…
…
…
சனிக்கிழமை இரவு (16/11/2019) தந்தி
தொலைக்காட்சியில் – மூத்த இணையாசிரியர்
ஹரிஹரன், தமிழருவி மணியன் அவர்களுடன்
நடத்திய ஒரு நேர்காணல் ஓளிபரப்பப்பட்டது…
முழுக்க முழுக்க திரு.ரஜினிகாந்த் அவர்களின்
அரசியல் அணுகுமுறை பற்றிய பேட்டி அது.
ரஜினி, நேரடியாக செய்தியாளர்களிடம் தன்
அரசியல் அணுகுமுறைகளைப்பற்றி விரிவாக இதுவரை
பேசாததால்,
-அவருடன் நெருங்கிப் பழகி வரும்,
அவரது மனநிலை மற்றும் எதிர்காலத் திட்டங்களைப்பற்றி
ஓரளவு நன்றாக அறிந்த – தமிழருவி மணியன் அவர்களின்
பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
இதை தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பில்லாத
வாசக நண்பர்களின் வசதிக்காக கீழே பதிகிறேன்….
…
…
-ரஜினி தனியே அரசியலுக்கு வருவதாக
நான் நினைக்கவில்லை. அவருடன் கூடவே –
சில சிறந்த சிந்தனையாளர்கள்,
பொருளாதார ஆலோசகர்கள் ஆகியோரும்
துணைக்கு களத்தில் இறங்குவார்கள்
என்று தெரிகிறது.
இந்த பேட்டியின் முதல் விளைவாக –
– இதுவரை ரஜினியை
மூர்க்கமாக எதிர்த்துக் கொண்டிருந்த –
திமுக/அதிமுக கூட்டணிகளைச் சேர்ந்த சில கட்சிகள்,
ரஜினி கட்சி தன்னோடு, இதர சில கட்சிகளையும்
கூட்டணியாக சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது
என்று சொல்லப்பட்டிருப்பதால்,
தங்கள் தீவிர எதிர்ப்பைக் குறைத்துக் கொண்டு –
புதிய கூட்டணியில் தங்களுக்கான வாய்ப்பு குறித்து
யோசிக்கத் துவங்கி, ஜாக்கிரதையாக பேசக்கூடும்.
–
மற்ற விளைவுகள்….?
– வாசக நண்பர்களின் கருத்துகளை
பின்னூட்டங்களில் எதிர்பார்க்கிறேன்.
.
——————————————————————————————————————————————————————
திமுக, அதிமுக இரண்டும் மாற்றி மாற்றி
செய்த ஊழல் ஆட்சிகளால் நொந்துபோயுள்ள
தமிழ் மக்கள் ரஜினியை வரவேற்க
ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ரஜினி வெற்றி பெற வேண்டியது
தமிழகத்தின் நல்லதொரு எதிர்காலத்திற்கு
மிக மிக அவசியம்.
படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று
அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும்.
கே.எம்.சார்,
ரஜினியின் வெற்றிக்காக நீங்கள்
நிறைய எழுத வேண்டும். இதிலும் நடுநிலை
வேண்டாம். இது எனது வேண்டுகோள்.
சார்… உங்கள் விருப்பம், தற்போதைய கட்சிகளினால் நொந்துபோய், தமிழகத்துக்கு நல்ல தலைமை கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு எனக்குப் புரிகிறது.
உங்கள் படத்தைப்போல் அவர் இருந்தால் நிச்சயம் வாய்ப்பிருக்கும். ஆனால் பாவம்..இந்த வயதில் அரசியலில் நுழைந்து என்ன சாதிக்கமுடியும்? அவர் தனியாக வந்தால், நான் அவருக்கு வாக்களிக்கலாமா என்று யோசிப்பேன், ஆனால் அதற்கு, அவர் திமுகவைத் தோற்கடிப்பார் என்று நம்பிக்கை வரணும், பாஜக அதிமுகவுடன் கூட்டுச் சேரணும்.
எனக்கு இதுதான் நிதர்சனம் என்று தோன்றுகிறது.
புதியவன்,
உங்களுக்கு ரஜினியின் மீது
ஏன் இவ்வளவு ஆத்திரம் ?
அரசியல் ஹராகிரி பண்ணிக்கொள்ள
வழிசொல்கிறீர்களே 🙂 🙂 🙂
தமிழகத்தில் – பாஜகவுடன் யார் கூட்டு
சேர்ந்தாலும் அதோகதி தான் என்று நீங்களே
முன்பு சொல்லி விட்டு, இப்போது,
இதையும் சொன்னால் என்ன அர்த்தம் ?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நான் எழுதும்போதே கன்ஃப்யூசிங் ஆக இருக்கோன்னு நினைத்தேன். வாக்கியத்தை சரியாச் சொல்றேன்.
1. பாஜக அதிமுகவுடன் கூட்டுச் சேரணும் – அப்போ அதிமுக அம்போ. என் வாக்கு அதிமுகவுக்கு கிடையாது. இதுக்கு காரணமும் நீங்க தெரிஞ்சுக்கணும். அதிமுக இருந்த நிலைமை என்ன. அதனை தன் காலடியில் மிதிப்பதுபோல கையை முறுக்கும் பாஜகவின் அதிகார தோரணையை நான் வெறுக்கிறேன். 1000-2000 வாக்கு கூட இல்லாத ஒரு கட்சி, தொகுதிக்கு 40,000-65000 வாக்குகள் உள்ள அதிமுகவை மத்திய அரசு என்ற ஹோதாவில் மிரட்டுவதை எந்த தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
2. ரஜினி திமுகவைத் தோற்கடிப்பார் என்ற நம்பிக்கை வரணும். அப்போ நான் வாக்களிக்கலாமான்னு யோசிப்பேன்.
ஆனா பாருங்க… எனக்கு ரஜினி அந்த வீர்யத்தோடு வருவாருன்னு நம்பிக்கை இல்லை.
புதியவன்,
//ஆனா பாருங்க… எனக்கு ரஜினி அந்த வீர்யத்தோடு
வருவாருன்னு நம்பிக்கை இல்லை.//
ஒருவேளை வீரியத்துடன் வந்து, ஜெயித்தும் விட்டாரென்றால்,
அப்போது உங்களுடைய “கமெண்ட்ஸ்” என்னவாக
இருக்கும்….?
சொல்லுங்களேன் – நடக்கிறதோ, இல்லையோ –
தெரிந்துகொள்ள ஆசை.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கே.எம்.சார்,
அவருடைய ஆசைல மண்ணை அள்ளிப்போட
உங்களுக்கேன் ஆசை சார் ? 🙂
சார்… அனேகமா நாம் இருவரும் இந்த விஷயத்தில் ஒரே கருத்துதான் கொண்டிருக்கிறோம்னு நினைக்கிறேன். தமிழகத்துக்கு ஜெ. வுக்கு அப்புறம் நல்ல தலைமைக்கான வெற்றிடம் இருக்கு என்று. ஆனா அரசியல் என்பது மிகவும் கடினமான களம். ஜெ. என்ன செய்து அதைத் தக்கவைத்துக்கொண்டார்னு இங்க நான் எழுதப்போவதில்லை. ஒரு நல்ல தலைவன், தொலைக்காட்சி இண்டர்வியூவுக்கோ அல்லது நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லணும்னோ நான் நினைக்கவில்லை. தமிழக நிருபர்கள், தொலைக்காட்சிகள் லட்சணம் நமக்கு எல்லாமே தெரியும். என் ஒரே சந்தேகம், ரஜினியின் வயது. எவ்வளவு எஃபர்ட் தேவைப்படும் களம் அரசியல், அதுக்கு அவர் இனி எப்படி சரிப்படுவார் என்பதுதானே தவிர, அவருடைய integrity பற்றி அல்ல. அவர் மாத்திரம் தைரியமாக 96ல் இறங்கியிருந்தால், காலம் அதிமுக, ரஜினி என்ற இரு பெரும் கட்சிகளுக்கிடையிலான களமாக மாறியிருக்கும். இப்போது, கூட்டணிகளை வைத்துக்கொண்டு ஸ்டாலின் கும்பல் வந்துவிடக்கூடாது, கருணாநிதியின் ஊழல் சாம்ராஜ்யம் தொடர்வதாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் என் ஆசை.
ரஜினி வீரியத்துடன் வந்து வெற்றி பெற்று, ‘காத்திருந்தவன்…… நேற்று வந்தவன்…..” என்ற பழமொழியை மெய்ப்பித்தால், எனக்கு மகிழ்ச்சிதான்.
//பாஜக அதிமுகவுடன் கூட்டுச் சேரணும்.//
இதை விட நேரடியாக பாழுங்கிணற்றில்
குதிக்கவேண்டும் என்று சொல்லி விட்டு
போகலாம்.
சொன்னால் பலமான மறுதளிப்பு. ஆனால்,
மீண்டும் பாஜக ஆதரவு மனப்பான்மையே
இங்கும் வெளிப்படுகிறது.
ரஜினியின் வித்தியாசமான அரசியல் இதுதான் –
அவர் படம் வெளிவரும்போது எதோ அறிக்கை விட்டு
பரபரப்பை ஏற்படுத்தி , படம் ஓடினால் சரிதான் .
அவரால் பா ஜ க வை ஆதரிக்க முடியாது –
டெபாசிட் காலி .
பா ஜ க வை எதிர்க்கவும் முடியாது – ரெய்டு , ஐ டி ,
எல்லாம் கண்ணு முன்னால் வந்து போகுமா இல்லையா ?
ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும் – எல்லாம் தொழில் நேக்கு !
மெய்ப்பொருள் – ரஜினியை ஐடி ரெய்டு எதுவும் அசைக்க முடியாது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அப்படி எதுவும் நடக்கணும்னு நான் வேண்டிக்கறேன். அப்போதான் அவர் வீரியத்தோடு வரவும், மக்களால் பார்க்கப்படவும் முடியும். (ஆனா அவருக்கு அதற்கான வயதில்லை என்ற என் கருத்தில் மாற்றமில்லை) பாஜகவுக்கு தனியாக 1% வாக்குகூட தமிழகத்தில் கிடையாது.
இது எதுக்கும் DMK-ஐ குறை சொல்லலை !!!
ராஜ்… கொஞ்சம் யோசித்துப் பாருங்க. கருணாநிதி, எப்போது மக்கள் ஆதரவு பெற்று முதல்வராயிருக்கார்னு. அவர் (திமுக) வெற்றி பெற்றது, ஆளும் கட்சி எதிர்ப்பு இருந்தபோது மட்டும்தான், அந்தப் பருப்பும் எம்.ஜி.யாரிடம் வேகவில்லை. கருணாநிதியோ திமுகவோ ஆட்சிக்கு வரவேண்டும் என்று மெஜாரிட்டி மக்கள் என்றுமே விரும்பியதில்லை.
மெஜாரிட்டி மக்கள் கருணாநிதி, திமுகவைப் பற்றி இப்படி நினைக்கும்போது, நீங்கள் திமுகவை முட்டுக்கொடுப்பதால் ஏதேனும் மாறிவிடுமா?
தமிழகத்தில் திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம் என்பவர்கள்
நிறைய பேர் இருக்கிறார்கள், ஏதாவது மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள்
ரஜினியை நிச்சயம் வரவேற்பார்கள் .