள
விரும்பியே, அவரது வாயைக்கிளறினேன்.
இப்போது அவரது பதில் பின்னூட்டங்களிலிருந்து
அவரது மனோநிலையும், சிந்தனை ஓட்டங்களும்
பற்றிய ஓரளவு புரிதல் நமக்கு கிடைக்கிறது.
இது ஒருவித போதை.
அந்த “போலி” ஊட்டியிருக்கும் கஞ்சா, அபின் –
மாதிரியான ஒரு போதை. இதில் சிக்கியவர்கள்
வெளியேற வழியே இல்லை. வேறு யாரும்
இவர்களை விடுவிக்கவும் வழி இல்லை.
கூடிய சீக்கிரம் இவரும் அந்த
ஈக்குவேடார் கன்னித்தீவிற்கு பார்சல்
ஆகிவிடுவாரென்று நினைக்கிறேன்.
அல்லது இங்கிருந்து கொண்டே,
பார்சல் வேலைகளை கவனிக்கக்கூடும்… 🙂 🙂
Anyway – உங்கள் விவரமான பின்னூட்ட
பதிலுக்கு மிக்க நன்றி. போதை வசப்பட்டவருக்கு
இல்லையென்றாலும், மற்ற வாசகர்களுக்கு
பயன்படும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஆன்மீகம் மதம்ன்னு பேசறதுக்கெல்லாம் ஞானம் வேண்டும்.
என சொல்லப்பட்டது .
ஆன்மீகம் , மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கை .
இவை பேசுவதற்காகவோ இல்லை . அடுத்தவர் மதிப்பதற்காகவோ இல்லை
நடைமுறையில் கொண்டு வந்து வாழ்வது ஆகும் .
ஆன்மீகம் மதம்ன்னு பேசினால் அதற்கு பெயர் வியாபாரம் .
அதற்கு ஞானம் தேவையில்லை .
வியாபாரம் செய்ய தகுதி கல்லா காட்டும் திறமை. .
கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் .
ஞானம் எதுவென்று உரைக்காமல் நீங்களாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
நன்றாகக் கேளுங்கள்.!
ஆன்மீகம் என்பது தேடல். மதம் என்பது தேடலின் முடிவு…
அவர்கள் வியாபாரிகளா இல்லை சரியானவர்களா என்பது அவர்கள் மீதான உங்கள் பயன்பாட்டைப் பொறுத்தது.
ஆன்மீகம் என்பது தேடல். மதம் என்பது தேடலின் முடிவு…
முதலில் ஆன்மீகத்திற்கும் , மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது .
ஆன்மீகம் என்பது தேடல். மதம் முடியுமிடத்தில் ஆரம்பிக்கிறது .
குமுதம் , விகடன் போன்றவைகளில் சொந்த பெயர்
இல்லாத அனானிகள் இருக்கும் .
பெயர் சொல்ல மாட்டார்கள் – ஏனெனில் தேவைக்கேற்ப
பல புனைபெயர்களில் எழுத வேண்டியிருக்கிறது .
நடிகையாக இருந்தால் – “என்று சொன்னார் சிரித்துக்கொண்டே “.
சாமியாராக இருந்தால் – ‘ அருள் சொட்டும் முகம் etc etc ‘
என்று எழுதி விடுவார்கள் .
இப்படி எழுதுபவர்கள் இப்போது வெளியே வந்து
சொந்தமாகவும் கடை போட வந்து விட்டார்கள் .
இதை நம்ப நாங்கள் என்ன ஏமாளிகளா ?
சிவோஹம் என்று சொல்ல முதலில் ஒரு தகுதி வேண்டும் !