பசிபிக் பெருங்கடலில் ஒரு துளித் தீவில் – சில தமிழர்கள்… ???


 

அமெரிக்காவிற்கும் ஒரு காலனி நாடு உண்டு என்று
இதுவரை நாம் யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமா…?

இருக்கிறதாமே – “அமெரிக்கன் சமோவா”…!!!

எத்தனை பெரிய கடல் பசிபிக் பெருங்கடல்…!!!

– வாஷிங்டன் நகரிலிருந்து 7026 மைல் தொலைவில்,
ஹவாயிலிருந்து 2500 மைல் தொலைவில் –
ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே,
நியூசிலாந்திற்கு வடக்கே –

நாலு பக்கமும் நீர் சூழ்ந்திருக்க, 7 குட்டித்தீவுகளை
உள்ளடக்கிய ஒரு குட்டித்தீவு… நாடு….

இதன் மொத்த பரப்பளவு – 77 சதுர மைல்கள் மட்டுமே.
மொத்த ஜனத்தொகை – 55,689 பேர்கள் மட்டுமே…
அமெரிக்காவுடன் இதற்குண்டான உறவு
எப்படி அழைக்கப்படுகிறது….?

Political Status –

The head of state of American Samoa is the President of
the United States. The President does not play an active role
in government. Responsibility for coordinating federal policy
is delegated to the Secretary of Interior and, more specifically,
to the Department of Insular Affairs.

American Samoa is an
– unincorporated,
– unorganized territory of the United States.

Both of these terms are complex in nature and require
considerable study to fully understand. Unincorporated means
there are some, albeit rather minor, differences between the
rights of the citizens of a territory and a full US citizen.

American Samoans born in the territory are considered
U.S. “nationals”,( but not “citizens”) –
the only such designation among
all U.S. possessions and territories.

American Samoans have most of the rights and privileges of
U.S. citizens except the right to vote in state or
national elections or to hold some state and federal jobs.

இந்த அமெரிக்கன் சமோவா – அந்நாட்டு குடிமக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவர்னரால் நிர்வகிக்கப்படுகிறது.
ஓட்டு உரிமை இல்லாத ஒரு பிரதிநிதியை இவர்கள்
தேர்ந்தெடுத்து, அமெரிக்க செனட்டுக்கு அனுப்புகிறார்கள்.

– எல்லாம் சரி…
இவற்றையெல்லாம் நான் இங்கு எழுதுவதற்கு
என்ன காரணம்….?

விமரிசனம் தளத்தை நிர்வகிப்பதற்கு, wordpress-
ஒரு Dash Board அமைப்பை தந்திருக்கிறது.
அதில், தினந்தோறும் எத்தனை நபர்கள் வருகை தருகிறார்கள்,
எந்தெந்த நாடுகளிலிருந்து மொத்தம் எத்தனை பேர்
வருகிறார்கள் என்கிற விவரங்கள் தரப்படுகின்றன.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், கனடா,
வளைகுடா நாடுகள், சிங்கப்பூர்,மலேசியா,
ஆஸ்திரேலியா, ஹாங்காங், நார்வே, ஸ்விஸ்,
ஜப்பான், ஸ்ரீலங்கா, எத்தியோப்பியா – என்று பல நாடுகளை
தினமும் காட்டிக்கொண்டிருக்கும் அந்த தளம் –

கடந்த 5-6 நாட்களாக புதிதாக American Samoa என்று
ஒரு நாட்டின் பெயரை காட்டுவதைப் பார்த்தவுடன்,
இப்படி ஒரு நாட்டைப்பற்றி இதுவரை நாம் கேள்விப்பட்டதே
இல்லையே என்று ஆச்சரியத்துடன் வலையில் தேடினேன்…

அதில் கிடைத்தவை தான் மேற்படி விவரங்கள்.

எங்கோ – பசிபிக் பெருங்கடலின் நடுவில் இருக்கும்
இந்த குட்டித் தீவிலிருந்து அண்மையில் சில நாட்களாக
தினமும் சராசரியாக 7-8 தமிழர்கள் இந்த விமரிசனம் தளத்தை
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது….!!!

யார் அந்த தமிழர்கள்…?
திடீரென்று இவ்வளவு தொலைவில் உள்ள
இந்த தீவில் இவர்கள் எப்படி தோன்றினார்கள்…?

வேறு யாராக இருக்கும்…
உலகம் முழுவதும் இன்று தமிழோசை
கேட்கிறது என்றால் அது புலம் பெயர்ந்த –
இலங்கைத் தமிழர்களின்
காரணமாகத் தானே….?

புதிதாக, அமெரிக்கன் சமோவா தீவிற்கு குடியேறியிருக்கும்
அந்த தமிழர்களை, என் சார்பாகவும், இந்த தள நண்பர்களின்
சார்பாகவும் வாழ்த்துக் கூறி வரவேற்கிறேன்…
அவர்களுக்கு, பின்னூட்டம் எழுதக்கூடிய அளவிற்கு
வசதி இருக்குமேயானால், யாராவது ஒருத்தராவது எழுதினால்,
அது நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கும்.
ஒருவேளை அதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லாமலும்
போகலாம் என்பதை நான் உணர்கிறேன்.

இன்றைய தினத்தில் டெக்னாலஜியின் வளர்ச்சி –
தொலைவு ஒரு பொருட்டே அல்ல என்பதை மீண்டும் மீண்டும்
நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியான ஒரு அனுபவத்தை நமக்கு தந்தமைக்காக,
அந்த டெக்னாலஜி-க்கு நன்றிகள்.

———————————————–

“அமெரிக்கன் சமோவா” தீவிலிருந்து – சில புகைப்படங்கள் கீழே –
………………………………………………………..


 

இப்போதைய கவர்னர்

……………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பசிபிக் பெருங்கடலில் ஒரு துளித் தீவில் – சில தமிழர்கள்… ???

  1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    CALVARY TEMPLE என்தை ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்பட்டு “காவேரி டெம்பிள்” என்று படித்துவிட்டு திகைத்துப்போனேன். பின்னர் தான் சரியாக படித்தேன். உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழ்த்தேசத்தில் தோன்றியதால் அவன் காலடி படாத இடமே இல்லாமல் இருக்கும் என்றே நினைக்கின்றேன், இந்த பூவுலகில்.

  2. Sharron சொல்கிறார்:

    Samoans are beautiful singers.

  3. Sharron சொல்கிறார்:

    Plenty Samoans live in Aus and Nz but surprised to know that tamilians are living there.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.