ஜப்பான் – சில உண்மைகள் …


எனக்கு ஒரு வீடியோ கிடைத்தது. அதன்படி –

ஜப்பானில் – 2 மில்லியன்,
அதாவது 20 லட்சம் பேர்கள் 90 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

அதில் 69,785 பேர் 100 வயதிற்கும் மேற்பட்டவர்கள்…

ஜப்பானின் மொத்த மக்கள் தொகையே சுமார் 12.5 கோடி தான்
என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்…!!!

ஜப்பானியர்கள் அதிக காலம் உயிர்வாழ்வதற்கு
காரணம் அவர்களது ‘ஜீன்’ காரணம் அல்ல –

அவர்கள் உண்ணும் உணவும், வாழும் முறைகளும் தான்
என்று அந்த காணொளி கூறுகிறது.

எனக்கு இது குறித்து 2 கருத்துகள் இருக்கின்றன –

1) வீடியோ சொல்லும் காரணங்கள் ஓரளவு ஏற்புடையவை
தான் என்றாலும், முழுவதுமாக அவையே காரணம் அல்ல
என்பது ஒரு கருத்து.

2) பொதுவாக 75-80 வயதிற்கு மேல், மனிதர் மூளையளவில்,
சிந்தனையளவில் – நன்றாகவே செயல்படும் நிலையில்
இருந்தாலும், உடல்ரீதியாக நினைத்த மாதிரி செயல்பட
முடிவதில்லை என்பதே உண்மை. எவ்வளவு தான்
ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, ஓரளவு வயதான பிறகு,
உடல் பலவீனம் என்பது தவிர்க்க இயலாதது.

அதிக பட்சம் தங்கள் சொந்த உடல் குறித்த அன்றாடத்
தேவைகளை அவர்களே செய்துகொள்ளக்கூடிய நிலையில்
தான் இருப்பார்களே தவிர, physical activities – ஐ
பொருத்த வரையில் வயதுக்கேற்ற தடைகள் இருந்தே
தீருகின்றன.

உடலில் வலுவின்றி, 90, 100, 110 என்று உயிர் வாழும்
வயது மட்டும் கூடிக்கொண்டே போவதில் என்ன லாபம்… ?

மனிதர், மற்றவர்களுக்கு பயன் தரும் வகையில் செயல்பட
முடியாவிட்டாலும், குறைந்த பட்சம், தன் இருப்பை,
தான் அனுபவிக்க இயலும் வரையில் வாழ்வதே போதுமானது
என்பது என் கருத்து….

கண் பார்வை மங்கி, செவிகள் கேட்கும் சக்தியை இழந்து,
பற்களை இழந்து, ஜீரண சக்தி வெகுவாக குறைந்து –
நடப்பதே சிரமமாக –
அன்றாட வாழ்வே ஒரு சுமை என்று
ஆகும் நிலையில் – யார் வாழ விரும்புவார்கள்…?

ஒரு வெஜிடேஷன் நிலையில் மனிதர் எத்தனை வருடங்கள்
தான் வாழ்வது…? அது அவருக்கே கடினம் அல்லவா…?
அப்போது வாழ்வைத் தொடருவது அவருக்கே பிடிக்காமல்
போகிறது அல்லவா…?

– எனவே, 100 வயது வரையிலும், மனிதரின் செயல்திறன்
குறையாமல் இருக்கும் ஒரு வாழ்க்கை முறை கண்டுபிடிக்கப்
பட்டால், பயனுள்ளதாக இருக்கும்; பாராட்டலாம்.

– மற்றபடி, பெயருக்கு 100, 110, 120 என்று வாழ்ந்துகொண்டே
போவது ரிக்கார்டு க்ரியேட் பண்ண மட்டுமே உதவும்….!
இல்லையா….?

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஜப்பான் – சில உண்மைகள் …

 1. புதியவன் சொல்கிறார்:

  ரொம்ப வயதாக உயிரோடு இருப்பது சாதனை இல்லை, பெரும்பாலும் வேதனை. கடவுள் இன்னும் கூட்டிட்டுப் போகாமல் என்னைக் கஷ்டப்படுத்துகிறானே என்று நிந்தித்துக்கொள்ளும் வாழ்க்கைதான் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கிறது.

  1. ஒருவர் ஓரளவு வயது வரைதான் ஆரோக்கியமாக தன்னைத் தானே பார்த்துக்கொள்ளும் சக்தி உடையவராக (குறைந்த பட்சம் பாத்ரூம், குளியல், உடை மாற்றிக்கொள்வது), யாருக்கும் கஷ்டம் கொடுக்க இயலாதவராக (எனக்கு கோதுமை உணவுதான் வேணும், எனக்கு தனியா உப்பே இல்லாமல் தோசை/இட்லி வேணும், இரவு எனக்கு மட்டும் 2 சப்பாத்தி கூட்டு வேணும், காலைல 6 மணிக்கு உப்பில்லா கஞ்சி வேணும் என்றெல்லாம்) இருக்க முடியும். வயதானவரை பார்த்துக்கொள்ளும் பொறுமை ஒருவருக்கு கொஞ்சம்தான் இருக்க முடியும் (உதாரணமாக ஓரிரு மாதங்கள்).
  2. வயதாகும்போது தாங்கள், தங்கள் நேரத்தைப் பொழுதுபோக்க அவங்களே முனையணும். நிறையபேருக்கு பேச சப்ஜெக்ட் இருக்காது. மாற்றி மாற்றி அதே வார்த்தைகளால் மட்டும் பேரன் பேத்திகளைக் கொஞ்சி, அவங்களோட எங்கேஜ் பண்ணமுடியாதபடிக்கு இருப்பது பேரன்/பேத்திகள் அருகாமையில் வராமல் செய்துவிடும். ஊர் வம்பு பேசுவது, வீட்டில் உள்ளவர்களைக் குற்றம் சொல்வது என்று தங்கள் நேரத்தைப் போக்காமல் இருக்கணும்.
  3. பசங்க, அவங்களை குடும்ப அங்கத்தினர்களில் ஒருவராக மரியாதையுடன் வைத்திருப்பாங்க. ஆனா, அவங்களுக்கும் பெர்சனல் நேரம், பொழுதுபோக்கு, வேலைகள் எல்லாம் உண்டு. அதையும் பெரியவங்க கவனித்து, அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும். (பேரன், பேத்தி படிக்கறாங்களே, இல்லை பசங்க ஆபீஸ் பிரச்சனையோட இருக்காங்களே இல்லை வேறு கவலைகள் இருக்கே என்றெல்லாம் நினைக்காமல் சத்தம் போட்டு ஹாலில் தொலைக்காட்சி வைத்துக்கொண்டு உட்காரக்கூடாது, எதற்கும் குறை கூறக்கூடாது-இந்தக் கூட்டு நல்லாவே பண்ணலையே எப்படித்தான் நீ சாப்பிடறயோ என்றெல்லாம் வம்பு பேசக்கூடாது.
  4. தன் வயதை ஒத்தவர்களுடன் நட்புடன் இருந்து பேச்சுத் துணைக்கு அவர்களோட கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம்.

  என் பெர்சனல் ஒபினியன், 70 வயதுக்கு மேல், மிக ஆரோக்கியமாக, தன் வேலையை முழுவதுமாக தான் செய்யும்படியாக, பணத்தளவிலும் மற்றவரை எதிர்பார்க்கும் நிலைமையில் இல்லாமல் இருந்தால்தான் வாழணும். இல்லைனா, பேசாமல் போயிடணும். நமக்கு துரதிருஷ்டவசமாக ஆயுள் நிறைய இருந்தால், மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் தரக்கூடாது.

  இந்தக் காணொளி பார்த்தபோது, தாய்வானில், வயதானவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களுக்கு அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்று எழுத ஆசைதான். சுருக்கமா, பூங்காக்கள், அதுல இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டு நடக்கும்படியான நீள பாதை (இரண்டு பக்கமும் எவர்சில்வர் பிடிமானம் இருக்கும்), கோவிலுக்கு அருகிலேயே பெரிய மண்டபம் மாதிரியான இடத்தில், உட்கார நிறைய மேடைகள், அவற்றின் இருபுறமும் இரண்டுவிரல் பருமன் உள்ள கம்பியால் செய்யப்பட்ட அமைப்பு-அதைப் பிடித்துக்கொண்டு தானே எழுந்துகொள்ளலாம் என்றெல்லாம் இருக்கிறது. அந்த மாதிரி இடங்களில் அவங்க வயதை ஒத்தவர்களோடு சீட்டு, வேற விளையாட்டுக்கள் விளையாடறாங்க… அப்புறம் மெதுவா எழுந்து மெட்ரோ மூலம் அவங்க அவங்க வீட்டுக்குப் போறாங்க. பசங்களும் வார இறுதியில் இவங்களை பூங்காவுக்குக் கூட்டிட்டு வந்து நடை பழக வைக்கறாங்க, ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போறாங்க. (முடிந்தபோது படங்கள் அனுப்பறேன்) (ஆனா பொதுவா வயதானவங்களை கவனித்துக்கொள்ள எங்கேயும்-எந்த ஊர்லயும் ஆட்கள் இருப்பதாகத் தெரியலை. குடும்பத்தினரோடு இன்பமாக வயதான வாழ்க்கை கழிவது அபூர்வமாகத்தான் இருக்கு)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நீங்கள் சொல்வது தான் பிராக்டிகல்.
   நான் முற்றிலுமாக ஏற்கிறேன்.

   ஸ்விட்ச் ஆப் செய்கிற மாதிரி
   ஒரு வசதியை மட்டும் ஆண்டவன்
   மனிதருக்கு கொடுத்திருந்தால் –
   எந்தவித பிரச்சினையும் இன்றி,
   யாருக்கும் தொந்திரவு இன்றி,
   வாழ்க்கை போதுமென்று தோன்றும்போது,
   நாமே ஸ்விட்ச் ஆஃப் செய்துக்
   கொண்டு விடலாம்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • Ezhil சொல்கிறார்:

   அருமை புதியவன் சார்

 2. bandhu சொல்கிறார்:

  என்ன செய்வது. ஆரோக்கியமில்லாத நீண்ட ஆயுள் தான் உண்மையான ஆயுள் தண்டனை!

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  what about bringing euthanisia as a law go the people as a law who have crossed 75 yrs and above
  t is allowed in BELGIUM ONLY TO THE BEST OF MY KNOWLEDGE. i TOO SUPPORT THISt

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.