“மஹா” தத்துவம்….!!!


கழுதையும் நாயும் கூடலாம்…
நாயும் பன்றியும் கூடலாம்…
பன்றியும் மாடும் கூடலாம்…
மாடும் குதிரையும் கூடலாம்….
குதிரையும் கழுதையும் கூடலாம்….

இதனால் …?

……………….

– புதிய கலப்பினங்கள் உருவாகும்…
இந்தியா முழுவதும் இவை பரவும் …

“புதிய இந்தியா” உருவாக….இதுவே வழி…!!!

” முக்கியமாக – மஹாராஷ்டிராவில் –
விவசாயிகளின் தற்கொலைகள் நிறுத்தப்படும்…”

வேறென்ன வேண்டும்…???

.
—————————————————————————————————————————————————————-

கடைசியாக (Latest) பதிவாகியிருக்கும் –
விமரிசனம் – காவிரிமைந்தன் காணொளி 07 – கீழே …

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to “மஹா” தத்துவம்….!!!

 1. Prabhu Ram சொல்கிறார்:

  இவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியில்
  தொடர்ந்தால் போதும், நாடு முழுவதும்
  இதே மாதிரி களேபரமான உருஅங்கங்கள் தான்
  உலாவும்.

 2. புதியவன் சொல்கிறார்:

  மோசமான அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் – மஹாராஷ்டிராவில் (மட்டும்தானா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது?). பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதை, சிவசேனைக்கு வைத்த ஆப்பு என்றவிதத்தில் பார்க்கக்கூடாது. தங்களை எதிர்த்து மக்கள் மன்றத்தில் போட்டியிட்ட சரத்பவார் கட்சியுடன் (அல்லது பிரிவுடன்) கூட்டணி அரசா? சிவசேனை செய்தது மோசம், துரோகம் என்றால் பாஜக செய்வதற்குப் பெயர் என்ன?

  நியாயமாக, நேரடியாக புதிய கூட்டணியாக தேர்தலுக்குச் சென்றிருக்கவேண்டும். அல்லது சிவசேனாவை ஆளவிட்டிருக்கவேண்டும். சட்டப்படி சிவசேனா சட்டமன்றத்தில் வென்றிருந்தால், பாஜக மக்கள் மனதை எதிர்காலத்தில் வென்றிருக்கலாம். இப்போது செய்தது பாஜகவுக்கு பெருமை கிடையாது, சிறுமை.

  • Ramnath சொல்கிறார்:

   // – புதிய கலப்பினங்கள் உருவாகும்…
   இந்தியா முழுவதும் இவை பரவும் …

   “புதிய இந்தியா” உருவாக….இதுவே வழி…!!! //

   ஒரு அசிங்கம் பிடித்த அரசியலை
   குஜராத்திலிருந்து வந்தவர்கள்
   இந்தியா முழுமைக்கும் அறிமுகப்படுத்தி
   இருக்கிறார்கள். மத உணர்வில் மயங்கிக்கிடக்கும்
   மக்கள் அந்த அசிங்கத்தை உணராமலே
   இருக்கிறார்கள். அவர்கள் மதத்தைத் தவிர
   மற்ற விஷயங்களைப் பற்றியும் யோசிக்கும்போது
   இந்த அசிங்கங்கள் அலறியடித்துக் கொண்டு ஓடும்.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பா ஜ க வெற்றி பெறவேண்டும் என்றால் எதையும்
  செய்வார்கள் என்பதற்கு இது ஒரு சாம்பிள் .

  உ பி மாநில தேர்தல் வருகின்றது என்றவுடன்
  ரூ 500 ,ரூ 1000 நோட்டுகளை தடை செய்தார்கள் .
  எதிர்கட்சிகளிடம் பணமில்லாமல் இருக்க வேண்டும்
  என்ற ஒரே காரணம்தான் .

  இதனால் நாட்டின் பொருளாதாரம் சீர் குலையும் என்பது
  எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டு இல்லை .

  ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு நடந்த போது
  முதல்வர் இடப்பாடி பழனிச்சாமி அது பற்றி தனக்கு
  ஒன்றும் தெரியாது என்று சொன்னது ஒருவேளை உண்மையாகத்தான் இருக்கும் .

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மெய்ப்பொருள்,

  // உ பி மாநில தேர்தல் வருகின்றது என்றவுடன்
  ரூ 500 ,ரூ 1000 நோட்டுகளை தடை செய்தார்கள் .
  எதிர்கட்சிகளிடம் பணமில்லாமல் இருக்க வேண்டும்
  என்ற ஒரே காரணம்தான் . //

  தடை பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே –
  நான் இது தான் முக்கிய காரணம் என்று
  இந்த தளத்தில் எழுதினேன்.

  ஆனால், நண்பர் புதியவன் உட்பட சிலர் அதை
  அப்போது கடுமையாக எதிர்த்தார்கள்.

  சில காலம் கழித்து புதியவன் அந்த கருத்தை
  ஏற்றுக்கொண்டார்…..
  மற்ற சில நண்பர்கள் இதுவரையும் ஏற்கவில்லை.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.