நெகிழ வைக்கும் ஒரு நிகழ்வு…..


ஒரு இளைஞர் – 22-23 வயது இருக்கலாம்..

தோளுக்கு கீழே – இரண்டு கைகளும் இல்லை..
மாற்றுத் திறனாளி…

அதனாலென்ன …?
இரண்டு கைகளும் செயல்படக்கூடிய நிலையிலிருக்கும்
நம்மை விடத்திறமையாக –

அத்தனை வேலைகளையும் –
தன் கால்களினாலேயே செய்கிறார்…
பி.காம். படித்திருக்கிறார்…

அதைவிட ஒரு படி மேலே போய், அருமையாக
கால்களினாலேயே ஓவியங்கள் வரைகிறார்.

அதைவிடச் சிறப்பான ஒரு செயலுக்காகத்தான்
நாம் இங்கே அவரைப்பற்றி எழுதுகிறோம்.

கால்களால் வரைந்த ஓவியங்களை
ஒரு கண்காட்சி வைத்து, விற்று,
அதில் கிடைத்த பணத்தை,
கேரள முதலமைச்சரிடம் – “பேரிடர் நிவாரண நிதி’ -க்கு
அன்பளிப்பாக அளிக்கிறார்…

முதலமைச்சருடன், தன் காலிலேயே செல்ஃபியும்
எடுத்துக் கொள்கிறார்….

தன்னம்பிக்கைச் சிகரமாகத் திகழும்
கேரளா, ஆலத்தூரைச் சேர்ந்த பிரணவ் – என்கிற
இளைஞரைத் தான் இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அவரைப்பற்றிய புகைப்படங்கள் கீழே –
அந்த இளைஞரை வரவழைத்து, கௌரவப்படுத்தி,
அவரது காலுடன், “கை குலுக்கிய” கேரள சி.எம்.
பினாராய் விஜயன் அவர்களின் எளிமையும்,
பெருந்தன்மையும் பாராட்டத்தக்கது.

பிரணவ், இன்னும் பெரிய உயரங்களுக்கு போக வேண்டும்,
பல சாதனைகளை நிகழ்த்தி, மாற்றுத் திறனாளிகளின்
தன்னம்பிக்கைச் சின்னமாக வளர வேண்டும்
என்று மனதார வாழ்த்துவோம்.

….

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to நெகிழ வைக்கும் ஒரு நிகழ்வு…..

  1. புதியவன் சொல்கிறார்:

    இளைஞரின் தன்னம்பிக்கை பாராட்டப்படக்கூடியது. அவர் இன்னும் மென் மேலும் உயரணும்.

    நம்ம தமிழகத்தைப் போல, கேரளா அரசியல்வாதிகள், ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல நடந்துகொள்வதில்லை. அதுபோல, கேரளத்துக்கான பிரச்சனைகளில் ஒன்றிணைவார்கள்.

    பினரய் விஜயன் அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் (அல்லது கேரள மக்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். அவர்கள்தானே அவர்களது அரசியல்வாதிகள் எதைச் செய்தால் தங்கள் மதிப்பில் உயர்வார்கள் என்று காண்பிப்பது)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.