…
…
இரண்டு செய்திகள்…
1) முதலில் பாசிடிவ் –
அரசு அதிகாரிகள் இவ்வளவு ஆர்வத்தோடு பணி புரிவது
மயக்கம் தருகிறது …
சென்னை மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பெறும்
குழந்தைப்பள்ளிகள் – 1806 அங்கன்வாடிகளை
சீரமைத்து, குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம்,
பயனுள்ள வகையில் மாற்ற முயற்சிகள்
நடைபெறுகின்றன….
ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்,
அதிகாரிகள் பாராட்டுதற்குரியவர்கள்….!!!
முடிவு செய்யப்பட்டுள்ள சில மாதிரிகள் –
…
…
…
…
…
——————————————————————————————————————————————————————-
2) இது நெகடிவ் – பயம் வருகிறது….
…………..
புதுடில்லி: கடந்த ஏப்ரல் முதல் – செப்டம்பர்…. வரையிலான
6 மாத காலத்தில், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி
அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசு, ராஜ்யசபாவில்
தெரிவித்தது.
இதுகுறித்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமன், ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
ரிசர்வ் வங்கி தகவலின் படி, கடந்த ஏப்., 1 முதல்
செப்., 30ம் தேதி வரையிலான 6 மாத காலத்தில்,
5,743 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இந்த காலகட்டத்தில்
பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,760.49 கோடி அளவுக்கு
மோசடி நடந்துள்ளது.
————————————–
பின் குறிப்பு – இந்த மோசடிகள் நடந்த விதம், காரணம்,
சம்பந்தப்பட்டவர்கள் யார், என்ன மேல் நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டன என்கிற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பயமுறுத்துகிறதே – 6 மாதத்தில் 95,000 கோடி மோசடியா…?
இத்தனை கண்காணிப்புகளிடையே –
இது எப்படி நடந்தது….?
.
——————————————————————————————————————————————————————
100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போல்,
எவ்வளவு விரைவில் ஒரு லட்சம் கோடி மோசடியை
தொடலாம் என்று முயற்சிக்கிறார்கள் போலிருக்கிறதே.
வெறும் 6 மாதத்தில் 95,000 கோடி லூட் எப்படி சாத்தியம் ?
இந்த செய்தியை வெளியிடுவதற்கு அவர்களுக்கே
அச்சமாகவோ, அதிர்ச்சியாகவோ, வெட்கமாகவோ இல்லையா ?
நிஜமாகவே இது பயமுறுத்தும் விஷயம் தான்.
//இந்த மோசடிகள் நடந்த விதம், காரணம், சம்பந்தப்பட்டவர்கள் யார், என்ன மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்கிற விவரங்கள் வெளியிடப்படவில்லை.//
திருடும் ஆட்கள்தான் மாறுகிறார்களே தவிர மத்திய அரசு இதிலெல்லாம் எந்த அக்கறையையும் செலுத்தவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. ஒருவேளை தற்போதைய திருடர்கள் மத்திய பாஜக அரசுக்கு வேண்டியவர்களோ என்றும் யோசிக்கிறேன். 1 லட்சம் கோடி ஊழல் (மோசடி என்றாலும் ஊழல்தானே) எப்படி நடக்க முடியும்? வாராக்கடனுக்குப் பொறுப்பானவர்கள் அனைவருக்கும் பென்ஷன் கிடையாது, வேலையை விட்டுத் தூக்கப்படுவார்கள் என்று சொல்வது மட்டுமல்ல, அவர்கள் உள்ளே வைக்கப்படுவார்கள் என்று சொன்னாலே, இவை நடைபெறாது என்று நம்புகிறேன்.
ஒருவேளை ஜி.எஸ்.டி வரவுக்குப் போட்டியாக அதே அளவில் மோசடிகளும் நடந்துகொண்டுவருகிறதோ?
udaya suriyan kannila padaliya
சென்னை மாநகராட்சியில் அல்லக்கைகள் அதிகம். அதனால் இதனை நான் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. மாநகராட்சியில் இருப்பவர்கள்தானே திருட்டு நிலத்தை சட்டபூர்வமாக்கியதற்கு (கோபாலபுரம், அறிவாலயம் போன்று) முழுமுதல் காரணகர்த்தாக்கள்.
Raj,
//udaya suriyan kannila padaliya//
சூரியன் தான் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறதே;
வேறு பக்கம் தேடுங்கள்.
சூரியன் இந்த பக்கதிலும் இருக்கு