முதுகில் கத்தியால் குத்தினர்… உண்மை தான் – ஆனால் ….!!!


கீழே இன்றைய ஹிந்து ஆங்கில நாளிதழில்
வெளிவந்திருக்கும் ஒரு கார்ட்டூன்.

இவர்கள் ஒருவரையொருவர் முதுகில் கத்தியால்
குத்திவிட்டதாக குற்றம் சாட்டிக்கொள்கின்றனர்… ஆனால்,
உண்மையில் குத்து பட்டது மஹாராஷ்டிர மக்கள் தானே
என்கிறது கார்ட்டூன்.

உண்மை தான். உண்மையில் முதுகில் குத்தப்பட்டது
மராட்டிய மக்கள் தான்… ஆனால், ஒருவகையில்
அவர்களும் கூடத்தான் இதற்கு காரணம்.

தங்களுக்குத் தேவையான சரியான தலைவரை/கட்சியை
உறுதியாகத் தீர்மானம் செய்யாமல் குழப்பியதில்
அவர்களுக்கும் பங்கு உண்டே…???

ஜனநாயகத்தில் – மக்கள் ஏமாந்திருக்கும் வரையில் –
அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களும்
இப்படித்தான் இருப்பார்கள்….

நாளை இது தமிழகத்திலும் நடக்காது என்பதற்கு
எந்தவித உத்தரவாதமும் இல்லை – என்பது தான் நிதர்சனம்.

இதிலிருந்தெல்லாம் நம் மக்கள் பாடம் கற்றுக்கொண்டு
விடுவார்கள் என்று நம்பினால், நாம் தான் முட்டாள்கள்.

.
—————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to முதுகில் கத்தியால் குத்தினர்… உண்மை தான் – ஆனால் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  //நாளை இது தமிழகத்திலும் நடக்காது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை – என்பது தான் நிதர்சனம்.// – இந்த நிலைமை 2006ல் வந்தது. கருணாநிதி தன் சாமர்த்தியத்தால் இதனை மேனேஜ் செய்தார் (மைனாரிட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றிருந்தபோதும்). இல்லாவிட்டால், மற்ற மாநிலங்களில் நடைபெற்றதைப்போல இங்கும் நடைபெற்றிருக்கும். ஜெ. மறைந்தபோது கருணாநிதி ஆக்டிவ் ஆக இருந்திருந்தால் எப்போவோ திமுகவை ஆட்சியில் அமரச் செய்திருப்பார். ஸ்டாலினுக்கு அந்த சாமர்த்தியமும் போதாது, ஆளுமையும் கிடையாது.

  இல்லையென்றால் திருமாவளவன் போன்றவர்களெல்லாம் திமுகவுக்கு தண்ணி காட்ட முடியுமா? தன் சொந்த பலத்தால் வார்டு கவுன்சிலராக ஆக முடியாதவர்களெல்லாம், அரசியல் தலைவர்கள் என்று தங்களை நினைத்துக்கொண்டு ஸ்டாலினுக்குத் தண்ணி காட்டுகின்றனர்.

  • Ezhil சொல்கிறார்:

   புதியவன் சார்.. நீங்க சொல்லுவது மிகவும் சரி.. ஸ்டாலினுக்கு அந்த திறமையே இல்லை .. 2021 ல் மக்கள் முதல்வர் பதவியை கையில் எடுத்து தந்து விடுவார்கள் என்று மிகவும் மூடநம்பிக்கையாக நம்பிக்கொண்டிருக்கிறார்.. இப்பொழுது தமிழக அரசியல் இப்படியே தொடருமேயானால் கண்டிப்பாக திமுக தலைகீழாக நின்று தண்ணி குடிக்க வேண்டியதிருக்கும் என்று நினைக்கின்றேன் …

   • புதியவன் சொல்கிறார்:

    ஆனா எழில்… என் அனுமானம் (assessment) – திமுக 130, காங்கிரஸ் 30… வரும் என்பதுதான் (இன்றைய நிலையில்). இதுக்குக் காரணம் வாக்குகள் பிரிவதாலும் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்துவிட்டதாலும், அதிமுகவுக்கு கவர்ச்சியான நல்ல தலைவர் இல்லாததாலும்தான். (எப்போதும் திமுக, அதிமுகவின் பலவீனத்தினால் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. திமுக வெற்றி பெறணும் என்று மக்கள் எப்போதும் விரும்பியதில்லை என்பதே என் எண்ணம்).

    அதிமுகவுக்கு எதிர்ப்பு வாக்குகள் குறைவாகத்தான் இருக்கும், ஸ்டாலின்/திமுக/காங்கிரஸ், அதிமுகவின் பெயரை வேறு ஏதாவது ஸ்காண்டலில் இழுத்துவிட்டு டேமேஜ் செய்யவில்லை என்றால். என் தனிப்பட்ட எண்ணம், அதிமுக 140, பாமக 50, தேதிமுக 20… (இதில் பாஜகவுக்கு இடமில்லை ஆனா நான் சொல்வதை யார் கேட்கப்போகிறார்கள்?) என்ற விதத்தில் நிற்கவேண்டும். அதற்கு முன்பு, அதிமுக தலைவர் என்று ஒருவர் இருக்கவேண்டும். இல்லையென்றால், பாஜக+சிவசேனா கூட்டணி போல, எடப்பாடி, ஓபிஎஸ் என்று இருவராக உள்குத்து செய்து அதிமுகவுக்கு வரும் வாக்குகள் குறைந்துவிடும். நிறைய நிகழ்வுகளை நான் அனலைஸ் செய்த பிறகு, ஓ.பி.எஸ் மீதான நல்லெண்ணம் மிகவும் குறைந்துவிட்டது. அவர் பாஜக ஆட்டுவிக்கும் பொம்மை, அதிமுகவின் வீக் பாயிண்ட் என்ற எண்ணம் தோன்றிவிட்டது.

    • மெய்ப்பொருள் சொல்கிறார்:

     89 பிறகு எந்த காலத்தில் அ தி மு க விற்கு தலைமை இருந்தது ?
     இன்று வரை எம் ஜி ஆர் பெயரைச் சொல்லியும் ,
     அவரின் சின்னம் இரட்டை இலை என்பதை வைத்தே
     ஜெயித்து வந்திருக்கிறது .

     ஜெயா மனம் போன போக்கில் ஆட்சி செய்தவர் .
     1991 ல் இருந்து 96 வரை அவருடைய ஆட்சியே சாட்சி .
     அதை “ஆளுமை ” என்பது பெரிய கேவலம் .

     எல்லாரும் காலில் விழ வேண்டும் .
     அவரை யாரும் , அமைச்சர்கள் உட்பட சந்திக்க முடியாது .
     உண்மையில் ஆட்சி புரிந்தது சின்னம்மாதான் .
     பாதி நாள் , கோட்டைக்கு வர மாட்டார் .
     மீதி நாள் கொடநாட்டில் கழித்தார் .
     கொடநாட்டு ராணி என்றே பெயர் உண்டு .

     கலைஞர் அறுபது ஆண்டுகள் M L A ஆக இருந்தவர் .
     அவருக்கு உண்டான மரியாதை கொடுக்காமல்
     ஊழல் கருணாநிதி , மஞ்ச பை , திருட்டு ரயில் , தெலுங்கன்
     என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது

     காரணம் ஜெயாவிற்கு தகுதி ஒன்றும் கிடையாது – எனவே
     கலைஞரை தூற்றுவது ஒன்றுதான் முடியும் – வேறு வழி இல்லை !

     இப்போது கருணாநிதி இல்லை – பிரச்சாரம் எப்படி செய்வார்கள் ?
     வேறென்ன – வெற்றிடம் என்றுதான் .
     உண்மையில் வெற்றிடம் தமிழ்நாட்டு பா ஜ க வில்தான் .

 2. Thiuvengadam thirumalachari சொல்கிறார்:

  Perhaps the arrangements were finalized as plan B by BJ P even before the election to teach a lesson to SS for having been critical of the national leadership and a hint was given by Fadnavis when he announced in India Today conclave that Dy CM will be from SS.By the same time action was initiated to control the leadership of the two likely parties which support SS.lt is Congress in the last missed its chance of establishing an foothold in the state.Thiruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.