…
…
…
பொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை –
அதாவது BGM (back ground music) அமைப்பது
என்பது பெரிய வித்தை….
நான் சொல்வது பாடல்களுக்கு இசையமைப்பது
குறித்து அல்ல; பாடல்களைப் பொருத்த வரை
முதலில் பாடலை பதிவுசெய்து விடுவார்கள்.
பின்னர், அதற்கு ஏற்றவாறு படம் பிடிப்பார்கள்.
ஆனால், பின்னணி இசையென்பது, படம்
ஓடிக்கொண்டே இருக்கும்போது, காட்சிகளுக்கு
பொருத்தமாக, பல இடங்களில் –
பின்னணியில் இசையொலி வருகிறதல்லவா –
அதைச் சொல்கிறேன்.
இங்கே, காட்சிகளை முதலில் படமாக்கி விடுவார்கள்.
பிறகு, அதைப் போட்டுப்பார்த்து, காட்சிகளுக்கு
ஏற்றாப்போல், அந்தந்த உணர்வுகளை பிரதிபலிக்கும்
வகையில் பின்னணியில் இசையை இணைப்பது….
சில இடங்களில் அமைதியாக, அப்படியே விட்டு விடுவது…
அந்த பின்னணி இசை (BGM), காட்சிகளுக்கு மேலும்
சுவாரஸ்யம் கூட்டும். பொதுவாக படம் பார்க்கும்போது,
ரசிகர்கள் காட்சியில் மூழ்கி விடுவதால்,
பின்னணி இசையின் சிறப்பை அவர்களால், பெரும்பாலும்
உணர்வதில்லை. இதை தனியே கவனித்துப் பார்த்தால்
தான் உணர முடியும்; அனுபவிக்க முடியும்.
இந்த பின்னணி இசையை தனியே ரசிக்கும் வழக்கம்
எனக்கு வந்தது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்…
வேறொரு சமயத்தில் அதை விவரமாக சொல்கிறேன்.
சாதாரணமாக – வீடியோ, சிடி, பென் ட்ரைவ் மூலம்
படம் பார்க்கும்போதெல்லாம் – படத்தின் பின்னணி இசை
சிறப்பாக வந்திருப்பதாகத் தோன்றினால், அந்த காட்சியை
மீண்டும் ஓட விட்டு விட்டு, கண்களை மூடிக்கொண்டு,
பின்னணி இசையை மட்டும் ரசிப்பது கடந்த சில
வருடங்களாக என் பழக்கம்.
——————–
அண்மையில், யூட்யூபில் ஒரு காணொளி பார்த்தேன்….
இளையராஜா அவர்கள் இசையமைத்த –
மணிரத்தினம் அவர்கள் இயக்கிய – “மௌனராகம்”
படத்தில் ஒரு குறிப்பிட்ட முக்கியமான காட்சிக்கு –
அமெரிக்காவில், டெக்சாஸில் – ஒரு இசைக்குழுவினர்,
மீண்டும் பின்னணி இசை(back ground music) அமைத்துக்
காட்டிய வீடியோ அது….
மிகவும் ரசனையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது..
இசையமைத்த குழுவினருக்கு
நமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்…
நண்பர்களும் ரசிக்க – கீழே பதிந்திருக்கிறேன்.
…
…
.
—————————————————————————————————————————————————————-