துரியோதனும் சகுனியும் நடுவில் ஒரு ஆளுநரும்….!!!


இந்த செய்திக்கு விமரிசனம் எதுவும் தேவைப்படவில்லை.

எனவே என் பங்குக்கு நான் எதுவுமே எழுதவில்லை.
செய்தித் தளங்களில் வெளிவந்திருப்பதைத் தான் கீழே
தந்திருக்கிறேன்.

source – https://minnambalam.com/k/2019/11/23/63/case-filed-by-agadi-
against-owth-of-fadnawis-ajith-pawar

https://minnambalam.com/k/2019/11/23/39/amitsha-ajith-pawar-under-ground-
operation-maharashtra-full-backround

———————-

மகாராஷ்டிரா:
பதவிப் பிரமாணத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

ஒரே இரவில் தேவேந்திர பட்னவிசை ஆட்சி அமைக்க
அழைத்து அவருக்கு பதவிப் பிரமாணமும் செய்து
வைத்தது எப்படி என்று மகாராஷ்டிர மாநில ஆளுநர்
பக்த்சிங் கோஷ்யாரிக்கு காங்கிரஸ் அடுக்கடுக்கான
கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்
ஆகிய கட்சிகள் இணைந்து தேவேந்திர பட்னவிஸுக்கு
முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டதை
ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று (நவம்பர் 23) டெல்லியில் செய்தியாளர்களை
சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங்
சுர்ஜிவாலா,

“ஏற்கனவே தங்களுக்கு மெஜாரிட்டி இல்லை என்று
தேவேந்திர பட்னவிஸ் பகிரங்கமாக சொல்லியிருந்தது
ஆளுநருக்குத் தெரியுமா – தெரியாதா? மெஜாரிட்டியே
இல்லாத பட்னவிஸை நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து
ஆட்சி அமைக்க அழைத்தது ஏன்?

மகாராஷ்டிராவில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் நிலவும்
குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்குவதற்கு எதன்
அடிப்படையில் ஆளுநர் சிபாரிசு செய்தார்?

தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி
பட்ன்விஸ் முதல்வராக ஆதரவு தெரிவிக்கிறோம் என்று
கூறினார்களா?

அப்படி தெரிவித்துக் கையெழுத்திட்ட ஆவணங்கள் ஆளுநரிடம்
உள்ளதா? அவ்வாறு கொடுக்கப்பட்ட கடிதத்தின்படி பட்னவிஸுக்கு
பெரும்பான்மை இருக்கிறது என்று ஆளுநர்
திருப்தி அடைந்தாரா? இது எதுவுமே விடை தெரியாத
வினாக்களாக இருக்கையில் இன்று நவம்பர் 23 ஆம் தேதி
பட்னவிஸுக்கு காலை 8 மணிக்கே பதவிப் பிரமாணம் செய்து
வைத்திருக்கிறார் ஆளுநர்.


“மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரம் முழுவதும் தேவேந்திர
பட்னவிஸ் பேசும்போது,

‘மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அஜித் பவாரை ஆர்தர் ரோடு
ஜெயிலுக்கு அனுப்புவேன்’ என்று அனைத்து கூட்டங்களிலும்
குறிப்பிட்டார்” –

– என்று சொல்லிய சுர்ஜிவாலா பிரச்சாரத்தில் பட்னவிஸ்
பேசிய அந்த வீடியோவை திரையிட்டுக் காட்டினார்.


மேலும் தொடர்ந்த அவர், “ஆர்தர் ரோடு சிறைக்கு
அனுப்புவேன் என்று சொல்லிவிட்டு அஜித் பவாரை
இப்போது துணை முதல்வராக ஆக்கிவிட்டீர்களே .
இது மோடி காலத்தில் மட்டுமே நடக்கும்.
தேவேந்திர பட்னவிஸும், அஜித் பவாரும்
துரியோதனும் சகுனியும் போன்று செயல்பட்டிருக்கிறார்கள்.
மராட்டிய மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள். ”
என்று கூறியிருக்கிறார் சுர்ஜிவாலா.

இந்த நிலையில்தான் இன்று (நவம்பர் 23) மாலை
மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை அமைத்திருக்கும்
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிளின்
சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்
செய்யப்பட்டிருக்கிறது.

அதில், “மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி
நவம்பர் 23 ஆம் தேதி காலை தேவேந்திர பட்னவிஸுக்கு
முதல்வர், அஜித் பவாருக்கு துணை முதல்வர் என பதவிப்
பிரமாணம் செய்து வைத்ததை ரத்து செய்ய வேண்டும்.

பெரும்பான்மையை வைத்துள்ள அகாதி கூட்டணியை
ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
….

ஊடகங்களுக்குத் தெரிந்து சிவசேனா- தேசியவாத
காங்கிரஸ்- காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்தது என்றால்
மஹாராஷ்டிரா பாஜக தலைவர் பூபேந்தர் யாதவ் –
அஜித் பவார் பேச்சு ரகசியமாகவே நடந்தது.

’தேசியவாத காங்கிரஸின் சட்டமன்றத் தலைவர் நீங்கள்தான்.
கட்சியை உடைக்கவெல்லாம் வேண்டாம்.

இன்று பல நிர்வாகிகள் உங்களோடுதான் இருக்கிறார்கள்.
எனவே பாஜகவுக்கு ஆதரவு கொடுங்கள். இல்லையென்றால்
கூட்டுறவு வங்கி ஊழலில் கைது செய்யப்படுவீர்கள்’
என்பது தான் பாஜக முன் வைத்த முதல் விஷயம்.
இன்னொரு முக்கிய விஷயம், ‘பாஜகவுக்கு ஆதரவு
கொடுத்தால் துணை முதல்வராகலாம். தேசியவாத
காங்கிரஸ் கட்சியை முழுமையாக உங்கள் கட்டுக்குள்
கொண்டு வரலாம்.

எங்களுக்கு சிவசேனாவை அழிக்க
வேண்டும் அவ்வளவுதான்’ என்பது. இந்த இரு
நிபந்தனைகளுக்கும் அஜித் பவார் ஒப்புக் கொண்டு
விட்டார்.

நேற்று இரவு நடந்தது என்ன?
நைட்ஷிப்ட் வேலை பார்த்த ஆளுநர் ….

நேற்று இரவு ஏழுமணிக்கு நேரு அறிவியல் மையத்தில்
பேச்சுவார்த்தையில் சரத்பவாரோடு அஜித் பவாரும் இருந்தார்.
வெளியே வந்து உத்தவ்தான் முதல்வர் என்று சரத்பவார்
சொல்லிச் சென்றார்.

உத்தவ் தாக்கரே தன் வீட்டுக்குச் சென்று அமைச்சரவை
தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இரவு 9.30 மணியளவில் அஜித் பவாரின் செல்போன்
அணைக்கப்பட்டது. இரவு 9.30க்கு மேல் தேவேந்திர
பட்னவிஸ் ஆளுநரை சந்திக்கிறார்.

இரவு 12.30க்கு அஜித் பவார் ஆளுநரை சந்தித்து தேவேந்திர
பட்னவிஸ் முதல்வராக ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கிறார்.

இதையடுத்து இன்று அதிகாலை 5.47 மணிக்கு
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி
குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவிடுகிறது.

வான்கடே மைதானத்தில்தான் பதவிப் பிரமாணம்
எடுத்துக் கொள்வேன் என்று ஏற்கனவே கூறியிருந்த
பட்னவிஸ் அவசர அவசரமாக திருட்டுக் கல்யாணம் போல
இன்று காலை எட்டு மணிக்கு ஆளுநர் மாளிகையிலேயே
பத்து பேர் முன்னிலையில் முதல்வராகிவிட்டார்.

….
….

.
—————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to துரியோதனும் சகுனியும் நடுவில் ஒரு ஆளுநரும்….!!!

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  உச்ச நீதி மன்றம் அவசர வழக்காக இன்று காலை விசாரிக்க உள்ளது .

  என்ன மாதிரி தீர்ப்பு வரும் ?
  ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு .
  கோர்ட் அதில் குறுக்கிடாது .
  ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க
  சொல்லியிருக்க வேண்டும் .
  எனவே மெஜாரிட்டி ஒரு மாதத்தில் ப்ரூவ் செய்யணும் .

  ஏனோ பழைய எம் ஜி ஆர் படத்தலைப்பு ஞாபகம் வருகிறது

  ” நீதிக்கு தலை வணங்கு “

 2. rramanisankar சொல்கிறார்:

  ட்விட்டரில் நண்பர் ஒருவரின் பதிவு: தொடர் தேர்தல் தோல்விகளால் கூட காங்கிரஸ் கட்சி இந்தனை அவமானப்பட்டதில்லை! பாஜகவை ஆட்சியமைப்பதிலிருந்து தடுக்க வேண்டும் எனும் மொண்ணை காரணத்தால் “ஒருபோதும் சிவசேனா போன்ற மதவாதக் கட்சியுடன் கூட்டணி கிடையாது” என அறிவித்து கெத்தாக இருக்கும் வாய்ப்பை, தவறவிட்டு அசிங்கப்பட்டு நிற்கிறது.

  • Ramnath சொல்கிறார்:

   rramanisankar,

   உங்கள் ஜால்ரா புத்தி வெளிப்படுகிறதே.

   இதில் காங்கிரசுக்கு எங்கே வந்தது அவமானம் ?

   தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி,
   வருமான வரி ரெய்டு செய்து பயமுறுத்தி
   தேர்தல் கூட்டங்களில்
   ஆர்தர் ரோடு ஜெயிலுக்கு அஜித் பவாரை அனுப்புவோம்
   என்று சொல்லி விட்டு, இன்று அவரோடு கெஞ்சி, கொஞ்சி,
   துணை முதலமைச்சராக்கி ஆட்சியமைப்பது யார் ?
   காங்கிரசா இல்லை உங்கள் மானங்கெட்ட பாஜகவா ?

   காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்பட்டிருந்தால்,
   கிடைத்த முதல் வாய்ப்பையே பயன்படுத்தி இருக்குமே.
   இத்தனை நாட்கள் ஏன் தள்ளிப்போட்டது ?
   ஒருமுறைக்கு பலமுறை சிவசேனாவிடமிருந்து
   உறுதி மொழி பெறத்தானே ?
   பாஜகவுக்கு ஆதரவாக எழுத வெட்கப்பட வேண்டியது
   நீங்கள்தான்.

   • R. Ramani Sankar சொல்கிறார்:

    Sir,
    Please tell me what is the difference between BJP and Shivsena. In fact Shivsena is worse than BJP in all respects. To go with Shivsena, Congress can lend their MLAs to BJP.

    • Ramnath சொல்கிறார்:

     R. Ramani Sankar

     i DON’T repeat DON’T support Congress.
     Congress joining with Shiv sena is defenitely not to be welcomed.

     But here instead of charging BJP for its failure to keep the
     promises given to Shiv Sena , you are exonerating them
     and instead condemning Congress only which is not correct.
     YOU BLAME both BJP and CONGRESS ; then I defenitely
     welcome your stand.

     • R. Ramani Sankar சொல்கிறார்:

      Sir,
      Here the topic is not BJP at all. BJP is the worst party as far I am concerned and the tweet of the friend which was shared by me sympathise Congress. They have captured lesser seats than all the parties. If Congress and NCP had the numbers to form the government the government, nobody would find fault. But aligning with Shivsena for the sake of power is unthinkable for me.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ரமணிசங்கர்,

   மஹாராஷ்டிரா விஷயத்தில் முதல் குற்றம்
   பாஜக தலைமையுடையது தான்.
   சிவசேனாவிற்கு தேர்தலுக்கு முன்பு வாக்கு
   தந்துவிட்டு, தேர்தலுக்குப் பின் அதை நிறைவேற்ற
   மறுத்தது தவறு.

   ஒருவேளை அது நடைமுறை சாத்தியமற்றது
   என்று தோன்றினால், அதை தனது கூட்டணியான
   சிவசேனா தலைவரிடம் மனம் விட்டுப்பேசி
   அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்க வேண்டும்.

   பாஜக தலை(மை) ஈகோ பிடியில் சிக்கி –
   எப்படியும் இறுதியில் சிவசேனா
   தன் வழிக்கு வருவதைத்தவிர
   அதற்கு வேறு OPTION எதுவும் இல்லையென்று
   நினைத்து முறுக்கிக் கொண்டு நின்றது.

   இது தான் பிரச்சினைகள் அத்தனைக்கும் மூல காரணம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. bandhu சொல்கிறார்:

  எனக்கென்னவோ இதில் சரத் பவாரும் உடந்தை என்று தோன்றுகிறது. பாஜக தாங்கள் எந்த விதத்திலும் காங்கிரஸுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று காட்டியிருக்கிறார்கள்.

  காங்கிரஸ் இந்த அளவு பலவீனமாக இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. காங்கிரஸ் என்று இல்லை. ஏதாவது ஒரு பலமான எதிர்கட்சி இருப்பது முக்கியம்

 4. Mani balan சொல்கிறார்:

  Pee in the pool…. – Updated joke for modern times:

  Little B.JohnnyPaty was approached by the lifeguard at the public swimming pool.

  “You’re not allowed to pee in the pool,” said the lifeguard. “I’m going to report you.”

  “But everyone pees in the pool. Look at Johngress, Shiva, JanataDil, and everybody!” insisted Little B.JohnnyPaty.

  “That may be,” said the lifeguard, “but not from the diving board! They do it inside the water with the sense of guilty. You do it from the diving board with pride”

  The new story continues…

  Next day, IT got the tip about lifeguards wealth and went for the raid. Lifeguard was fired.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மணி பாலன்,

   உங்கள் பின்னூட்டம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
   சொல்லாமல் சொல்லும் கலை….
   உங்களுக்கு நன்றாக வந்திருக்கிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   இதைப்பற்றி ஒன்று எழுத நினைக்கிறேன். இது ஹைஜீனிக் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், நீச்சல் குளத்தில் ஸ்பெசிஃபிக் கெமிக்கல் கலப்பது வழக்கம் (வெளிநாடுகளில்). யாரேனும் ஒன்றுக்கு தண்ணீருக்குள் அடித்தால் அது வேதி வினை புரிந்து சிவப்பு நிறமாக மாறும், அடிப்பவரின் உடலிலும் அந்த நிறம் ஒட்டிக்கொள்ளும். இது நீச்சலடிக்கும்போதே தண்ணீருக்குள் இந்த வேலையைச் செய்யக்கூடாது என்பதற்காக ஏற்பட்டது.

   அதுனால வெளிநாட்டில் இந்த வேலையைச் செய்யுமுன் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    புதியவன்,

    தேவலையே… இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே.
    நான் இதுவரை இந்த செய்தியை கேள்விப்பட்டது இல்லை.

    விரைவில் இந்தியாவுக்கும் வந்துவிடுமென்று
    நினைக்கிறேன். குறைந்த பட்சம்
    ஸ்டார் ஓட்டல்களில்… 🙂 🙂

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 5. புதியவன் சொல்கிறார்:

  இந்தச் செய்தியைப் படித்தேன். மின்னம்பலம் செய்திகள் ஒரு ரெஃபெரன்ஸுக்குத்தான். அவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்றபடி செய்திகளை பிரசுரம் செய்வதில் வல்லவர்கள். ஏகப்பட்ட ஸ்பான்ஸர்டு செய்திகள், அவர்களைப்பற்றிய செய்திகளை அடக்கி வாசிப்பது, அல்லது செய்திபோன்றே அவர்களுக்கு விளம்பரம் செய்வது, திமுகவுக்காக செய்திகளை உருவாக்குவது என்பது மின்னம்பலத்தின் கலை. நிற்க…

  1. பாஜக மகாராஷ்டிரா விஷ்யத்தில் செய்தது அநீதி. இதனால் அவர்கள் நிச்சயம் அரசியல் அரங்கில் தலைகுனியப்போகிறார்கள். தாங்கள் தங்களைப்பற்றி ப்ரொஜக்ட் செய்வதற்கு மாறாக, மிகத் தாழ்ந்த அரசியலைச் செய்யும் பாஜக, காங்கிரஸ், மற்ற கட்சிகளைக் குறை சொல்லும் யோக்கியதையை இழந்து நிற்கிறது.

  2. அஜித் பவார் செய்தது, கிட்டத்தட்ட மு.க.முத்து செய்ததைப் போன்றதா இல்லை மு.க அழகிரி செய்ததைப் போன்றதா என யோசிக்கிறேன். அதனால் அரசியல் வாழ்வை இழந்தது இந்த இருவரும்தான். யாரை எதிர்த்துச் செய்தார்களோ அவர்கள் பாதிக்கப்படவில்லை. (ஒருவேளை சரத்பவார் படுத்த படுக்கையாக கிடக்கும்போது இது நடந்திருந்தால் ஒருவேளை அஜித்பவார் அரசியலில் உயர்ந்திருக்க வாய்ப்பு சிறிது இருந்திருக்கலாம். பொதுவா மக்கள், கட்சித் தொண்டர்கள், இரத்த சம்பந்த வாரிசைத்தான் நம்புவார்கள். அதனால்தான் ராஜ் தாக்ரேயைவிட உத்தவ் மேலெழ முடிந்தது)

  உச்சநீதிமன்றத்தில் பாஜக தலைகுனியும் என்றே நான் நினைக்கிறேன்.

  இதில் காங்கிரஸைக் குறை சொல்ல எந்தக் காரணமும் இல்லை. அவங்களுக்கு குறிப்பிடத்தக்க எம்.எல்.ஏக்கள் பலமும் இல்லை. பாஜக ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய அவர்கள் தானாக முனையலை, வந்த வாய்ப்பை ரொம்ப யோசித்து உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவ்ளவுதான்.

 6. புதியவன் சொல்கிறார்:

  //இதற்கு, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: அலுவல் ஒதுக்கீடு சட்டத்தின், 12வது விதியின்படி, அவசர காலங்களில் அமைச்சரவையை கூட்ட முடியாத நிலையில், முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே, ஜனாதிபதி ஆட்சியை நீக்க பிரதமர் பரிந்துரைத்தார். அதனடிப்படையில், ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்//

  https://www.dinamalar.com/news_detail.asp?id=2419244

  நீங்கள், எய்தவர்கள் இருக்க, அம்பை நொந்துகொண்டு இடுகை போடுகிறீர்கள் கா.மை. சார்…. எந்த அளவுக்கு பாஜக இந்த விஷயத்தில் கீழியிறங்கியிருக்கிறது என்று பாருங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   இங்கு இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும்…

   1) இப்போதெல்லாம் நான் ஒரு புதிய உத்தியை
   சோதித்துப் பார்க்கிறேன்… சிந்திக்க வேண்டிய
   செய்திகளை மட்டும் கொடுத்து,
   படிப்பவர்களையே யோசிக்கத் தூண்டுவது …

   2) // எய்தவர்கள் இருக்க, அம்பை நொந்துகொண்டு
   இடுகை போடுகிறீர்கள் கா.மை. சார் //

   -எய்தவர்களை இன்றோ-நாளையோ,
   கோர்ட் கவனித்துக் கொள்ளும் என்று
   நினைக்கிறேன் – நீதிமன்றங்களின் மீது
   (இதுவரை) உள்ள நம்பிக்கையால்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Ezhil சொல்கிறார்:

    எய்தவர்களை நீதிமன்றம் நன்றாக கவனிக்கும் என்று நம்புகிறீர்களா கா.மை சார்.. வேண்டுமானால் ஒரு கண்டனம் மட்டும் வரும்.. அதுவும் எய்தவர்களுக்கு உரைக்கப்போவதில்லை …

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     மன்னிக்கவும்….

     நான் மேலே எழுதியிருந்த –

     // -எய்தவர்களை இன்றோ-நாளையோ,
     கோர்ட் கவனித்துக் கொள்ளும் என்று
     நினைக்கிறேன் – நீதிமன்றங்களின் மீது
     (இதுவரை) உள்ள நம்பிக்கையால்…!!! //

     – இந்த பகுதியை திரும்பப் பெற்றுக்
     கொள்கிறேன்.

     இதற்கு முன்னால், நான் படித்த
     அரசியல் சட்டத்தில்,
     நீதிமன்றங்கள் மத்திய அரசின்
     கட்டுப்பாட்டுக்குள்
     வராது என்று படித்திருந்தததாக
     நினைவு.

     ஆனால், இன்று அதைப்பற்றி
     சந்தேகம் வந்திருக்கிறது…. நான்
     இந்த விஷயத்தை மீண்டும்
     உறுதிப்படுத்திக் கொள்ளும் வரையில்,
     மேற்கண்ட பகுதியை திரும்பப்
     பெற்றுக்கொள்கிறேன்.

     .
     -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.