ம(ற)றைந்து கொண்டிருக்கும் சில அனுபவங்கள்….குறைந்த பட்சம்…(!!!) –
3 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த தளத்திற்கு
வந்து செல்கின்றனர் – என்பதை நான் உணர்கிறேன்.

இவர்களில் – அனுபவித்தவர்களும் உண்டு.
– அறிந்தவர்களும் உண்டு…
– இழந்தவர்களும் உண்டு.

ஒவ்வொரு
தலைமுறையாக,

மறைந்து போவதும் –
மறந்து போவதும்,
எத்தனையெத்தனை அனுபவங்கள்… ஆனந்தங்கள்…!!!
கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்ப்போமே…

மீண்டும் வருமா இந்த வசந்த காலங்கள்…?

(சிரத்தையுடன் இவற்றை தயாரித்தவர்களுக்கு நமது நன்றிகள்…)
…………………

கடந்த காலமும், நிகழ்காலமும் ஒன்று சேர்ந்து
வாழக்கூடிய அந்த வாய்ப்பை இறைவனும்,
இயற்கையும் நமக்கு மீட்டுக் கொடுத்தால் தான் என்ன
கெட்டுப் போய் விடும் …?

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ம(ற)றைந்து கொண்டிருக்கும் சில அனுபவங்கள்….

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்த மாதிரி வாட்சப் செய்திகளில் சில எனக்கு எரிச்சல் உண்டாக்கும், காரணம் அதனை உண்டாக்குபவர்களின் மிகக் குறைந்த தமிழ் அறிவு. வைத்து-க்-கொண்டு, அபதாகளின் – அப்பத்தாக்களின், பலருக்கு+க்+கிடைக்காத, விளையட்டு+ப்+பொருளும், சொர்கத்துக்கு+ப்+போகணும்னா, இல்லை,

  மற்றபடி சொல்லும் செய்திகள் உண்மைதாம். ஆனா, நாம் காலத்தில் பயணித்துக் கடந்த ஸ்டேஷன்கள் மீண்டும் திரும்ப வராது. இந்தப் படங்களைத் தயாரித்த யாருமே கிராமத்திலிருந்து இதனைத் தயாரித்ததில்லை. கிடைத்த படங்களை வைத்துக்கொண்டு மீம்ஸ் போடறாங்க.

  அப்பா, அம்மா, அவங்க பசங்க நினைவு தெரிந்து வளரும்போது பெரும்பாலும் குடும்பத்தைக் கவனிக்கவேண்டிய, அவர்களை வளர்க்க/படிக்கவைக்க/கண்காணிக்க வேண்டிய நிலையில் இருப்பதால், பெரும்பாலும் போலீஸ் வேலை போல் அவர்களது வேலை ஆகிவிடும். அதனால் நினைத்த அளவு பாசம் காட்டி வளர்க்க இயலாது. ஆனால் அதுவே தாத்தா/பாட்டி நிலைக்கு உயரும்போது, அங்கு நமக்கான ரெஸ்பான்சிபிலிட்டி இல்லை. அதனால் பேரன்/பேத்தியை நிறையவே கொஞ்ச முடிகிறது. (சும்மா இதைச் சாப்பிடுடா. அப்பா/அம்மாட்ட நான் சொல்லமாட்டேன். போடா அவன் கிடக்கறான். வா.. ரெண்டுபேரும் சினிமா போவோம் என்பதுபோல) அப்போவும் நாம் தற்போதைய காலத்துக்கேற்று கொஞ்சம் மாற்றிக்கொண்டால்தான், பேரன்/பேத்தி வளர்ந்தபோதும் அந்த அன்பை இன்னும் வளர்க்க இயலும்.

  நான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்குச் சென்று பார்த்தால், நான் வளர்ந்த கிராமமாக அது இல்லை. அங்கு இன்று என்னால் வாழ முடியும்னு தோணலை, அவ்வளவு குறைந்த வசதியுடன். ஆனாலும் நான் வளர்ந்தபோது அந்தக் கிராமம் கொடுத்த சந்தோஷத்துக்கு அளவில்லை. இன்றைக்கு அந்தக் கிராமத்து ஆறு பாழ்பட்டிருப்பதற்கு, அந்தக் கிராமத்தைவிட்டு வெளியேறிய என்னைப்போன்ற பல குடும்பங்களும் ஒரு காரணம்தான்.

  என் சிறிய தந்தையிடம் கேட்டேன் (அவர் வேறொரு ஊர்). எப்படி அவ்வளவு சிறிய திண்ணையில் நாங்க பசங்க 5 பேரும், பெரியவர்கள் இருவரும் இரவு பேசிக்கொண்டே படுத்திருந்தோம் என்றேன். அதற்கு அவர், அப்போ திண்ணை சிறிதாகவும், நம் மனங்கள் பெரிதாகவும் இருந்தது… வளர்ந்த பிறகு மனம் குறுகிவிட்டதால், திண்ணை மிகச் சிறிதாகத் தோற்றமளிக்கிறது என்றார். உண்மைதானே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நீங்கள் சொல்வது போல், வாட்சப்,களில் வரும்
   சில அநாமதேய படைப்புகள் எரிச்சலையூட்டுகின்றன
   என்பது உண்மை தான்.

   ஆனால், அபூர்வமாக சில அருமையான படைப்புகளும்
   வருகின்றன… எழுதியவரைப் பாராட்டலாமென்று
   பார்த்தால், அது எத்தனையோ பேர்களை கடந்து
   வந்திருக்கும். படைத்தவர் யாரென்று கண்டுபிடிக்கவே
   முடியாது.

   சில அபத்தங்களை உள்ளடக்கி இருந்தாலும் கூட,
   எனக்கு கிடைப்பவற்றில், நல்ல அம்சங்கள் உள்ளவை
   என்று தோன்றுவதை மட்டுமே நான் இப்படி
   பகிர்ந்துகொள்கிறேன்.

   பேரக்குழந்தைகளின் மீது மட்டுமல்ல.
   நம்முடன் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரின்
   மீதும் இளமைக்காலத்தை விட அதிகமாக
   -ஒரு பரிவும் அன்பும் செலுத்த வயதான
   இந்த காலத்தில் எனக்கு இயல்பாகவே முடிகிறது….

   இதற்கு முக்கிய காரணம் –
   பணத்தைத் தேடி (குடும்பத் தேவைகளுக்காகத்தான் )
   ஓடுவதை நிறுத்திக் கொண்டு விட்டது தான் என்று
   எனக்கு தோன்றுகிறது.

   குடும்ப பொறுப்புகளை நல்லபடியாக
   நிறைவேற்றி விட்டால், தேவைகளை
   குறைத்துக் கொண்டு இருப்பதே போதுமென்ற
   மனதுடன் எதிர்பார்ப்புகளின்றி வாழ்ந்தால்,
   அங்கே அன்புக்கும் பாசத்துக்கும் குறைவே இருக்காது…
   என்பது எனக்கு அனுபவப்படுகிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.