…
…
இந்த வார துக்ளக் இதழில் வெளிவந்திருக்கும் ஒரு
அரசியல் கட்டுரை – துக்ளக்’கில் எப்படி – இப்படி ஒரு கட்டுரை…?
என்று வியக்க வைக்கிறது…!!!
வியப்பைக் கிளப்பும் பகுதிகள் – கீழே
ஹைலைட் செய்து தரப்பட்டிருக்கின்றன…
நீங்களே முதலில் படியுங்களேன்…
பிறகு comments-க்கு போகலாம்….!!!
———————
…
…
இது குறித்து பேச வேண்டிய அமீத் ஷா
வாயே திறக்காமல், கமுக்கமாக இருக்கிறார்…!!!
…
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசை திட்டமிட்டு
கவிழ்த்தது அமீத் ஷா தான் ….
…
…
பாஜகவும் அரசியல் தகிடுதத்தங்களில்,
காங்கிரசுக்கு சற்றும் சளைத்ததல்ல….
…
…
திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி,
அமீத் ஷா இன்று வரை வாயையே திறக்காமல் இருக்கிறார்…!!!
பாஜக வித்தியாசமான கட்சி, நேர்மையான கட்சி என்று
இனி யாருமே ஒரு பேச்சுக்கு கூடச் சொல்ல மாட்டார்கள்…!!!
…
—————————————————————————
.
// இது குறித்து பேச வேண்டிய அமீத் ஷா
வாயே திறக்காமல், கமுக்கமாக இருக்கிறார்…!!!
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசை திட்டமிட்டு
கவிழ்த்தது அமீத் ஷா தான் ….
பாஜகவும் அரசியல் தகிடுதத்தங்களில்,
காங்கிரசுக்கு சற்றும் சளைத்ததல்ல….
திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி,
அமீத் ஷா இன்று வரை வாயையே திறக்காமல் இருக்கிறார்…!!!
பாஜக வித்தியாசமான கட்சி, நேர்மையான கட்சி என்று
இனி யாருமே ஒரு பேச்சுக்கு கூடச் சொல்ல மாட்டார்கள்…!!! //
– இந்த சாடல்கள், இது துக்ளக் தானா என்று வியக்க வைக்கிறது…
—————-
.
பொதுவாக ஆசிரியர் சோ அவர்கள் இருந்தவரையில் –
துக்ளக் இதழ், ஓரளவு பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும்,
தேவைப்படும் நேரங்களில் – வெளிப்படையாகவே
அதற்கு பலமாக குட்டு வைக்க சோ தயங்கவே மாட்டார்.
ஆனால், திரு.குருமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு,
துக்ளக், முற்றிலுமாக பாஜகவை ஆதரிக்கும்
ஒரு பத்திரிகையாக மாறி விட்டது என்பதே
அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயம்.
ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள், ஆர்.எஸ்.எஸ்.
முக்கிய பிரமுகர்களில் ஒருவர்.
அவர் எப்போதுமே பாஜகவை
ஆதரித்து பேசுபவர்; எழுதுபவர்…
எந்த சூழ்நிலையிலும் பாஜகவை விட்டுக் கொடுக்காதவர்.
அதனால் தான் -அவரது பத்திரிகையில்,
முதல் தடவையாக பாஜகவை –
முக்கியமாக அதன் தலைவர் அமீத் ஷா அவர்களை
கடுமையாக விமரிசித்து எழுதியிருப்பது வியப்பைத் தருகிறது..
இதன் பின்னணி என்னவாக இருக்கலாம்…?
– இந்த கட்டுரையை எழுதியவர் துக்ளக் ஆசிரியர் குழுவில்
நீண்ட காலமாக பணியாற்றுபவர்களில் ஒருவர். எனவே,
அவர் நிறுவனத்தின் கொள்கைக்கு விரோதமாக
எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. தெரிந்தே தான்,
அவசியமென்று கருதி தான் – எழுதி இருக்கிறார்.
– பாஜக – ஒரு வித்தியாசமான கட்சி என்கிற அதன் சிறப்பை,
அமீத் ஷாவின் மோசமான செயல்பாடுகளால்
இழந்து வருவதாக ஆசிரியர் நினைப்பதன் வெளிப்பாடா இது …?
– ஆனால், அப்படி நினைத்தாலும் கூட, பொதுவெளியில்
அதனை வெளிப்படுத்தும் குணம் அவருக்கு கிடையாதே..
இப்போது எப்படி…? ஏன்..?
– ஆசிரியருக்கும், அமீத்ஜீ-க்கும் ஒத்துப் போகவில்லையா …?
– அல்லது ஒருவேளை துக்ளக் ஆசிரியரின் பார்வைக்கு
போகாமலே இந்த கட்டுரை வெளிவந்து விட்டதா…?
அதற்கும் வாய்ப்பே இல்லையே…ஆசிரியர் அந்த
அளவிற்கு அலட்சியமாக செயல்படக்கூடியவர் அல்லவே…
– ஒருவேளை, தொடர்ந்து பாஜகவை ஆதரித்தே எழுதி
வருவதால், பாஜக பத்திரிகை என்று துக்ளக் மீது விழுந்து விட்ட
முத்திரையை நீக்கும் எண்ணமா…?
– இப்போதைக்கு நம்மை மண்டையைப் பிய்த்துக் கொள்ள
வைத்துவிட்டு, ஒருவேளை, அடுத்த வார இதழிலேயே
இதற்கான விளக்கங்கள் எதாவது வெளிவரக்கூடும்.
அதற்குள்ளாக நமது விமரிசனம் தள வாசக நண்பர்கள்,
பின்னூட்டங்களில் தங்கள் கருத்தை எழுதினால் –
சிறந்த முறையில் ஒத்துப்போகும் கருத்தை எழுதும்
வாசக நண்பருக்கு –
வழக்கம்போல் நமது அசையாத சொத்தில் பாதியை
கொடுத்து விட உத்தேசம்……!!! 🙂 🙂 🙂
கூடவே – துக்ளக் ஆசிரியர் குழுவினருக்கு
தொடர்ந்து நல்ல புத்தியைக் கொடுத்து ( 🙂 🙂 )
இதுபோன்ற உண்மையை பிரதிபலிக்கும் பல கட்டுரைகளை
வெளியிட வைக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுவோமாக….
.
—————————————————————————————————————————————————————–
As long as Mr.Cho was alive I bought Thugkak fo more than 40 years. Even after his demise
I continued to by for 3 months. But once I know the true colour of the journal, I totally stopped
buying. I don9t know how many others hve stopped like mr
எவ்வளவு தான் கட்சி மீது பற்று இருந்தாலும்,
சில சமயங்களிலாவது மனசாட்சி உறுத்தும் அல்லவா ?
திரு.குருமூர்த்தி அவர்களின் மனசாட்சியின்
உறுத்தலின் வெளிப்பாடாக இருந்திருக்கும்
இந்த கட்டுரை.
ஒருவேளை, அமீத் ஷாவுடன் எதாவது மோதலும்
இருக்கலாம்.
எல்லாம் கருணாநிதி செய்த வேலை – இப்படிக்கு புதியவன்
அரசியலை நீங்க நல்லா கவனித்திருப்பீங்க (1975லிருந்து) என்று நினைக்கிறேன். கவனித்திருந்தால், சர்வ நிச்சயமாக கருணாநிதி அரசியலில் என்ன என்ன லீலைகளை மேற்கொண்டார் என்பதைக் கவனித்திருக்கலாம். அரசியல் மோசடிக்கு இந்திய அளவில் கருணாநிதிதான் உதாரணமாக இருக்கமுடியும். அதைக் கவனித்து யார் வேணும்னாலும் சொல்லலாம்.
🙂 🙂 🙂
இந்த விஷயத்தில் துக்ளக்கின் கருத்தை முழுவதுமாக ஏற்க நினைக்கிறேன். பாஜக, வித்தியாசமான கட்சி, தார்மீக நெறிமுறைகளின்படி நடக்கும் கட்சி, அரசியல் நாகரீகம் உள்ள கட்சி என்று யாருமே சொல்லும்படி பாஜக இதுவரை நடக்கவில்லை. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கொடுக்கமுடியும். துக்ளக், அமித்ஷா பற்றி எழுதியிருந்தாலும், மோடியும் வித்தியாசமானவர் இல்லை என்பது என் எண்ணம். (மோடி உதாரணம். ஜெ. மறைந்தபோது நடராஜனுக்கு ஆறுதல், ஓபிஎஸ்ஸை வளைத்து அதன் மூலமாக அதிமுகவை கபளீகரம் செய்ய முயன்றது, அதே சமயம் ஸ்டாலினுடன் உறவுக்கு முயல்வதுபோன்ற தோற்றம்).
காங்கிரஸும் பாஜகவும் எதில் வித்தியாசப்படுகிறது என்றால், காங்கிரஸ், ‘சிறுபான்மையினர் ஆதரவு’ என்று எடுத்து பெரும்பான்மையினருக்கு எதிராக இருந்தது. பாஜக ‘பெரும்பான்மையினருக்கு ஆதரவு’ என்ற நிலையில் இருக்கிறது. இதில் ‘எதில்’ நாம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நம் கட்சி ஆதரவு இருக்கும். அவ்ளோதான்.
புதியவன்,
உங்கள் மேற்படி பின்னூட்டத்தின் 2-வது பாராவில்
ஒரு சின்ன திருத்தம் செய்தால் தான் –
பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
For –
காங்கிரஸும் பாஜகவும் எதில் வித்தியாசப்படுகிறது
என்றால், காங்கிரஸ், ‘சிறுபான்மையினர் ஆதரவு’
என்று எடுத்து பெரும்பான்மையினருக்கு எதிராக
இருந்தது.
பாஜக ‘பெரும்பான்மையினருக்கு ஆதரவு’
என்ற நிலையில் இருக்கிறது.
To Read –
காங்கிரஸும் பாஜகவும் எதில் வித்தியாசப்படுகிறது
என்றால், காங்கிரஸ், ‘சிறுபான்மையினர் ஆதரவு’
என்று எடுத்து பெரும்பான்மையினருக்கு எதிராக
இருந்தது. ( here – there is no change )
பாஜக ‘பெரும்பான்மையினருக்கு ஆதரவு’ என்று
“நிலை” எடுத்து,
“சிறுபான்மையினருக்கு – எதிராக இருக்கிறது.”
(here – there is a change )
( பலர், பாஜகவை வெறுப்பதற்கான
முக்கியமான காரணமே இது தான்….)
————————————————————-
-என்னைப் பொருத்த வரை,
நான் இந்த இரண்டு “நிலை”களிலும் இல்லை;
இந்த நாடு எல்லாருக்கும் பொதுவானது.
இங்கே எல்லாருக்கும் இடம் இருக்கிறது.
எல்லாரும் இங்கே சேர்ந்து வாழ முடியும்.
அரசாங்கம், எல்லா மதத்தினரையும்
அரவணைத்துச் செல்ல வேண்டும்.
ஒற்றுமையாக வாழ வழி காட்ட வேண்டும்.
அதற்கு வேண்டியதைச் செய்ய வேண்டும்.
அது தான் நம் நாட்டிற்கு தேவை;
பாரதம் எந்தவித வெறுப்புணர்வுக்கும்
இடம் கொடுக்காமல், எல்லாரும்
ஒற்றுமையாக இருந்தால் தான்
நாம் அனைவருமே – நிம்மதியுடன் வாழவும்,
முன்னேறவும் முடியும்;
கேவலம் தேர்தலில் ஓட்டுகளை கவர்வதற்காக
அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் –
பெரும்பான்மையினரையோ,
சிறுபான்மையினரையோ –
குஷிப்படுத்த விரும்புவதும், செயல்படுவதும் – தவறு.
மதம் தனி; அரசியல் தனி.
மதத்தில் அரசியலும்,
அரசியலில் மதமும் – இரண்டுமே தவறு.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்… நீங்கள் சொல்லிய திருத்தம் யோசிக்க வைக்கிறது. நான் நம்பும் பலரும், இதனைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு என்னவோ அதனை இன்னும் ஒத்துக்கொள்ளும் மனம் வரவில்லை. இதில், பாஜக அரசு அமைந்ததை வைத்து, அல்லக்கைகள், சாமியாரிணிகள்/சாமியார்கள் என்று சொல்லிக்கொள்ளும் கழிசடைகள், ஒரு சில படிப்பறிவில்லாத பாஜக எம்.எல்.ஏக்கள்/எம்.பிக்கள் (முன்னாள் ஆக இருக்கலாம். இல்லையென்றால் வழக்கு வரும்) இவர்கள் சொல்வதை பாஜகவின் கருத்தாக என்னால் ஏற்க இயலவில்லை. ஏதோ அரசியல் காரணங்களால், பாஜக தலைமை இவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை என்றே கருதுகிறேன்.
சிறுபான்மையினர் இத்தனை காலம் அனுபவித்துக்கொண்டிருந்த சலுகைகள் இப்போது இல்லை என்பதால், ஒருவேளை ஆப்வியஸாக அவர்கள் எதிர்ப்பு புலப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்.
(மத சம்பந்தமாக இதனை எழுதலை. இதைப் பற்றி யோசிக்க எழுதுகிறேன்) இங்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடணும்னு நினைக்கிறேன். பெங்களூரில் ஒருவர், வீட்டு ரிப்பேர் (பிளம்பிங் போன்றது என்று வைத்துக்கொள்ளுங்களேன்) வேலைக்கு வந்து, தன் பெயர் கோபால் என்று சொன்னார். அப்புறம் பேச்சுவாக்கில் தான் இஸ்மாயில் என்றும், தன் முதலாளி இந்துப் பெயர்தான் சொல்லணும் என்று சொல்லியிருப்பதாகவும் இல்லையென்றால் பிஸினெஸ் போயிடும் என்றதாகவும் சொன்னார். சென்னையில் நான் சந்தித்த இதே போன்றவர், இந்துப் பெயரை வைத்திருந்தார் (பிஸினெஸ் கார்டிலும் அதேதான்). ஆனால் அவர் போனில் பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய உண்மையான பெயர் கிறித்துவப் பெயர் என்பதை அறிந்தேன். சினிமாத் துறையிலும், அனேகமாக எல்லோரும் தங்கள் ஒரிஜினல் பெயரை மறைத்து இந்துப் பெயரை வைத்துக்கொள்வதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள். இதன் காரணம் என்னவாக இருக்கும்?
//கா.மை. சார்… நீங்கள் சொல்லிய திருத்தம்
யோசிக்க வைக்கிறது. நான் நம்பும் பலரும்,
இதனைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.
எனக்கு என்னவோ அதனை இன்னும்
ஒத்துக்கொள்ளும் மனம் வரவில்லை.//
It is quite natural.
பாஜக /ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளுக்கு
எப்படி சார் மனம் வரும் ?
Ramnath.. Dont put your wish lists in my mouth.
சிறுபான்மையினருக்காக பெரும்பான்மையினரை காலடியில் போட்டு மிதித்த, ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய, நாட்டை அந்நியருக்கு விலை பேசிய காங்கிரசை நான் வெறுக்கிறேன். அதே காரணங்களுக்காக நான் திமுகவை வெறுக்கிறேன். இரண்டுமே தேச விரோத சக்திகள்தாம்
Just because you dont like BJP, I cant term you as Communist அனுதாபி, சீனாவின் நண்பன், இந்தியாவின் எதிரி என்றெல்லாம் கற்பனையில் குற்றச்சாட்டுகளை அடுக்க முடியுமா?
திரு. புதியவன் –
//சிறுபான்மையினருக்காக பெரும்பான்மையினரை
காலடியில் போட்டு மிதித்த, ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய,//
இங்கே நான் உங்கள் கருத்தில் குறுக்கிடவில்லை.
ஆனால்,
// நாட்டை அந்நியருக்கு விலை பேசிய
காங்கிரசை நான் வெறுக்கிறேன். அதே காரணங்களுக்காக
நான் திமுகவை வெறுக்கிறேன்.//
இது எப்படி ?
யார், எப்போது இந்த நாட்டை எந்த
அந்நியருக்கு விலை பேசினார்கள் என்பதை கொஞ்சம்
விளக்க முடியுமா ? எல்லாருக்கும் புரியும்படி விளக்குங்களேன்.
//இரண்டுமே தேச விரோத சக்திகள் தாம் //
இங்கும் அதே கேள்வி தான் ?
எந்த அடிப்படையில் இதைச் சொல்றீங்க ?
பொதுவாக பாஜக அரசு, தங்களை எதிர்க்கும் எல்லருக்கும்
குத்தும் முத்திரை இது;
இது ஒன்று போதாதா ? நீங்கள் யாரென்பதை
நீங்களே நிரூபித்துக்கொள்கிறீர்களே.
கே.எம்.சார்,
மிகத் தெளிவாக விளக்குகிறீர்கள்.
நான் 100 சதவீதம் உங்கள் பக்கம் நிற்கிறேன்.
காவிரிமைந்தன் சார்,
அருமை. இன்று நமக்கு எது தேவை
என்பதை வெகு அழகாகச் சொல்கிறீர்கள்.
உங்கள் “நிலை” எல்லாராலும்
வரவேற்கப்பட வேண்டிய நிலை.
நானும் உங்கள் பக்கம் நிற்கிறேன்.
காவிரி மைந்தன் சார் , உங்கள் “நிலையை” தான் ஆதரிக்கிறோம்.
இப்போதைக்கு தேசிய அரசியலில் ஆளும் தகுதி பெற்ற இரு கட்சிகளில்
காங்கிரஸ், மாநில கட்சி போல ஆகி விட்டது. Appeasement of minorities
at the cost of majorities அதன் நிலைப்பாடு. எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி
நல்ல கொள்ளி என்ற சீர் தூக்கி பார்க்கும் நிலைமைக்கு நாம் தமிழ்நாட்டிலும்
மத்தியிலும் தள்ள பட்டு விட்டோம். மாற்று ஏற்பாடு மத்தியில் 2024 வரை
சாத்தியமில்லை. தமிழ்நாடு 2021ல் ஒரு புதிய மாற்றத்தை தருமானால் வரவேற்பதில் ஒரு பிரச்னையும் இல்லை. மத அரசியல் நிச்சயம் வேண்டாம். தமிழ்நாட்டின் பிண அரசியல் சகிக்கவில்லை. அதை ஊதி ஊதி
பெரிதாக்கும் டிவி சானல்கள் அதை விட கொடுமை.