…
…
…
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற துக்ளக்
வார இதழின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் –
ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் அதிமுகவைப்
பற்றி பேசியதாகக்கூறி, சில செய்திகள் வெளிவந்தன….
அவற்றைக் குறித்து, அதிமுக அவரை கடுமையாகச்
சாடி அந்த பேச்சை சர்ச்சைக்குள்ளாக்கியது.
இதற்கு பதிலளித்த குருமூர்த்தி அவர்கள் –
என்னுடைய உரை தனிப்பட்ட உரை அல்ல…
அதற்கு முன் பேசப்பட்டதற்கு பதிலளிக்கும்
விதமாக பேசப்பட்டவை.
முழு பேச்சையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்,
குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளியிட்டு
தாக்குதல் நடத்துவது கண்ணியமான விஷயமல்ல…
என்று கூறி இருக்கிறார்…
அதுவும் சரியே… கூட்டத்தில் அப்படி என்ன பேசப்பட்டது
என்பதை முழுவதுமாக கவனித்தால் தான் இந்த
சர்ச்சையின் அடிப்படை விளங்கும்.
விழாவில் முக்கியமாக 3 பேர் தான்
அரசியல் பேசினார்கள் என்று சொல்லலாம் …
திரு.தமிழருவி மணியன்,
திரு.ரங்கராஜ் பாண்டே,
துக்ளக் ஆசிரியர் திரு.குருமூர்த்தி…
இந்த 3 பேர்களுடைய உரைகள் அடங்கிய வீடியோ
கிடைத்தது.. அதை தனித்தனியே பதிவிட்டிருக்கிறேன்….
ஒவ்வொன்றாக வெளிவரும்…
முதலில் எல்லாருடைய உரையையும் கவனியுங்களேன்….
அதன் பிறகு இது பற்றி பேசலாம்…
முதலில் – திரு.தமிழருவி மணியன் –
….
….
.
—————————————————————————————————————————————————————-