திரு.குருமூர்த்தி அவர்களின் சர்ச்சைக்குள்ளான உரை – துக்ளக் ஆண்டு விழா ….(பகுதி-3)
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற துக்ளக்
வார இதழின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியின்போது
துக்ளக் ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள்
ஆற்றிய உரையின் காணொளி கீழே –

இந்த விழாவில் திரு.தமிழருவி மணியன்,
திரு.ரங்கராஜ் பாண்டே, ஆகியோர் பேசியதற்கான
விளக்கங்களை உள்ளடக்கியதாக தனது
உரையைப் பார்க்க வேண்டுமேயல்லாது,
தனியாக தனது பேச்சின் இடையில் கூறப்பட்ட
சில விஷயங்களை மட்டும் பெரிதுபடுத்தி
கண்டனம் தெரிவிப்பது கண்ணியமாகாது என்பது
ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்களின் நிலை.

வாசக நண்பர்கள் மொத்த உரைகளையும்
இப்போது பார்த்திருப்பீர்கள்….

தங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்பும்
நண்பர்கள் பின்னூட்டங்கள் மூலம் தெரிவிக்கலாம்.
நானும் பின்னூட்டங்களிடையே எனது
கருத்தையும் தெரிவிக்கிறேன்.

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திரு.குருமூர்த்தி அவர்களின் சர்ச்சைக்குள்ளான உரை – துக்ளக் ஆண்டு விழா ….(பகுதி-3)

 1. புதியவன் சொல்கிறார்:

  இன்னும் ரங்கராஜ் பாண்டே அவர்களின் உரையைக் கேட்கவில்லை. தமிழருவி, குருமூர்த்தி இருவரும் நன்றாகப் பேசியிருக்கிறார்கள்.

  ஆனா, ஓ.பி.எஸ் அவர்கள், குருமூர்த்தி அவர்களைச் சந்தித்து தன் பிரச்சனையைச் சொன்னது கொஞ்சம் சரியாக இல்லை என்று தோன்றியது. ஒருவேளை சோ இருந்திருந்தால், அவரிடம் நிச்சயம் ஓ.பி.எஸ் அவர்கள் சென்றிருந்திருக்கலாம். ஏற்கனவே சசிகலா விஷயத்தில் ஜெ.வுக்கு சோ ஆலோசனை கூறியிருந்தது நமக்குத் தெரிந்த விஷயம்.

  உரையைக் கேட்டால், கண்டிக்கிற அளவுக்கு எதுவும் பேசப்படவில்லை என்றுதான் என் மனதுக்குப் படுகிறது. ஆனால் செய்திகளின் அடிப்படையில் ‘குருமூர்த்தி அவர்கள் அவருடைய வட்டத்தை மீறி பேசியிருப்பதாகத்தான் நான் படித்திருந்தேன்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஜெ. மறைவிற்குப் பிறகு, அதிமுகவின்
  2-ம் கட்ட, 3-ம் கட்ட தலைவர்கள் எல்லாம்
  எப்படியெப்படி எல்லாம் நடந்துகொண்டார்கள்
  என்பதை நாமெல்லாரும் பார்த்தோமே.
  போட்டி போட்டுக்கொண்டு
  திருமதி சசிகலாவின் கால்களில் விழுந்து
  கும்பிட்டதையும் பார்த்தோம்.. எனவே,
  குருமூர்த்தி அவர்கள் அதிமுகவினரைப் பற்றி
  விமரிசித்ததில் தவறேதும் இல்லை; பொதுவில்\
  நிகழ்ந்த அந்த அவலங்களை யார் வேண்டுமானாலும்
  விமரிசிக்கலாம்.

  ஆனால், இதில் ஒபிஎஸ் அவர்கள் அந்தரங்கத்தில்
  நடந்ததை இப்படி அரங்கத்தில் போட்டுக் கொடுக்கலாமா
  என்று குறைப்பட்டுக் கொண்டால், அதில் நியாயம்
  இருக்கும்.. ஆனால், இப்படியெல்லாம் குறைப்படக்கூடிய
  நிலையில் திரு.ஓபிஎஸ் இன்றைய தினத்தில் இல்லை
  என்பதே நிஜம்.

  .
  -காவிரிமைந்தன்

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  “ஜெயலலிதா அவர்களை ஆதரித்த நீங்கள்
  அவருக்குப் பின் சசிகலாவை எதிர்த்தது ஏன் ..?”

  -என்று ரங்கராஜ் பாண்டே கேட்டது தான்
  குருமூர்த்தி அவர்களின் அதிமுக பற்றி கூறிய
  கருத்துகளுக்கான அடிப்படை என்பது தெரிகிறது.

  பாண்டே கேட்டது ஒரு அபத்தமான கேள்வி
  என்பது நமது கருத்து. தந்தி டீவியில் இருக்கும்வரை,
  பாண்டேயை திறமையானவர்
  என்று மட்டுமே நாம் அறிந்திருந்தோம்.
  அவர் வெளியே வந்து, தன்னை அதிகமாக expose
  செய்துகொள்ள ஆரம்பிக்கும்போது, அவரது
  பல பலவீனங்கள் வெளிப்படையாக
  தெரிகின்றன.

  அடிப்படையே தவறு.
  முதலில் குருமூர்த்தி அவர்கள் என்றுமே ஜெ.வை
  ஆதரித்தது இல்லை என்பதையும்,
  சோ மட்டும் தான் அதுவும் சில சமயங்களில்
  மட்டும் தான் ஜெ.வை ஆதரித்தார் என்பதையும்
  நினைவில் கொள்ள வேண்டும்.
  எனவே, “ஜெயலலிதாவை ஆதரித்த நீங்கள்” என்று
  பாண்டே கூறுவதே தவறான புரிதல்.

  அடுத்து இன்னொரு அடிப்படையும் பாண்டே அவர்களுக்கு
  புரியவில்லை; ஜெயலலிதாவை அவரது திறமைகளுக்காக
  மதித்தவர்கள் யாரும் சசிகலாவை ஏற்றது இல்லை.
  ஜெ. சந்தித்த அவமானங்கள் எல்லாவற்றிற்கும்
  அடிப்படை காரணமே சசிகலா தான்.
  ஆசிரியர் சோ அவர்கள் சசிகலாவை ஏற்றுக்கொண்டதே
  இல்லை. உண்மையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தின்
  ஆதிக்கத்திலிருந்து வெளியே வர ஜெயலலிதாவிற்கு
  சோ தான் உதவினார்.

  ஆக, பாண்டே கூறிய அபத்தமான கருத்துகளும் –
  இந்த பிரச்சினைக்கான காரணங்களில் ஒன்று
  என்று தோன்றுகிறது.

  .
  -காவிரிமைந்தன்

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  குருமூர்த்தி சொல்வது என்ன ?
  சசிகலாவை விட்டிருந்தால் காட்டாட்சி ஏற்பட்டிருக்கும் .
  அப்ப அம்மையார் “ரொம்ப நல்ல ” ஆட்சியா நடத்தினார் ?
  ஜெயா காலத்தில் ஆட்சியையும் கட்சியையும் நடத்தியது சின்னம்மா !

  அ தி மு க / தி மு க இரண்டும் கொள்ளையடிக்கும் கட்சிகள் .
  அப்ப இரண்டையும் எதிர்க்க வேண்டியதுதானே ?.

  இல்லை அ தி மு க கொஞ்சம் பரவாயில்லை .
  ஆனால் தி மு க வரக்கூடாது .

  மொத்தத்தில் தி மு க ஒழிக -அவ்வளவுதான் .

 5. Ramnath சொல்கிறார்:

  please see k.m.blog above:

  // அடிப்படையே தவறு.
  முதலில் குருமூர்த்தி அவர்கள் என்றுமே ஜெ.வை
  ஆதரித்தது இல்லை //

 6. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  குருமூர்த்தி ஜெயாவை ஆதரித்தது இல்லை என்பது இருக்கலாம் .

  அவரே அ தி மு க வில் சசிகலா வந்தது
  பிடிக்கவில்லை என்றும் அதனால்தான்
  எதிர்த்தேன் என்றும் கூறியுள்ளார் .
  யாருக்கும் சசிகலாவை எதிர்க்க துணிச்சல் இல்லை –
  துக்ளக் ஒன்றுதான் எதிர்த்தது என சொல்கிறார் .

  தர்மயுத்தம் செய்ய சொல்லி விட்டு அப்புறம் எதற்காக
  பிறகு இரு அணியையும் ஒன்று சேர்க்க
  ‘கட்டை பஞ்சாயத்து ‘ செய்ய வேண்டும் ?

  அவரே ஒப்புக்கொள்கிறார் – தி மு க வந்துடும் .
  அது கூடாது என்றால் ரஜினியை வைத்து ஓட்டை பிரிக்க வேண்டும் .

  கம்பெனி சீக்ரெட்டை போட்டு உடைத்து விட்டார் .
  பவர் வித் அவுட் ரெஸ்பான்சிபிலிட்டி என்பது
  ஏனோ ஞாபகம் வருது .

 7. Ramnath சொல்கிறார்:

  // பவர் வித் அவுட் ரெஸ்பான்சிபிலிட்டி என்பது
  ஏனோ ஞாபகம் வருது .//

  “ஏனோ” ஞாபகம் வரவில்லை.
  உங்களுக்கு சரியாகத்தான் ஞாகபம் வந்திருக்கிறது.

 8. Siva Sankaran சொல்கிறார்:

  பேரைக் கூற அவசியமில்லை என்று 22:21 சொல்கிறாரே அவர் யார் ? யாரோ எதையோ கூறுகிறார் அது என்ன பெயர் ?

 9. Ramnath சொல்கிறார்:

  “ஹிந்து – ராம்”

  .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.