…
…
தேவைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும்,
நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகளைப்
பற்றிய 2 காணொளிகள் கீழே-
(இதில் 2-வது காணொளி உபயம் –
நண்பர் அஜீஸுக்கு நன்றி ..)
இதை இங்கு முக்கியமாக பதிப்பதன்
காரணம் – கொஞ்சம் யோசிக்கத்தான்….!!!
எதைப்பற்றி….?
நம்முடைய பல அரசியல்வாதிகளுக்கும்
இந்த பச்சோந்திகளுக்கும் நிறைய ஒற்றுமைகளை
காண முடிகிறது அல்லவா…??? 🙂 🙂 🙂
ஒருவேளை போன ஜென்மத்தில்
இவர்கள் பச்சோந்திகளாக
இருந்திருப்பார்களோ…?
…
…
…
.
————————————————————————————————————————————————————–
இதில் அவ்வப்போது கட்சி மாறுகின்ற
தனிப்பட்ட அரசியல்வாதிகளையும்
சேர்க்கலாம்.
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுகிற
அரசியல் கட்சிகளையும் சேர்க்கலாம்.
அப்படி பார்த்தால், இந்தியாவின்
அனைத்து கட்சிகளும், (காங்கிரஸ், பாஜக உட்பட)
பச்சோந்திகளே.
சில தனிப்பட்ட தலைவர்கள் மட்டுமே
இதற்குள் வர மாட்டார்கள்.
பச்சோந்தி சூழலுக்கு ஏற்ப நிறமாற்றம் செய்யும் என்பது உண்மையே.அரசியல்வாதிகளும் கட்சியையும்,கொள்கைகளையும் அடிக்கடி மாற்றுவதும் உண்மைதான்.
ஆனால் இரண்டாவது காணொலி fake பொய்யானது.
வீடியோ cutwater ஏஜென்சி மூலம் Ray-ban சன்கிளாஸ் நிறுவனத்திற்கு எடுக்கப்பட்ட வீடியோ அதுவாகும்.அதுபோல் மிக விரைவாக பச்சோந்தியால் நிறத்தை மாற்ற முடியாது.
2009-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி Ray-ban சன்கிளாஸ் நிறுவனத்தின் யூட்யூப் தளத்தில் “Super Chameleon” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது.
சக்தி,
நீங்கள் சொல்வது நிஜமாக இருக்கலாம்.
மறுப்பதற்கில்லை.
எனக்கு கிடைத்ததை போட்டிருக்கிறேன்..
அது உருவான பின்னணி பற்றி எனக்கு தெரியாது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பச்சோந்தி காணொளிகள் கண்டிருக்கிறேன்.
அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் பச்சோந்திகள் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இதுக்கு விதிவிலக்கான கட்சிகள் கிடையவே கிடையாது (அவங்க ஆனா, கொள்கை அது இது என்று உளறி ஜஸ்டிஃபை செய்ய நினைத்தாலும்). அரசியல்வாதிகளிலும் 99.99% பச்சோந்திகள்தாம்.
எனக்கு இந்த 99.99%க்கு அப்பால் இருக்கும் 0.01% அரசியல்வாதிகளை யாராவது குறிப்பிட்டால் மகிழ்ச்சிதான். (அப்போதானே, அவங்க பச்சோந்தித்தனத்தை துகிலுரித்து காண்பிக்க முயலலாம்)